உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்
உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
எம்
சமூக கருத்துக்கள்
சதீஷ் தொகுத்த
பொது நிகழ்வுகள்
ஒரே தளத்தில்
இன்னும் பல
Friday, July 23, 2010
Thursday, July 22, 2010
முரளியை வாழ்த்தும் உலக நாயகனின் பாடல்!
முத்தையா முரளிதரன், இன்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் வாயெல்லாம் முணுமுணுக்கும் உன்னிப்பாக பார்க்கும் ஒரு பெயர். பல தடைகள் தாண்டி வெற்றிப்படிகளில் ஏறி இன்று சிகரம் தொட இருக்கும் நிஜ ஹீரோ முரளிக்கு, திரை உலக உலக நாயகன் ஹீரோவுக்காய் எழுதிய பாடலை கொஞ்சம் மாற்றி போட்டு வாழ்த்து ஒன்றை படிக்கின்றேன் ஒரு சாதாரண ரசிகனாய்.
உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு?
உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது இலங்கை நாடு.
உலக நாயகனே எங்கள் தங்க தமிழனே
கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்.
நீ ஒரு தீரன் நிரந்தர இளைஞன் வேட்கை மிகுந்த விக்கெட் டேக்கர்
ஒரு பந்து கொண்டு உலகத்தில் இன்று ஆயிரம் விக்கெட் கடந்தாய்
உன் வாழ்வில் எண்ணூறு டேஸ்ட் விக்கெட்டும் காண்பாய்.
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சாதனை முயற்சி சோர்ந்திடவில்லை.
இருபது முதல் நீ ஆடிவந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை
உன் சாதனைகளை முறியடிக்க இனி எவரும் இல்லை.
உலகுக்கு நீ ஒரு பந்து வீச்சாளன் வீரர்கள் எதிரில் நூறு மடங்கு பலவான்
எதிர்ப்பினை ஜெயித்து மனங்களை வென்று பாரிய சாதனை படைத்தாய்.
உன் திறனை எதிரியும் புரிந்து கொண்டார்.
உன் விரல்களுக்குள்ளே பந்து மாயாஜாலம் செய்யும்
உன் ஒருவனுக்குள்ளே சாதனை அடங்கும்
தமிழனாய் பிறந்து இலங்கைக்காய் ஆடி இன மத மொழி கடந்தாய்
இப்போது சரித்திரம் ஆகிவிட்டாய்
Sunday, July 18, 2010
ரஜினி என் குரு-விஜய் பல்டி+லோஷன் அண்ணாவுக்கு விருது.
நடிகர் விஜய்க்கு இது போதாத காலம். இவனெல்லாம் இனி சினிமாவுக்கு தேவையா என்ற ரீதியில் இன்று விஜய் நிலை. நடிக்கத்தேரியாது. கெட் அப் மாற்றுவதில்லை. பத்து படத்தில் ஒரே மாதிரி நடிப்பது என்ற விமர்சனங்கள் ஓரளவுக்கு உண்மையாக இருக்கும் நிலையில் இப்போது சித்திக், ராஜா என்று நம்பிக்கை தரும் இயக்குனர்களுடன் விஜய் சேர்ந்திருக்கும் நிலையில் இந்த களங்கங்கள் கடந்து மீண்டு எழுவாரா? அல்லது மீண்டும் அதே குட்டையில் இந்த இயக்குனர்களையும் கொண்டு சென்று தன்னையும் கேவலப்படுத்தி அவர் ரசிகர் எம்மையும் அவமானப்படுத்துவாரா தெரியவில்லை.
ஒரு விஜய் ரசிகர் என்றாலும் விஜயின் இந்த பெட்டியில் இருக்கும் பல்டி எனக்கும் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் தன் குரு ரஜினி என்றவர் அதன் பின் எம்.ஜி.ஆர் பக்கம் சாய்ந்து விட்டு. மீண்டும் இப்போது தன் குரு ரஜினி என்கிறார். வேண்டாம் விஜய் இந்த பல்டி. இது உங்களை மட்டுமல்லா உங்கள் ரசிகர் என சொல்லும் எமக்கும் கேவலம். உங்கள் முடிவில் நீங்கள் தான் தெளிவாய் இருக்க வேண்டும். ஆலோசனை கேட்பது சரியானது ஆனால் முடிவை சரியாய் தெளிவாய் நீங்கள் எடுங்கள் அதுவே நல்லது. இன்னும் நம்புகின்றோம் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவீர்கள் என்று.
பி.கு: இந்த பதிவை தயார் செய்து கொண்டிருந்த வேளை கொழும்பு பல்கலைக்கழகம் வழங்கும் இந்த வருடத்துக்கான சிறந்த பிளாக்கர் என்ற விருதை லோஷன் அண்ணா வென்று இருக்கின்றார். ரொம்ப சந்தோசம் எங்களுக்கும். அண்ணே ட்ரீட் வேணும். முக்கியமான விஷயம். மீண்டும் ஒருதடவை விருதை வென்ற அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். இன்னொரு விஷயம் இந்த பதிவுக்கு நான் அவரிடம் திட்டு வாங்குவது உறுதி ஏன் தெரியுமா? முடிந்தால் யாரும் சொல்லுங்கள்.
=>
=>
=>
=>
=>
=>
=>
=>
=>
வேற ஒன்றும் இல்லை விஜய் பற்றிய பதிவுடன் தன்னையும் போட்டிட்டாயே என்று கோபப்படுவார். ஏனென்றால் விஜய் மீது அவருக்கு ரொம்ப பாசம். அப்பிடி கொபிச்சால் உங்களுக்கு தனி பதிவு போட்டு கும்மிடமாட்டோம். எவ்வளவோ பண்றம் இதை பண்ண மாட்டமா?
Saturday, July 17, 2010
3 இடியட்ஸ்சில் ஷங்கரின் தெரிவு சித்தார்த்,ஜீவா,விஜய்?
அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக இருக்கும் ஒரு விடயம் 3 இடியட்ஸ் திரைப்படம் தான். என் முன்னைய பதிவில் கூட இதை பற்றி இட்டு உங்கள் கருத்தை கேட்டிருந்தேன். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் தமிழ் பதிப்பு பற்றி இன்னுமொரு பரபரப்பு செய்தி வெளிவந்துள்ளது. நேற்றைய தினம் ஒரு இணையதளத்தில் ஷங்கர் இந்த படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற நிலையில் இன்றைய தினம் பிஹைண்ட்ஸ் வூட்ஸ் தளத்தில் இன்னொரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
பொதுவாக தன் சொந்த படங்களை சீரியஸ் ஜோலி என கலந்து கட்டிக் கொடுத்து வந்த ஷங்கர் ஒரு ரீமேக் படத்தை இயக்க ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதையே என் முன்னைய பதிவில் ஷங்கர் ரீமேக்கும் படம் படுத்தாலும் படுக்கலாம் என சொல்லி இருந்தேன். அதேபோல அஜித் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறைவு என்றும் சொல்லி இருந்தேன். இந்த நிலையில் ஷங்கர் தான் இந்த திரைப்படத்தை இயக்கப்போகின்றார் என்றால் அவர் தெரிவு யார் என்பதற்கு இப்போது ஓரளவு விடை கிடைத்துள்ளது.
விஜய் அமீர்கான் வேடத்தில் நடிக்கும் அதேநேரம் பாய்ஸ் திரைப்படத்தில் (இதுவும் ஷங்கர் இயக்கிய படம்) நடித்த சித்தார்த் மூன்றாவது நபராக நடிக்கும் வாய்ப்பை ஷங்கர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி இவர்கள் மூவரும் தான் என்னும் பட்சத்தில் ஜீவா, மாதவன் நடித்த வேடத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்தாகும். எது எப்படியோ இந்த படம் பற்றிய செய்திகள் இன்னும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஷங்கரோ அல்லது விஜயோ அல்லது ஜெமினி பிலிமா தம வாய் திறந்து இந்த படம் பற்றி சொன்னால் தான் எந்த செய்தியையும் உறுதிப்படுத்த முடியும்.
ஆடிக்கூழ் குடிக்கலாம் வாங்க!.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்று அன்று கவிஞன் பாடினாலும் பெரும்பாலான நாட்கள் விடுமுறை இன்றி கழிந்ததும் உண்டு. நம்மில் சிலர் ஆடிக்கூழ் குடித்தும் பல வருடங்கள் ஆகிவிட்டன. என்னதான் இருந்தாலும் நம் சொந்த மண்ணில் சொந்த வீட்டில் இருந்து கூழ் குடிக்கும் சுகமே தனிதான். இன்னும் என் வாழ்வில் என் சொந்த வீட்டில் இருந்து நான் கூழ் குடிக்கவில்லை என்பது கவலை தான்.
கடந்த நாட்களில் ஆடிப்பிறப்பு வரும் நாளில் காலை எழுந்து அம்மா காய்ச்சும் கூழை குடித்து விட்டு அப்பா வேலைக்கு போக நானும் அம்மாவும் பாடசாலை போனது இன்றும் நினைவுக்கு வருகின்றது. சிறுவயதில் யாழில் ஒரு சிலவருடமும் பின் வவுனியாவில் பல வருடங்களும் கழிந்து இப்போது கொழும்பிலும் கூழ் குடிக்கின்றேன்.
நினைவுகள் நினைக்கும் போது சுகமாக இருக்கும். இன்றும் காலையில் அம்மா கூழ் காய்ச்சிவிட்டு எழுந்து குடி என சொன்னபோதும் என் இலட்சியப்பாதையில் இருந்து மீளக்கூடாது என்பதற்காய் பத்து மணிக்கு எழுந்து அதன் பின் கூழ் குடித்து என் பிறவிப்பயனை அடைந்தேன். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடலில் விடுதலை வந்தாலும் இன்னும் இந்த தினத்துக்கு அரச விடுமுறை இல்லை. இதனால் பலருக்கு கூழ் வாய்ப்பு இல்லாமல் போகலாம்.
அம்மா கொடுக்கும் கூழை பாத்திரத்தில் எடுத்து சுட சுட குடிக்கும் போது அதற்குள் இட்டிருக்கும் பொருட்கள் நமக்கு கடிபடும் போது அப்பப்பா என்ன சுவை அது. ஆனால் பாருங்கோ இனிப்பு கூழாக இருப்பதால் நிறைய குடிக்க முடியாது தானே.
கூழானாலும் குளித்து குடி என்பர். சமய முறைப்படி ஆறுமாத காலம் கடந்து புது மாதம் ஒன்று பிறந்திருக்கின்றது பல சிறப்புக்கள் வாய்ந்த மாதம் பிறந்திருக்கிறது. ஆடிக் கூழும் கொழுக்கட்டையும் உண்டு மகிழ்ந்து இன்றைய நாளை பலர் ஆரம்பித்திருப்பீர்கள். உங்கள் ஆடிக்கூழ் அனுபவத்தையும் சொல்லுங்களேன்.
Friday, July 16, 2010
3 இடியட்ஸ்சில் விஜயுடன் இணைவாரா அஜித்?
3 இடியட்ஸ் திரைப்படம் அமீர்கான், மாதவனுடன் இன்னுமொரு வளர்ந்து வரும் ஹீரோ நடித்து வெளிவந்து சக்கை கட்டு கட்டிய திரைப்படம். இதில் அமீர்கான் எவ்வளவு பெரிய ஹீரோ என்று சொல்லதேவையில்லை. அதேநேரம் தமிழ், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் மாதவனுக்கு என்று ஒரு பெயர் உண்டு. ஆனால் அமீர்கானுடன் ஒப்பிட்டால் மாதவன் கீழே தான். அடுத்து ஜோஷி, இவர் ஒரு வளர்ந்து வரும் நாயகன் தான். இவர்கள் இணையில் வந்து தான் வசூல் சாதனை படைத்தது இந்த படம். இப்போது இதை தமிழில் கொண்டுவரும் முயற்சி.
தமிழில் இந்த படத்தை கொண்டுவர ஜெமினி பிலிம்ஸ் உரிமையை வாங்கியது முதல் விஜய் இந்த படத்தில் நடிப்பார் என்ற பேச்சு இருந்து வருகின்றது. இதை விஜய் உறுதி செய்யாதவிடத்தும் அவருக்கு தேவைப்படும் மிகப்பெரிய ஒரு வெற்றி அவரை நடிக்க வைக்கும் என்றே சொல்ல தோன்றுகின்றது. இந்த நிலையில் தான் விஜயுடன் யார் யார் நடிக்க வாய்ப்பு உண்டு என்ற கேள்வியை கேட்டு நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். வாசிக்க இங்கே சொடுக்குங்கள். அடுத்து இந்த படத்தில் நடிக்க தன் ஆசையை வெளியிட்டார் ஜீவா. ஆனால் இதற்க்கு பச்சை சிவப்பு என எந்த விளக்கும் எந்த பக்கமும் இருந்தும் இன்னும் ஒளிரவில்லை.
இந்த நிலையில் தான் தமிழ் படத்தை இயக்க பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டதை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது ஜெமினி. ஷங்கர் என்றால் எப்படி பிரமாண்டமாய் இருக்கும் என சொல்ல தேவையில்லை. ஆனால் முதல் முறையாக ஷங்கர் ஒரு ரீமேக் படத்தை இயக்கப்போகின்றார். எனவே அந்த படம் எப்படி வரும் என்பது எனக்கு சொல்ல தெரியாது. தன் சொந்த படங்களில் அசத்திய ஷங்கர் ரீமேக்கில் சொதப்பினாலும் ஆச்சரியம் இல்லை.
இயக்கம் இப்படி இருக்கையில் விஜய் இந்த படத்தில் நடிப்பது நல்லது என கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நேரடியாகவே தெரிவித்திருக்கும் நிலையில் ஷங்கர் தான் இந்த படத்தை இயக்க இருக்கின்றார் என்ற செய்தி வந்திருப்பது அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க தூண்டும். இதேநேரம் முன்னர் ஒருமுறை விஜய் இந்த படத்தில் உறுதி செய்யப்பட்டதாகவும் இயக்குனர் கதாநாயகி உள்ளிட்டோரை நீங்களே முடிவு செய்யுங்கள் என விஜயிடம் ஜெமினி நிறுவனம் சொன்னபோது எனக்காக இந்த படத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்றும் இயக்குனர் ஹீரோயின் எல்லாவற்றையும் நீங்களே தெரிவு செய்யுங்கள் என ஜெமினியிடம் விஜய் சொன்னதாகவும் செய்தி வந்தது. எனவே தான் இப்போது ஷங்கர் தெரிவு செய்யப்பட்டாரா என்ற கேள்வியும் உண்டு?
ஏற்கனவே விஜயும் ஷங்கரும் இணைய தங்கள் விருப்பங்களை தெரிவித்துள்ள நிலையில் இப்போது வாய்ப்பும் வந்திருக்கும் நிலையில் இருவரும் அதை தவிர்க்க மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம். விஜய் நடிப்பது ஓரளவு உறுதியாகி இருக்கும் நிலையில் அடுத்த இருவர் யார் என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை. மாதவன் வேடத்தில் நடிக்க மாதவன் மறுத்த பின்(ஒரே வேடத்தை திருப்பி செய்ய விருப்பம் இல்லை என காரணம் சொன்னார்.) அந்த இடத்தில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இது சாத்தியமா? என்றால் எனக்கு இல்லை என்று பதில் வருகின்றது. காரணம் அஜித் இந்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் அவர் அமீர்கான் வேடத்தை செய்யவே ஆசைப்படுவார். அவர் ரசிகர்களும் அதையே விரும்புவர். அதேநேரம் விஜயும் விட்டுக்கொடுக்க தயாராக மாட்டார். அப்படி இருக்கையில் இந்த பேச்சில் வெற்றி கிடைக்கும் என நினைக்கவில்லை. சிலவேளை விஜய் இந்த படத்தில் நடிக்காமல் போனால் அஜித் நடிக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் ஏகன் படத்தில் தன்னை தானே கொலிஜ் மாணவனா என அஜித் நக்கலடித்த பின்னும் ஒரு கல்லூரி மாணவனாக நடிக்க ஒத்துக்கொள்வாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது.
விஜய்-அஜித் கூட்டு நடந்தால் சந்தோசம். ஆனால் இருவருமே இதை செயற்படுத்துவர்களா? படம் இமாலய வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த வெற்றிக்கு காரணம் விஜயா அல்லது அஜித்தா என்ற கேள்வி வரும். இருவருக்குள்ளும் இருவர் ரசிகர்களுக்குள்ளும் ஈகோ மோதல் வரும். இதை இருவரும் விரும்பமாட்டார்கள். இவை எல்லாம் தாண்டி விஜயை விட அடுத்த இடத்தில் அஜித்தோ அஜித்தை விட முக்கியம் குறைந்த பாத்திரத்தில் விஜயோ நடிக்க வாய்ப்பு இல்லை என்று நான் சொல்கின்றேன். ஆனால் அதையும் மீறி இவர்கள் நடிக்க சம்மதித்தால். மூன்றாவதாக நடிக்க ஜீவா தயாராக இருக்கும் நிலையில். விஜய்-அஜித்-ஜீவா-ஷங்கர்-ஜெமினி பிலிம்ஸ் இவர்களோடு ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது இன்னொரு நல்ல இசை அமைப்பாளர் உள்ளிட்ட ஷங்கரின் பிரமாண்ட கூட்டணியுடன் இணைய இருக்கும் ஹீரோயின் யார்? என்ற கேள்வியும் உண்டு. அப்படி எல்லா பிரமாண்டங்களும் தல தளபதி இணைந்தால் தமிழ் சினிமா கண்ட மிகப்பெரிய வெற்றி படமாக அது அமையும் அதே நேரம் தமிழ் சினிமாவின் போக்கும் மாறி மிகப்பெரிய வளர்ச்சி ஏற்ப்படும் என்பதில் ஐயமில்லை.
Sathiamoorthy Shathieshan 3 இடியட்சில் விஜயுடன் சேர்வாரா அஜித்? உங்கள் கருத்தென்ன
1. விஜயுடன் அஜித் சேர்வாரா?
2. அப்படி விஜய் அஜித் இணையும் சந்தர்ப்பத்தில் மூன்றாவது ஹீரோ யார் இணைவார்?
3. இந்த படத்துக்கு பொருத்தமான கதாநாயகி யார்?
4. பொருத்தமான இசையமைப்பாளர் யார்?
5. படத்துக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்றால் என்ன பெயர் வைக்கலாம்.?
மறக்காமல் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு போங்கள். சில நேரங்களில் உங்கள் ஆலோசனை ஷங்கருக்கு பயன்படலாம்.
தளபதியும் தலையும் சேர்ந்து ஒரு வெற்றி படம் தர வாழ்த்துவோம்.
Thursday, July 15, 2010
வேலாயுதம் பட தொடக்கவிழா- காணொளி
விஜய்-ஜெயம்ராஜா-விஜய் அன்டனி- ஆஸ்கர் ரவிசந்திரன் கூட்டணியில் வர இருக்கும் வேலாயுதம் திரைப்பட தொடக்கவிழாவின் காணொளி முதன் முறையாக பதிவுலகில். பார்த்து மகிழுங்கள்.
Monday, July 12, 2010
உலககிண்ண கால்பந்து-மொக்கை பதிவு.
நேற்று இரவு எத்தனை மணிக்கு உலக கிண்ண கால்பந்து போட்டி என்று ஒரு குழப்பம் வர இலங்கையில் நடமாடும் போட்டி அட்டவணை(நிறைய பேரை நடு ராத்திரி தூக்கத்தில் இருந்து எழுப்பி போட்டியை பார் என்றாராம்.) சுபாங்கன் தாத்தாவிடம் கேட்கலாம் என்ற ஆவலில் அவருக்கு அழைப்பு எடுத்தால், மனிதர் என் மேல் கோபப்படுகின்றார். அண்மைக்காலமாய் என் பதிவுகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாம். நானும் வழக்கமாய் எல்லோரும் சொல்லும் காரணம் சொன்னேன்(அதுக்காக நான் பிசி மான் என்று யாரும் தப்பாய் நினைக்கப்படாது.) அப்படியே பேசிக்கொண்டிருக்கும் போது உலககிண்ண கால்பந்து பற்றி ஒரு பதிவிடலாமே என்றார். நமக்கு தான் கால்பந்து சுத்த சூனியம் ஆச்சே என்று சொல்ல பவனை போல தெரிந்த கிரிக்கெட்டை வைத்து தெரியாத கால்பந்துக்கு பதிவு ஒன்று போடு என அடி எடுத்துக் கொடுத்துள்ளார். அவர் அடியுடன் குரு பவனின் ஆசி(எந்த விதத்தில் என்று கேட்கப்படாது) வழங்க இந்த பதிவை எழுதுகின்றேன்.
நேற்று நடைபெற்ற உலககிண்ண கால்பந்து போட்டியின் ஸ்பெயின் வெற்றி பெற்றது எல்லோருக்கும் தெரியும். இதை வைத்துக்கொண்டு ஒரு மொக்கை பதிவு போடுகின்றேன். இது முழு மொக்கை. மொக்கை இல்லாவிட்டாலும் மொக்கை என்று எடுத்துக்கொள்ளுங்கள் அப்புறம் எனக்கு வலிக்குமெல்லா.சரி நேரே மேட்டருக்கு போவோமா?
ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான Footket(Cricket போல) போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஸ்பெயின் அணி தலைவர் தங்களுக்கு ஒரு பக்க கிரவுண்ட் வேண்டும் என்றும் நெதர்லாந்து அணியை பந்தினை எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். அதற்க்கிணங்க முதலில் காலாட்டத்தை(துடுப்பாட்டம் போல) தொடங்கிய நெதர்லாந்து அணி மிகவிரைவிலேயே தங்கள் அடித்தாடும் பாணியை தொடங்கவில்லை. மறுபுறம் தங்கள் நிதானமான அடித்தாடும் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்பெயின் அணி நெதர்லாந்துக்கு பாரிய சவாலை வழங்கியது.
இந்த நேரத்தில் போட்டியை பார்க்கும் போது சின்ன பிள்ளைகளை விளையாட்டுக்காட்ட பெரியவர்கள் பந்தை தூக்கி எறிய அதை பிடிக்க சிறுவர்கள் ஓட உடனே அந்த பந்தை இன்னொரு இடத்துக்கு தூக்கி எறிய அதை பிடிக்க பிள்ளை ஓடுவது போல இருந்தது. ஆனால் சிறிது நேரத்தின் பின் ஓரளவு சுதாகரித்துக்கொண்ட நெதர்லாந்து அணி தன் ஓட்ட வேகத்தை சராசரியாக அதிகரித்தாலும் இரண்டு அணியினராலும் ஒரு ஓட்டத்தைக் கூட பெற முடியவில்லை. தொடர்ந்து இரண்டு அணி வீரர்களும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தினாலும் மறு புறம் இரண்டு அணியின் பிரதான களத்தடுப்பாளர்களும் (கோல் காப்பாளர்களும்) பறந்து பறந்து பந்தினை பிடித்து எதிரணியினர் ஓட்டத்தினை பெற முடியாமல் கட்டுப்படுத்தினர்.
இடை இடையே தன் பொகெட்டில்இருந்த மஞ்சள் நிற அட்டையை எடுத்து காட்டி வீரர்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். இடையிடையே வீரர்கள் ஓட்டங்களை பெற முடியாமல் களத்தடுப்பாளர்கள் தங்கள் கால்களால் நெஞ்சில் உதைத்தும் கால்தடம் போட்டு விழுத்தியதும் நாம் வயல் வெளியில் ஆடிய ஆட்டத்தை நினைவு படுத்தியது. அடிக்கடி எல்லைக்கோட்டுகருகே பந்து சென்று வந்தாலும் எந்த அணியாலும் ஓட்டங்களை பெற முடியவில்லை. ஆனாலும் பாருங்கோ சில நேரங்களில் பந்து மைதானத்தி விட்டு வெளியே சென்றாலும் சிக்ஸ் போர் கொடுக்காமல் பந்தினை எதிரணி வீரரிடம் கொடுத்து மைதானத்துக்குள் கையால் எறியச்சொன்னார் அம்பயர். ஆனாலும் பாருங்கோ காலாலும் தலையாலும் பந்தை களத்தடுப்பு செய்ய அனுமதிப்பவர்கள் கையால் செய்யவிடாதது என் கவலை.
கடுமையாகவும் சுவாரஸ்யமாகவும் நடைபெற்ற போட்டியில் முழு ஓவரும் ஆடி முடித்தும் இரு அணியும் ஒரு ஓட்டத்தையும் பெற முடியாமல் போக இன்னும் சில ஓவர்கள் ஆடலாம் என்று பால்வர்த்தார் அம்பயர். ஆனால் பாருங்கோ பதினைந்து நிமிடம் ஆடியும் மீண்டும் யாரும் ஓட்டத்தை பெறாமல் போக மீண்டும் ஒரு தடவை ஓவர் அதிகம் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் பாருங்கோ யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இனியேஸ்டா என்ற வீரர் அற்ப்புதமான ஒரு சிக்ஸ் அடித்து தன் அணியை முன்னிலை பெற வைத்தார். எனவே தாங்கள் அபாரமாக ஆடி இதே போல இரண்டு அடி விட்டால் தான் முடியும் என்ற நிலையில் ஆக்ரோசமாக நெதர்லாந்து ஆடினாலும் இறுதியில் ஓவர் முடிவடைந்த காரணத்தால் ஸ்பெயின் வெற்றி பெற்றது.
அடிக்கடி offside offside என்றார்கள் ஆனால் பாருங்கோ கடைசிவரை legside காட்டவில்லை.(கண்டு பிடிப்பு உதவி பவன்) Ballலை காட்டியவர்கள் Batறை காட்டவில்லை. பந்து மைதானத்தை விட்டு வெளியே போனாலும் ஆறு நான்கு ஓட்டங்கள் வழங்கப்படவில்லை. நடுவர் கையை மேலே தூக்கி காட்டினாலும் ஆறு ஓட்டம் கொடுக்காப்படாமல் வீரர் எச்சரிக்கப்படுகின்றார். என்ன ஒரு கவலை இந்த சியர் லீடர்ஸ் ஆடவில்லை என்பதுதான். ஆனால் நேற்று போட்டி பார்த்த பின் வரும் உலக கிண்ண போட்டியில் நான் விளையாடும் அறிவு கிடைத்திருக்கு என நம்புகின்றேன். என்ன சொல்றிங்க இந்த அறிவு போதாதா எனக்கு அப்புறம் என் குரு பவனிடம் இதை பற்றி ஒரு கோர்ஸ் செய்யப்போறேன். நேரம் ஆச்சு குரு கோவிப்பார் வரட்டா.....
பி.கு: படம் எப்பிடி இருக்கு. கட்டாயம் சொல்லிட்டு போங்கோ.