அஸ்தி சஞ்சயனம் - காடாற்று.
உடலை தகனம் செய்த அடுத்த நாள் அல்லது மூன்றாம்,ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் நாட்களில் எது வாய்ப்பாக அமையுமோ அதில் ஒரு நாளில் காடாற்று செய்யமுடியும். உடலை தகனம் செய்த இடத்தில் கால் பக்கத்தில் தொடக்கி தலைப்பக்கமாக நீரூற்றி எரியும் நெருப்பை அணைத்த பின் தலைப்பகுதியை வைத்து எரித்த இடத்தில் விளக்கு ஏற்றி கும்பம் வைத்து பூசைக்கு தேவையான அபிஷேக பொருட்களை வைக்கவும். மண்கலசம் ஒன்றில் நீர் ஊற்றி அதை தலைப்பகுதியில் வைக்கவும். தகனம் செய்யப்பட்ட உடல் எரித்த இடத்தில் முழு உருவமும் இருப்பதாக பாவனை செய்து கால் பகுதியில் இருந்து தலை நோக்கி கர்த்தா மேற்க்கே பார்க்கும் படி நிற்க புறங்கையால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின் முழங்கால்கல், நாபி,மாபு,நெற்றி,தலை ஆகிய ஐந்து இடத்திலும் திருநீறு, சந்தானம், மலர்கள், வைத்து தூப தீபம் காட்டி வணங்கி மேலே சொன்ன ஐந்து இடங்களிலும் இருக்கும் எலும்புகளை ஒழுங்காக எடுத்து தலைமாட்டில் இருக்கும் பாலுள்ள கலசத்தில் வைத்து அஸ்திரத்தினால் மூடவேண்டும்.
பின்னர் ஒரு எலும்பையும் விடாது எல்லாவற்றையும் எடுத்து(முடியுமானவரை கர்த்தாவே எல்லாவற்றையும் எடுப்பது நல்லது) ஒன்றாக்கி ஒரு பாத்திரத்தில் எடுக்கவேண்டும். பின் அந்த இடத்தை சுத்தம் செய்து நவதானியங்களை விதைத்து நெற்பொரி,மா அடை,தாம்பூலம்,பழங்கள் முதலியவற்றை சாஸ்திரப்படி பலியிட்டு முன்னர் கலசத்தில் எடுத்த அசதியையும், ஏனைய எலும்புகள் சாம்பல் முதலியவற்றையும் எடுத்து கர்த்தா வடக்கு முகமாக பார்க்க நின்றவண்ணம் தெற்குப் பக்கமாக போட்டுக் கரைத்து விடவும். பின்னர் அவர் அதே நீர்நிலையில் தோய்ந்து நக்கினதானம் செய்ய வேண்டும். ஒரு குடத்திலே பச்சை அரிசியை நிரப்பி அக்குடத்தை சுற்றி வஸ்திரம் கட்டி விளக்கில் நெய் ஊற்றி குடும்பஸ்தராக இருக்கும் ஒரு சிவப்பிராமனருக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
எட்டுக்கிரியை.
இதை பற்றி எந்த வித சாஸ்திரங்களும் இல்லை என்று சொல்கின்றனர். இருப்பினும் இது காலகாலமாக வழக்கத்தில் இருந்தே வருகின்றது. தகனம் செய்த நாள் தொடக்கம் அந்தியேட்டி வரை இறந்தவரின் படத்தை ஒரு இடத்தில் வைத்து விளக்கேற்றி தாம் உண்ணும் நாவினை அவர்களுக்கும் வைத்து வருவது வழக்கமாக இருக்கின்றது. அதேநேரம் இறந்தவருக்கு பிடித்த உணவுகள் பொருட்களை இறந்த எட்டாம் நாள் படைத்து வருவதும் வழக்கமான ஒன்றாகும்.
அந்தியேட்டி.
இறந்து முப்பத்தோராம் நாள் செய்யப்படும் கிரியையாகும். (இது சாதாரண சைவர்களுக்கு) பிரேதத்தின் உடலுக்கு பதிலாக தர்ப்பையினால் சரீரம் போல செய்து அந்தியேட்டி செய்யப்படும். சூர்ணோத்தவக் கிரியை முடித்து அந்த தர்ப்பையினால் செய்யப்பட்டதை தகனம் செய்வர். இது புனர் தகனம் எனப்படும். பின் அங்கு பாசாணம் ஸ்தாபித்து அதற்க்கு அபிஷேகம் போன்றன செய்யப்படும். இங்கு முப்பது பிண்டங்கள் இடப்படும். இந்த பிண்டங்கள் பச்சை அரிசிச்சாதம், கறிவகைகள், பலகாரங்கள், பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்து உருட்டி பிசைந்து இடவேண்டும். அதன் பின் ஏகோத்திர விருத்தி செய்யப்படும். பாசாணத்துக்கு தூப தீபம் காட்டி பூசை முடித்த பின் கும்பம், பாசாணம், பிண்டம் ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து நட்டுவ மேளம் கொட்ட எடுத்துச் சென்று பிண்டத்தை ஒருவரும் அதன் பின் கும்பத்தை ஒருவரும், அதனைத் தொடர்ந்து பாசானத்தை ஒருவரும் எடுத்துச் சென்று கர்த்தா இடையளவு தண்ணீரில் நின்றவண்ணம் வடக்கே நோக்க தெற்கு பக்கமாக பிண்டத்தை முன்னும், பின் கும்பத்தை வடக்குப் பக்கமாகவும், பாசாணத்தை தலைக்கு மேலால் தெற்குப் பக்கமாகவும் நீர்நிலையில் இட்டு ஸ்நானம் செய்யவேண்டும். பின்னர் வீட்டு வாசலை அடைந்ததும் வேப்பிலையை தின்று நெருப்பு,சாணம்,மண்,வெண்கடுகு ஆகியவற்றை தொட்டு கல்லின் மேல் கால் வைத்து அல்லது உலக்கையை கடந்து செல்ல வேண்டும்.
வீட்டுக்கிரியை அல்லது சபிண்டீகரணம்.
வீடினை கழுவி சுத்தம் செய்து புண்ணியாகவாசனம் செய்த பின்னர் வீட்டுக்கிரியை செய்ய வேண்டும். வீட்டுக்கிரியை செய்பவர் பிராமண குருக்களே. விக்னேஸ்வர பூசை,புண்ணியாகவாசனம்,பஞ்ச கவ்விய பூசை முதலிய கிரியைகளை செய்து நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி, சம்கிதை,இடபதானம், ஏகோதிட்டம்,மாசிகங்கள்,சோத கும்ப சிராத்தம், சபிண்டீகரணம் சிவதே ஒழுங்குமுறை.
நவசிராத்தம்- பச்சை அரிசி,காய்கறி வகைகள் தானம் செய்வது.
இடபதானம்- எருதுக்கு அலங்காரம் செய்து அதனை பூசித்து தானம் செய்தல். இதற்க்கு வசதி இல்லாதவர்கள் ஒரு தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதில் இடபத்தை கீறி அதன் மேல் தேங்காய் ஒன்றை வைத்து அதில் இடபதேவரை இருப்பதாக எண்ணி பூசித்து ஆசாரியார் சொற்படி மந்திரங்களை கூறி தட்சனையுடன் வழங்க வேண்டும்.
ஏகோதிட்டம்- சர்பாத்திரமான ஒரு குருவை மேற்கு முகமாக இருக்க வைத்து ஆசனம் கொடுத்து சந்தானம் பூக்கள் எள்ளு ஆகியவை கொடுத்து உபசாரங்கள் செய்தது தானம் கொடுக்க வேண்டும். இதற்க்கு இருபத்திநான்கு ஸ்தானங்கள் சொல்லப்படுகின்றது. பவித்திரம்,பூணூல்,கமண்டலம்,உருத்திராக்கம்,பாதுகை,தண்டம்,கௌபீனம்,திருநீறுப்பை, யோக பட்டம், குடை, குலலாய், மேல்வஸ்திரம், வஸ்திரம்,பொன்,மோதிரம்,ரத்தினம், நெய்,வெண்ணெய், பசு,பூமி,உண்பதற்கு வேண்டிய பொருட்கள், சர்வதானியங்கள், அலங்காரப் பொருட்கள், தாசி,தாசர்கள் போன்றவற்றை கொடுக்கலாம். ஏகோதிட்டத்துக்கு ஒரு பிண்டமிட்டு அதை பூசிக்க வேண்டும்.
சோதகும்ப சிராத்தம்- நீர் நிறைந்த பாத்ஹ்டிரத்தை சாதத்துடன் தானம் செய்தல்
வைதரணி கோதானம்- பசுவை தானமாக கொடுத்தல்(முடியாதவர்கள் பணமாக கொடுக்கலாம்.)
2 கருத்துரைகள்:
:)))
@கன்கொ
ன் || Kangon
:)))
Post a Comment