தமிலிஷ் திரட்டி, உண்மையில் பதிவர்களுக்கு மிக்கப்பெரிய டானிக். நான் என் பதிவுகளை இணைக்கும் திரட்டிகளில் ஒன்று. அதிகமான வாசகர்களை கொண்டு வந்து தருவதுடன் பல வாக்குகளை அளித்து பிரபலமான இடுகை ஆக்கியும் அழகு பார்க்கின்றது. ஆனால் எனக்கு நேற்று நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் எனக்குள் எழுந்த சில கேள்விகள். தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிக் கூறவும்.
சில நேரங்களில் நான் இடும் இடுகைகள் உடனடியாக தொடரும் இடுகைகள் பகுதியில் வருவதில்லை. அதன் பின் தமிலிஷ் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டுதான் அவற்றை மீட்டு எடுத்திருக்கின்றேன். இது ஏன் நடக்கின்றது?
அடுத்து சூடான இடுகைகள் எப்படி தெரிவு செய்யப்படுகின்றன? ஒரு சில சொற்குறியீடுகளை கொண்டா அல்லது குறித்த நாள் அதிகமாக இடப்படும் இடுகைகளைக் கொண்டா? இங்கிலாந்து உலக கிண்ணம் வென்ற நேரம் நான் இட்ட இடுகை இதற்குள் அடங்கவே இல்லை. ஆனால் அதிக வாக்குகள் பெற்றது. அப்படியாயின். இடுகையை இணைத்து குறைந்த நேரத்தில் இடும் வாக்குகளைக் கொண்டா? இது தீர்மானிக்கப்படுகின்றது.
அடுத்து பிரபல இடுகைகள் பற்றியது. சிலநேரங்களில் பதின்மூன்று பதின நான்கு வாக்குகள் கிடைத்தும் சில பதிவுகள் ஹிட ஆகாது போய் விடும். அதற்க்கு காரணம் என்னவென்று தெரியும் ஆனால் என் கேள்வி என்னவென்றால் நான் ஒரு பதிவினை போட்டு ஒன்று இரண்டு மூன்று நாட்கள் கடந்தபின் கூட அந்த பதிவு ஹிட ஆகிறது. இது எப்படி? அப்படியாயின் தமிளிஷின் தொடரும் இடுகைகளை அதிகமான பக்கங்கள் சென்று வாசகர்கள் படிக்கின்றார்களா? அப்படி எனில் இது ஆரோக்கியமானதே. இதை தான் தமிளிஷும் முன்னர் எதிர் பார்த்து நடவடிக்கை மேற்கொண்டது என எண்ணுகின்றேன். சில நேரங்களில் நாங்கள் ஒரு இடுகையை தொடர்ந்து மூன்று இடுகைகளை இட்ட பின் கூட (அந்த பதிவுகள் ஹிட இல்லாவிடாலும்) அதற்க்கு முன் இட்ட பதிவு ஹிட அடித்துவிடும். இவை எல்லாம் எப்படி நடக்கிறது. உண்மையில் இது பதில் சொல்ல கடினமான சந்தோசமான உணர்வுதான்.
தமிளிஷிடம் ஒரு வேண்டுகோள்
சில இடுகைகள் இன்னும் ஒரு வாக்குக் கிடைத்தால் பிரபலமாகி விடும் என்ற நிலையில் தொடரும் இடுகைகள் பகுதியில் இருக்கும். ஆனால் அந்த ஒரு வாக்கு கிடைக்கும் கிடைக்காது என்ற ரீதியில் அல்லாடிக் கொண்டிருக்க. அதனை தொடர்ந்து பல இடுகைகள் தொடரும் இடுகைகள் ஆகிவிட இந்த இடுகை பின்னுக்கு போய் விடும். இதனால் அதை காண்போர் எண்ணிக்கை குறைந்து விடும். எனவே அந்த ஒரு வாக்கு குதிரைக் கொம்பாக கூட போய் விடும். எனவே இப்படி போர்டரில் இருக்கும் பதிவுகள் என்று ஒரு பிரத்தியே பகுதியை நிறுவி. பதிவர்களை ஊக்கப்படுத்தினால் என்ன.
அண்மையில் இருநாட்கள் தமிலிஷில் ஏற்ப்பட்டிருந்த கோளாறு உண்மையில் பதிவுலகத்தை பாதித்திருந்தது. தட்டச்சி இருந்த இடுகைகளை கூட நாங்கள் இடாமல் தமிளிசுக்காக காத்திருந்தோம். அந்தளவிற்கு பதிவர்களின் இன்றியமையாத ஒன்றாக தமிலிஷ் இருக்கிறது. உங்களுக்கு வாழ்த்துகள். இன்னும் உங்கள் பணி சிறப்பாக இருக்க.
19 கருத்துரைகள்:
Hay good post and good suggestions. but I am just a reader in tamilish, i don't even registered. I used to go to all the upcoming and vote.
Rajesh, Chennai
அனைவரின் மனதில் இருக்கும் கேள்வி இது...நன்றி...
நீண்ட நாட்களாக என் மனதில் இப்படியொரு சந்தேகம் இருந்தது..
எழுத்தில் வடித்து விட்டீர்கள்.
எல்லாம் அவனுக்குத் தான் வெளிச்சம்.
/சில நேரங்களில் நான் இடும் இடுகைகள் உடனடியாக தொடரும் இடுகைகள் பகுதியில் வருவதில்லை. அதன் பின் தமிலிஷ் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டுதான் அவற்றை மீட்டு எடுத்திருக்கின்றேன். இது ஏன் நடக்கின்றது/
அவர்களது SPAM CODING தடுக்கிறது என்று நினைக்கிரேன்
maams look at this
http://blog.tamilish.com/pakkam/9
//சில நேரங்களில் நான் இடும் இடுகைகள் உடனடியாக தொடரும் இடுகைகள் பகுதியில் வருவதில்லை.//
தலைப்பில் ஆங்கில வார்த்தைகளை
உபோயோக்கிக்க வேண்டாம்.
18 வாக்குகள் பெற்ற என்பதிவு தமிளிஷில் இடம் பெற்றது, ஆனால் 26ம் தேதி நான் வெளி இட்ட பதிவு 25 வாக்குகள் பெற்றது, இந்த நிமிடம் வரை தமிளிஷில் இடம் பெற வில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. என் சந்தேகத்தை நீங்கள் கேட்டு விட்டீர்கள் நன்றி.
//நான் வெளி இட்ட பதிவு 25 வாக்குகள் பெற்றது, இந்த நிமிடம் வரை தமிளிஷில் இடம் பெற வில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. என் சந்தேகத்தை நீங்கள் கேட்டு விட்டீர்கள் நன்றி.//
same blood . i got 23 votes but i didnt get any mail from tamilish means popular list mail .
its a nice service, but does anyone knows who runs it and from where it is operated
Indeed you are true. I many times find their logics not working.
Also, their automatic discarding program has problems as well (for example, if you create a post via Blog editors, like Windows Live Writer etc, then the post is automatically discarded. The same works when you create via Blogger home page). Something that I noticed recently.
May be it's time for them to re-visit their rules.
@Anonymous
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அங்கே நீங்கள் உறுப்பினராக இருந்தால் உங்கள் வாக்கு எங்களைப் போன்ற பதிவர்களுக்கு பயன்படும். இணைந்து கொள்ளலாமே.
@கமல்
அவனுக்கு மட்டும் வெளிச்சம் இல்லை. நமக்கும் சில விசயங்கள் அறியும் வாய்ப்பு அங்கே இருக்கு என நினைக்கின்றேன்.
@வழிப்போக்கன்
உங்கள் கருத்துக்கு நன்றி.
@Anonymous
இதை நான் ஏற்கனவே படித்திருக்கேன். ஆனால் என் கேள்வி இதை பற்றியது அல்ல என நினைக்கின்றேன்.
@prem
உங்கள் கருத்துக்கு நன்றி.
@Kousalya
வாக்குகள் எத்தனை என்பதில் இடுகை பிரபல்யம் அடைவதில்லை. கிடைக்கும் வாக்கு பலம் தான் முக்கியம். அதாவது வாக்கு இடும் வாக்காளர்களின் பலத்தை பொறுத்து தான் நம் இடுகை பிரபலம் தீர்மானிக்கப்படுகின்றது.
@மதார்
உங்கள் கருத்துக்கு நன்றி. கௌசல்யாவுக்கு நான் சொன்ன பதிலை படியுங்கள்.
@Anonymous
தமிலிஷ் மிக விரைவில் இதற்க்கு பதில் அளிக்கும் என ஒரு வாசகனாய் நம்புகின்றேன்.
@PS
உண்மைதான் நண்பா. சில கருத்துக்களை அவர்கள் வெளிப்படையாய் சொல்வது நல்லது. மாற்றங்களும் தேவை. மாற்றங்கள் நடப்பதை அறிந்தேன். பார்ப்போம்.
Post a Comment