Tuesday, March 17, 2009

விஜய் ரசிகர்களே இது சவாலுக்கு சவால்!

கடந்த திங்கள் கிழமை நான் வழமை போலவே அலுவலகம் வந்தபோது லோஷன் அண்ணாவும் ஹிஷாம் அண்ணாவும் ஏன் வைதேகி அக்கா கூட சேர்ந்து என்ன உங்கள் தலைவர் இப்படி செய்துவிட்டார்? என கேட்டதுடன் சில காரசாரமான விடயங்களும் பரிமாறப்பட்டது. அந்த நேரம் எனக்கு சார்பாக(அதாவது விஜய் சார்பாக) நண்பர்களான அருண் மற்றும் ரஜீவ், ஏன் எங்கள் அருந்ததி அக்கா கூட பேசினார் . அதுமட்டுமில்லாமல் தைரியமிருந்தால் ஹிஷாம் அண்ணாவின் பதிவில் என்னிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்குமாறும் கூறினார். நான் அங்கே பதில் அளிக்கவில்லை. இப்போது எல்லாவற்றையும் சேர்த்து இங்கே கொட்டப்போகின்றேன்.
என்னுடைய கிரிக்கெட் சம்பந்தமான பதிவின் தொடர்ச்சியை தர முதல் இவ்வாறான ஒரு பதிவை இட வேண்டிய நிலைமையில் நான்.
சத்தியமா எனவென்றே புரியவில்லை
இன்று நான் அலுவலகம் வந்து பார்த்தேன் லோஷன் அண்ணாவின் மற்றுமொரு பதிவில் விஜய் வசைபாடப்பட்டுள்ளார். (ஏன் அண்ணா உங்களுக்கு இவ்வளவு கோபம்?) எனக்கு இன்னும் கொஞ்சம் ஆத்திரம் வந்துவிட்டது. அதே நேரம் அருந்ததி அக்கா சொன்னார் "தம்பி இவர்கள் இப்படி விஜய் பற்றி தப்ப சொல்லிறத என்னால கேட்கமுடியல யாரவது அவருக்கு சார்பா அவர் பக்க நியாயத்தையும் சொல்லுங்களேன்" என்றார். இந்த உணர்வு பூர்வமான கருத்துகளின் வெளிப்பாடு தான் இந்த பதிவு.

எனி எங்கே போனாலும் வாயை மூடியபடி இருப்போமோ?
அண்மையில் இளைய தளபதி விஜய் திருச்சியில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரசிகர்களை கோபமாக திட்டி விட்டதாக சர்ச்சைக்குரிய vedio ஒன்று பல இணைய தளங்களிலும் உலாவருகின்றது.
நானும் பார்த்தேன் மிகச் சில வினாடிகளே தோன்றும் அந்த vedio வில் விஜய் அருகில் பிரபுதேவா இருக்கிறார் அவர்கள் முன் சில ஊடகங்களது ஒலிவாங்கிகள். அதில் நேராக பார்த்து நிருபர்களுக்கு மிகவும் அமைதியாக பதில் சொல்லும் விஜய் திடீரென மறுபக்கம் திரும்பி தான் அவ்வாறு பேசுகின்றார். உண்மையில் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தால் அந்த கேள்வி ஏன் அதில் கேட்கவில்லை. அப்படியாயின் ஏன் விஜய் மறு பக்கம் திரும்பி அவ்வாறு சொல்ல வேண்டும்? நேரடியாகவே சொல்லி இருக்கலாமே. இதனால் நாம் ஏன் அதை அவர் பத்திரிகையாளர்களை திட்டவில்லை என்பதை ஏற்கக்கூடாது?

இவரா அப்படிப் பேசியிருப்பார்?
அடுத்தது அவர் ரசிகர்களை திட்டினார் என்கிறார்கள். அப்படியே அவர் திட்டி இருந்தாலும் அது மிகச்சரியானதே. ஏனெனில் ஒரு தலைவன், முன்மாதிரி ஒரு பொது இடத்தில் தன் ஆளுமையை காட்டி தன் படையை சிறந்த கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். அதைத்தான் விஜய் செய்திருக்கிறார்.

அண்ணா! உங்களை புரியாதவங்க பேச்சு அது.

இவர் யார் இப்படி பேச என நீங்கள் எனக் கேட்கலாம்? நாம் படிக்கும்போது தப்பு செய்தால் ஆசிரியர் திட்டுவதில்லையா? அலுவலகத்தில் மேலதிகாரிகள் திட்டுவதில்லையா? ஏன் வீட்டில் பெரியவர்கள் தான் திட்டி திருத்துவதிள்ளயா? அது போல ஒரு செயல் தான் தன்னை நம்பி இருப்பவர்களை திருத்த எடுத்த இந்த செய்கை. இப்படி நல்ல கோணத்தில் பார்க்காது ஏன் நாம் தப்பாக பார்க்க வேண்டும். இது எங்கே விஜய் மேல் தப்பு கண்டு பிடிக்கலாமென காத்திருந்தவர்களது ஆவலைத்தான் வெளிப்படுத்துகிறது.

நாங்கள் சேர்ந்தாலும் தப்ப எழுதி விடுவாங்களோ?
ஆரம்பகாலங்களில் ரஜினி, அஜித் போன்றவர்களுக்கும் இதே நிலை தான் நடந்தது. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஒருவர் கருத்தை சொல்லி விட்டால் அதை பெரிது படுத்திப் போடுவது பல ஊடகங்களின் வழக்கமாகிவிட்டது. இதனால் தான் மனதில் பட்டத்தை வெளிப்படையாக சொல்லும் அஜித் கூட ஊடகங்களை விட்டு விலகி இருந்தார்.
நாங்கள் என்ன செய்தாலும் செய்திதான் என சிரிக்கிறார்களோ?
இவ்வாறான சம்பவங்கள் எல்லா இடங்களிலும் நடக்கிறது. அப்படி இருக்கும் பொது இது மட்டும் பெரிது படுத்தப்பட காரணம் விஜய் இன்று மாபெரும் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்பதும் அவர் மேல் கொண்ட சில வெறுப்பானவர்களது எண்ணமுமே. இதில் மிக முக்கியமாக குறிப்பிட்ட காரணம் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு என்பவற்றின் தோல்விகள். முதலில் இந்த மூன்று படங்களும் தோல்விப்படங்கள் அல்ல. இந்த படத்தயாரிப்பாளர்கள் யாரும் இவை தோல்விப் படம் என சொன்னார்களா? இவற்றை தோல்வி என்பவர்கள் விஜய் இடம் நிறைய எதிர் பார்க்கிறார்கள் ஏனெனில் அவர் கொடுத்த வெற்றிப் படங்கள் அப்படி. இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் விஜய் ஆரம்பகாலங்களில் பார்க்காத தோல்விப்படங்களும் இல்லை அதன் பின் பெற்ற வெற்றிகளும் சாதாரணமானவை அல்ல. மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு. மிக முக்கியமாக பெண்களின் பேராதரவு. எங்கள் ஆதரவு உங்களுக்கே
விஜய் படங்களை குறை சொல்பவர்கள் விஜய் இதே போல் முன்னர் கொடுத்த மசாலா படங்களை மட்டும் ஏன் வெற்றி பெற வைத்து இன்று சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தினர். அன்றே ஒதுக்கி தள்ளி இருக்கலாமே. விஜய் தன் உருவத்தை மாற்றி நடிப்பதில்லை என்கிறீர்கள் ஒருவர் தன் உருவத்தை மாற்றாமல் பெரிய வெற்றிப்படங்கள் கொடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? விஜய் தன் உருவத்திலே வந்து ஜெயிக்கிறார்தானே.

எனவே ஒருவரை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் நன்றாக எழுதுங்கள் பரவாயில்லை அனால் தவறாக எழுத முதல் உங்கள் மனசாட்சியுடன் சேர்த்து சிந்தியுங்கள். அடுத்தவரை காயப்படுத்தும் சிறு புன்சிரிப்புக்கூட தப்புதான். விஜய் நல்ல விடயங்கள் செய்யும்போது ஏன் நீங்கள் இப்படி வரிந்து கட்டிக்கொண்டிருக்கவில்லை.

இத்தனை வருடமாக திரை உலகில் இருக்கும் விஜய் அப்படிப் பேசியதற்கு தகுந்த காரணம் இருக்கும். எனவே தவறான காரணங்களை நீங்களே கண்டுபிடித்து வஸ்கொடகாமா ஆகாதீர்கள். உண்மையான விஜய் ரசிகர்கள் அவரை நிச்சயம் புரிவர். எங்கேயும் எப்போது அமைதியாக இருக்கும் விஜய் அதேபோல் அவரது ரசிகர்கள் இப்போது பொறுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். விஜய் ரசிகர்களே உங்கள் மன ஓட்டங்களையும் தட்டி விடுங்கள். உங்களால் முடியும்!
Share:

6 கருத்துரைகள்:

SMOKY said...

வக்கத்த விஜய்க்கு வக்காலத்து வாங்கும் நீயெல்லாம் ஒரு இலங்கைத் தமிழனா? தூக்கில தொங்கலாம் இதை விட..

பொது இடத்தில் இப்படி எந்த பாமரனுமே நடக்க மாட்டான்.. இதுக்குள்ள இவர் ஒரு டாக்டர் பட்டம் பெற்றவராம்.. சீ .. வெக்கமாயில்லை?
இலங்கையில மக்கள் படுற பாட்டையெல்லாம் மறந்திட்டு,
இதுக்குள்ள கேவலமான நாய் விஜய் புகழ் பாடுற உனக்கெல்லாம் அங்க சூடு வச்சாத் தான் அடங்குவீங்க..

போ போ பொய் வேற பொழப்ப பாரு.. வந்திட்டான் மினக்கெட்டு எழுத..

Sinthu said...

adadaa.........................
Gr8....
What did u say to Loshan anna & Hisham anna?
"அதுமட்டுமில்லாமல் தைரியமிருந்தால் ஹிஷாம் அண்ணாவின் பதிவில் என்னிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்குமாறும் கூறினார்"
Who is this?

பூம்பூம்மாடு said...

enna sir idu. yosichu than pesureengala. ungalukku vijay pudikkum nu othukiren. adukkaga ippadiya? avarala ungalukku edavadhu use irukka? vijay or ajith or vera endha actor a irundha enna sir. just oru enter tainment ku 3 manineram padam parka porom. adula konjamavadhu indha buildup ellam illama konjam logic a movie eduthu tharalamla. rasigargla katupaduturarunu solreenga. porupana thalaivar ipadi than kathuvarunu sonenga. sari. yean kathanum. rasigar mela unmaiyana anbu irunda yarum katha matanga. vathiyar kathuradu, higher official namala sathama poduradhu ellam sari than. avanga satham poduradhukum ivan satham poduradhukum difference illaiya. nan padichavaraikum, ennoda school college ellathirlayum first 2-3 times amaidhiya irunganu than aasiriyar solluvaru. higher official kooda 1 time porumaiya solluvaru. avaruku edum problem illaina or andha work urgent illaina matum. illaina kandipa satham poduvaru. ippo avarukaga parinji pesureenga. yen ippadi ellam. ippadi edavadhu solli sirippu police agidadhinga. appadi oru kelvi ketadhunala thane avaruku kovam vandirukkanum. badil solla mudiyama thane kathuraru. thalaivan nu solreenga. thalaivanuku mukkiyamana oru panbu irukkanum adu than sagippu thanmai adu yean unga thaleevarrruuuu kita illai nu konjam yosichi parunga. yean si nalla padam ellam varum podhu edukku mokkai masala movie ellam parthu adula varra mudalnilai nadigan(heronu sola vendiya avasiyam illa) oruthara periya alavula yosikireenga. nijathula oruthar 10-20 pera adikka mudiyuma? ellam padadhuku oru buildup than. konjam sindichu seyal padurnga saami. idu ellaroda rasigarukkum porundhumga..

SShathiesh-சதீஷ். said...

நன்றி நண்பர்களே. உங்கள் கருத்தை மதிக்கின்றேன். நண்பர் அன்! நீங்கள் ஏன் சம்பந்தம் இல்லாததை இங்கே சம்பந்தப்படுத்தப்பர்க்கிறீர்கள். ஒரு நடிகரின் நிலையை பற்றி நான் பேசும்போது அதை பார்த்த நீங்களும் அதை பற்றியே சொல்லி இருக்கலாமே. அதை இவ்வாறு திசை திருப்பாதீர்கள். அது மட்டுமன்றி நீங்களே இவ்வளவு கோபப்பட்டு என்னையும் விஜயையும் திட்டுகின்றீர்கள் நீங்களும் நானும் சாதாரண மனிதர்கள் என்றபடியால் இது நமக்குள்ளேயே அடங்குகின்றது இதுவே பெரிய நட்சத்திரங்கள் பேசினால் அதை ஊத்தி பெரிதாக்கும் விளைவு தான் இது புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

SShathiesh-சதீஷ். said...

நண்பர் பூம்பூம்மாடு! உங்கள் வருகைக்கு நன்றி! நீங்கள் சொன்னதுபோல் ௰பெரை ஒரேயால் அடிக்க முடியாது தான் அனால் எங்களுக்கு அப்படி ஆசை இருக்கும். நிச்சயமாக நம் மனதில் தோன்றும் அனால் செய்யமுடியாததை திரையில் கதாநாயகன் செய்யும் போது எமக்கு சந்தோசம் கிடைக்கின்றதல்லவா? அதுதான் படம் பார்த்து முடிக்கும் போது நமக்குள் இருக்க வேண்டும்.


சிந்து உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி!

Anonymous said...

வணக்கம் சதீசன், நண்பன் ஆனந்த் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். விஜய் கு வக்காலத்து வேண்டி உங்கள் மாறியாதிஜை கெடுத்து கொள்ள வேண்டாம். இந்த எச்சரிக்கை உங்கள்ளுக்கு மட்டுமல்ல, விஜய் கு வால் பிடிக்கும் அனைவர்க்கும் தான்...

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive