Thursday, July 8, 2010

இறந்த கடற்கன்னியின் படமா இது?.

கடற்கன்னிகளை கதைகளில் படித்து அவர்கள் எவ்வளவு அழகானவர்கள் என மனதில் ஒரு படம் போட்டு வைத்திருப்போம். கடற்கன்னிகள் என்பவர்கள் தேவதைகள் போன்றவர்கள் என்ற எண்ணம் நமக்கு இருக்கின்றது. ஆனால் அண்மையில் அபுதாபியில் முதல் முறையாக கடற்கன்னி ஒன்றின் இறந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தது மட்டுமன்றி கண்டெடுக்கப்பட்ட முத்து தீவில் இருந்து இவர்கள் உடனடியாக வெளியேறி இருக்கின்றனராம். இதுவரை நீங்கள் கற்பனை செய்து வைத்த கடற்கன்னி இதுதானா அப்பிடியே கொஞ்சம் கீழே போய் பாருங்கோ படத்தை....பார்த்திட்டு யாரும் திட்டக்கூடாது.






இந்த தகவல் உண்மை என நினைத்து நான் உங்களிடம் பகிர்ந்திருந்தாலும் இது தவறானது என ஆதாரத்துடன் சொன்ன நண்பர்களுக்கு என் நன்றிகள். மேலதிக விபரங்களை பின்னூட்டத்தில் பாருங்கள்.
Share:

17 கருத்துரைகள்:

சௌந்தர் said...

இது உண்மயா நம்பவே முடியலை

Anonymous said...

This is not real picture. It is fake. Don't be a fool. Also don't try to fool others.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

சத்தீஸ்,

இப்பிடி அஞ்சல்களிலும் பேஸ்புக்கிலும் வரும் குப்பை விடயங்களை வலையில் ஏற்றுவது ஏற்புடையதல்ல.

இது முற்றிலும் தப்பான தகவல். கூகிளில் இது உண்மையா பொய்யா என்று தேடினாலே விடை கிடைக்கும்.

தேடு பொறிகளில் கடற்கன்னி பற்றித் தேடும்போது தவறான புரிதல்களை தரக்கூடியதான செயற்பாடுகளுக்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்கிறீர்கள்.

இது மூன்றாவது முறையாக உங்களுக்கு நானே பிழையான தகவல் எனக்குறிப்பிடும் பதிவு.

இன்றைக்கு daughter of Bill Gates என்று தேடுபொறிகளில் தேடினால் கிடைக்கும் தகவலும் பெண்ணின் படமும் பிழையானதாக இருப்பதற்குக் காரணம் இவ்வகையான குப்பை விடயங்களையும் தவறான தகவல்களையும் வலையில் ஏற்றுபவர்களே காரணம்.

நாளை கடற்கன்னி பற்றி தேடும்போது உங்களது இந்தக் குப்பைப் பதிவு வந்து தொலைத்தால் புதிதாக இணையத்தில் இணையும் இளையவர்கள் நம்பிவிடுவார்கள்.

கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் நண்பா.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

கோவி.கண்ணன் said...

:) கடற்கன்னி போல் தெரியவில்லை கடல் மூதாட்டி போல் இருக்கு

Ramesh said...

பசுப்பையனை வழிமொழிகிறேன்.
சதீஸ் இது முற்றிலும் பொய்யான தகவல்.
மேலும் இது பற்றி என்ன இனம் என்று கூகிளில் தேடும் போது கண்டுகொள்ளலாம். முடிந்தால் இதுபற்றிய இணைப்பு தருகிறேன்

SShathiesh-சதீஷ். said...

@சௌந்தர்

வருகைக்கு நன்றி

SShathiesh-சதீஷ். said...

@Anonymous

உங்கள் தகவலுக்கு நன்றி ஆனால் இது தவறானது என தாங்கள் ஆதாரம் கொடுத்தால் அதை அறிந்து கொள்ள எனக்கும் உதவியாக இருக்கும்.

SShathiesh-சதீஷ். said...

@மதுவதனன் மௌ. / cowboymathu

//சத்தீஸ்,//

இவ்வளவு நாளாய் பழகிட்டு என் பெயரையே தப்பாய் எழுதிரியலே

//இது முற்றிலும் தப்பான தகவல். கூகிளில் இது உண்மையா பொய்யா என்று தேடினாலே விடை கிடைக்கும்.

தேடு பொறிகளில் கடற்கன்னி பற்றித் தேடும்போது தவறான புரிதல்களை தரக்கூடியதான செயற்பாடுகளுக்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்கிறீர்கள்.
//

தகவல் தவறு என்றால் மன்னிக்கவும் இப்படியான தவறுகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்கின்றேன். ஆனால் இது தவறு என சொல்லும் நீங்கள் அதற்கான ஆதாரா சுட்டி எதையும் தந்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன்.

//இது மூன்றாவது முறையாக உங்களுக்கு நானே பிழையான தகவல் எனக்குறிப்பிடும் பதிவு.
//

முதல் இரண்டு பதிவுகளும் எவையோ? சொன்னால் நினைவு படுத்த முடியும் சொல்வீர்கள் என நம்புகின்றேன்.

மற்றும்படி உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. பிலேகேத்ஸ் பொன்னை தேடிரியலோ வீட்டில் அம்மாவுக்கு தெரியுமா?

SShathiesh-சதீஷ். said...

@கோவி.கண்ணன்

என்ன கொடுமை சார் இது இதை வேற நீங்க சைட் அடிக்கிரியலா

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

சதீஸ்,

இழை யுவான் கபானா என்பவரது சிலை வடிப்புக்கள்.

இங்கே சென்று தவலறிக.

http://www.internetvibes.net/2006/07/31/the-mermaids-of-juan-cabana/

http://www.thefeejeemermaid.com/

கூகுள் படங்கள்

http://www.hoax-slayer.com/malaysian-mermaid.html

வித்தியாசமான விடயங்களை பதிவில் ஏற்றமுதல் கூகுள் செய்து பார்த்தால் குறைந்தா போய்விடுவீர்கள்?

பதிவின் தலைப்பை மாற்றிவிடுங்கள் முடியுமானால்.

SShathiesh-சதீஷ். said...

@மதுவதனன் மௌ. / cowboymathu

தகவல்களுக்கு நன்றி அண்ணா.

////இது மூன்றாவது முறையாக உங்களுக்கு நானே பிழையான தகவல் எனக்குறிப்பிடும் பதிவு.
//

முதல் இரண்டு பதிவுகளும் எவையோ? சொன்னால் நினைவு படுத்த முடியும் சொல்வீர்கள் என நம்புகின்றேன்.//

இதற்க்கு நீங்கள் பதில் சொல்லவில்லை.

நீங்கள் சொன்னபடி தலைப்பை மாற்றியதுடன் பதிவின் கீழ் சில விடயங்களை சேர்க்கின்றேன்

ஆதிரை said...

இந்தப் படங்களும் கதைகளும் பழசு தம்பி...

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஓன்று பாட்டி தலையில கொம்பு, அமானுஷ்யம் என்று கயிறு திரித்தது :)

மற்றது.. ஏதோ ஒண்டு... எத்தினை பதிவுகளை எழுதித் தள்ளியிருக்கிறியள். உதுக்குள்ள நான் எங்க போய்த் தேடுறது. :)

SShathiesh-சதீஷ். said...

@மதுவதனன் மௌ. / cowboymathu

அண்ணே உங்கள் கருத்தை நான் ஏற்க்க மாட்டேன் காரணம் பாட்டி தலையில் கொம்ப பதிவில் நான் எந்த தவறான செய்தியையும் பரப்பவில்லை. அதில் உறுதியாய் இருக்கின்றேன் அதேநேரம் அது மானுஷ்யம் என்று சொன்னதில் தப்பில்லை எம்மை மீறிய ஒரு சக்திதானே அமானுஷ்யம் உங்கள் பாட்டிககோ இல்லை என் பாட்டிககோ கொம்பு முளைத்தா இருக்கின்றது. அந்த வகையில் அதை அமானுஷ்யம் என்று சொன்னதில் என்ன தப்பு. நீங்கள் தான் விளங்காமல் பேசுகின்றீர்கள் என நினைக்கின்றேன்.

இத்தனை பதிவை நான் எழுதினாலும் பிழை என்று உங்களுக்கு தெரிந்தததால் தானே சொன்னீர்கள் மூன்று என்று நினைவிருக்கும் போது எது என சொல்வதில் சிரமமில்லையே. பாட்டி தலையில் கொம்பு பதிவு சரியானதுதான் அண்ணா. அதில் தவறு உள்ளது என நான் நினைக்கவில்லை. நீங்களும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் நீங்கள் அந்த பதிவை தான் சொள்ளப்போகிண்றீர்கள் என்று தெரிந்துதான் நான் எந்த பதிவு என கேட்டேன்.

கருத்து முரண்பாட்டுக்கு மன்னிக்கவும். உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை என்றால் நான் அதை சொல்லாமல் விட்டால் அது ஏற்ற்றதாகிவிடும் எனவே தான் சொல்கின்றேன்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

பாட்டி தலையில கொம்பு அமானுஸ்யம் இல்லை.

They usually develop in fair-skinned elderly adults who have a history of significant sun exposure but it is extremely unusual to see it form protrusions of this size.

The growths are most common in elderly people, aged between 60 and the mid-70s. They can sometimes be cancerous but more than half of cases are benign.

இதைத்தான் நான் சொன்னேன். ;-)

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அடுத்தது,

மகிந்தவின் எட்டாம் இலக்க பதிவு.

சென்ற செர்மனி வெல்லும் பதிவும், மகிந்த எட்டாம் இலக்கத்தில் வெல்வார் பதிவும் ஒன்றே. இவ்வகையான வடிவங்களைக் கண்டுபிடிக்கும் தகவல்கள் எல்லாவற்றிலும் காணலாம்.

எதற்குள்ளும் வடிவங்களை கண்டுபிடிக்கலாம். :)

SShathiesh-சதீஷ். said...

@மதுவதனன் மௌ. / cowboymathu

//அடுத்தது,

மகிந்தவின் எட்டாம் இலக்க பதிவு.

சென்ற செர்மனி வெல்லும் பதிவும், மகிந்த எட்டாம் இலக்கத்தில் வெல்வார் பதிவும் ஒன்றே. இவ்வகையான வடிவங்களைக் கண்டுபிடிக்கும் தகவல்கள் எல்லாவற்றிலும் காணலாம்.

எதற்குள்ளும் வடிவங்களை கண்டுபிடிக்கலாம். :)//

எதற்குள்ளும் வடிவங்களை கண்டு பிடிக்கலாம் இல்லை என்று சொலவில்லை. அண்ணே மொக்கை பதிவுகளும் இருக்கு தொழில் நுட்ப பதிவுகளும் இருக்கு அப்படி ஒரு பதிவு தான் நீங்கள் மேலே குறிப்பிட்ட இரண்டும் நீங்களும் கண்டு பிடித்ஹ்டு பவுண்களேன். அவை தவறில்லையே. ஒரு வித்தியாசமான கணிப்பு தானே அவை. அவை சீரியஸ் பதிவல்லவே. நீங்கள் ஏன் அதை சீரியஸ் பதிவாக எடுக்கின்றீர்கள். என் பதிவுகளில் எல்லாம் இருக்கும் தவறான தகவல் இருந்தால் தான் தப்பு. நீங்கள் குறிப்பிட்ட எட்டாம் என் ஜெர்மன பதிவுகள் எல்லாம் ஒரு கணிப்பே ஒழிய அவை என்ன சூத்திரமா இல்லை அதுதான் விதியா?

உங்கள் கருத்துக்கு நன்றி. அதை விட என் இந்த பதிவில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive