பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவுகளும் எழுச்சிகளும் நாட்டுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு உங்கள் உடல் நலத்துக்கும் முக்கியமானது. பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவுகள் உங்கள் பணத்தை சரிப்பதுடன் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்களை உருவாக்கி நம்மை பாடாய் படுத்துகின்றது என்கின்றது ட்யூக் பல்கலைக்கழக ஆய்வு.
இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட பங்குச்சந்தையின் பிரபலமான குறியீட்டெண்ணின் போக்கை ஆய்வு செய்ய 2007ஆம் ஆண்டின் டிசம்பர் தொடக்கம் 2009ஆம் ஆண்டின் ஜூலை வரையான காலப்பகுதியில் குறியீட்டு எண் அதிகமாக சரிவடைந்த நாட்களை குறித்து வைத்துக்கொண்டனர். அந்த நாட்களுக்கு அடுத்து வரும் ஒரு சில நாட்களில் வடக்கு கரோலினாவில் உள்ள வைத்தியசாலையில் இருதய நோய் மற்றும் மாரடைப்புக்கு சிகிச்சைக்கு சேர்ந்தவர்கள் பற்றிய விபரங்களை திரட்டி இந்த அதிசயிக்கத்தக்க முடிவை கண்டறிந்தனர். குறியீட்டு எண் வீழ்ச்சியடையாத நாட்களின் பின் அங்கே சிகிச்சைக்கு வந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதிலே சில மாற்றங்களுடன் ஒவ்வொரு கணக்கு முடியும் காலத்தின் பின்னும் சிகிச்சைக்கு வந்த இருதய நோயாளிகள் பட்டியலை சேகரித்து பார்த்த இவர்கள் அந்தக் காலத்தில் பங்குச்சந்தை சரிவுகளையும் அதன் ஆழத்தையும் கணக்கிட்டுள்ளனர். இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தபோது இந்த ஆய்வின் முடிவை உடனடியே தெட்டத் தெளிவாக கணிக்க முடியாமல் பொய் உள்ளது. இதனால் தங்கள் ஆய்வில் தளர்ந்த ட்யூக் பல்கலைக்கழக ஆய்வாளர்களை மற்றைய ஆய்வாளர்கள் உற்சாகப்படுத்தி உள்ளனர்.
எது எப்படி இருப்பினும் சரிவுகள் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் போது இருதய நோய்கள் வர வாய்ப்புண்டு என்பதையே இந்த ஆய்வுகள் எடுத்துக்காட்டி உள்ளன.
2 கருத்துரைகள்:
ஆகா, பங்குச்சந்தை அச்சுவிற்குப் போட்டியாக சதீஷா? நடக்கட்டும் நடக்கட்டும் :)
// Subankan கூறியது...
ஆகா, பங்குச்சந்தை அச்சுவிற்குப் போட்டியாக சதீஷா? நடக்கட்டும் நடக்கட்டும் :)//
போட்டி இல்லை சும்மா ஏதோ நம்மால் முடிந்தது.
Post a Comment