Tuesday, June 1, 2010

பாட்டி தலையில் கொம்பு.

சில மிருகங்களுக்கு கொம்பு இருப்பது சாதாரண விடயம். ஆனால் மனிதர் ஒருவருக்கு கொம்பு முளைத்தால் அது பரபரப்பான விஷயம் தானே. ஆச்சரியம் மட்டும் இல்லை இதில் அதிர்ச்சியும் இருக்கிறது. இதை நான் எழுதும் போது என்னால் கூட நம்பமுடியவில்லை. வாசிக்கும் போது உங்களால் நம்ப முடியவில்லையா. என்ன செய்வது நடந்ததை நம்ப தானே வேண்டும்.

இது நடந்தது இங்கே அல்ல ஏன் நம் அயல் நாடு இந்தியாவில் கூட அல்ல அனால் இன்னொரு ஆசிய நாட்டில். ஆமாம் சீனாவில். சீனாவில் இருக்கும் ஜான்க் ரூய்பாங் என்னும் 101 வயது பாட்டிக்கு தான் கொம்பு முளைத்துள்ளது. ஒருவேளை அவர் யாரோடும் முட்டிக்கிட்டாரோ தெரியாது. ஏனென்றால் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெனிலியா ஜெயம் ரவியிடம் சொல்வார் முட்டினால் திருப்பி முட்டனும் இல்லாவிட்டால் கொம்பு முளைக்கும் என்று. அப்பிடி இவர் முட்டிட்டு திருப்பி வாங்கலையோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அடிக்க எல்லாம் வரப்படாது. சரி நேரே விசயத்துக்கு வாறன்.

கடந்த வருடம் இவருடைய நெற்றியில் ஒரு கொம்பு முளைத்துள்ளது. அதன் நீளமோ இப்போது ஆறு சென்டி மீட்டராம். அதை தொடர்ந்து நெற்றியின் இன்னொரு பக்கமும் கொம்பு முளைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த கொம்பு முளைத்தது அவருக்கு எந்த வித வலிகளையும் கொடுக்கவில்லை என்று சொல்கின்றார். ஏழு பிள்ளைகளின் தாயாக இருக்கும் இவர் ஆரம்பத்தில் சிறு கட்டியாக வந்த இந்த கொம்பு இப்போது வளர்ந்திருப்பதாக சொல்கின்றார். ஆனால் இதற்க்கு தகுந்த மருத்துவ உதவி பெற அவரிடம் பண வசதி இல்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

அதிசயங்களும் ஆச்சரியங்களும்அமானுசங்களும் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது இந்த அதிசய உலகில். இன்னும் என்ன என்ன எல்லாம் நடக்குமோ?

தன் அறிந்திருந்த இன்னொரு லிங்க் தந்து படங்கள் தந்துதவிய மது அண்ணாவிற்கு நன்றி. நீங்கள் எல்லோரும் கேட்டதால் இங்கே இணைக்கின்றேன். அந்த தளத்தில் எழுதும் நண்பருக்கும் நன்றி.
லிங்க் கீழே பின்னூட்டத்தில் உள்ளது.





Share:

17 கருத்துரைகள்:

Subankan said...

படமேதும் கிடைக்கலையா சதீஷு?

கமல் said...

நம்பவே முடியவேயில்லை... அதிசயம் தான்?

Bavan said...

ஹிஹி... அப்ப இவரோட யாராவது சண்டை பிடிக்கும்பொது உனக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு எண்டு கேட்டா ஆமா என்று சொல்லலாம் என..:P

அண்ணே அந்த ஜெனிலியா விதிப்படி ஆக்ளோட ஆக்கள் முட்டினாத்தானே கொம்பு முளைக்கும்?

bcoz நான் நிறைய கூரை, கதவு நிலையோட எல்லாம் முட்டியிருக்கன்..ஹிஹி

வதீஸ் said...

கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. படங்களும் இருந்திருந்தால்
பார்த்திருக்கலாம்...

ஜீவதர்ஷன் said...

பாட்டி தலையில கொம்பு , சதீஸ் எழுத்தில வம்பு, என்னான்னு கேளுடா சிம்பு, வகித்தகலக்குது எங்கடா செம்பு ? ஆ... டண்டணக்கா, டணக்குணக்கா. :-) , நல்ல தகவல்

ஜீவதர்ஷன் said...

பாட்டி தலையில கொம்பு , சதீஸ் எழுத்தில வம்பு, என்னான்னு கேளுடா சிம்பு, வகித்தகலக்குது எங்கடா செம்பு ? ஆ... டண்டணக்கா, டணக்குணக்கா. :-) , நல்ல தகவல்

மதுவதனன் மௌ. / cowboymathu said...

இது ஆச்சரியமுமில்லை... அமானுஸ்யமுமில்லை...

இங்க போங்கோ http://mrishan.blogspot.com/2010/03/blog-post_17.html

இதுகளை அமானுஸ்யங்களா நம்பித்தான் உலகம் இந்தக் கோலத்தில கிடக்குது... கடவுளும் அமானுஸ்யமாம்...

Jay said...

நல்ல தகவல் போட்டோவை இணைத்து இருக்கலாம்...

soundar said...

படத்தை இணைத்து இருக்கலாம்...
நல்ல தகவல்...

SShathiesh-சதீஷ். said...

@Subankan

படம் கிடைக்கல முன்னர் ஆனால் இப்போது மது அண்ணா புண்ணியத்தில் போட்டிருக்கேன்.

SShathiesh-சதீஷ். said...

@கமல்

என்ன செய்வது சில விசயங்களை யாராலும் நம்ம முடியவே இல்லை தான். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை.

SShathiesh-சதீஷ். said...

@Bavan

நீங்கள் அங்கே மட்டுமா முட்டி இருக்கிங்க. எங்களுக்கு தெரியாதா என்ன. கவனம் உங்களுக்கும் முளைக்காட்டில் சரி கொம்பு இல்லை....கா..ல்

SShathiesh-சதீஷ். said...

@வதீஸ்

இப்போ படம் இருக்கு அண்ணே பாருங்க.

SShathiesh-சதீஷ். said...

@ஜீவதர்ஷ
ன்


அண்ணே செம்பு சிம்புவோட போயடிச்சாம் அனுஷ்காட்ட கேட்டு சொல்றன். நன்றி வருகைக்கு.

SShathiesh-சதீஷ். said...

@மதுவதன
ன் மௌ. / cowboymathu


அண்ணே சாதாரண மனிதர்க்கு கொம்பு இல்லை எனவே இது ஆச்சரியம் தானே. ஏதோ ஒரு அமானுஷ்யம் தானே. உங்கள் சுட்டிக்கும் படங்களுக்கும் நன்றி

SShathiesh-சதீஷ். said...

@Jay

அப்போ கிடைக்கல இப்போ போட்டாச்சே

SShathiesh-சதீஷ். said...

@soundar


நன்றி இணைச்சாச்சு.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Get Some Cool Stuff
in your inbox

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive