Sunday, May 31, 2009

விஜய் டி.வி, சன் டி.வியில் அசத்தியவர் அகாலமரணம்.

எந்த புதுமைகளையும் முதல் முதல் தந்து அதில் வெற்றியும் பெறுவது எப்போதும் விஜய் டி.விக்கு அல்வா சாப்பிடுவது போல. அப்படி ஆரம்பமாகி பின் பல தொலைக்காட்சிகளில் அதே போல நிகழ்ச்சிகளை படைக்க காரணமாக அமைந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கோ கலக்கென கலக்கி அதன் பின் சன் டி.வியின் அசக்த்தப்போவது யாரில் அசத்துவதில் மன்னனாக அசத்தி பிரபலமான கோவையை சேர்ந்த மிமிக்கிரி வல்லுநர் கோவை ரமேஷ் வீதி விபத்தில் தன் உயிரை இழந்துள்ளார்.(உயிர் மட்டுமே செல்கின்றது அவர் தந்த சிரிப்பு என்றுமே வாழும்.)
நாற்பது வயதான ரமேஷ் அனேகமாக பெண் கலைஞர்கள் குரலில் பேசுவதில் அசகாய சூரர். அதிலும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை போல இவர் பேசினால் கண்ணை மூடிக்கேட்டால் சரோஜாதேவியே பேசுவதுபோல இருக்கும். பெண்களை போலவே உடை உடுத்திக்கொண்டு தோன்றி கவலைகளால் துவண்டுபோன பல நெஞ்சங்களை தன் கலையால் சிரிக்க வைத்து எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர். பொதுவாகவே மற்றவர்களை சிரிக்க வைப்பது என்னும் கடினமான வேலையை மிக சர்வசாதாரணமாக செய்து வெற்றிகண்டவர் ரமேஷ்.

நான் ஒருமுறை இவர் நிகழ்ச்சியை பார்க்கும் போது அப்படியே சொக்கிப் பொய் விட்டேன். மிமிக்கிரி என்றால் எனக்கு கொள்ளை ப்ரியம்.(ஏனெனில் எனக்கு மிமிக்கிரி செய்ய தெரியாது.) அதனால் மிமிக்கிரி செய்பவர்களை பார்த்தால் ஏதோ எனக்குள் ஆனந்தம்.

இன்று.......?

இதன் மூலம் கிடைத்த புகழ் அங்கீகாரம் என்பவற்றைக் கொண்டு இசை நிகழ்வுகளில் பங்கேற்று வந்த ரமேஷ், தன் கலைப்பயனத்திலேயே தன் நண்பர்களோடு கலந்துவிட்டார். ஒரு இசை நிகழ்வு முடிந்து வரும் வழியில் இடம் பெற்ற விபத்தில் இந்த அற்புத கலைஞனின் வாழ்வு முற்றுப்பெற்றுவிட்டது. அவரின் உடல் இங்கிருந்து போனாலும் அவர் செய்த கலை சேவை காலம் கடந்தும் மக்கள் மனதில் அவரை வாழவைக்கும்.

ரமேஷின் அசைவுகளும் அவரின் நகைச்சுவை உணர்வும் இப்போது என் கண்முன்னே தோன்றி மறைகின்றது. இந்த நெஞ்சத்தை கிள்ளிய மனிதனை இனி கடந்து போன டி.வி நிகழ்வுகளில் மட்டுமே பார்க்க முடியும் என்னும் போது மனது கனக்கிறது. மரணம் எப்போதும் வரும் அது ரமேஷை கொஞ்சம் சீக்கிரமே அழைத்துவிட்டது. அவரி ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக.
Share:

13 கருத்துரைகள்:

ராஜ நடராஜன் said...

எனது அனுதாப அஞ்சலிகள்.

ஆ! இதழ்கள் said...

வருத்தமான செய்தி, பெப்ஸி உமா போல் ஒருமுறை பேசி அசத்தியது ஞாபகம் வருகிறது.

:(

பழமைபேசி said...

வாழும் கலைஞனின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்!

ஆகாய நதி said...

மன வருத்தத்துடன் ஆழ்ந்த அனுதாபமும் அவர் ஆத்மா சாந்தியடைய என் வேண்டுதல்களும் :(((

நல்லதந்தி said...

பத்திரிக்கையில் படித்த போது யாரோ என்று நினைத்தேன். இவர் தானா அந்த இரமேஷ். எனக்கும் இவருடைய மிமிக்கிரி மிகவும் பிடித்தமானது. இந்த செய்தி என்னை மிகவும் அதிர்ச்சி அடையவைத்தது!. :(

கிரி said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

சென்ஷி said...

:-((

அதிர்ச்சியான நிகழ்வு..

அவரது நிகழ்ச்சிகள் பலவற்றைக் கண்டிருக்கின்றேன். உண்மையில நல்ல கலைஞர்.

ரமேஷின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

.கவி. said...

வருந்துகிறேன்.

சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் சீரமைக்கப்பட்டால் பல நல்லயிரகள் காக்கப் படலாம்.

.கவி.

enRenRum-anbudan.BALA said...

வருத்தமான செய்தி. திறமையான நகைச்சுவையாளர். அவர் ஆன்மா சாந்தி அடையவும், அவர் தம் குடும்பத்தினர் சீக்கிரம் மன அமைதி பெறவும் பிரார்த்திக்கிறேன்.

எ.அ.பாலா

கீழை ராஸா said...

இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட துபாயில் வந்து அசத்தினார்...உண்மையில் அதிர்ச்சியான செய்திதான்...

SurveySan said...

adak kodumaye! :(

முத்துகுமரன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஒரு தேர்ந்த கலைஞர், அற்புதமான உடல்மொழி கொண்டவர்.

koothanalluran said...

சரோஜா தேவி மட்டும் அல்ல பானுமதி குரலிலும் அசத்தியவர்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive