உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label ஆதவன். Show all posts
Showing posts with label ஆதவன். Show all posts

Thursday, October 29, 2009

உதயநிதியின் ஆதவன் உதிக்காமல் போக காரணங்கள்.

ஆதவன் திரைப்படம் எல்லோரும் விமர்சனம் என்ற பெயரில் கிழித்து விட்டனர். உண்மையில் பல ஓட்டைகள் இருந்தாலும் சாதாரண சினிமா ரசிகனுக்கு பிடித்த ஒரு பக்கா கமர்சியல் திரைப்படம் தான் இந்த ஆதவன். சூர்யா என்னும் நடிகரிடம் இருந்து இப்படி ஒரு திரைப்படம் வந்ததை தான் பலரால் ஏற்கமுடியாமல் போய் விட்டது. சரி வந்த திரைப்படத்தை பார்த்த எல்லோரும்( நான் உட்பட) ஏதோ பார்க்க கூடாததை பார்த்து விட்டதைப் போல ஒரு அனுபவம் பெற்று விமர்சனம் எழுதியது மறுக்க முடியாத மறக்க முடியாத உண்மை. இப்போ ஒவ்வொரு காரணங்களால் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த சூர்யாவின் ஆதவன் ஏனோ சரியாக உதிக்காமல் ஒரு முகம் காட்டிவிட்டு அஸ்தமித்து விட்டான்.


முதலில் ஆதவனுக்கு பாதகனாக அதிக எதிர்பார்ப்பு. கே.எஸ் ரவிக்குமார் என்னும் நல்ல இயக்குனர் விதவிதமான படங்களால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து தளபதிகள் ஸ்டார்களை ஓரம்கட்டி விட்டு முதல் நிலை நாயகனானாக இருக்கும் சூர்யா குருவி என்னும் அமோக வெற்றி(??????) பெற்ற திரைப்படத்தை தொடர்ந்து தயாரிக்கும் படம் என்பது மட்டுமன்றி தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகி நயன்தாரா நடிப்பில் தொடர் சொத்தப்பல்களை தொடர்ந்து வரும் படம் என்னும் சிறப்புகளே அமைந்து விட்டன.


கே.எஸ்.ரவிக்குமார் ரஜினி,கமல்,அஜித் என பெரிய நடிகர்களோடு வெற்றிக்கூட்டணி கொண்டவர். இவராலும் நிமிர்த்த முடியாமல் போனவர் தளபதி மட்டுமே. இப்போது அவர் அவரிசையில் அவர் நண்பர் சூர்யா. கே.எஸ் .ரவிக்குமார் என்றாலே ஒரு கலகலப்பான படம் கொடுப்பவர் என்னும் பெயர் உண்டு. அவர் படங்களில் நட்சத்திர பட்டாளம் இருக்கும். ஆதவனிலும் அது தொடர்ந்தது. தசாவாதாரம் என்னும் படைப்பில் இருந்து மீளாமலேயே கே.எஸ்.ஆர் ஆதவனில் களம் இறங்கியது தெட்டத் தெளிவாக தெரிகிறது. கதையை விட திரைக்கதையில் கில்லாடியான இயக்குனர் இங்கே தள்ளாடிப்போய்விட்டார். நொண்டியடிக்கும் திரைக்கதையை கொடுத்து தனித்தன்மையை கெடுத்து விட்டார். அதேநேரம் சூர்யாவின் தற்போதைய நிலை என்ன அவரின் பாதை என்ன ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன என தெரியாமல் அவரும் குழம்பி எங்களையும் குழப்பிவிட்டார்.


அடுத்தவர் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் அதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்து குருவி படம் எடுத்தேன் என சொன்னவர் குருவியை வெற்றிப்படம் என்றாலும் குருவி சொதப்பிய சொதப்பல் யாவரும் அறிந்ததே. ஆனால் அந்த படத்தில் நடித்த கதாநாயகன் விஜய்க்கு மாஸ் இருந்தது. இங்கே சூர்யாவோ சிறந்த நடிகர் மாத்திரமே. மாஸ் ஹீரோ செய்ததுக்கே துவைத்தெடுத்தவர்கள் சூர்யா என்னும் நடிகன் செய்வதை ஏற்பார்களா என தெரியாமல் உதயநிதி விளையாடி விடார். அதேநேரம் காசை தண்ணீராக செலவழிக்க ஒரு நல்ல தயாரிப்பாளர் இருக்கின்றார் என குருவியில் நிரூபித்தவர் இவர். எனவே இவரை சரியாக பயன்படுத்தி இருக்கலாம் கே.எஸ்.ஆர். ஆதவனின் சில காட்சி அமைப்புக்கள் குருவியை நினைவு படுத்தாவிட்டால் நீங்கள் எல்லாம் கஜினிகள் தான்.


அடுத்து இளம் கதாநாயகர்களில் எந்த அடைமொழியும் இல்லாமல் தனக்கென ஒரு பாணியில் நடித்து இப்போதுள்ள பலரின் இதயத்தில் வேகமாக இடம்பிடித்து வந்தவர்தான் சூர்யா. ஒவ்வொரு படத்திலும் நல்ல கதை தரமான நடிப்பு. அனைவரையும் கவரும் சூர்யாவின் திசை முடிந்து விட்டதோ என எனக்கு தோன்றுகின்றது. காரணமும் இல்லாமல் இல்லை. ஒரு காலத்தில் இளம் நாயகர்கள் என்றால் விஜய் அஜித் இரண்டுபேரும் தான். எந்த போட்டியும் இல்லாமல் இருவரும் வளர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வந்தனர். ஒரு கட்டத்தில் விஜய் உச்சத்தில் இருந்தால் அஜித் அதல பாதாளத்திலும் அஜித் எழுந்து விட்டால் விஜய் படுத்துக்கொள்வதுமாக இருந்து வந்தது. இடையில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் வந்த விக்ரம் தில்,தூள்,ஜெமினி,சாமி என கலக்கிக்கிண்டிருந்தார். அந்த நேரம் விஜய் அஜித் எங்கே என தேடும் நிலை. அதன் பின் விஜயின் திருமலையோடு எல்லாம் மாறியது.


கடகடவென வெற்றிமேல் வெற்றி குவித்து விஜய் உயர்ந்தார். விக்ரம் அப்பப்போ தான் இருக்கின்றேன் என ஒருசில படம் கொடுத்தார். இந்த இடையில் அந்நியன் வந்தாலும் விஜயின் நம்பர் 1 என்ற இடத்தை விக்ரமால் அசைக்க முடியவில்லை. இதேநேரம் கவிழ்ந்து போய் இருந்த அஜித்தும் தன்னை ஓரளவு தூசு தட்டி வர மீண்டும் ஒரு சில பரப்பரப்பான ஆட்டங்களோடு இந்த மூவரும் அடங்கி விட. சூர்யாவின் ஒளி பரவத்தொடங்கியது. இதற்கு இன்னொரு காரணம் ஜோதிகா என்னும் புகழ் பெற்ற நடிகையை சூர்யா திருமணம் செய்து கொண்டதும் ஒன்றே. காரணம் ஜோதிகாவிற்கு இருந்த பெரிய ரசிகர் கூட்டத்தையும் சூர்யா சேர்த்துக்கொள்ள காரணமாகிவிட்டது. அதேநேரம் இப்போதெல்லாம் வெளிப்படையாக ஜோதிகா புகழ்பாடுவது சூர்யாவிற்கு பழக்கமாகிவிட்டது. இது தனக்கு நல்லதென அவர் நினைக்கின்றாரோ தெரியவில்லை. ஆனால் மனைவியின் பெயரை வைத்து காலத்தை ஓட்டுகின்றார் என்ற பெயரும் சேர்ந்துவிடும்.இப்போது அவரின் ஆட்டமும் முடிந்து இன்னொரு நடிகரின் கையில் இன்னும் சில ஆண்டுகள் போகப்போகும் நேரம் வந்து விட்டதாகவே நான் உணர்கின்றேன்.

காரணங்கள் உதிக்கும்......
Share:

Sunday, October 25, 2009

ஆதவன் என்ன பாதகனா?

ஆதவன் திரைப்படம் எப்படியாவது இம்முறை முதலில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள்ளும் சில நாட்களாக இருந்தது. காரணம் சூர்யாவின் அண்மைய அபார வளர்ச்சி. அதன்படி தீபாவளி அன்று காலை பார்க்கலாம் என திட்டம் தீட்டினேன். அதற்கு முன்னர் முதல் நாள் இரவு ஆதவனை பார்த்த நண்பர்களிடம் ஆதவனை பற்றி விசாரித்ததில் ஆதவன் பாதகனாவிட்டான் என நொந்துகொண்டேரே பலர். இதனால் நானும் மறுநாள் காலை அதுவும் ஒரு நரகாசூரன் அழிந்தநாளில் இன்னொரு நரகாசுரனை பார்க்கவேண்டுமா வேண்டாமே என முடிவெடுத்து தள்ளிப்போட்டேன். காரணம் படம் பார்த்த பதிவர்கள் குருவி, வில்லு திரைப்படங்களை விட ஆதவனை வறுத்தெடுத்தமை என்னை ஏனோ யோசிக்க வைத்தது.


அப்படி இப்படி என்று ஒருவாறு கடந்த வெள்ளிக்கிழமை மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒருதடவை பார்ப்போம் அப்படி என்னதான் இருக்கின்றதென்று என முடிவெடுத்து திரை அரங்கிற்கு போக என்னுடைய நண்பன் ஒருவனையும் அழைத்தேன். நன்றாக தூங்கி எழுந்து நான் திரை அரங்கு சென்று சேர எழுத்தோட்டத்தில் சூர்யாவின் பெயர் வந்து போய் விட்டது. ஏதோ சூர்யாவின் குழந்தை படத்தில் இருந்து அவரின் குழந்தை தியாவின் படம் வரை போட்டு தொடங்குகின்றார்கள் என பலர் சொன்னனர். ஆனால் நான் அதை தவற விட்டு விட்டேன்.

அதற்கு பிறகு சூர்யாவின் அறிமுக பாடல் காட்சி . எனக்கென்னவோ நடனத்தில் சூர்யா ஏற்கனவே தன படங்களில் ஆடிய அதே அசைவுகளை மீள செய்தது போல இருந்தது இருப்பினும் அதையும் ரசிக்கும் படி செய்திருந்தார். தொடர்ந்து கதை ஆரம்பிக்கும் போதே என்னடா இது நம் பதிவர்கள் சொன்னது போல இல்லை பரவாயில்லாமல் தானே இருக்கு என நினைத்தேன். ஆனால் அதுவெல்லாம் வடிவேலு திரையில் வரும் வரை தான். இதில் குறிப்பிடத்தக்க விடயம் திரை அரங்கில் பெரிதாக கூட்டமும் இல்லை சூர்யாவின் அறிமுக காட்சி உட்பட எந்த ஒரு காட்சியிலும் விசில் அடிக்கவோ கைதட்டவோ இல்லை. ஆனால் வடிவேலுவின் அத்தனை காட்சிகளுக்கும் விசில் பறந்தது.

நயன்தாரா குடும்பம் அது ஒரு குடும்பமா அல்லது ஒரு ஏரியாவா என சந்தேகமே வந்தது. இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் இருக்குமா என்பது என் சந்தேகம். முரளி சரியான தேர்வு. அச்சுஅசலாக பொருந்தி இருக்கின்றார். அடுத்து சரோஜாதேவி. பெரிதாக இவர் படத்தை நான் பார்த்ததில்லை. அதனால் சொல்லவும் தெரியவில்லை ஆனால் ஆதவனில் நன்றாக தான் செய்திருக்கின்றார். அவருக்கும் நயனுக்கும் இடையில் நடக்கும் சண்டை போன்ற அந்த தேக்கோ பாடல் எனக்கு வானொலியில் கேட்க பிடிக்கவில்லை. திரையில் ஏனோ பிடித்துப்போனது.

ரமேஷ்கண்ணா ஏன் வந்தார் என தெரியவில்லை. ஒருவேளை இயக்குனர் இப்படி ஒரு லூசுத்தனமான கதையை கொடுத்த உனக்கு லூசாகவே பாத்திரம் தருகின்றேன் என கொடுத்தாரா தெரியவில்லை. அனுகாசனையும் உப்புசப்பாக பாவித்திருக்கின்றார்கள். இவர்களை விட வேறு யாரும் என் நினைவில் வரவில்லை. எல்லோரும் சொன்னது போல நயனின் முகத்தை குளோசப்பில் பார்க்க பயமா இருந்தது. ஆனால் கொஞ்சம் தள்ளி முழுதாக காட்டும் போது எல்லாம்...... நல்லா தான் இருந்தது. ஆனால் என்ன நடிக்க தான் வாய்ப்பில்லை. அதே நேரம் பச்சை பெரிதாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


அடுத்து சூர்யாவா? வடிவேலுவா? ஹீரோ என்ற கேள்விக்கு ஒருமித்த பதில் வடிவேலுதான் என்று. அதற்கு இன்னொரு சான்று அண்மையில் படத்தின் சில காட்சிகளை தூக்கும் போது வடிவேலுவின் எந்த காட்சியிலும் கை வைக்காமல் சூர்யாவின் பல காட்சிகளை கத்தரித்து விட்டது . அதேநேரம் முதல் பாதி முழுவதும் படத்தை தொய்யவிடாமல் கொடுத்திருப்பது வடிவேலுதான். நகைச்சுவையில் எப்போதுன் தான் ஹீரோ தான் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்? ஒவ்வொரு காட்சியிலும் சிரித்து சிரித்து எனக்கு புரைக்கேறியதுதான் மிச்சம். முன் பாதி ஏனோ எனக்கு பிடித்தது. இடைவேளையில் நண்பனிடம் சொன்னேன். எனக்கு படம் பிடித்திருக்கின்றதென.

ஆனால் பின்னாலே இப்படி ஒரு வெடிகுண்டு காத்திருக்கும் என தெரியாமல். இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்து ஓரிரு நிமிடங்களிலேயே அலுப்பு தட்ட ஆரம்பித்து விட்டது ஹீரோ வடிவேலுவை விட துணை நடிகர் சூர்யா அதிகம் திரையில் வந்தார். ஆனால் கதை நகரவே இல்லை. ஏற்கனவே பார்த்த காட்சிகளை மீண்டும் பார்க்கும் அலுப்பு. சாயாஜி சிண்டேயை எல்லோரும் புகழ்ந்தனர். எனக்கோ மனிதரை பார்க்கையில் அழகிய தமிழ் மகனில் அவர் செய்த அதே விளையாட்டை இங்கேயும் காட்டி உள்ளாரோ என தோன்றியது. அந்த டாக்டர் வில்லன் நன்றாக பொருந்தி இருக்கின்றார். ஆனால் நடிக்கவே இல்லை.

நிஜ ஹீரோ.

இரண்டாம் பாதியின் இழுவையில் இனிமை சேர்த்தது மூன்று பாடல்கள். மூன்றும் நல்ல பாடல்கள் ஆனால் அடுத்தடுத்து வந்து எரிச்சலை தந்தன. மூன்றும் முத்தாக இதயத்தை வருடியதை மறுக்கமுயாது. ஆனந்த பாபு இதுவரை நான் எழுதும் வரை நினைவு வரவில்லை. அதேபோல ஒரு பாத்திரம் தான் அவருக்கு படத்திலும். அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி அப்பப்பா என்ன ஒரு உலகத்தரம். அதை விபரிக்க வார்த்தை இல்லை. சண்டைக்காட்சிகள் அப்படியே குருவியில் விஜய் செய்தது. குருவியில் ஆவது விமானத்தில் இருந்து கொண்டே விஜய் கீழே விழுவர். இங்கோ கீழே இருந்த சூர்யா பறக்கும் விமானத்தில் ஏறிவிடுவார். பல இடங்களில் சூர்யா தன முந்தைய படங்களின் நடிப்பை அப்படியே கொடுத்துள்ளார்.

யாரப்பா சொன்னது பத்துவயது சிறுவனைக் சூர்யா நடித்துள்ளார் என்று ஏதோ ஒரு உடலுக்கு சூர்யாவின் முகம் அதுவும் பொருந்தவில்லை என்பது பத்துவயது பிள்ளைக்கே தெரியும். தயவு செய்து ஏமாற்றும் படத்திலும் இப்படியான ஏமாற்றும் காட்சிகளை வைத்தால் உங்களை ரசிகர்கள் ஏமாற்றி விடுவர். ஆனால் இப்படியான ஒரு முயற்ச்சிக்கு தொழில்நுட்ப கலைஞருக்கே பாராட்டுக்கள் சேரும் உங்களுக்கல சூர்யா என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கே.எஸ்.ஆர் மற்று ஹரிஷ் இந்த படத்தில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை நல்ல படங்களை தந்த இயக்குனரையும் பின்னணி இசையிலும் கலக்கிய ஹரிஷ் இருவரையும் இங்கே காணவில்லை. எனவே அவர்களை பற்றி நான் பேசவில்லை.


நடனம், மேனரிசம், நடிப்பு, வசன நடை என எதிலும் புதிய சூர்யா தெரியவில்லை. சூர்யா நீங்கள் விஜய் அஜித் போல ஒரு ஸ்டார் நடிகர் அல்ல. சாதாரண நடிகர். உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது வித்தியாசமான கதை ஓட்டம் உள்ள நடிப்புடன் கூடிய படங்களையே. அதேநேரம் நீங்கள் இதுவரை கொடுத்த ஹிட் எதுவும் சூர்யா என்னும் பெயருக்காக ஓடவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். வடிவேல் என்னும் பெயருக்காக எத்தனையோ படங்கள் ஓடும் நிலையில் இன்னும் உங்கள் பெயருக்காக எந்த படமும் ஓடவில்லை. உங்கள் படத்தின் கதை அந்த காதாபாத்திரமாக நீங்கள் மாறும் திறமை (இதுதான் இப்பொது உலை வைத்ததுள்ளது.) இந்த இரண்டுமே உங்கள் வெற்றியின் காரணம். அதேநேரம் கணிசமான ஜோவின் ரசிகர்களும் இப்போ உங்கள் ரசிகர்களாகி விட்டனர். புது முக இயக்குனர்களோ அல்லது கமர்சியல் படம் தரும் இயக்குனர்களோ உங்களை காப்பாற்ற முடியாது. உங்கள் பலமும் பலவீனமுமான கதாபாத்திரமாக வாழும் உங்கள் வழக்கமான படங்களையே கொடுங்கள். அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றார்கள். சிங்கம் அசிங்கமாகி உங்களை கீழே தள்ளி இன்னொரு ஆறாக்காமல் உடனடியாக நிங்கள் தை இட்டாலே ஒழிய உங்கள் தலை எழுத்தை மாற்ற முடியாமல் போய்விடும்.

இதுவே ஸ்டார் வலியூ உள்ள விஜய் அல்லது அஜித் ஏன் சிலவேளை விஷால் நடித்திருந்தால் கூட மெஹா ஹிட் ஆகி இருக்கும் இந்த திரைப்படம். படம் முடிந்து வெளியே வரும் போது எனக்கு படம் பிடித்திருந்தது. என்னதான் குறைகள் பல இருந்தாலும் ஒரு தடவை பார்க்க கூடிய திரைப்படமே இந்த ஆதவன்.

இவங்க கூட்டே தாங்க முடியல......


இனி இதுவேற இருக்கா.....?
Share:

Thursday, August 20, 2009

சூர்யாவை பாராட்டிய இளைய தளபதி.


தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இருக்கும் இரண்டு படங்களும் தீபாவளிக்கு முட்டி மோத இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்திலே நடிக்கும் இரண்டு கதாநாயகர்களும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பாராட்டி தங்கள் நட்பை வெளிக்காட்டி உள்ளனர்.

தொடர் சறுக்கல்களில் இருந்தும் பல நல்ல மனம் கொண்ட பதிவர்களின் கிண்டல் கேலிகளிலிருந்தும் (எங்களை விட்டிடேனே என யாரும் கோபிக்க கூடாதேல்லா) தன்னை மீட்டெடுத்து தொடர்ந்து ரஜினிக்கு அடுத்து தான் தான் வசூல் சக்கரவர்த்தி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் மற்றும் தொடர் வெற்றிகளை தக்க வைக்க வேண்டுமென போராடும் சூர்யாவின் ஆதவன் படங்கள் தான் மோதப்போகின்றன. களை கட்டப்போகும் தீபாவளிக்கான அறிகுறிகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன.
இந்த நிலையில் நேற்று மாலை சூர்யாவின் ஆதவன் திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இளைய தளபதி விஜய், சூர்யா,விவக்,இயக்குனர் ஷங்கர்,தயாரிப்பாளர் ராமநாராயணன்,கெளதம் மேனன்,சசிக்குஆர் போன்ற பிரபலங்கள் பங்கு கொண்டனர்.

சூர்யாவின் நடிப்பு எப்படியோ அதேபோல விஜயின் நடனத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் பாடல்களை பார்த்து விட்டு மாப்பு....song superடா என மெசேஜ் அனுப்பி இருக்கின்றார் விஜய், என்று பேசிய சூர்யா இங்கே ஆதவன் திரைப்பட பாடல் திரையில் ஓடும் போது அட விஜயும் பார்த்திட்டிருக்கின்றாரே என மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்தது என போட்டு உடைத்த சூர்யா, அவர் வருகைக்கு நன்றிகளை பகிர்ந்து கொண்டார்.

பதிலுக்கு சூர்யாவின் உழைப்பும் திறமையும் அவரின் ஒவ்வொரு படத்திலும் தெரிகின்றது. பிரமாண்டமாக வளரும் சூர்யாவிற்கு ஆதவனும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டுமென விஜயும் வாழ்த்திப்பேசினார். இரண்டுபேருமே ஆரம்பகாலம் முதல் நண்பர்கள் என்பதை தாண்டி தீபாவளிக்கு மோத இருக்கும் முன்னணிக் கதாநாயகர்கள் இருவர் மேடை ஒன்றில் ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொண்டதும். யாருக்கும் தெரியாமல் மெசேஜ் மூலமே விஜய் சூர்யாவை பாராட்டியதும் பாராட்டுக்குரியதே.

இந்த நேரத்தில் இன்னுமொரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. இப்படித்தான் தொடர் தோல்விகளால் சிதைந்து போய் விஜய் இருக்க விக்ரம் கலக்கிக்கொண்டிருந்தார். சாமி வெற்றி விழாவில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டனர். அதன் பின் வந்த திருமலை விஜயை எங்கே கொண்டு சென்றது என உங்களுக்கே தெரியும். இப்போதும் அதே நிலை இங்கே விக்ரமுக்கு பதில் சூர்யா. வேட்டைக்காரனும் அந்த ராசிப்படி வெற்றி பெறுமா?
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox