Wednesday, July 7, 2010

கால்பந்து உலககிண்ணம் ஜேர்மனிக்கு - கணிப்பு ஆரூடம்.



கடந்த சில நாட்களாக பதிவு போடாமல் இருந்தாலும் இன்று சுறு சுறுப்பாய் அடுத்தடுத்த பதிவுகள் போடும் வேகம் எனக்குள் வந்து விட்டது. அந்த வேகத்தை தந்த நண்பர்களுக்கு நன்றி. காரணம் நான் இப்போது இடப்போகும் பதிவும் எனக்கு நண்பர் கேதீஸ் என்பவர் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்ன ஒரு விடயம் தான்.

கால்பந்து உலக கிண்ணம் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரு அரை இறுதிப்போட்டியும் இறுதிப்போட்டியும் மீதம் இருக்கும் நிலையில் ஒரு வித்தியாசமான கணிப்பை ஆரூடமாக சொல்லி இருக்கின்றார் அந்த நண்பர். இது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று சரியாக தெரியாவிட்டாலும் வித்தியாசமான சுவாரஸ்யமான கணிப்பு என்பதால் பகிர்ந்து கொள்கின்றேன். நீங்களும் கணித்துப்பாருங்கள் அதேநேரம் பொறுத்திருந்தும் பார்ப்போம் இது நடக்கின்றதா என்று.

1. பிரேசில் அணியை பொறுத்தவரை 1994 இல் உலக கிண்ணம் ஒன்றை வென்றுள்ள அதே நேரம் அதற்க்கு முன்னர் 1970 இலும கிண்ணம் வென்று சாதித்துள்ளது. இப்போது நாம் செய்ய வேண்டியது 1970+1994=3964

2. ஆர்ஜென்டினா அணியை பொறுத்த மட்டில் அதன் இறுதி உலககிண்ணம் 1986 இல் வெல்லப்பட்டது. அதற்க்கு முன்னர் 1978 இல் இவர்கள் உலககிண்ணத்தை கைப்பற்றியுள்ளனர். இப்போது நாம் செய்ய வேண்டியது. 1978+1986=3964

3. ஜெர்மனி இறுதியாக 1990 இல் உலக கிண்ணத்தை சுவீகரித்த அதேநேரம் அதற்க்கு முன் 1974 இல் வென்றுள்ளனர். இப்போது நாம் செய்யவேண்டியது. 1974+1990=3964

4. பிரேசில் மீண்டும் ஒருதடவை 2002 இல் உலக கிண்ணம் வென்ற அதேவேளை 1962 இலும வென்றுள்ளது. இப்போது நாம் செய்யவ்ண்டியது. 1962+2002=3964

5. இப்போது நமக்கு இருக்கும் கேள்வி என்ன? 2010 இல் கிண்ணத்தை வெல்லப்போவது யார்? இதற்க்கு விடை இப்போது.....

நீங்கள் செய்யவேண்டியது மாஜிக் இலக்கமாக இருக்கும் 3964 இலிருந்து இந்த வருடமான 2010ஐ கழித்து பாருங்கள் 3964-2010=1954

1954 இல் உலக கிண்ணம் வேறன்னு சாதனை படைத்த அணி எது என பார்த்தால் அது ஜெர்மனி. அந்த வகையில் இப்படி ஒரு வித்தியாசமான ஆரூட்டம் சொல்லப்பட்டுள்ளது. இதை நீங்கள் மருதலித்தும் சொல்லலாம் ஆனால் இம்முறை ஜெர்மனி வென்று இந்த கணிப்பை உண்மையாக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Share:

18 கருத்துரைகள்:

maruthamooran said...

யாருங்க இப்பிடியெல்லாம் யோசிக்கிறது?

anuthinan said...

அண்ணே ஜெர்மனி மட்டும் வெல்ல இல்ல!! அப்புறம் உங்களுக்கு கச்டம்த்தான்

யோ வொய்ஸ் (யோகா) said...

mudiyala sathish

Vathees Varunan said...

.

Vathees Varunan said...

சே! வடைபோச்சே சதீஷிக்கு....அதுசரி உக்கார்ந்து கணக்குபோட்ட வெட்டிப்பயல் தாங்கள் இல்லைத்தானே? `ஹி.........`ஹி.........

ILA (a) இளா said...

இப்போ என்ன சொல்லுவீங்க. யேர்மனி தோத்தாச்சு

வந்தியத்தேவன் said...

வட போச்சே ஹிஹி இதையெல்லாம் நம்பி என்ன கொடுமை சதீஸ்

Bavan said...

வட போச்சே...:P

Bavan said...

வட போச்சே...:P

Jana said...

ஆரூடம் பொய்த்துப்போய்விட்டதே சகா...நானும் ஜெர்மனி வெல்லும் எனத்தான் எதிர்பார்த்தேன்

SShathiesh-சதீஷ். said...

@மருதமூரான்.

தெரியலையே

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

கஷ்டமாய் தான் போச்சு தம்பி

SShathiesh-சதீஷ். said...

@யோ வொய்ஸ் (யோகா)

உடனடியாய் ஒரு நல்ல வைத்தியரை நாடவும்

SShathiesh-சதீஷ். said...

@வதீஸ்-Vathees

ஹீ ஹீ நான் இல்லை

SShathiesh-சதீஷ். said...

@ILA(@)இளா

இந்த கணிப்பு பொய் என்று சொல்வேன்.....ஹீ ஹீ அண்ணே போட்டி முடிஞ்ச பின் எல்லாம் சொல்லலாம் தானே

SShathiesh-சதீஷ். said...

@வந்தியத்தேவன்

நம்பிக்கை தானே வாழ்க்கை

SShathiesh-சதீஷ். said...

@Bavan

இன்னொரு வடை சுடவும்

SShathiesh-சதீஷ். said...

@Jana

கவுத்திட்டான்களே தலிவா

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive