என்ன பிள்ளையள் எப்பிடி இருக்கிறியள்? உலகம் என்ன சொல்லுது? கால்பந்து போட்டியள் ஒருபக்கம் நடக்கிறதாம் இன்னொரு பக்கம் ஆக்டோபஸ் என்று ஒரு வேலை வெட்டி இல்லாதவன் ஸ்பெயின் ஜெயிக்கும் என்று சொல்றதை எல்லோரும் நம்பிறமாம். என்ன உலகமடா இது? முதலில அவர் சொன்னது நடந்ததால இப்ப எல்லோரும் நம்பிறியள் திருப்பி அது நடக்காட்டி அவரையும் நித்தியானந்தா மாதிரி பெண்டு கழற்றுவியளா? அதெல்லாம் இருக்கட்டும் என்னடா இவன் ஒரு மாதிரி பேசிறான் என்று பார்க்கிறியளா? இப்பிடி பேசினால்தான் ராசாவை எனக்கும் வயசு போயிட்டுது என்று நம்புவாங்கள்.
இப்போ இவனுக்கு எதுக்கு வயசு போயிட்டுது என்று நீங்கள் கேட்கிறது புரிது. ஐயோ ஐயோ இது கூட சொல்ல மாட்டானா உங்களுக்கு ராசாமாரே. அடிக்காதயுங்கோ ராணிமார் கோவிக்க முதல் அவையையும் சேர்ப்போம். வேற ஒன்றும் இல்லை எனக்கு தெரிஞ்ச ஒரு கதையும் புத்தி மதியும் சொல்லப்போறேன். நிண்டது நடந்ததுகள் எல்லாம் உங்களை அப்பு ராசா என்னும் போது நான் சொன்னா ஏற்கமாட்டியளா?
பெரிசாய் ஒன்றும் சொல்லமாட்டேன் பிள்ளையளே(அப்போ எதுக்கடா இவ்வளவு பில்ட் அப என்று கேட்கப்படாது இப்பிடித்தான் நிறைய பேர் காலத்தை ஓட்டிறாங்க) என் வாழ்க்கையில் நடந்த ஒரு சின்ன விஷயத்தை வைத்துக்கொண்டு ஒரு கதை சொல்லிட்டு போயிடிரன். ஆனால் ஒன்று பாருங்கோ யாரும் கல்லு செருப்பு எடுக்கப்படாது. அதேமாதிரி ஒன்ஸ்மோர் கேட்கப்படாது. அப்புறம் இந்த கிழவனுக்கு வலிக்கும். பிறகு கதை சொல்லமாட்டான் இந்த கிழவன். நீங்கள் ரவுண்டுகட்டி பின்னூட்டினாலும் இந்த கிழவன் பாவம் அதுக்காக பின்னூட்டாமல் போயிடாதயுங்கோ. (எல்லாம் காலக்கொடுமை)
இப்பிடித்தான் பிள்ளையால் இந்த கிழவன் சின்ன வயசை இருக்கும் போது கொட்டாவி விட்டாலும் சரி காலில் ஏதும் அடிபட்டால் இல்லையேல் ஏதும் சில நேரங்களில என்ர வாயில இருந்து ஐயோ ஐயோ என்ற வார்த்தை வரும் பாருங்கோ. அப்போ என்ர அம்மா என்னை திட்டுவா பிள்ளையள். அடேய் ஏண்டா எமனோட மனுசியை நீ கூப்பிடிறாய்?(ஐயோ என்றது எமன் மனைவி பெயராம்) நீ ஏண்டா என்ர மனிசியை கூப்பிடிறாய் எண்டு பிறகு எமன் வந்திடுவாண்டா எண்டு அடிக்கடி சொல்லுவா?(இருந்தாலும் பாருங்கோ எமண்ட மனிசியை கூப்பிட்டவன் இவன் என தப்பாய் நினைக்கப்படாது)
அப்பத்தான் பாருங்கோ எனக்கு ஒரு கதை சொன்னா. ஒருமுறை ஒரு மரம் வெட்டிறவன் அடர்ந்த காட்டில் ஒரு மரக்கிளையில் இருந்து மரம் வெட்டிக் கொண்டிருந்திருக்கிறான். அவனுக்கு தான் அந்த மரத்தின் அந்த கிளையில் இருந்து கொண்டே அந்த கிளையையே வெட்டிக்கொண்டிருக்கின்றேன் என்று தெரியாமல் வெட்டிக்கொண்டிருந்திருக்கின்றான். இதை தன் ஞானம் மூலம் உணர்ந்த சிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் போடுகின்றார்கள். அதாவது விழும்போது அந்த மரம் வெட்டுபவன் அம்மா என கத்தினால் பார்வதி அவனை காப்பாற்றுவது என்றும் அப்பா என கத்தினால் சிவன் காப்பாற்றுவது என்றும் அவர்களுக்குள் முடிவாயிற்று. இவனும் கிளையை வெட்டி வெட்டி முறியும் நேரம் ஐயோ என கத்திக்கொண்டே விழுந்து விட்டான். சிவனும் வரவில்லை பார்வதியும் வரவில்லை அவனை காப்பாற்ற. இறுதியில் இயமன் தான் வந்திருப்பான் என சொல்லுவாங்க.
இதை தன் சொல்லுறது பிள்ளையள் நாங்கள் எப்பவும் நல்ல வார்த்தைகளை கதைக்க வேண்டும் என்று. எப்போதும் நல்ல வார்த்தைகளை கதைத்தால் தான் ஆபத்து நேரத்திலும் நல்ல வார்த்தைகள் வரும். அதை விட்டிடு அடுத்தவனை எப்படி எப்போ காலி பண்ணலாம் என நினைப்பதும் கெட்ட வார்த்தைகளை பாவிப்பதும் இறுதியில் எமக்கே ஆபத்தாய் முடியும் எனபதே இந்த கதையின் கரு. அதனால் பாருங்கோ பிள்ளையள் இண்டையில இருந்தாவது நல்லதை படிப்போம் நல்லதை செய்வோம் நல்லதை பேசுவோம். அப்பிடியே நல்லமாதிரியே பின்னூட்டுங்க என்ன. அப்பு ராசாமாரே ராணிமாரே வரட்டே!
40 கருத்துரைகள்:
:) நல்லது நல்லது. தொடர்ந்து எழுதுங்கோ..
:-)))
என்னனை அப்பு நடந்தது? ஏன் இப்படிப் புலம்புகிறியல்
உங்களின் சொந்த நடையில் எழுதுதல் நன்று. இதே நடையில் வந்த அரசியல் பதிவுகளையும் நீங்களா எழுதியது?
லண்டனுக்கு வருக வருக என வரவேற்கிறோம்! உன் சாதகம் இனி தான் மாறும்.
சதீஸின் வலையில் யாரோ ஒரு போலி நுழைந்து இப்படி எழுதியிருக்கின்றார். இது சதீஸின் ஸ்டைல் அல்ல. அது சரி அப்பு உங்கடை கேள்விக்குறிகளைக் காணவில்லை,
யாரோ ஒரு அறப்படிச்ச முட்டாளின் ஸ்டைலாக கிடக்கின்றது.
யாரோ ஒரு அறப்படிச்ச முட்டாள் எழுதியதை காப்பி பேஸ்ட் செய்தமை புரிகின்றது
ஹீஹீ.... சிரிகிறேன் சிரிக்கிறேன் சிரிச்சுக்கிட்டே இருக்கிறேன்..
ஆனா எல்லாரையும் ராசாவாக்கிட்டீங்க.. ராணி யாருன்னு பாத்து நல்ல ஹீரோயினா போடுங்க வர்ட்டா..:P
லண்டனிலை சாவு மணி அடிக்கும்.
வேலையில்லா நாய் எழுதுறதை பார்த்து நீங்களுமா?
சதீஸ் அண்ணே மரணாய் புலம்புவதை பார்த்து நீங்களுமா?
கேள்வி குறி போட்டு தன் தலையை இழந்தவை அதிகம். அதனால் No ?
சதீஸ் அண்ணே யாழ் தேவியிலை ஒரு நாய் குரைக்கிறது. வெகு விரைவில் அந்த நாய் அடித்து விரட்டப்படும்
////சதீஸின் வலையில் யாரோ ஒரு போலி நுழைந்து இப்படி எழுதியிருக்கின்றார். இது சதீஸின் ஸ்டைல் அல்ல. அது சரி அப்பு உங்கடை கேள்விக்குறிகளைக் காணவில்லை/////
repeat
கலக்கல் சதீஸ்:)
யாழ்தேவி உரிமையாளர் மருதமூரான் கண்ட கண்ட தலைப்பில் எழுதும் அந்த நாயை ஏன் நட்சத்திரமாக்கினார்?
இவ்வளவு காலமும் பெரிய்ய்ய தலைகள் நட்சத்திரமாக இருந்தன. இப்போ ஒரு தறுதலை நட்சத்திரம்
யாருக்கோ சொல்லுறமாதிரித்தான் இருக்குது....ஆனாலும் சதீஷிக்கு இவ்வளவு கெதியில வயசு போகுமென்று நான் நினைக்கவில்லை தொடர்ந்தும் பச்சிளம் பாலகனாக இருக்க முடியாதுதானே.....அதுசரி அந்த ராசாக்களில நானும் இருக்கிறன்தானே?...ஆனாலும் பில்டப் கொஞ்சமல்ல ரொம்ப ஓவர்
யாருக்கோ சொல்லுறமாதிரித்தான் இருக்குது....ஆனாலும் சதீஷிக்கு இவ்வளவு கெதியில வயசு போகுமென்று நான் நினைக்கவில்லை தொடர்ந்தும் பச்சிளம் பாலகனாக இருக்க முடியாதுதானே.....அதுசரி அந்த ராசாக்களில நானும் இருக்கிறன்தானே?...ஆனாலும் பில்டப் கொஞ்சமல்ல ரொம்ப ஓவர்
குருவே எப்படி இப்பை உங்களால் முடிகிறது!!! இந்த உங்கள் ஆலோசனையை நான் ஏற்று நடக்க போகிறேன் உங்கள் சிஷ்யன் என்ற வகையில்!!!!!
எனவே, அண்ணா இல்லை இல்லை தாத்தா குருவே உங்கள் சேவை தொடரவும்
சுகிர்தா, நிசாந்தினி, சஜீக்கா, ஜோபிகா- இவர்களில் யாரையாவது நினைவிருக்கிறதா?
@மதுவதனன் மௌ. / cowboymathu
உங்கள் ஆசீர்வாதத்தோடு எழுதுவோம்.
@கன்கொன் || Kangon
ஓகே
@வந்தியத்தேவன்
ஒன்றுமில்லை நீங்கள் உளருரிங்க நான் புலம்பிரன் ஹீ ஹீ
@வந்தியத்தேவன்
நான் அவன் இல்லை. இந்த மொழிநடை தனி ஒருவனுக்கு சொந்தமானதும் இல்லை.
@அறப்படிச்ச முட்டாள்
கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.
@Bavan
பிறரை சிரிக்க வைத்தால் சந்தோசமே. உங்களுக்கு ராணி தேடுவதுதான் கஷ்டம் ஆச்சே. உங்களை பற்றி என் பதிவு மறந்து போச்சா
@Anonymous
அங்கே அப்படி ஒரு மணி இருக்கா. எனக்கு தெரியாமல் போச்சே. எத்தனை மணிக்கு எத்தனை முறை அடிக்கும்.
@Anonymous
நான் பிட் அடிப்பதில்லை
@எனக்கொரு தமிழ் பெயர்
மரணைக்கு புலம்ப தெரியுமா
@யோ வொய்ஸ் (யோகா)
என் வழி தனி வழி
@Faaique Najeeb
நன்றி
@வதீஸ்-Vathees
வயசெண்டால் போகத்தானே செய்யும். யாரோ ஒருவருக்கு நானா இதை சொல்லவில்லை. எல்லோருக்கும் தான் இந்த அறிவுரையை சொன்னேன். நல்ல பதிவொன்று திசை மாறுகின்றது.
@Anuthinan
வாழ்த்துக்கள் சிஷ்யா
@vinojan vavuniya
தெரேசா,டயானா,சானியா மிர்சா, அசினா இவர்கள் எல்லாம் தெரிந்து வைத்திருக்க.....
கிழட்டு தாத்தா..
சொல்ல வந்த விஷயம் நல்லாவே இருக்கு..
ஆனால் பின்னூட்டங்கள் சில அவ்வளவு நல்லா இல்லையே..
பார்த்து..
இனி யார் அம்மா,ஐயோ சொல்லப் போறாங்களோ..
@Anonymous
///லண்டனிலை சாவு மணி அடிக்கும்///
ஏனுங்க நீங்க இவ்வளவு துணிச்சலான ஆளா இருக்கிறீங்க,, அப்புறம் ஏன் உங்க சொந்த பெயரை போடல,,,???
அம்மா அப்பா பெயர் வைக்கலியா???
நானும் லண்டன் இல் தான் குப்பை கொட்டுறான்,,
இந்த சாவுமணி இங்க எங்க அடிக்கும் எண்டு சொன்னால் நல்லாயிருக்கும்,,
நானும் கொஞ்சம் அலெர்ட் ஆ இருப்பன்,,,
ஏதாவது விசேஷம் நடக்கப்போகுதுபோல கிடக்கே!!! ......????
http://sakkadaththar.blogspot.com/2009/02/blog-post_2362.html
did u wrote this one?
well done sathis.
is that u? good luck man. keep it up.
http://sakkadaththar.blogspot.com/2009/02/blog-post_2362.html
Post a Comment