Monday, April 27, 2009

படுக்கையை நினைத்து வேதனைப்படும் அசின். உதவி செய்ய விருப்பமானவங்க மட்டும் படியுங்கள்.


அஜால் குஜால் எண்ணங்களோடு வந்தவங்கள் மன்னிக்கணும் இது அது அல்ல.

எம்.குமரன்.son.of மகாலஷ்மி படத்தில் அசின் அறிமுகமானபோதே இந்த புயல் ஒரு கலக்கு கலக்கும் என நான் நினைக்கவில்லை ஆனால் பலர் நினைத்திருப்பீர்கள்.(அப்போ எனக்கு கசத்தது இப்போ இனிக்கிறது) தனக்கு நடிப்பை விட வியாபாரம் நன்றாக இருக்கிறது, எனவே என் ஆசைக்காகத் தான் நடிக்க வந்தேன் என்ற அசினின் தந்தை கேரளாவில் மிகப்பெரிய தொழில் அதிபர். ஆனால் தன் மகளின் ஆசைக்கு தன்னால் இயன்ற அளவு உதவி செய்யலாமென்ற எண்ணத்தில் தன் வியாபாரம் வேலைகளை எல்லாம் வேறு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு மகளோடு வந்துவிட்டார். படப்பிடிப்பிக்கு அசினுடனேயே வருவார்.

புதிய படங்களை ஒப்புக்கொள்வதிலிருந்து அத்தனை வேலைகளையும் செய்வதும் தந்தை ஜோசெப்தான். அதனால் தான் என்னவோ கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என தமிழக முன்னணி நட்சத்திரங்களோடு மட்டுமன்றி ஹிந்தியிலும் கலக்கிக் கொண்டிருக்கின்றார்.

அசினுடனேயே தந்தை ஒட்டிக்கொண்டு இருப்பதால் எல்லோருக்கும் அது ஒரு இம்சையாகவே இருந்தது(அசினுடன் யாரும் தனிமையில் கதைக்க முடியாதே என ஏக்கம்தான்.) ஏன் அசினின் கையடக்கத் தொலைபேசியைக் கூட ஜோசெப்பே வைத்திருப்பார். அத்தனை வேலைகளையும் பார்த்து பார்த்து செய்த தந்தை இன்று சுகவீனமுற்று வைத்தியசாலையில் படுக்கையில் இருக்கிறார். (தலைப்புக்கு காரணம் இதுதான்) தாய் மட்டும் ஊரிலிருந்து வந்து தந்தையைக் கவனிக்கிறார்.

அசினின் மனம் உடைந்து போய் இப்போது புதுப்படங்களை கூட ஒப்புக்கொள்ளமுடியாமல் தவிர்த்துவருகின்றார். அத்துடன் தன் சொந்த மாநிலத்துக்கு சென்று தேர்தலில் வாக்களிக்க நினைத்தவருக்கு அதுவும் இப்போ எட்டாக்கனியாகி விட்டது.(அசின் என் கூட வந்தால் நான் கூட்டிப்போக தயார் அது வேறு கதை)

வாழ்க்கையில் முதன் முறையாக தந்தை இல்லாமல் பெங்களூர் போய்வந்திருக்கின்றேன் மீண்டும் மும்பை வந்தவுடன் அவரை உடனடியாகப் போய் பார்த்துவிட்டு வந்தேன் என்கிறார் அசின்.(பெற்றவர்களை கவனிக்காத இந்தக்காலத்தில் அசினின் பாசம் பாராட்டலாம் தாய், தந்தை குறை சொல்லும் மற்ற நடிகைகளுக்கும் அவரின் ரசிகர்களுக்கும் இது ஒரு நல்ல பாடம்.)

தந்தை இல்லாமல் இப்போது தன் வேலைகளை செய்ய பழகி வருகின்றாராம் அசின்.(நீங்கள் கூப்பிட்டால் வந்து உதவ எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்) ஆனால் என்ன தான் இருந்தாலும் ஜோசப் குணமடைந்து வர இறைவனை பிரார்த்திப்பதே மனித இயல்பு. அசினுக்கு ஏனோ அண்மைய காலம் சரியில்லை போலத்தான் தெரிகிறது.(சரியான ஜோசியரை பாருங்க மேடம்!)
Share:

3 கருத்துரைகள்:

துஷா said...

"(அசின் என் கூட வந்தால் நான் கூட்டிப்போக தயார் அது வேறு கதை)"

நாங்க என்னமோ தம்பி ரொம்ப பிஸி யையை இருக்கீங்க என்று நினைத்தால் உங்களுக்கு இதுக்கு கூட நேரம் இருக்க

கார்க்கிபவா said...

//அசின் என் கூட வந்தால் நான் கூட்டிப்போக தயார் அது வேறு கதை)"//

அசின் கூட பிசின் மாதிரி ஒட்டிக்க பார்கறீங்களா?

நம்ம சாய்ஸ் இப்போ தமன்னாதான். என் வயசுக்கு அவங்கதான் செட்டாவாங்க :))))

SShathiesh-சதீஷ். said...

அசின் கூப்பிட்டும் நேரமில்லை என்றால் எப்படி சொல்லுங்க? துஷா
கார்க்கி எனக்கு இன்னும் என்னமோ தமன்னா ஒட்டவில்லை.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox