தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு உண்டு ஆனால் இம்முறை தை மகள் தன்கூட பல அழிவுகளையும் எங்கள் நாட்டில் கொண்டுவருவது கவலையே. இலங்கையின் சில பகுதிகளில் பாரியளவான சேதங்கள் ஏற்ப்பட்டிருப்பதுடன் கொழும்பில் கூட லண்டன் போன்ற குளிர் நிலவுவதாக நண்பர்கள் சொல்கின்றனர். வரும் காலம் வசந்தமாகும் என்றால் வம்பாகிக்கொண்டே போகின்றது.
இந்த நிலையில் பல அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்கள் நிவாரணப்பணிகளை முடுக்கி இருக்கும் நிலையில் நற்காரியங்களில் ஈடுபட ஆசைப்பட்ட நம் பதிவர்களும் தங்களால் முயன்ற உதவிகளை வழங்க முன்வந்து பல பதிவுகள் இட்டனர். இதில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய விடயம் எந்த பாகுபாடும் இன்றி வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற மனப்பான்மை இன்றி(குற்றம் சொல்பவர்களே இப்போ எங்கே போய்விட்டீர்கள்) ஒன்றாக இணைந்த நிரூஜா, வதீஸ், ரமேஸ், சந்த்ரு, மதிசுதா, கூல் பாய் கிருத்திகன்(எல்லோரும் எனக்கு அண்ணா மார் எனவே பெயருக்கு பின் அண்ணா போடுங்க) என இந்த திட்டத்தை முன்னெடுத்தனர். எல்லோரும் ஒன்றுபட்டு இந்த நல்ல காரியத்தை செய்து முடிக்கும் படி பதிவுலக நண்பர்கள் அத்தனை பேரையும் உரிமையுடன் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.
கைநீட்டி கொடுத்த நம் உறவுகள் இன்று கையேந்தும் நிலைக்கு விட்டுவிடாதீர்கள். நாளை நமக்கும் இதே நிலை வரலாம். நம் உறவுகளுக்கு நாம் கொடுக்கும் போது அது கையேந்தல் ஆகாது நாம் செய்யும் கைமாறே அது.
இயற்கை அனர்த்தத்தில் இருந்து மீண்டுவர இறைவனை பிரார்த்திப்போம்!
4 கருத்துரைகள்:
நல்ல ஆரம்பம்... பாராட்டுக்கள்...
வணக்கம் நண்பரே என்னை நினைவிருக்கா நலமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தைத்திருநாள் வாழ்த்துக்கள்
@கிருஷ்ணா
ரொம்ப நல்லாய் நினைவிருக்கு. உங்கள் தொலைபேசி இலக்கத்தை எனக்கு மின் அஞ்சல செய்யுங்கள். sshathiesh@gmail.com
அப்பாடா நானும் காவலன் படத்தை ஒழுங்கா ரீலிஸ் செய்யும் போராட்டத்தில் ஏதும் இறங்கச் சொல்கிறீர்களோ எனப் பயந்து விட்டேன் .
Post a Comment