Thursday, July 22, 2010

முரளியை வாழ்த்தும் உலக நாயகனின் பாடல்!



முத்தையா முரளிதரன், இன்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் வாயெல்லாம் முணுமுணுக்கும் உன்னிப்பாக பார்க்கும் ஒரு பெயர். பல தடைகள் தாண்டி வெற்றிப்படிகளில் ஏறி இன்று சிகரம் தொட இருக்கும் நிஜ ஹீரோ முரளிக்கு, திரை உலக உலக நாயகன் ஹீரோவுக்காய் எழுதிய பாடலை கொஞ்சம் மாற்றி போட்டு வாழ்த்து ஒன்றை படிக்கின்றேன் ஒரு சாதாரண ரசிகனாய்.

உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு?
உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது இலங்கை நாடு.
உலக நாயகனே எங்கள் தங்க தமிழனே
கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்.

நீ ஒரு தீரன் நிரந்தர இளைஞன் வேட்கை மிகுந்த விக்கெட் டேக்கர்
ஒரு பந்து கொண்டு உலகத்தில் இன்று ஆயிரம் விக்கெட் கடந்தாய்
உன் வாழ்வில் எண்ணூறு டேஸ்ட் விக்கெட்டும் காண்பாய்.
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சாதனை முயற்சி சோர்ந்திடவில்லை.
இருபது முதல் நீ ஆடிவந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை
உன் சாதனைகளை முறியடிக்க இனி எவரும் இல்லை.

உலகுக்கு நீ ஒரு பந்து வீச்சாளன் வீரர்கள் எதிரில் நூறு மடங்கு பலவான்
எதிர்ப்பினை ஜெயித்து மனங்களை வென்று பாரிய சாதனை படைத்தாய்.
உன் திறனை எதிரியும் புரிந்து கொண்டார்.
உன் விரல்களுக்குள்ளே பந்து மாயாஜாலம் செய்யும்
உன் ஒருவனுக்குள்ளே சாதனை அடங்கும்
தமிழனாய் பிறந்து இலங்கைக்காய் ஆடி இன மத மொழி கடந்தாய்
இப்போது சரித்திரம் ஆகிவிட்டாய்


Share:

33 கருத்துரைகள்:

சௌந்தர் said...

இவரின் சாதனையை உடைக்க மிகவும் கடினம்

"ராஜா" said...

தன இனத்தை கொல்லும் ஒரு நாட்டிற்கு பெருமை தேடி தரும் இவரின் சாதனைகள் என்னை பொறுத்த வரை தமிழர்களின் வேதனை... வேறு நாட்டில் இருக்கும் எங்களை போன்ற தமிழர்களே இலங்கை அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி நிற்கும் பொழுது , தன சொந்த இனம் செத்து மடிந்து கொண்டு இருந்த பொழுது அதற்காக குரல் கூட எழுப்பாமல் பந்து எரிந்து கொண்டு இருந்தார்... தமிழர்கள் பெருமைக்காக தங்கள் மானத்தை கூட இழக்க தயாராக இருப்பார்கள் என்று வேற்று இனத்தவன் எள்ளி நகையாட வாய்த்த சிறந்த உதாரணமே இவர் ...

மற்றபடி விளையாட்டு வீரனாக அவரின் சாதனைகள் என்றுமே நிலைத்து நிற்கும்...

யோ வொய்ஸ் (யோகா) said...

@ "ராஜா"

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு சிறந்த முன்னுதாரணம் முரளி, எத்தனை சோதனைகளுக்கு மத்தியில் சாதித்த மனிதர் அவர்

சௌந்தர் said...

@@@@ராஜா ஓரு சிங்களவனால் முடியாததைஓரு தமிழன் செய்து இருப்பது பெருமை பட வேண்டிய விஷயம்.

கன்கொன் || Kangon said...

@ராஜா

அந்த நாட்டில் தான் தமிழர்கள் என்று ஒரு இனம் இருக்கிறது, இது என் நாடு, இதை சிங்களவர்களின் நாடு என்று சொல்லி என் நாட்டை விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை.
ஒரு நாட்டுக்குள் இருந்துகொண்டு அந்த நாட்டை எப்படி எதிர்க்கலாம் என்ற யதார்த்தம் கூட தெரியாத நீங்களெல்லாம் கதைப்பது தான் வேடிக்கை.

இந்திய ஆதரவாளர்களெல்லோரும் முரளியை எதிர்ப்பதற்காக பயன்படுத்துகின்ற வார்த்தைகள் தாம் இவை, இவை புதிதானவையல்ல...
சாதனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஏற்றுக்கொள்ள முடியாவிடின் ஓடி மறையுங்கள்.
நீங்கள் சொல்கிற இனவாத, தன் இனத்தைக் கொன்ற அரசாங்கத்தின் ஜனாதிபதியின் தனிப்பட்ட வைத்தியரிடம் சிகிச்சை பெற்ற சச்சினைத்தான் நீங்கள் வணங்குகிறீர்கள், நீங்கள் குறிப்பிட்ட இனவாத அரசுக்கு உதவியதாகக் குறிப்பிடப்படும் இந்தியாவின் 'பெருமைமிகு குடிமகன்' என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.

// சச்சினின் இந்த ஆட்டம் என்னையும் பெருமிதபடுத்தியது, எனவே குடியரசு தலைவர் கூறியது போல் நான் தேச பற்று மிக்க ஒரு இந்தியன்தான்....

எனக்கும் தேச பக்தி இருக்கு என்று அறிந்து கொண்ட சந்தோஷத்தில் என் குழப்பத்திற்கு விடை தேடி கொடுத்த சச்சினுக்கும் குடியரசு தலைவருக்கும் நன்றி சொல்லாமலே நிம்மதியாய் தூங்கி விட்டேன்... //


ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் கவலைப்படத் தேவையில்லை.

கன்கொன் || Kangon said...

ஒரு சாதனை வீரராக முரளியின் சாதனைகள் பெருமைப்படத்தக்கன...
எனக்கு முரளி தமிழரோ, சிங்களவரோ என்பது தேவையில்லை, நான் பிறந்த நாட்டில் பிறந்து முழு கிறிக்கற் உலகையும் தன் திறமையால், பல சோதனைகளுக்கு மத்தியில், திரும்பிப் பார்க்க வைத்த அற்புதமான வீரர், மனிதர்...

வரலாற்றில் மறக்கப்படமுடியாத பெயர் முரளி...

யோ வொய்ஸ் (யோகா) said...

wel said kangon..

தர்ஷன் said...

// நான் பிறந்த நாட்டில் பிறந்து முழு கிறிக்கற் உலகையும் தன் திறமையால், பல சோதனைகளுக்கு மத்தியில், திரும்பிப் பார்க்க வைத்த அற்புதமான வீரர், மனிதர்...//

வழி மொழிகிறேன்

SShathiesh-சதீஷ். said...

@"ராஜா"

அண்ணே இலங்கை தமிழர்களின் நாடும் தான் தன் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதில் என்ன தவறு. வேறு நாட்டு தமிழர் என்கின்ரீர்களே இங்கே என்ன நடக்கின்றது என்ன தேவை என்பதை எப்போதாவது வந்து பார்த்திருக்கின்றீர்களா? வேறு நாட்டில் இருந்து கொண்டு வேறு ஒருவர் சொல்வதை கேட்டு உங்கள் மனதில் ஒரு விம்பம் படிந்து விட்டது அதை நான் குற்றம் சொல்ல முடியாது. காரணம் உங்களுக்கு அது படிப்பிக்கப்படுகின்றது. முதலில் நீங்கள் உண்மையில் போராடுகிண்றீர்கள் எங்கள் நலன் முக்கியம் என்றால் வாருங்கள் வந்து இங்கே நடப்பதை கண்கூடு பாருங்கள் அதன் பின் பேசுங்கள்.

எதையும் தீர விசாரித்து அறிவதே மெய் மறந்து விடாதீர்கள். உங்கள் மேல் இத்தனை கேள்விகள் இதற்க்கு உங்கள் பதில் எதிர்பார்க்கின்றேன்

"ராஜா" said...

//எத்தனை சோதனைகளுக்கு மத்தியில் சாதித்த மனிதர் அவ

அவர் திறமையை நான் குறை கூறவில்லையே .... அவர் சாதிதுகொண்டு இருந்த பொழுது சோதனைகளை சந்தித்த சக இனத்தை பற்றி அவர் குரல் கூட கொடுக்கவில்லையே

"ராஜா" said...

//ராஜா ஓரு சிங்களவனால் முடியாததைஓரு தமிழன் செய்து இருப்பது பெருமை பட வேண்டிய விஷயம்

உண்மை ஆனால் உயிர் போகும் சமயம் பெருமை mukkiyam இல்லையே

எப்பூடி.. said...

இந்த தமிழ் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் திரியும் ஆசாமிகளின் தொல்லையை தாங்க முடியலடா சாமி, மலம் கழித்தால் கூட மகிந்தவின் அரிசியை சாப்பிட்டதால் உருவான மலத்தை களிக்கிராயே நீயெல்லாம் ஒரு தமிழனா என கேட்பார்கள் . (கோபத்தில் வேறு உதாரணம் கிடைக்கவில்லை, தங்கள் வலைப்பதிவிற்கு நாகரீகமாக இல்லாவிடால் பிரசுரிக்க வேண்டாம்)

Vathees Varunan said...

முதலில் சாதனை மன்னனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.

Vathees Varunan said...

மற்றையது இங்கே திரு ராஜா அவர்களினால் கூறப்பட்ட கருத்தினை நான் ஆட்சேபிக்கின்றேன். அவருக்கு கங்கோன் கூறியதைத்தான் நானும் மீளநினைவுபடுத்துகின்றேன்

எப்பூடி.. said...

முரளியை பற்றி என்ன சொல்வது? எந்த வார்த்தையும் ஈடாகாது, மீதிக்காலங்களை குடும்பத்துடன் சந்தோசமாக கழிக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

"ராஜா" said...

//இந்திய ஆதரவாளர்களெல்லோரும் முரளியை எதிர்ப்பதற்காக பயன்படுத்துகின்ற வார்த்தைகள் தாம் இவை, இவை புதிதானவையல்ல...
சாதனைகளை ஏற்று

தலைவா ... கும்ப்ளே இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தால்கூட நான் இவ்வளவு சந்தோசம் அடைந்திருக்க மாட்டேன் ... காரணம் முரளி ஒரு தமிழன் ... ஆனால் அவர் தமிழனுக்காக ஒரு துரும்பை கூட கில்லி போடா வில்லை என்பதே என்னுடைய உண்மையான வருத்தம் ... ரசிகன் என்ற வட்டத்தில் இருந்து வெளியே வந்து பாருங்கள் உண்மை புரியும்

//ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் கவலைப்படத் தேவையில்லை.

தமிழன் என்னும் ஆடு நனைவதஇ பற்றி முரளி என்னும் ஆடு கவலைபடவில்லையே ...(இங்கு நான் ஆடு என்று சொல்வது ஒரு உவமைக்கே மதிப்பை குறைக்க இல்லை )

// சச்சினின் இந்த ஆட்டம் என்னையும் பெருமிதபடுத்தியது, எனவே குடியரசு தலைவர் கூறியது போல் நான் தேச பற்று மிக்க ஒரு இந்தியன்தான்....

எனக்கும் தேச பக்தி இருக்கு என்று அறிந்து கொண்ட சந்தோஷத்தில் என் குழப்பத்திற்கு விடை தேடி கொடுத்த சச்சினுக்கும் குடியரசு தலைவருக்கும் நன்றி சொல்லாமலே நிம்மதியாய் தூங்கி விட்டேன்... //

என்னுடைய அந்த பதிவை முழுவதும் படிக்காமல் அந்த வரியை மட்டும் படித்து உள்ளீர்கள் என்று நினைக்கிறன் .. ஜனாதிபதி அப்படி கூறியதைத்தான் நான் பகடி செய்து எழுதி இருப்பேன் உங்களுக்கு புரியவில்லை நான் என்ன பண்ண?

கன்கொன் || Kangon said...

// ஆனால் அவர் தமிழனுக்காக ஒரு துரும்பை கூட கில்லி போடா வில்லை என்பதே என்னுடைய உண்மையான வருத்தம் ... //

உங்களுக்கு இதை யார் சொன்னது?
முரளி செய்கிற சமூக சேவைகள் தெரியுமா?
தெரியாமல் கதைப்பதை குறைப்பது நலம்.


// தமிழன் என்னும் ஆடு நனைவதஇ பற்றி முரளி என்னும் ஆடு கவலைபடவில்லையே ...(இங்கு நான் ஆடு என்று சொல்வது ஒரு உவமைக்கே மதிப்பை குறைக்க இல்லை ) //

இங்கு தமிழன், சிங்களவன் என்ற வேறுபாட்டை விடுங்கள்.
இங்கு எந்தவொரு சாதாரண குடிமகன் இறப்பதை எந்தவொரு சாதாரண குடிமகனும் விரும்புவதில்லை.
முரளி கவலைப்படவில்லை என்று எப்படி நீங்கள் வெறுமனே சொல்லிக் கொள்ளலாம்?
நான் கூட இலங்கையில் யுத்தம் நடக்கையில் அதற்கெதிராக வெளியில் கதைக்கவில்லைத்தான், அதற்காக யுத்தம் நடப்பதை நான் விரும்புகிறேன் என்று அர்த்தமா?
சில விடயங்களில் மெளனம் என்பதே சாதாரணர்களின் மொழியாகிறது.


// என்னுடைய அந்த பதிவை முழுவதும் படிக்காமல் அந்த வரியை மட்டும் படித்து உள்ளீர்கள் என்று நினைக்கிறன் .. ஜனாதிபதி அப்படி கூறியதைத்தான் நான் பகடி செய்து எழுதி இருப்பேன் உங்களுக்கு புரியவில்லை நான் என்ன பண்ண? //

அந்தப் பதிவில் ஒரு உள்ள பின்னூட்டத்தைப் படியுங்கள், அவர்கூட நீங்கள் முரளியை வாழ்த்தியுள்ளதாகத்தான் நினைத்துள்ளார்.
நீங்கள் அப்படி எழுதவில்லையாயின் அந்தப் பின்னூட்டத்துக்கு பதில் போட்டிருக்க வேண்டாமா?
மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் சிகிச்சை பெற்ற சச்சினை துரோகியாக்கியிருக்க வேண்டாமா?

நானும் சச்சின் இரசிகன் தான்.
விளையாட்டு வீரர்களை விளையாட்டு வீரர்களாக மதியுங்கள், அவர்களை அரசியல் குப்பைக்குள் தள்ளாதீர்கள், அவர்கள் நாடறிந்தவர்கள் என்பதைத்தவிர அவர்களும் சாதாரணர்களே, அரசாங்கங்களை எதிர்க்கும் பலமெல்லாம் கிடையாது.

Jeyamaran said...

முரளியும் உலக நாயகன் தான் தோழரே அருமை

Bavan said...

பாடலின் இசை வடிவத்துக்காக வெயிட்டிங்..:P

முரளி வாழ்க..;)))

"ராஜா" said...

நான் அங்கு வந்து பார்த்து இல்லை ... அது உண்மையே .... அங்கு வாழும் நீங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்ளத்தான் வேண்டும் ... மீண்டும் சொல்கிறேன் முரளியின் திறமையை நான் குறை கூறவே இல்லை இங்கு ...

@ eppoodi

தலைவா நான் தமிழ் ஆதரவாலன்னு உங்ககிட்ட சொன்னேனா ... எனக்கு வந்த சந்தேகம் என் மனதில் இருந்த ஒரு வருத்தத்தை சொன்னேன் ... தவறு என்றால் சொல்லுங்கள் .... i can take this opportunity to know the true lives of tamilians who lives on sri lanka... b'coz i can only know the truth by the peoples who lives tere like u... here by media's only i can got news... may be அவைகள் மிகைபடுத்த பட்டவையாக கூட இருக்கலாம்...

முரளி ரசிகனாக இல்லை நாடு நிலையாலனாக

எப்பூடி.. said...

"ராஜா"

//கும்ப்ளே இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தால்கூட நான் இவ்வளவு சந்தோசம் அடைந்திருக்க மாட்டேன்//

காவிரியை திறந்துவிடாமல் தமழக விவசாயிகளின் வாழ்க்கையில், வயிற்றில் அடிக்கும் கர்நாடக மாநிலத்தவர் கும்ளே உங்களுக்கு உசத்தி , ஆனால் நாங்கள் முரளியை கொண்டாடக் கூடாதோ? கும்ளே கர்நாடக அரசிடம்பேசி காவிரியை திறந்து விடச் சொல்லலாமே? கேனத்தனமா பேசாம எரியிற வயித்தில ஏதாவது ஊத்தி அணைக்க பாருங்க. பாத்து ஊத்துங்க , டென்சன்ல பெற்றோல ஊத்திக்கப்போறீங்க.

எப்பூடி.. said...

"ராஜா"

//may be அவைகள் மிகைபடுத்த பட்டவையாக கூட இருக்கலாம்... //

may be , june be எல்லாம் இல்லைங்க ரோமவுமே மிகைப்படுத்தி உங்களை உசுப்பேத்திறாங்க. உங்களை சொல்லி தப்பில்லை, இந்த சீமான் வகையறாக்களை சொல்லணும்.

Ramesh said...

முரளிக்கு வாழ்த்துக்கள் சதீஷ் நல்லா இருக்கு பதிவு
வாழ்த்த தெரிந்த உள்ளங்கள் வாழ்த்துகளை தெரிவியுங்க...
சுவாமி விவேகாநந்தர் சொன்னது ஞாபகத்துக்கு வருது" நன்மை செய்யப் பிறந்த நீ நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாமலிரு"
நான் சொல்லுறன்
"யார் யார் செய்யினும் அவ்வழியூடே நல்வழி பெறல் நல்லதே!
பிரிவுகள் தவிர்த்து உறவுகள் செய்க"

"ராஜா" said...

//அந்தப் பதிவில் ஒரு உள்ள பின்னூட்டத்தைப் படியுங்கள், அவர்கூட நீங்கள் முரளியை வாழ்த்தியுள்ளதாகத்தான் நினைத்துள்ளார்.
நீங்கள் அப்படி எழுதவில்லையாயின் அந்தப் பின்னூட்டத்துக்கு பதில் போட்டிருக்க வேண்டாமா?

தலைவா அந்த பின்னோட்டம் ஒரு template பின்னூட்டம் ... அந்த நேரத்தில் எல்லா பதிவுகளுக்கும் அந்த பின்னூட்டம் வந்து இருந்தது.... அது ஒரு விளம்பரத்திற்கான பின்னூட்டம் ... அந்த பின்னூடத்தை எழுதியவர் மீண்டும் வந்து படிக்க போவதில்லை என்பதால் நான் பதில் போடவில்லை


//நானும் சச்சின் இரசிகன் தான்.
விளையாட்டு வீரர்களை விளையாட்டு வீரர்களாக மதியுங்கள், அவர்களை அரசியல் குப்பைக்குள் தள்ளாதீர்கள், அவர்கள் நாடறிந்தவர்கள் என்பதைத்தவிர அவர்களும் சாதாரணர்களே, அரசாங்கங்களை எதிர்க்கும் பலமெல்லாம் கிடையாது

தலைவரே நான் சொல்ல வந்த நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள வில்லை என்று நினைக்கிறேன்.... விளையாட்டு வீரனாக அவரின் ரசிகன்தான் நான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில் இருந்தே அதை சொல்லி வருகிறேன் ... அவர் எதிர்க்க வேண்டாம் ... வருத்தமாவது தெரிவித்து இருக்கலாமே ....

Bala said...

//ஒரு நாட்டுக்குள் இருந்துகொண்டு அந்த நாட்டை எப்படி எதிர்க்கலாம் என்ற யதார்த்தம் கூட தெரியாத நீங்களெல்லாம் கதைப்பது தான் வேடிக்கை.

பிரித்து பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். பல இலங்கை நண்பர்கள் எங்கள் முகத்தில் காறி துப்பியது நினைவுக்கு வருகிறது. அவர்கள் இதே கேள்வியை தங்களை பார்த்து கேட்டு கொள்வார்களா?

என்னதான் இலங்கையின் மருமகளானாலும் ஒவ்வொரு இந்திய விக்கெட்டுக்கும் மதிமலர் துள்ளி குதித்ததை கண்டு மனம் வலித்தது

"ராஜா" said...

தலைவா நான் பொறாமையில் பேசுகிறேன் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே நீங்கள் வாதத்திற்கு எடுத்து கொள்கிறீர்கள் .... நான் ஒரு விசயத்தில் வேண்டுமானால் தவறு செய்து இருக்கலாம் இந்திய ஊடகங்கள் காட்டும் செய்திகளை மட்டுமே வைத்து பேசியது .... ஆனால் எனக்கு அதுதானே கிடைக்கிறது .... இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள் முரளி செய்த சேவைகளை ... நான் தெரிந்து கொள்கிறேன் அதை விட்டு பெற்றோல குடி ... வாந்தி எடு என்று பின்னூட்டம் இடுகிறீர்களே ....

"ராஜா" said...

//காவிரியை திறந்துவிடாமல் தமழக விவசாயிகளின் வாழ்க்கையில், வயிற்றில் அடிக்கும் கர்நாடக மாநிலத்தவர் கும்ளே உங்களுக்கு உசத்தி

தலைவா நீங்கதான் போதையில பேசுற மாதிரி இருக்கு .... காட்டமா பதில் சொன்னா நீங்க சொல்லுறதெல்லாம் சரின்னு ஆகிடுமா .... எங்கள இங்க இருக்கிறவன் உசுப்பெத்துரான்னு சொல்லுறீங்களே ... அப்ப உண்மைய நீங்க சொல்லுங்க ... தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்

"ராஜா" said...

//எரியிற வயித்தில ஏதாவது ஊத்தி அணைக்க பாருங்க.

ஐயோ பாவம் ..... (நான் என்ன சொன்னேன்)

"ராஜா" said...

(நான் என்னுடைய கருத்தை கூறினேன் ... நீங்கள் உங்கள் கருத்தை தெரிவித்தீர்கள் ... ஆனால் இன்னமும் நான் ஆரம்பித்த நிலையிலேதான் இருக்கிறேன் .... நின் சில கருத்துகளோடு உடன்படுகிரேனே தவிர மற்றவர்கள் உணர்ச்சிவச பட்டுதான் பேசினார்களே தவிர என்னுடைய சந்தேகத்திற்கான பதிலை தர முயற்சிக்கவில்லை .... விவாதத்திற்கு நன்றி சதீஷ்....

"ராஜா" said...

நான் என்னுடைய கருத்தை கூறினேன் ... நீங்கள் உங்கள் கருத்தை தெரிவித்தீர்கள் ... ஆனால் இன்னமும் நான் ஆரம்பித்த நிலையிலேதான் இருக்கிறேன் ....kankon நின் சில கருத்துகளோடு உடன்படுகிரேனே தவிர மற்றவர்கள் உணர்ச்சிவச பட்டுதான் பேசினார்களே தவிர என்னுடைய சந்தேகத்திற்கான பதிலை தர முயற்சிக்கவில்லை .... விவாதத்திற்கு நன்றி சதீஷ்....

ARV Loshan said...

முரளியின் சாதனையை வாழ்த்துவோம்.. விடை கொடுப்போம்.
சர்ச்சைகள் தாண்டியவர் அவர்.
இலங்கையில் எதற்காகவும் குரல் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை இலங்கையில் ஊடகவியலாலருக்க்ம் என் சரத் போன்செக்காவுக்கும் நடந்ததை நடப்பதைப் பார்த்து அவதானித்து அறிந்து கொள்ளுங்கள்.. இந்திய சகோதரர்களே..

முரளிதரனையும் அப்படிப் பார்க்க விருப்பமா?

LOSHAN

Nijam said...

ithai ellorum padichu paarunga......


http://www.tamiloviam.com/site/2010/07/muthaih-muralitharan-800-wickets.html

SShathiesh-சதீஷ். said...

@சௌந்தர்

கருத்து நன்றி

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive