இந்த வருடத்தில் பங்குபற்றிய டெஸ்ட் போட்டிகளில் தொடர் சதங்கள் போதாக்குறைக்கு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் கில்லியும் சில பல்லிகளும் எட்டிப்பார்த்தும் எட்டாக்கனியாகிப்போன 200 அதுவும் குறைந்தளவு பந்துகளில். போதாக்குறைக்கு இப்போது ஐ.பி.எல்லில் முதல் போட்டியில் 11 பந்துகளில் மூன்று 4 ஓட்டங்கள் அடங்கலாக 17 ஓட்டங்கள் அடுத்தபோட்டியில் மரண அடி வெறும் 32 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 63 ஓட்டங்கள்(கண்குளிர கண்டேன் இந்த தாண்டவத்தை.) அடுத்த போட்டியில் கொஞ்சம் மந்தமாக ஆடினாலும் இருபத்தைந்து ஓட்டங்கள் இறுதியாக கங்குலியின் அணிக்கெதிராக நாற்பத்தெட்டு பந்துகளில் ஆட்டமிழக்காமல் எழுபத்தொரு ஓட்டங்கள். இந்த தொடர் சிறப்பான ஆட்டத்துக்கு சொந்தக்காரர் தான் இப்போது உலகக்கிண்ண போட்டிகளில் ஆடமாட்டார் என தெரிவித்துள்ளார்.
இளையவர்களின் ஆட்டம் என சொல்லப்பட்ட அதிரடி T20இல் சூறாவளியாக ஆடிக்கொண்டிருக்கின்றார். அப்படி இருக்கையில் பலரின் பேச்சும் வரும் உலகக்கிண்ண போட்டிகளில் ஆடி மீண்டும் ஒரு தடவை இந்தியாவை வெல்லவைக்க வேண்டும் என்று இருக்கின்றது. ஆனால் இதற்க்கு சச்சின் மறுத்து விட்டார். அறிவிக்கப்பட்ட முப்பது பேர் கொண்ட இந்திய உத்தேச அணியில் சச்சின் இடம்பெறவில்லை. கடந்த 2007ஆம் ஆண்டிலேயே சச்சின் T20 போட்டிகளில் இருந்து விலகியதே இதற்கு காரணம். இருப்பினும் அசத்தலாட்டம் ஆடும் இவரை நிச்சயம் சேர்க்கவேண்டுமென ஒலிக்கும் பலரின் குரலுக்கு செவிசாய்த்து அணியில் சேர்த்துக்கொள்ளவேண்டுமென பலரின் கோரிக்கையாக இருந்தது. இதற்கு வழி திறந்து விடுவது போல உத்தேச அணியில் இடம்பெறாவிட்டாலும் இறுதியாக அறிவிக்கும் பதினைந்து பேர் கொண்ட அணியில் புதிதாக வீரர்களை இணைத்துக்கொள்ளலாம் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதன் மூலம் சச்சின் நிச்சயம் களம் இறங்குவார் என எதிர் பார்க்கப்பட நிலையில் தான் சச்சின் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சர்வதேச T20 போட்டிகளில் பங்குபற்றுவதில்லை என தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என சச்சின் தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்கட்டும். சச்சின் ஒரு சிறந்த தலைவர் இல்லை என்பது வெளிப்படை உண்மை எழுதமுடியாத விதியாகவே பேசப்பட்டு வருகின்றது. நம் கிரிக்கெட் தொடர் பதிவில் கூட சச்சினை வீரராக பிடித்தவர்கள் கூட ஒரு தலைவராக பிடிக்கவில்லை என்றனர். அதற்கு சர்வதேசப்போட்டிகளில் இந்தியாவை அவர் பிரதிநிதித்துவப்படுத்திய போது கிடைத்த பெறு பேறுகளே சான்று. ஆனால் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவரகாவும் ஆட்டத்திலும் கலக்குகின்றார். கடந்தமுறை கூட காயத்தில் இருந்து தலைவராக இவர் வந்த பின் சனத்தும் இவரும் சேர்ந்து ஆடிய ஆட்டமும் பெற்ற வெற்றிகளும் தெரியும். நட்சத்திர வீரர்கள் சர்வதேச வீரர்கள் திறமையான வீரர்கள் இருக்கும் இந்த மும்பை அணியை வெற்றிக்கொடி நாட்ட வைக்கும் சிறந்த அணித்தலைவராக பிரகாசிக்கும் சச்சினால் ஏன் அன்று ஜெயிக்கமுடியாமல் போனது. அன்று இருந்த அணி திறமையில் சளைத்ததல்ல வேண்டுமென்றே இப்படி ஆடினார்களா அல்லது என்னதான் காரணம் புரியாத புதிராகவே உள்ளது. என்னைக் கேட்டால் சச்சினும் இப்போது சிறந்த தலைவர்தான்.
0 கருத்துரைகள்:
Post a Comment