இது காதல் மாதம்..........காதலர்கள் குதூகலிக்கும் மாதம்.......
இது சாதல் மாதம்..........காதல் தோல்வியில் நெஞ்சங்கள் துடிக்கும் மாதம்.....
வானொலியில் இரவு நிகழ்ச்சி ஒன்றில் பாடல்களுக்கிடையில் பிணைப்பை ஏற்ப்படுத்த நான் எழுதிய சொற்க் கோர்வைகளை இங்கே பகிர்கின்றேன்...........
உள்ளத்தில் இன்றும் இருக்குதடி காதல்
உதட்டில் உதித்துவிட்டால் வந்திடுமா சாதல்
உணர்வுக்குள் ஏண்டி இன்னமும் மோதல்
இவை தீர நாம் செய்யவேண்டியது உண்மையாய் வாழ்தல் .......
நெருப்பென்று தெரிந்து விரல் வைத்தேன்
நெருப்பு சுடவில்லை
நிலவென்று தெரிந்தும் தொட துணிந்தேன்
முயற்சியில் தோற்கவில்லை
படுகுழிஎனும் உன் உள்ளத்தில் விழுந்தேன்
அன்று முதல் கடவுள் ஆனேன்
அவன் போல் கல்லுமானனேன்
இன்னும் எழும்பவில்லை
இதயம் துடிக்கவில்லை
உன் இன்னா சொற்கள் மட்டும் ஏதோ செய்யுதடி
ஒ இதுதான் காதல் வலியா ?............
நினைத்து பார்த்தாயா என் பாசத்தை
நீதி கேட்கின்றாயா அதை வேஷம் என்று
அசைத்து பார்க்கின்றாயா என் ஆழ்மன ஒட்டத்தை
ஆடி அடங்கினாலும் அழியாதடி என் காதல்...........
அன்று கொன்றாய் உன் விழிவீச்சில்
அது காதல்
இன்று கொல்கின்றாய் உன் வார்த்தை வீச்சில்
இது ?
உறவுகள் எனக்கில்லை
ஆனால் உணர்வுகள் இருக்குதடி
கண்ணாம்பூச்சி ஆட்டமில்லை
இது கனவை உலுக்கும் ஆட்டமடி ...............
0 கருத்துரைகள்:
Post a Comment