
பதிவுலக நண்பர்களே! எதிரிகளே! (இப்பெல்லாம் இவங்களும் இருக்காங்க)
சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்
சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
சமூக கருத்துக்கள்
பொது நிகழ்வுகள்
இன்னும் பல













முக்கிய குறிப்பு: நான் ஒரு விக்ரம் ரசிகன் அல்ல. அதேநேரத்தில் விக்ரமின் அநேக படங்களை பாராட்டாதவன். இங்கே என் மனதில் தோன்றிய நடுநிலை கருத்தை விமர்சனமாக தருகின்றேன்.
கண்ணீரை துடைப்பவன் கடவுள் என்று போடும் போதே இந்த படத்தில் லாஜிக் பார்க்க தேவை இல்லை என்பதோடு கடவுளையும் சம்பந்தப்படுத்தி தான் திரைக்கதை செல்லும் என்பது தெரிந்துவிடுகின்றது. அதற்கு ஏற்றால்போல உயிருக்காக போராடும் ஒருவரின் குடும்பத்துக்கு பணம் கொடுத்து வள்ளல் சாமியாக படத்தை தொடங்குகின்றார். அதற்கு பின் மன்சூர் அலிகானுடன் மோத விக்ரம் அறிமுகமாகும் காட்சியே அருமையாக இருக்கின்றது. சேவல் வேடமிட்டு மன்சூரை பந்தாட விக்ரம் செய்யும் சின்ன சின்ன அசைவுகளும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை கட்டிப்போடுகின்றது.
பெண் வேடமிட்டு அசத்துவது வயோதிபர் வேடம் சேவல் கலக்கல் தவிர(இவை திரையில் வரும் நேரம் குறைவு) விக்ரமின் நடிப்புக்கு தீனிபோடும் கதாபாத்திரமில்லை இது. விக்ரமிடம் நடிப்புடன் கூடிய படத்தை எதிர்பார்க்காமல் போனால் நல்ல படமிது. படம் வெளிவர இவ்வளவு தாமதம் ஏன் என்று படம் ஆரம்பித்தவுடனேயே தெரிந்து விடுகின்றது. பிரமாண்டம் என்றால் என்ன என்பதை காட்ட ஷங்கருக்கு அடுத்து இன்னொரு இயக்குனர் வந்திருக்கின்றார். படத்தின் கதை எல்லோரும் சொல்லவதுபோல சிவாஜி+அந்நியன்+சாமுராய்+ரமணா=கந்தசாமி. இதில் கோட்டை விட்ட இயக்குனர் சுசி கணேஷன் திரைக்கதையில் கோட்டை கட்டி இருக்கின்றார். நாங்கள் பார்த்த படங்களின் காட்சிகள், ஆனால் அலுப்பு தட்டவில்லை என்பது என்னவோ உண்மைதான். அதற்கு காரணம் சுசியின் making style என்றால் பொய்யல்ல. அதேநேரம் படம் பெரிதாக இருப்பது ஒரு குறை என்றாலும் திரைக்கதை ஓட்டத்தின் வேகம் அதை சரி செய்து விடுகின்றது.
கதாநாயகி+வில்லி ஸ்ரேயாவிற்கு நடிக்க வாய்ப்பு குறைவென்றாலும் வில்லத்தனமான பாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார். ஆடைக்குறைப்பு(கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணம்) என வந்திருந்தாலும் கவர்ச்சியை தேட வேண்டி இருக்கின்றது. அதேநேரம் பாடல் கட்சிகளில் வளைந்து நெளிந்து இடுப்பை கூட ஆட்டோ ஆட்டென ஆட்டி கலக்கி இருக்கின்றார். பாடல்காட்சிகளில் என்னவோ விக்ரமை விட நடனத்தில் கலக்குவது ஸ்ரேயாதான். அம்மா சுசித்ரா தாயே நீங்கள் பாடுவதுடன் நிறுத்திக்கொள்வது நல்லது. உங்கள் குரலை அதுவும் அழகான நடிகைககளிடம் கேட்க பயமா இருக்கிறது. தந்தைக்காக விக்ரமை காதலிப்பதாக நடிக்க வந்து பின் வழக்கம் போல விக்ரமிடம் சரணடையும் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா என சுருக்கமாக சொன்னாலும் மோதல்,காதல் விறுவிறுப்பு, பழி வாங்கல்கள் என சுவாரஷ்யத்துக்கு பஞ்சமில்லை.
மொத்தத்தில் இந்த திரைப்படத்தை பற்றி பல பதிவுலக நண்பர்கள் எழுதிய விமர்சனகள் இந்த படத்தை பொறுத்தவரை ஏன் என தெரியவில்லை. ஆனால் உண்மையில் இப்படியான வித்தியாசமான படங்களில் சில லாஜிக் பார்க்காதீர்கள் அதேபோல படத்தின் கதை பழையதாக இருந்தாலும் அதை கொடுத்திருக்கும் விதம் புதிசாக இல்லாவிட்டாலும் நன்றாக இருக்கின்றது. விக்ரம் சொன்னது போல நிச்சயம் இந்தப்படம் குழந்தைகளையும் பெண்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் நம்மிடம் இல்லாத ஒரு அதிசய சக்தியை தான் குழந்தைகள் ரசிக்கின்றார்கள். அதேபோல பெரியவர்களை ஏமாற்றாமல் எப்படி இப்படி எல்லாம் நடக்கின்றது என விளக்காமாக சொல்லி இருப்பது பாராட்டக்கூடியதுடன் புரிந்து ரசிக்க கூடியதே.
மொத்தத்தில் படம் பார்க்கும் நேரம் முழுவதும் சோர்வை தராமல் ஒரு படம் இருந்தால் அது நிச்சயம் வெற்றியே. அதை கந்தசாமி கொடுக்கின்றார். பக்தி செண்டிமெட் இருப்பது அடிமட்ட மக்களை சென்றடையும் அதேநேரம் கதையும் அவர்களிடமிருந்து ஆரம்பித்து பெரிதாக சொல்லப்படிருப்பது வர்க்க வித்தியாசங்களை உடைத்து ரசிகர்களை கூட்டும். அதேபோல ஒரு படத்தை பார்த்தால் குறைந்தது மூன்று மணி நேரம் ஆவது அந்தப் படத்தின் பாதிப்பு எங்களை ஆட்டுவித்தால் அதுதான் படத்தின் வெற்றி. உண்மையை சொல்லுங்கள் கந்தசாமி உங்களை பாதிக்கவில்லையா?.
விஜய்-அஜித் இந்த இரண்டு பேரும் வெளி உலகிற்கு என்ன நட்பு பாராட்டினாலும் உள்ளுக்குள் குமுறல் இருப்பது என்னவோ உண்மையாகத்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த இரண்டுபேரும் சேர்ந்து ராஜாவின் பார்வை திரைப்படத்தை கொடுத்திருந்தனர். படத்தின் படுதோல்வி இந்த இணையை மீண்டும் இணையவிடாமல் செய்து விட்டது. அதன் பிறகு பேபி ஷாலினியாக கலக்கி எடுத்தவர் குமாரியாக அறிமுகமானது என்னவோ அறிமுகமானது விஜயோடு. அறிமுகப்படத்திலேயே காதலுக்கு மரியாதை செய்த இவர்களின் படம் மிகப்பிரமாண்ட வெற்றியை பெற்றதோடு தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டது.
அதற்கு பிறகு இரண்டு பேரும் மீண்டும் ஜோடி சேர்ந்த படம் கண்ணுக்குள் நிலவு. படம் என்னவோ வெற்றி பெறாவிட்டாலும் வியாபார ரீதியான படமே நடிப்பார் என சொல்லப்பட்டு வந்த விஜய், வித்தியாசமான கதைக்களத்தோடு வித்தியாசமான கதாபாத்திரத்தில் துணிந்து நடித்த படம். இந்த ஜோடியை தமிழ் நாடே கொண்டாடியது. காதல் ஜோடி என்றால் இப்படி எல்லா இருக்கவேண்டும் என்று ஏங்கியோர் பலர்.(இது திரையில் மட்டும் சொல்கின்றேன்.) காலம் ஓட அஜித்தோடு ஜோடியானார் ஷாலினி.அது அஜித்தை பற்றி ஒரு சில கிசுகிசுக்கள் உலாவந்தநேரம்.(ஹீராவுடன் படு நெருக்கம் என்பதே அது.) இந்த நேரத்தில் தான் ஷாலினி அஜித்தோடு ஜோடி சேர பதறிய ஷாலினியின் தந்தை, நேராக அஜித்திடமே சென்று என் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதே விட்டுவிடு என சொன்னதாக கூட ஒரு சில தகவல்கள் வெளியானது. அதையும் மீறி காதல் என்னும் கடவுள் இரண்டுபேர் மனதிலும் குடி ஏற இன்று அத்தனை பேரும் மெச்சும் நிஜ ஜோடியாக (அஜித்தும் நல்ல மனிதராகிவிட்டார்.) வாழ்ந்துவருகின்றனர். ஷாலினி எப்படி சிறு வயது முதல் கலக்கினாரோ அதேபோல அவர் தங்கள் ஷாமிலியும் புறப்பட்டார்.
அதுவும் மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தில் அறிமுகமான பெருமை கொண்ட ஷாமிலி ஓய் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் கதாநாயகி என்னும் அந்தஸ்துக்கு உயர்ந்தார். தென்னிந்திய மொழிகளில் இவரின் பிரவேசம் ஆரம்பமாகவேண்டும் என எத்தனையோ பேர் ஏங்க இப்படி ஒரு அறிமுகம் அவருக்கு. அறிமுகப்படத்தில் குடும்ப பாங்கான வேடத்தில் அறிமுகமானவரிடம் நம்மவர்கள் அப்போ கவர்ச்சியா நடிக்க மாட்டிங்களா என்று கேட்க எதற்கும் தான் தயார் என்று தமிழ் சினிமாவிற்கு ஏற்றவர்தான் தான் என்பதை நிரூபித்து விட்டார்.
இதெல்லாம் இருக்கட்டும் தமிழுக்கு வரணுமே. எப்படி அக்காவின் கணவரோடு ஜோடி சேர்ந்து கொஞ்சி குலாவலாமா? முடியாதே.(ஒரு சிலர் தங்கள் மகளை விட குறைந்தவயது நடிகைகள் அல்லது தன்னுடன் நடித்த நடிகையின் மகள் நடிகைகளை ஜோடியாக்கியது வேறு கதை) தமிழில் நடிக்க வைக்கவேண்டுமென பல முன்னணி நிறுவனங்கள் நடிகர்கள் முயற்சிக்க இவர் ஜோடியாகப்போவது யாருடன்?
வேறுயார் தன் அக்காவின் கணவரின் போட்டியாளரும் அக்காவின் முதல் ஹீரோவுமான தளபதியோடு தான்.(ஷாமிலிக்கும் நல்ல எதிர்காலம் இருக்குங்கோ) விஜயின் 51வது படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவதாகவும் அந்த படத்தை சித்திக் அல்லது ஜெயம் ராஜா இயக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.(இது தான் குடும்ப ராசியோ என்பது தெரியவில்லை) வாங்கோ ஷாமிலி தளபதியோட கலக்குங்கோ. முடிஞ்சா உங்க மச்சான் தலையோடையும் ஜோடி சேருங்க.(அரசியல்ல இதெல்லாம் சகயமுங்க. ஆஹா இது அரசியல் இல்லை சினிமா என்ன இருந்தாலும் இரண்டும் ஒன்றுதாங்க.)
நடிப்பில் நல்லா நடிப்பார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசத்துவார். நடிகராக திறமையானவராக இருந்தாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியாளர் இல்லை.அறிந்தும் அறியாமலும் தான் இதுவரை இவரின் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆனால் அதுதான் முதல்படமும் கூட. ஆனால் நடிப்பில் சிகரம் தொட்டது. பாலாவின் நான்கடவுள் தான் இவரின் நடிப்பு பசியை தீர்த்தது. அப்போதும் அந்தப்படத்துக்கு அதிககாலத்தை செலவழித்த களைப்பு தீரமுதலே படம் பெட்டியைக்கட்டியது.
குட்டி விஜயின் பிறந்தநாள். 
தளபதியும் இளையதளபதியும்....... ஒரேமாதிரி யோசிப்பாங்களோ?அண்ணாமலை திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை உங்கள் தந்தைக்கே நடித்து காட்டி ரஜினிதான் உங்கள் குரு என சொல்லாமல் சொல்லி நடிக்க வந்த நீங்கள் அறிந்தோ அறியாமலோ அவரை பின்பற்றியது ஆச்சரியமில்லை.(ஏனெனில் ஒரு துறையில் ஒருவரை நாங்கள் ரசிக்கும் போது அதே துறைக்கு நாம் வந்தால் அவர் பாதிப்பு நம்மிடம் வரும் என்பது தவிர்க்கமுடியாததே.) அப்படி இருக்கும் போது ஒரு சில தனித்தன்மைகளோடு உங்கள் படங்களை கொடுக்கின்றீர்கள்.
திருமணக்கோலத்தில் இலங்கைமண்ணின் மகள் சங்கீதாவுடன்.
அன்றும் இன்றும் ஒரு சில வித்தியாசங்களுடன்.
சிறுவயதில் விஜய்.
டாக்டர் பட்டம் ஷங்கருடன். எஸ்.ஏ.சியின் இரண்டு மாணவர்களும்.
கிடைச்சது இதுமட்டும் தானுங்கண்ணா.......
உங்களின் படிக்கல். அப்போது ஏற்றிவைத்தவர். இப்போது இறக்கியும் விடுகின்றார்.
இந்தியாவே விஜய்க்கு பின்னாலயாம்!!!!!!
இவரும் ஒரு வழிகாட்டியா? நடக்கட்டும் நடக்கட்டும்.
எனைப்பொறுத்தவரை நீங்கள் சுயமாக சிந்திக்கவில்லை என நினைக்கின்றேன். உங்களுக்கு பிடிக்காத இந்த அரசியலில் உங்கள் தந்தையின் வலுக்கட்டாயத்தால் தான் இறங்க முடிவெடுத்தீர்கள் என நினைக்கின்றேன். இப்போது நீங்கள் அந்த முடிவை பிற்போட்டிருப்பது சந்தோசம். இந்த இடைப்பட்ட காலத்தில் யோசித்து நல்ல முடிவெடுங்கள்.
இப்பிடி கூடும்போதே திட்டம் தீட்டுவாங்களோ?
உன்னால் முடியும் என்பது உங்களுக்கும்தான் விஜய்.(நல்ல படங்களை கொடுப்பதை சொன்னேன்.)
