யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தை பகுதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தேங்காய் காலமானார். அன்னார் தென்னம் பிள்ளையின் அன்பு மகளும், தென்னம் கொப்பராவின் பாசமிகு மனைவியும் தென்னம் குரும்பை, இளநீர் ஆகியோரின் தாயாரும், தென்னம் மட்டை,பொச்சு,தென்னோலை ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வெள்ளவத்தையில் உள்ள அவரின் வீட்டு உரிமையாளரின் வயிற்றினுள் நடைபெற்று மறுநாள் காலை மலசலகூடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள், பதிவுலக பெருமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்,
கணவன்,பிள்ளைகள்.
22 கருத்துரைகள்:
டேய் தம்பி என்னடா இது ????? எப்படா நீ செத்த !!!!!!!
ஏனுங்கண்ணா உங்களுக்கு இப்படி ஒரு ஆசை
muthal murayaa thanekaaa மரண அறிவித்தல். muthall manithan namba sathis thaa.....lol
super shathieshan anna
உங்கள் பதிவு அந்த கால நினைவலைகளை நீட்டி சென்றன. எங்கள் பாடசாலையில் மாணவர் மன்றத்தில் இதே போன்ற ஒன்றை நான் வாசித்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்
அது சரி திருமதி.தேங்காயின் மரண அறிவித்தலுக்கு ஏன் உங்கட படம் போட்டிருக்கு.
உங்களுக்கும் தேங்காய்க்கும் என்ன தொடர்பு!!!!!
முடியல. நானும் எதோ உங்களுக்கு தெரிந்த முக்கியமானவரை இழந்ததனால் பதிவில் மரண அறிவித்தல் போடுரிங்கேன்னு யாரென்னு பார்க்கலாம் என்னு வந்தேன். தேங்காயை போட்டாலும் பரவாயில்ல உங்களைப்போட்டிட்டிங்க்களே.! (நான் படத்தைச்சொன்னேன்)
இல்ல ராசா............ சும்மாதான் சொன்னான் .... அதுக்கு போய் ஏனடா பயந்து சாகிறாய்.
குழந்த பிள்ள தனமா எழுதிட்டு அப்புறம் 50 எழுதிட்டன் 100 எழுதிட்டன் என்டு கத வேற...
//தகவல், கணவன்,பிள்ளைகள்.//
இதுல தம்பி நீர் யார்?
நல்ல நகைச்சுவையா இருக்கு! ரசிக்கும்படி இருந்திருந்தாலும் மரண அறிவித்தல் என்கின்ற தலைப்பு தேவைதானா??
நானும் யாரோ மண்டையை போட்டுடாங்க,வலைப்பதிவர் சந்திப்பு cancel எண்டு பயந்துபோனேன்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Nimalesh கூறியது...
muthal murayaa thanekaaa மரண அறிவித்தல். muthall manithan namba sathis thaa.....lol
அப்புடி இது புது ட்றேன்ட்டு கண்ணா ஓகே கூல்.
vigna கூறியது...
super shathieshan anna
உங்கள் வருகைக்கு நன்றிகள்.
யோ (Yoga) கூறியது...
உங்கள் பதிவு அந்த கால நினைவலைகளை நீட்டி சென்றன. எங்கள் பாடசாலையில் மாணவர் மன்றத்தில் இதே போன்ற ஒன்றை நான் வாசித்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
இது என் பள்ளி பருவத்திலே நான் தெரிந்து கொண்டதுதான். உங்கள் வருகைக்கு நன்றிகள்.
வேந்தன் கூறியது...
அது சரி திருமதி.தேங்காயின் மரண அறிவித்தலுக்கு ஏன் உங்கட படம் போட்டிருக்கு.
உங்களுக்கும் தேங்காய்க்கும் என்ன தொடர்பு!!!!
எல்லாம் ஒரு பரபரப்புக்காகத்தான் என் படம். நான் செத்துப்போஇட்டேனா என்றாவது வந்து பார்க்க மாட்டிங்களா? எனக்கும் தேங்காய்க்கும் உங்களுக்கும் தேங்காய்க்கும் உள்ள தொடர்புதான் நண்பா? இரண்டு பேர் வயிற்றினுள்ளும் இருப்பது அவர்தானே.
R.V.Raj கூறியது...
முடியல. நானும் எதோ உங்களுக்கு தெரிந்த முக்கியமானவரை இழந்ததனால் பதிவில் மரண அறிவித்தல் போடுரிங்கேன்னு யாரென்னு பார்க்கலாம் என்னு வந்தேன். தேங்காயை போட்டாலும் பரவாயில்ல உங்களைப்போட்டிட்டிங்க்களே.! (நான் படத்தைச்சொன்னேன்)
எல்லோரும் ஒரு குறிக்கோளோடு என்னை போடிரதில தான் இருக்கிறிங்க. நடக்கட்டும் நடக்கட்டும். நன்றி ஐயா நன்றி.
பிரபா கூறியது...
இல்ல ராசா............ சும்மாதான் சொன்னான் .... அதுக்கு போய் ஏனடா பயந்து சாகிறாய்
சும்மாவா நானும் பயன்திட்டனா? பூச்சாண்டி மாமாவ பாத்தா பயம் வராமல் என்ன வரும் நானும் சும்மா சொன்னே அண்ணே அடிக்கடி வங்க.
கலை - இராகலை கூறியது...
நல்ல நகைச்சுவையா இருக்கு! ரசிக்கும்படி இருந்திருந்தாலும் மரண அறிவித்தல் என்கின்ற தலைப்பு தேவைதானா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். என்ன செய்றது கொஞ்சம் ஓவர்தான் ஆனால் அப்படிப்போடால் தான் நீங்கள் வாரிங்க. இதுவும் ஓவரா என கேட்காதிங்க.
ஷா \ Shah கூறியது...
நானும் யாரோ மண்டையை போட்டுடாங்க,வலைப்பதிவர் சந்திப்பு cancel எண்டு பயந்துபோனேன்
அடடா உங்கள் கவலை அப்படியோ? அடப்பாவி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
ஆதிரை கூறியது...
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!
ஆதிரை அது யாரப்பா சாந்தி அதுவும் மூன்று தரம் கூப்பிடுகின்றீர்கள். பதிவர் சந்திப்பில் உங்களுக்கும் சாந்திக்குமிடையில் இருக்கும் உறவை சொல்லிடுங்க. உங்கள் பிரார்த்தனைக்கு நன்றிகள்.
குழந்த பிள்ள தனமா எழுதிட்டு அப்புறம் 50 எழுதிட்டன் 100 எழுதிட்டன் என்டு கத வேற...
//தகவல், கணவன்,பிள்ளைகள்.//
இதுல தம்பி நீர் யார்?
தவறுதலாக பெயர் இட்டுச்சென்ற பின்னூட்டம் அழிந்து விட்டது. அண்ணே உங்கள் மண்டைக்குள் என்ன இருக்கின்றது. வாசித்த அத்தனை பேருக்கும் புரிந்தது உங்களுக்கு புரியவில்லை என்னும்போதே நீங்கள் எவ்வளவு படிக்க இருக்கின்றது என தெரியலையா? முதலில் எப்படி படிப்பது என படித்து தெரிந்து விட்டு வந்து பின்னூடமிடுங்கள். repeat
Post a Comment