
3 இடியட்ஸ் திரைப்படம் அமீர்கான், மாதவனுடன் இன்னுமொரு வளர்ந்து வரும் ஹீரோ நடித்து வெளிவந்து சக்கை கட்டு கட்டிய திரைப்படம். இதில் அமீர்கான் எவ்வளவு பெரிய ஹீரோ என்று சொல்லதேவையில்லை. அதேநேரம் தமிழ், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் மாதவனுக்கு என்று ஒரு பெயர் உண்டு. ஆனால் அமீர்கானுடன் ஒப்பிட்டால் மாதவன் கீழே தான். அடுத்து ஜோஷி, இவர் ஒரு வளர்ந்து வரும் நாயகன் தான். இவர்கள் இணையில் வந்து தான் வசூல் சாதனை படைத்தது இந்த படம். இப்போது இதை தமிழில் கொண்டுவரும் முயற்சி.
தமிழில் இந்த படத்தை கொண்டுவர ஜெமினி பிலிம்ஸ் உரிமையை வாங்கியது முதல் விஜய் இந்த படத்தில் நடிப்பார் என்ற பேச்சு இருந்து வருகின்றது. இதை விஜய் உறுதி செய்யாதவிடத்தும் அவருக்கு தேவைப்படும் மிகப்பெரிய ஒரு வெற்றி அவரை நடிக்க வைக்கும் என்றே சொல்ல தோன்றுகின்றது. இந்த நிலையில் தான் விஜயுடன் யார் யார் நடிக்க வாய்ப்பு உண்டு என்ற கேள்வியை கேட்டு நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். வாசிக்க இங்கே சொடுக்குங்கள். அடுத்து இந்த படத்தில் நடிக்க தன் ஆசையை வெளியிட்டார் ஜீவா. ஆனால் இதற்க்கு பச்சை சிவப்பு என எந்த விளக்கும் எந்த பக்கமும் இருந்தும் இன்னும் ஒளிரவில்லை.
இந்த நிலையில் தான் தமிழ் படத்தை இயக்க பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டதை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது ஜெமினி. ஷங்கர் என்றால் எப்படி பிரமாண்டமாய் இருக்கும் என சொல்ல தேவையில்லை. ஆனால் முதல் முறையாக ஷங்கர் ஒரு ரீமேக் படத்தை இயக்கப்போகின்றார். எனவே அந்த படம் எப்படி வரும் என்பது எனக்கு சொல்ல தெரியாது. தன் சொந்த படங்களில் அசத்திய ஷங்கர் ரீமேக்கில் சொதப்பினாலும் ஆச்சரியம் இல்லை.
இயக்கம் இப்படி இருக்கையில் விஜய் இந்த படத்தில் நடிப்பது நல்லது என கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நேரடியாகவே தெரிவித்திருக்கும் நிலையில் ஷங்கர் தான் இந்த படத்தை இயக்க இருக்கின்றார் என்ற செய்தி வந்திருப்பது அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க தூண்டும். இதேநேரம் முன்னர் ஒருமுறை விஜய் இந்த படத்தில் உறுதி செய்யப்பட்டதாகவும் இயக்குனர் கதாநாயகி உள்ளிட்டோரை நீங்களே முடிவு செய்யுங்கள் என விஜயிடம் ஜெமினி நிறுவனம் சொன்னபோது எனக்காக இந்த படத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்றும் இயக்குனர் ஹீரோயின் எல்லாவற்றையும் நீங்களே தெரிவு செய்யுங்கள் என ஜெமினியிடம் விஜய் சொன்னதாகவும் செய்தி வந்தது. எனவே தான் இப்போது ஷங்கர் தெரிவு செய்யப்பட்டாரா என்ற கேள்வியும் உண்டு?

ஏற்கனவே விஜயும் ஷங்கரும் இணைய தங்கள் விருப்பங்களை தெரிவித்துள்ள நிலையில் இப்போது வாய்ப்பும் வந்திருக்கும் நிலையில் இருவரும் அதை தவிர்க்க மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம். விஜய் நடிப்பது ஓரளவு உறுதியாகி இருக்கும் நிலையில் அடுத்த இருவர் யார் என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை. மாதவன் வேடத்தில் நடிக்க மாதவன் மறுத்த பின்(ஒரே வேடத்தை திருப்பி செய்ய விருப்பம் இல்லை என காரணம் சொன்னார்.) அந்த இடத்தில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இது சாத்தியமா? என்றால் எனக்கு இல்லை என்று பதில் வருகின்றது. காரணம் அஜித் இந்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் அவர் அமீர்கான் வேடத்தை செய்யவே ஆசைப்படுவார். அவர் ரசிகர்களும் அதையே விரும்புவர். அதேநேரம் விஜயும் விட்டுக்கொடுக்க தயாராக மாட்டார். அப்படி இருக்கையில் இந்த பேச்சில் வெற்றி கிடைக்கும் என நினைக்கவில்லை. சிலவேளை விஜய் இந்த படத்தில் நடிக்காமல் போனால் அஜித் நடிக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் ஏகன் படத்தில் தன்னை தானே கொலிஜ் மாணவனா என அஜித் நக்கலடித்த பின்னும் ஒரு கல்லூரி மாணவனாக நடிக்க ஒத்துக்கொள்வாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது.
விஜய்-அஜித் கூட்டு நடந்தால் சந்தோசம். ஆனால் இருவருமே இதை செயற்படுத்துவர்களா? படம் இமாலய வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த வெற்றிக்கு காரணம் விஜயா அல்லது அஜித்தா என்ற கேள்வி வரும். இருவருக்குள்ளும் இருவர் ரசிகர்களுக்குள்ளும் ஈகோ மோதல் வரும். இதை இருவரும் விரும்பமாட்டார்கள். இவை எல்லாம் தாண்டி விஜயை விட அடுத்த இடத்தில் அஜித்தோ அஜித்தை விட முக்கியம் குறைந்த பாத்திரத்தில் விஜயோ நடிக்க வாய்ப்பு இல்லை என்று நான் சொல்கின்றேன். ஆனால் அதையும் மீறி இவர்கள் நடிக்க சம்மதித்தால். மூன்றாவதாக நடிக்க ஜீவா தயாராக இருக்கும் நிலையில். விஜய்-அஜித்-ஜீவா-ஷங்கர்-ஜெமினி பிலிம்ஸ் இவர்களோடு ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது இன்னொரு நல்ல இசை அமைப்பாளர் உள்ளிட்ட ஷங்கரின் பிரமாண்ட கூட்டணியுடன் இணைய இருக்கும் ஹீரோயின் யார்? என்ற கேள்வியும் உண்டு. அப்படி எல்லா பிரமாண்டங்களும் தல தளபதி இணைந்தால் தமிழ் சினிமா கண்ட மிகப்பெரிய வெற்றி படமாக அது அமையும் அதே நேரம் தமிழ் சினிமாவின் போக்கும் மாறி மிகப்பெரிய வளர்ச்சி ஏற்ப்படும் என்பதில் ஐயமில்லை.

இந்த பதிவை எழுத சற்று முன்னர் என் மூஞ்சி புத்தகத்தில் இந்த இணைப்பு சாத்தியமா என கேட்டிருந்தேன் நண்பர்கள் சொன்ன பதிலை இங்கே இணைக்கின்றேன். நீங்களும் சொல்லுங்கள்.
1. விஜயுடன் அஜித் சேர்வாரா?
2. அப்படி விஜய் அஜித் இணையும் சந்தர்ப்பத்தில் மூன்றாவது ஹீரோ யார் இணைவார்?
3. இந்த படத்துக்கு பொருத்தமான கதாநாயகி யார்?
4. பொருத்தமான இசையமைப்பாளர் யார்?
5. படத்துக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்றால் என்ன பெயர் வைக்கலாம்.?
மறக்காமல் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு போங்கள். சில நேரங்களில் உங்கள் ஆலோசனை ஷங்கருக்கு பயன்படலாம்.
தளபதியும் தலையும் சேர்ந்து ஒரு வெற்றி படம் தர வாழ்த்துவோம்.