உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label விஜய் டி.வி. Show all posts
Showing posts with label விஜய் டி.வி. Show all posts

Thursday, August 6, 2009

Super Singrs உடன் ஒரு சூப்பர் பயணம் -பகுதி-1

இலங்கையில் வெற்றிநடை போட்டுவரும் வெற்றி எப்.எம் மிகப்பிரமாண்டமான இசை நிகழ்வை வழங்க சூப்பர் சிங்கர்ஸ்,அடுத்த பிரபுதேவா,மற்றும் சகலகலாவல்லவன் சிவகார்த்திகேயனை அழைத்து வெற்றிகரமாக நடத்தியும் முடித்து விட்டது. வெற்றியில் அடியேனும் ஒருவன் என்னும் காரணத்தால் எனக்கும் ஒரு சில கடமைகள் கிடைத்தன. விமான நிலையத்தில் நான் சென்று வரவேற்றது முதல் இசை நிகழ்வு நடந்து முடிந்தது வரை நடைபெற்ற சில சுவாரஷ்யமான விடயங்களை இங்கே தொடர் பதிவாக இடப்போகின்றேன். (யாரும் அலுத்துக்கொள்ளாதீர்கள். சீரியல் போல இழுக்கமாட்டேன் சீக்கிரமே முடித்திடலாம்.) எழுத நான் தயார் வாசித்து வாக்குபோடுவதுடன் என்னை வசை பாட நீங்கள் தயாரா?

ஜூலை மாதம் 10ஆம் திகதி, நான் வீட்டில் இருக்கும் பொது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்கள் வெற்றி எப்.எம் வானொலியின் விரிவாக்கல் பிரிவைச் சேர்ந்த ஜெய்சனிடமிருந்து. "சதீஷ், நாளைக்கு இந்தியாவிலிருந்து வருபவர்களை நீங்கள் தான் விமான நிலையம் சென்று அழைத்து வரவேண்டும்" என அதற்கான வேலைகளை தொலைபேசியில் சொல்ல ஆரம்பித்து விட்டார். நானோ நேர வந்து எல்லாம் கேட்கின்றேன் என தொடர்பை துண்டித்து விட்டு அலுவலகம் புறப்பட்டேன். அலுவலகத்துக்கு போனவுடன் ஜெய்சனுக்கு தொடர்பை ஏற்படுத்தி, எங்கள் நிகழ்ச்சிப் பிரிவிற்கு வருமாறு அழைத்து சகல விடயங்களையும் கேட்டறிந்து கொண்டேன். தன்னால் அந்த நிகழ்விற்கு வரமுடியாதென சொன்ன ஜெய்சன் ஒரு தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து அந்த இலக்கத்துக்கு சொந்தக்கார நபருடன் இது பற்றி கதைக்கும் படி கூறினார். நானும் அவருடன் கதைக்க தன் பெயர் குமார் என அறிமுகமானார் ஒரு முக்கியஸ்தர்.(இவரை எல்லோரும் மாருதி குமார் எனத்தான் அழைப்பர்.) அவர் நாளை காலை உங்கள் வீட்டுக்கு9.30க்கு வந்திடிறன் தயாரா இருங்க என்று விட்டு தொடர்பை துண்டித்தார். என்னுடன் எங்கள் விரிவாக்கல் பிரிவை சேர்ந்த தினேஷும் வருவதாக தெரிவிக்க புகைப்பட கருவியுடன் அவரும் மறுநாள் தயாரானார்.
இரவு நேரம் நான் லோஷன் அண்ணாக்கு தொடர்பை ஏற்படுத்தி இந்த விடயம் தொடர்பாக என் சந்தேகங்களை தீர்த்ததோடு அங்கே சென்று நான் செய்யவேண்டிய செய்யத்தேவையற்ற விடயங்களை கேட்டு தெரிந்து கொண்டேன். சரி நாளை காலை நாங்கள் இந்தியாவின் விஜய் டி.வி .புகழ் சூப்பர் சிங்கர்ஸ் அஜீஸ்,ரவி,ரேனு,ரஞ்சனி ஆகியோருடன் அடுத்த பிரபுதேவாவாக முடிசூடிய ஷெரிப் மற்றும் மிமிக்கிரி நடனம் என அசத்தும் சிவகார்த்த்திகேயனை வரவேற்கப் போகின்றோம் என்ற ஒரு சின்ன சந்தோசத்தோடு அன்றைய இரவும் கழிந்தது.
ஆனால் மறுநாள் காலை எனக்கு ஒரு அதிர்ச்சி, சற்று நேரம் தான் என்றாலும் அது அதிர்ச்சிதான்..... நான் விமான நிலையம் சென்றேன் என்பது சிலருக்கு தெரியும் அதனால் சென்றேனா இல்லையா என கேட்கவில்லை. ஆனால் ஒரு சின்ன சங்கடம் ஏற்பட்டு தான் போனது........ தெரிந்தவர்கள் என்னவென சொல்லிவிடுங்கள்.....நான் அடுத்த அங்கத்தில் அந்த விடயத்தோடு உங்களை சந்திக்கின்றேன்.
Share:

Sunday, May 31, 2009

விஜய் டி.வி, சன் டி.வியில் அசத்தியவர் அகாலமரணம்.

எந்த புதுமைகளையும் முதல் முதல் தந்து அதில் வெற்றியும் பெறுவது எப்போதும் விஜய் டி.விக்கு அல்வா சாப்பிடுவது போல. அப்படி ஆரம்பமாகி பின் பல தொலைக்காட்சிகளில் அதே போல நிகழ்ச்சிகளை படைக்க காரணமாக அமைந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கோ கலக்கென கலக்கி அதன் பின் சன் டி.வியின் அசக்த்தப்போவது யாரில் அசத்துவதில் மன்னனாக அசத்தி பிரபலமான கோவையை சேர்ந்த மிமிக்கிரி வல்லுநர் கோவை ரமேஷ் வீதி விபத்தில் தன் உயிரை இழந்துள்ளார்.(உயிர் மட்டுமே செல்கின்றது அவர் தந்த சிரிப்பு என்றுமே வாழும்.)
நாற்பது வயதான ரமேஷ் அனேகமாக பெண் கலைஞர்கள் குரலில் பேசுவதில் அசகாய சூரர். அதிலும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை போல இவர் பேசினால் கண்ணை மூடிக்கேட்டால் சரோஜாதேவியே பேசுவதுபோல இருக்கும். பெண்களை போலவே உடை உடுத்திக்கொண்டு தோன்றி கவலைகளால் துவண்டுபோன பல நெஞ்சங்களை தன் கலையால் சிரிக்க வைத்து எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர். பொதுவாகவே மற்றவர்களை சிரிக்க வைப்பது என்னும் கடினமான வேலையை மிக சர்வசாதாரணமாக செய்து வெற்றிகண்டவர் ரமேஷ்.

நான் ஒருமுறை இவர் நிகழ்ச்சியை பார்க்கும் போது அப்படியே சொக்கிப் பொய் விட்டேன். மிமிக்கிரி என்றால் எனக்கு கொள்ளை ப்ரியம்.(ஏனெனில் எனக்கு மிமிக்கிரி செய்ய தெரியாது.) அதனால் மிமிக்கிரி செய்பவர்களை பார்த்தால் ஏதோ எனக்குள் ஆனந்தம்.

இன்று.......?

இதன் மூலம் கிடைத்த புகழ் அங்கீகாரம் என்பவற்றைக் கொண்டு இசை நிகழ்வுகளில் பங்கேற்று வந்த ரமேஷ், தன் கலைப்பயனத்திலேயே தன் நண்பர்களோடு கலந்துவிட்டார். ஒரு இசை நிகழ்வு முடிந்து வரும் வழியில் இடம் பெற்ற விபத்தில் இந்த அற்புத கலைஞனின் வாழ்வு முற்றுப்பெற்றுவிட்டது. அவரின் உடல் இங்கிருந்து போனாலும் அவர் செய்த கலை சேவை காலம் கடந்தும் மக்கள் மனதில் அவரை வாழவைக்கும்.

ரமேஷின் அசைவுகளும் அவரின் நகைச்சுவை உணர்வும் இப்போது என் கண்முன்னே தோன்றி மறைகின்றது. இந்த நெஞ்சத்தை கிள்ளிய மனிதனை இனி கடந்து போன டி.வி நிகழ்வுகளில் மட்டுமே பார்க்க முடியும் என்னும் போது மனது கனக்கிறது. மரணம் எப்போதும் வரும் அது ரமேஷை கொஞ்சம் சீக்கிரமே அழைத்துவிட்டது. அவரி ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox