Thursday, August 20, 2009

சூர்யாவை பாராட்டிய இளைய தளபதி.


தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இருக்கும் இரண்டு படங்களும் தீபாவளிக்கு முட்டி மோத இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்திலே நடிக்கும் இரண்டு கதாநாயகர்களும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பாராட்டி தங்கள் நட்பை வெளிக்காட்டி உள்ளனர்.

தொடர் சறுக்கல்களில் இருந்தும் பல நல்ல மனம் கொண்ட பதிவர்களின் கிண்டல் கேலிகளிலிருந்தும் (எங்களை விட்டிடேனே என யாரும் கோபிக்க கூடாதேல்லா) தன்னை மீட்டெடுத்து தொடர்ந்து ரஜினிக்கு அடுத்து தான் தான் வசூல் சக்கரவர்த்தி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் மற்றும் தொடர் வெற்றிகளை தக்க வைக்க வேண்டுமென போராடும் சூர்யாவின் ஆதவன் படங்கள் தான் மோதப்போகின்றன. களை கட்டப்போகும் தீபாவளிக்கான அறிகுறிகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன.
இந்த நிலையில் நேற்று மாலை சூர்யாவின் ஆதவன் திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இளைய தளபதி விஜய், சூர்யா,விவக்,இயக்குனர் ஷங்கர்,தயாரிப்பாளர் ராமநாராயணன்,கெளதம் மேனன்,சசிக்குஆர் போன்ற பிரபலங்கள் பங்கு கொண்டனர்.

சூர்யாவின் நடிப்பு எப்படியோ அதேபோல விஜயின் நடனத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் பாடல்களை பார்த்து விட்டு மாப்பு....song superடா என மெசேஜ் அனுப்பி இருக்கின்றார் விஜய், என்று பேசிய சூர்யா இங்கே ஆதவன் திரைப்பட பாடல் திரையில் ஓடும் போது அட விஜயும் பார்த்திட்டிருக்கின்றாரே என மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்தது என போட்டு உடைத்த சூர்யா, அவர் வருகைக்கு நன்றிகளை பகிர்ந்து கொண்டார்.

பதிலுக்கு சூர்யாவின் உழைப்பும் திறமையும் அவரின் ஒவ்வொரு படத்திலும் தெரிகின்றது. பிரமாண்டமாக வளரும் சூர்யாவிற்கு ஆதவனும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டுமென விஜயும் வாழ்த்திப்பேசினார். இரண்டுபேருமே ஆரம்பகாலம் முதல் நண்பர்கள் என்பதை தாண்டி தீபாவளிக்கு மோத இருக்கும் முன்னணிக் கதாநாயகர்கள் இருவர் மேடை ஒன்றில் ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொண்டதும். யாருக்கும் தெரியாமல் மெசேஜ் மூலமே விஜய் சூர்யாவை பாராட்டியதும் பாராட்டுக்குரியதே.

இந்த நேரத்தில் இன்னுமொரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. இப்படித்தான் தொடர் தோல்விகளால் சிதைந்து போய் விஜய் இருக்க விக்ரம் கலக்கிக்கொண்டிருந்தார். சாமி வெற்றி விழாவில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டனர். அதன் பின் வந்த திருமலை விஜயை எங்கே கொண்டு சென்றது என உங்களுக்கே தெரியும். இப்போதும் அதே நிலை இங்கே விக்ரமுக்கு பதில் சூர்யா. வேட்டைக்காரனும் அந்த ராசிப்படி வெற்றி பெறுமா?
Share:

8 கருத்துரைகள்:

anbuaran said...

ஆகா ராசிபடித்தான் படம் ஓடனும் நீங்க நல்ல எடுக்க மாட்டீங்க இல்ல எவ்வளவு இடைஞ்சல் பண்றானுங்க பாருங்க மக்க்களே .ரூம் போட்டு யோசிப்பிங்களோ !

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

கல்லூரிக்கால நண்பர்களாச்சே வாழ்த்தட்டும் வாழ்த்தட்டும்!

யோ வொய்ஸ் (யோகா) said...

வாசிச்சிட்டேன் தல...

Sinthu said...

அப்ப சதீஷ் நீர் இப்ப யாருடைய ரசிகர்?

SShathiesh-சதீஷ். said...

anbuaran கூறியது...
ஆகா ராசிபடித்தான் படம் ஓடனும் நீங்க நல்ல எடுக்க மாட்டீங்க இல்ல எவ்வளவு இடைஞ்சல் பண்றானுங்க பாருங்க மக்க்களே .ரூம் போட்டு யோசிப்பிங்களோ

:==))இந்த ரகசியக்த்தை எல்லாம் நண்பா நீங்கள் வெளியே சொல்லலாமா? ரூம் போட்டு யோசிக்கும் பொது நீங்கள் சொன்ன சில யோசனைகளை வெளியிடமுடியவில்லை. எப்புடி????????????

SShathiesh-சதீஷ். said...

R.V.Raj கூறியது...
கல்லூரிக்கால நண்பர்களாச்சே வாழ்த்தட்டும் வாழ்த்தட்டும்

;=))இந்த ஒற்றுமை என்றும் தொடர்ந்தால் நன்மையே.

SShathiesh-சதீஷ். said...

யோ வாய்ஸ் கூறியது...
வாசிச்சிட்டேன் தல..

நன்றிகள் தல.

SShathiesh-சதீஷ். said...

Sinthu கூறியது...
அப்ப சதீஷ் நீர் இப்ப யாருடைய ரசிகர்

நான் ஒரு நடிகனாக் விஜய் ரசிகனே.ஏன் சந்தேகம்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive