Friday, April 16, 2010

காவல்காரன் அறிமுகப்பாடல் + எனக்காக மசாலாத்தனம் வேண்டாம்-விஜய்.
எத்தனை தமிழ் படம் வந்தாலும் இந்த மாஸ் ஹீரோக்கள் மாறப்போவதில்லை. சுராவை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் காவல்காரன் திரைப்படத்திலும் தத்துவம் பொங்கும் அறிமுகப்பாடலோடு அறிமுகமாக இருக்கின்றாராம் விஜய். சுராவிலேயே வெற்றிக்கொடி ஏத்து பாடலில் கொஞ்சம் சுயபுராணம் குறைந்திருந்தது. இதன் தொடர்ச்சி இப்போது காவல்காரனில் நன்றாக பரிணமித்திருக்கின்றது.

மண்ணைக் காப்பான் ஒருவன் விண்ணைக்காப்பான் ஒருவன் என்னை உன்னை காக்கும் அவனே அவனே இறைவன்...... என்று ஆரம்பிக்கும் பாடலே விஜயின் அறிமுகப்பாடலாகின்றது. தன்னை பற்றி பாடாமல் இறைவனைப்பற்றியும் தன் கதாபாத்திரம் பற்றியும் விஜயின் பாடல்கள் வர ஆரம்பித்திருப்பது நல்ல மாற்றமாக தென்படுகின்றது. அண்மையில் இந்தப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது. விஜயுடன் பல நடனக்கலைஞர்களும் ஆட அசினும் படப்பிடிப்பில் இருந்ததாக சொல்லப்படுகின்றது.

இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் படி இருக்கின்றது விஜயின் அண்மைய அறிவித்தல் ஒன்று. 3 இடியட்ஸ் திரைப்படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகி இருக்கும் நிலையில் அவருடன் ஜீவா நடிப்பதும் ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தவர் உதயநிதியா அல்லது வேறு யாருமா விரைவில் தெரிந்து விடும். இந்த நிலையில் முதலில் இயக்குனர்களை விஜயே தெரிவு செய்ய முற்பட்டதாக செய்திகள் வெளியாகின. தேடிக்களைத்து விட்டாரோ என்னவோ. இப்போது நீங்களே இயக்குனரை சொல்லுங்கள் என ஜெமினி நிறுவனம்(தயாரிப்பாளர்கள்) சொல்லியும் வேண்டாம் நீங்களே தெரிவு செய்யுங்கள் என்றுவிட்டாராம் .

முக்கியமான ஒருவிடயம் இந்த படத்தில் எனக்காக எந்த மசாலாத்தனமான வேலையும் செய்யவேண்டாம். என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். குருவி, வில்லு நேரம் விஜயை பார்த்தால் ஏனோ தூங்கு மூஞ்சி போல இருந்தது இப்போது சுறா ஆடியோ ரிலீசில் கொஞ்சம் தெளிவு தெரிகின்றது. திருந்திவிட்டார் போல தெரிகின்றது. வசீகரா சச்சின் போன்ற இயல்பான நடிப்பில் வரும் படங்கள் விஜயிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கலாம். 3 இடியட்சை விஜய் தன மசாலத்தனத்தால் நாசமாக்கி விடுவார் என்றவர்கள் வாயை இப்போது அடைத்திருக்கின்றார். மிகுதி எப்போதோ?
Share:

32 கருத்துரைகள்:

Bala said...

விஜய் முதலில் தன்னை எம் ஜி ஆர், ரஜினி என்று நினைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் நடித்த கால கட்டம் வேறு. அதே போல ரஜினி தன் ரசிகனுக்கு அறிவுரை சொல்லும் விதமாக பாடல் அமைக்க ஆரம்பித்தது தன்னுடைய 125 படங்களுக்கு அப்புறம்தான். விஜய்க்கு பெரிய வெற்றி படங்கள் என்று நான் கருதுவது குஷி மற்றும் கில்லி. இதில் எந்த தத்துவ பாடல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

//திருந்திவிட்டார் போல தெரிகின்றது.

சுறா பாடல்கள் கேட்ட பிறகும் திருந்திவிட்டார் என்று சொல்வது நகைப்புக்குரியது.


//வசீகரா சச்சின் போன்ற இயல்பான நடிப்பில் வரும் படங்கள் விஜயிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கலாம்.

இந்த படங்களை இயல்பான நடிப்பு என்று சொல்ல இயலாது. குறும்பு என்ற பெயரில் லூசு தனமான செயல்கள் செய்வது இயல்பான நடிப்பு ஆகி விடாது. துள்ளாத மனமும் துள்ளும், பிரண்ட்ஸ் ஆகிய படங்களை வேண்டுமானால் சொல்லலாம்.

//3 இடியட்சை விஜய் தன மசாலத்தனத்தால் நாசமாக்கி விடுவார் என்றவர்கள் வாயை இப்போது அடைத்திருக்கின்றார்.

சொன்னவர்கள் சும்மா சொல்ல வில்லை. அவர் படங்களை பார்த்த பாதிப்பிலேயே அப்படி சொல்லி இருக்கிறார்கள். ஏனென்றால் சமீப காலமாக விஜய் படங்களில் ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஒரு காட்சியை வெட்டி ஓட்டினால் ஒரு புது விஜய் படம் வந்து விடும் என்ற நிலையில் தான் அவரின் சமீபத்திய படங்கள் இருந்துள்ளன என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

SShathiesh-சதீஷ். said...

@Bala
எம்.ஜி.ஆர் ரஜினி கால கட்டம் என்பது வேறு என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன். அன்று அவர்களை போல செய்ய இருந்தவர்கள் குறைவு இன்று முதல் படத்திலேயே ஓவர் பில்ட் அப்புடன் அறிமுகமாபவர்கள் பலர். இதில் இன்னொன்று சொல்கின்றேன். ரஜினி பல படங்களின் பின்னர்தான் பரப்பரப்பான உச்ச நட்சத்திரம் ஆனார் அதற்க்கு முன் நடித்த படங்களில் ரஜினியின் அபார நடிப்பு வெளிப்பட்டது. ரஜினி என்ற பெயருக்காகவும் அவருக்காகவும் படம் செய்து வெற்றி பெற நீண்ட காலம் எடுத்தது உண்மை. ஆனால் அதை விஜய் ஐம்பது படங்களுக்குள் குறைந்த ஆண்டில் அடைந்தது அவர் வெற்றிதானே. இதை ஏற்கின்றீர்களா?


சுராவில் வெற்றிக்கொடி ஏத்து பாடல் கொஞ்சம் அடக்கி வாசித்தது போல எனக்குத் தோன்றுகின்றது.

வசீகரா, சச்சின் படங்கள் பலருக்கு பிடித்தவை விஜயின் இன்னொரு நடிப்பை கொண்டுவந்தவை இதை மறுக்க முடியாது. நகைச்சுவையாக் வெகுளித்தனமாக நடிப்பது ஹீரோக்களுக்கு கடினம். எல்லோராலும் முடியாது.

விஜயின் அண்மைய படங்கள் நீங்கள் சொன்னது போல தான் இருந்தன. ஆனால் அவர் மாறும் பொது அதை பாராட்டுவதுதானே திட்டும் பொது நமக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதற்க்கு சமமாகும்.

பாலா said...

//ரஜினி பல படங்களின் பின்னர்தான் பரப்பரப்பான உச்ச நட்சத்திரம் ஆனார் அதற்க்கு முன் நடித்த படங்களில் ரஜினியின் அபார நடிப்பு வெளிப்பட்டது. ரஜினி என்ற பெயருக்காகவும் அவருக்காகவும் படம் செய்து வெற்றி பெற நீண்ட காலம் எடுத்தது உண்மை.

இதை என்னால் ஏற்க முடியாது. அவர் அப்படி நடிக்க விரும்பவில்லை. ஆனால் விஜய் அப்படி அல்ல. அப்படி நடிப்பதற்காகவே உருவாக்க பட்டவர். உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லி கொள்ள விரும்புகிறேன். நான் அஜித் ரசிகன். ஆனால் ஒரு போதும் விஜயை வெறுத்தது கிடையாது. 2000 ஆம் ஆண்டுக்கு முன்னால் வந்த பெரும்பாலான விஜய் படங்கள் எனக்கு பிடிக்கும். எப்போது அவர் திட்டமிட்டு உருவாக்க பட்டாரோ அன்றே அவர் மீது இருந்த ஈடுபாடு போய் விட்டது.

//விஜய் ஐம்பது படங்களுக்குள் குறைந்த ஆண்டில் அடைந்தது அவர் வெற்றிதானே. இதை ஏற்கின்றீர்களா?

வசூல் என்றால் என்ன, வெற்றி என்றால் என்ன என்று ரஜினியின் career பற்றி படித்து பாருங்கள் புரியும். இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் இத்தனை சில்வர் ஜூப்ளி கொடுத்ததில்லை.
இருந்தும் அவர் அப்போது தன் சம காலத்து நடிகர்களை தாக்கி தன் படங்களில் காட்சிகள் இடம்பெறுவதை விரும்பவில்லை. அதனால் தான் ரசிகன் அல்லாதவர் கூட ரஜினி மீது மரியாதை வைத்துள்ளனர்.

//அவர் மாறும் பொது அதை பாராட்டுவதுதானே திட்டும் பொது நமக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதற்க்கு சமமாகும்.


இப்போதும் அவர் தன் பாணியை மாற்றினால் வரவேற்ப்பு கண்டிப்பாக இருக்கும். ஆனால் படம் வருவதற்கு முன்பே அவரை தூக்கி கொண்டாடுவதற்கு நான் அவரின் ரசிகன் இல்லையே?

நேரமிருந்தால் படித்து பாருங்கள்
http://balapakkangal.blogspot.com/2010/02/king-of-chennai.html

"ராஜா" said...

//ஆனால் அதை விஜய் ஐம்பது படங்களுக்குள் குறைந்த ஆண்டில் அடைந்தது அவர் வெற்றிதானே. இதை ஏற்கின்றீர்களா?

எப்படி உங்களால இப்படி எல்லாம் கூசாம சொல்ல முடியுது... அப்படி என்றால் விஷால்சண்டைகோழி வெற்றி அடைந்ததால் இரெண்டே படத்தில் பெரிய ஹீரோவாகி விட்டார் என்று அர்த்தமா ... வெற்றி என்றால் என்ன அன்பதை ரஜினியின் வெற்றி படங்களின் லிஸ்ட்டை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்... தொடர்ந்து அம்பது படங்களில் நாற்பத்தைந்து படங்களை சில்வர் ஜூப்ளியாக கொடுத்தவர்.... அவரே தன்னுடைய படங்களில் தன்னையும் தன் ரசிகனையும் பற்றி பெருமையாக எனக்கு தெரிந்து அன்னாமலையில்தான் பாடலாக வைத்திருப்பார் அது அவரின் நூற்றி முப்பதவதுக்கு படங்களுக்கு பின்னால் வந்த படம்... அதனால்தான் ரஜினியை அனைவரும் ஏற்று கொண்டு விட்டனர்.... அவரை போய் தன்னுடைய அம்பதாவது படத்தில் நடித்து கொண்டு இருக்கும் அதில் வெறும் பத்தே பத்து படங்கள் மட்டுமே ஹிட் கொடுத்த ஒரு நடிகருடன் ஒப்பிடுவது எந்த வகையில் சரி... அவரை மக்கள் வெறுப்பதற்கு மிக பெரிய காரணம் இதை போன்ற ஓவர் பில்ட் அப்புகள்தான்... உங்கள் பதிவை படிக்கும் பொழுது நான் விழுந்து விழுந்து சிரித்தேன்... தயவு செய்து சிறுபிள்ளைதனமான கருத்துகளை உங்கள் வலை பதிவில் எழுதுவதை நிறுத்துங்கள்...

//நகைச்சுவையாக் வெகுளித்தனமாக நடிப்பது ஹீரோக்களுக்கு கடினம்

எனது அதெல்லாம் வெகுளித்தனமான நடிப்பா.. எங்க ஊர்ல அந்த மாதிரி இருக்குற பசங்கள திமிர் பிடிச்சவன்னு சொல்லுவாங்க.. நீங்க பழைய கார்த்திக் படங்கள் எல்லாம் பார்த்தது இல்லையா?(மௌன ராகம், வருஷம் 16) போய் அத பாருங்க பாசு.. அதுல அவர் நடிச்சிருக்கிறது பேருதான் வெகுளித்தனமான நகைசுவையான நடிப்பு ...

ARV Loshan said...

முதலில் யாழ் தேவி நட்சத்திர வாழ்த்துக்கள்..

பாலாவின் அநேக கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன்.. ஆனால் விஜய் ஒப்பீட்டளவில் குறைந்த படங்களில் நட்சத்திர நாயக அந்தஸ்துக்கு முன்னேறியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.அதற்குப் பிறகு தான் பில்ட் அப் கொம்பு முளைத்தது..

சதீஷ் சுராவில் நீங்கள் தீம் பாடல் (தமிழா வீரத் தமிழா), வங்கக் கடல், நான் நடந்தால் சரவெடி பாட்டெல்லாம் கேட்கவில்லையா?


தன்னை பற்றி பாடாமல் இறைவனைப்பற்றியும் தன் கதாபாத்திரம் பற்றியும் விஜயின் பாடல்கள் வர ஆரம்பித்திருப்பது நல்ல மாற்றமாக தென்படுகின்றது//

அப்படியா?

3 இடியட்சை விஜய் தன மசாலத்தனத்தால் நாசமாக்கி விடுவார் என்றவர்கள் வாயை இப்போது அடைத்திருக்கின்றார். மிகுதி எப்போதோ?//

படம் வந்த பிறகு தான் தெரியும்.. யார் இடியட்ஸ் என்று.. ;)

KANA VARO said...

//அதில் வெறும் பத்தே பத்து படங்கள் மட்டுமே ஹிட் கொடுத்த ஒரு நடிகருடன் ஒப்பிடுவது எந்த வகையில் சரி..//

விஜயை ரஜினியின் வெற்றிகளுடன் யாரும் ஒப்பிட மாட்டார்கள். அன்றைய நடிகர்களின் தொகைக்கும் இன்றைய நடிகர்களின் தொகைக்கும் பாரிய வித்தியாசம் இருக்கின்றது. அன்றைய வெற்றி அன்று ஓகே , இன்றைய விஜய் வெற்றி சக போட்டி நடிகர்களுடம் ஒப்பிடுகையில் ஓகே ஆனால் பெரிய புள்ளி விபரம் தருவதாக நினைத்து இப்படி எண்ணிக்கையில் கோட்டை விட்டு விட்டீர்களே!

@ LOSHAN கூறியது...
முதலில் யாழ் தேவி நட்சத்திர வாழ்த்துக்கள்..

விஜய் ஒப்பீட்டளவில் குறைந்த படங்களில் நட்சத்திர நாயக அந்தஸ்துக்கு முன்னேறியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.//

வழிமொழிகின்றேன்.

SShathiesh-சதீஷ். said...

@பாலா

//இதை என்னால் ஏற்க முடியாது. அவர் அப்படி நடிக்க விரும்பவில்லை. ஆனால் விஜய் அப்படி அல்ல. அப்படி நடிப்பதற்காகவே உருவாக்க பட்டவர். உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லி கொள்ள விரும்புகிறேன். நான் அஜித் ரசிகன். ஆனால் ஒரு போதும் விஜயை வெறுத்தது கிடையாது. 2000 ஆம் ஆண்டுக்கு முன்னால் வந்த பெரும்பாலான விஜய் படங்கள் எனக்கு பிடிக்கும். எப்போது அவர் திட்டமிட்டு உருவாக்க பட்டாரோ அன்றே அவர் மீது இருந்த ஈடுபாடு போய் விட்டது.//

ரஜினி மாசாக நடிக்கவிருப்பாவிடாலும் அதற்குள் அவர் கட்டுப்பட்டு விடார். இனி ஒன்றும் செய்யமுடியாது. அதே நிலைதான் இன்று விஜய்க்கும். ஆனால் ரஜினி கொஞ்சம் நடிக்கும் திரைப்படங்களையும் கொடுக்கின்றார் விஜய் கொடுக்கவில்லை (இப்போது) என்று வேண்டுமானால் சொல்லலாம். திட்டமிட்டு உருவாக்கப்பட்டார் என்பதால் பிடிக்கவில்லை என்பது ஏற்கமுடியாது.....ன்று சினிமாவில் நிறைய வாரிசுகள் தான் ஆனால் தங்களிடம் திறமை இல்லாவிட்டால் ஒரு சிம்புவோ ஜெயம் ரவியோ சூர்யாவோ இல்லை. சிபிராஜ், ரவிக்ரிஷ்ணா, போன்றவர்களும் திட்டமிட்டுதான் வந்தார்கள் இன்று அவர்கள் நிலை எங்கே. நான் அனேகமாக காண்பது விஜய் என்று வந்தவுடன் அப்பர் தூக்கி விட்டார் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டார் என்று இது கையாலாகாத் தனம். திட்டமிட்டாவது கொண்டுவந்தார்களே ஏன் மற்றவர்களால் முடியவில்லை.

////விஜய் ஐம்பது படங்களுக்குள் குறைந்த ஆண்டில் அடைந்தது அவர் வெற்றிதானே. இதை ஏற்கின்றீர்களா?

வசூல் என்றால் என்ன, வெற்றி என்றால் என்ன என்று ரஜினியின் career பற்றி படித்து பாருங்கள் புரியும். இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் இத்தனை சில்வர் ஜூப்ளி கொடுத்ததில்லை.
இருந்தும் அவர் அப்போது தன் சம காலத்து நடிகர்களை தாக்கி தன் படங்களில் காட்சிகள் இடம்பெறுவதை விரும்பவில்லை. அதனால் தான் ரசிகன் அல்லாதவர் கூட ரஜினி மீது மரியாதை வைத்துள்ளனர்//

நீங்கள் சொல்வது போலோ உ குதர்கத்துக்கு தான் கூறுகின்றேன். அந்தக்காலத்தில் ரஜினியை விட்டால் வேறு நடிகர்களே இருக்கவில்லையா? மோகன் படங்கள் மறந்து போய்விட்டனவா? ஒவ்வொரு வெள்ளி வெளியானாலும் அவை வெள்ளி விழாப்படங்கள். ரஜினிக்கு பெரிய வசூல் வெற்றி என்பன கிடைத்தன. ஆனால் நீங்கள் சொல்வது போல் ரஜினி காலம் வேறு விஜய் காலம் வேறு. எம்.ஜி.ஆர் காலத்துடன் ரஜினியை ஒப்பிட முடியுமா? சமகால நடிகர்களை தாக்கவில்லையா....விக்ரம் என்ற படம் கமல் நடித்தது அந்த படம் வெளிவந்த நேரம் விக்ரம் என்ற பெயரில் தன பட வில்லனை வைத்து ரஜினி துவைத்தது தெரியாதா? அதையே கமல் ரஜினி போன்ற ஒருவரை தன் வில்லனாக்கி திருப்பிக்கொடுத்தார். இது அவர்களின் ஆரம்பக் கட்டத்தில். விஜய் அஜித்தும் இதை தன் செய்தனர். இப்போது கொஞ்சம் நெருங்கியுள்ளனர் காலப்போக்கில் ரஜினி-கமலை விட இவர்கள் இருவரும் நட்பாக இருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியம் உங்களை என்னைப்போன்ற ரசிகனை உசுப்பி விட்டு படங்களை ஓடவைக்கவே இந்த சகநடிகரை தாக்கும் வசனங்கள் இது இன்றல்ல எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே உண்டு. ரஜினி என்ற மனிதருக்கே எல்லோரும் ரசிகர்கள் என்பதை மறக்காதீர்கள். நீங்கள் மட்டுமா உண்மை சொல்வீர்கள். நானும் பள்ளிக்காலத்தில் கொஞ்சக்காலம் அஜித் ரசிகன் தான். அஜித்தின் சில படங்களை பார்த்து வியந்தவன் தான். அனால் இப்போது அஜித் என்னும் நடிகனை விட அஜித் என்னும் மனிதன் எனக்கு பிடித்துள்ளார். இப்படி சக நடிகரை புகழும் ரசிகர்கள் இருப்பதும் விஜய்க்கே மறக்காதீர்கள்.

SShathiesh-சதீஷ். said...

@"ராஜா"

//எப்படி உங்களால இப்படி எல்லாம் கூசாம சொல்ல முடியுது... அப்படி என்றால் விஷால்சண்டைகோழி வெற்றி அடைந்ததால் இரெண்டே படத்தில் பெரிய ஹீரோவாகி விட்டார் என்று அர்த்தமா ... வெற்றி என்றால் என்ன அன்பதை ரஜினியின் வெற்றி படங்களின் லிஸ்ட்டை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்... தொடர்ந்து அம்பது படங்களில் நாற்பத்தைந்து படங்களை சில்வர் ஜூப்ளியாக கொடுத்தவர்.... அவரே தன்னுடைய படங்களில் தன்னையும் தன் ரசிகனையும் பற்றி பெருமையாக எனக்கு தெரிந்து அன்னாமலையில்தான் பாடலாக வைத்திருப்பார் அது அவரின் நூற்றி முப்பதவதுக்கு படங்களுக்கு பின்னால் வந்த படம்... அதனால்தான் ரஜினியை அனைவரும் ஏற்று கொண்டு விட்டனர்.... அவரை போய் தன்னுடைய அம்பதாவது படத்தில் நடித்து கொண்டு இருக்கும் அதில் வெறும் பத்தே பத்து படங்கள் மட்டுமே ஹிட் கொடுத்த ஒரு நடிகருடன் ஒப்பிடுவது எந்த வகையில் சரி... அவரை மக்கள் வெறுப்பதற்கு மிக பெரிய காரணம் இதை போன்ற ஓவர் பில்ட் அப்புகள்தான்... உங்கள் பதிவை படிக்கும் பொழுது நான் விழுந்து விழுந்து சிரித்தேன்... தயவு செய்து சிறுபிள்ளைதனமான கருத்துகளை உங்கள் வலை பதிவில் எழுதுவதை நிறுத்துங்கள்.//

அவர் நூற்றி ஐம்பதில் சாதித்ததை இவர் வெறும் ஐம்பதில் பெற்றுவிட்டார் என்பதே உங்களில் பலரின் பிரச்சனை. ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர் பட்டாளம். வசூல் வெற்றி என அடுத்த தலைமுறையில் விஜய் தான் முதலாவது. எவருக்கும் தன்னை போல தன் வழியில் தன் காலத்தில் இன்னொருவர் வருவது பிடிக்காது அதனால் தான் பொங்குகின்றீர்களோ. மிகுதிக்கு பதிலை அகம் சொல்லி இருக்கின்றார்.

SShathiesh-சதீஷ். said...

@LOSHAN

வாழ்த்துக்கு நன்றிகள் அண்ணா.

//ஆனால் விஜய் ஒப்பீட்டளவில் குறைந்த படங்களில் நட்சத்திர நாயக அந்தஸ்துக்கு முன்னேறியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.//

இதை பலர் ஏற்றுக்கொள்ள முன்வருகின்றார்கள் இல்லையே.

//சதீஷ் சுராவில் நீங்கள் தீம் பாடல் (தமிழா வீரத் தமிழா), வங்கக் கடல், நான் நடந்தால் சரவெடி பாட்டெல்லாம் கேட்கவில்லையா?


தன்னை பற்றி பாடாமல் இறைவனைப்பற்றியும் தன் கதாபாத்திரம் பற்றியும் விஜயின் பாடல்கள் வர ஆரம்பித்திருப்பது நல்ல மாற்றமாக தென்படுகின்றது////

நான் குறிப்பிட்டது விஜயின் அறிமுகப்பாடலை. இதையும் தவிர்ஹ்தல் இன்னும் ரசிகர்கள் ரசிப்பார்கள் தான் என்ன செய்வது?

3 இடியட்சை விஜய் தன மசாலத்தனத்தால் நாசமாக்கி விடுவார் என்றவர்கள் வாயை இப்போது அடைத்திருக்கின்றார். மிகுதி எப்போதோ?//

படம் வந்த பிறகு தான் தெரியும்.. யார் இடியட்ஸ் என்று.. ;)

ஹி ஹி ஹி இப்போதைக்கு நானில்லை.

SShathiesh-சதீஷ். said...

@AKAM

நீங்கள் சொல்லியாவது கொஞ்சம் கணக்கை திருப்பி பார்க்கின்றார்களா என பார்ப்போம். வாழ்த்துக்கு நன்றி.

Bala said...

நான் சொன்னதை முதலில் தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டு விட்டீர்கள். விஜய் உருவாக்கப்பட்டார் என்று சொன்னது அவரை சிம்பு, ஜெயம் ரவி போல சினிமாவுக்காக உருவாக்கப்பட்டதை நான் சொல்லவில்லை. ஆதி படம் வெளி வந்த பொது திரு எஸ் ஏ சி அவர்களின் பின் புலத்தால் சென்னையில் பல இடங்களில் விஜய் கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. இதற்கு முன் ரஜினிக்கு மட்டுமே அப்படி செய்யப்பட்டது. இது விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஒரு மாயையை உருவாக்கும் முயற்சிதானே. அது போல இவன் பார்த்த சின்ன ரஜினி என்று பாடல்களில் வார்த்தை இடம் பெற்றது. பெரும்பாலும் விஜய்க்கு கதை சொல்வதற்கு முன் திரு எஸ்ஏசி அவர்களுக்கு சொல்ல வேண்டும்.. அதே போல் திரு எஸ் ஏ சி அவர்களின் ஆளுங்கட்சி அபிமானம், சன்டிவியில் விஜய் படங்கள் விஷேசமான முறையில் ப்ரோமோ செய்ய உதவியாக இருந்தது. மற்ற படங்கள் இருட்டடிப்பு செய்ய பட்டன. இவ்வளவு ஏன் பிரண்ட்ஸ் படம் வந்தபோது திரு எஸ் ஏ சி தன் மகனை இருட்டடிப்பு செய்கிறார் என்று சிவகுமார் வருத்தப்பட்டதாக கூட செய்திகள் வந்தன. .

//விஜய் என்று வந்தவுடன் அப்பர் தூக்கி விட்டார் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டார் என்று இது கையாலாகாத் தனம். திட்டமிட்டாவது கொண்டுவந்தார்களே ஏன் மற்றவர்களால் முடியவில்லை.

விஜய்க்கு திறமை இல்லை என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. நீங்கள் என் பதிவை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மோகன் வெள்ளி விழா நாயகன் தான்.ஒருவேளை இன்று வரை அவர் நடித்திருந்தால் அவர்தான் அதிகமாக வெள்ளிவிழா படங்களை கொடுத்திருப்பார். ஏன் முடியவில்லை? ஒரே மாதிரியான படங்கள். ஸ்டீரியோ டைப் கதாபாத்திரங்கள். இந்த நிலை விஜய்க்கும் வரக்கூடாது என்றால் அவர் பாணியை மாற்றியே ஆக வேண்டும். மோகன் பட பாடல்கள் ஏதாவது கேட்டல் கண்டிப்பாக அது எந்த படம் என்ற குழப்பம் வரும். இப்போது விஜய் படத்திலும் அந்த குழப்பம் வர தொடங்கி உள்ளது. ஏனென்றால் எல்லா படத்திலும் ஒரே மாதிரியான பாடல்கள்.

நான் அஜித் ரசிகன் என்று சொன்னது அஜித் ரசிகர்கள் பெருந்தன்மை ஆனவர்கள் என்று காட்டுவதற்கு அல்ல. பிற நடிகர்களை புகழும் ரசிகர்கள் இருப்பது விஜய்க்கு மட்டுமே என்று நீங்கள் நினைக்க கூடாது என்பதற்க்காகத்தான். அதனால்தான் என் பதிவின் இணைப்பை உங்களுக்கு அளித்தேன். அனால் அதை நீங்கள் சொல்லி விட்டீர்கள். விஜய் ரசிகர்கள் எல்லோரும் அப்படியா அல்லது ஒரு சிலர் மட்டும் உங்களைப்போல பெருந்த்தன்மை ஆனவர்களா என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் நீங்கள் பாலோயராக இருக்கும் கில்லிகள் வலைப்பதிவை படித்தேன். அதில் விஜயை பற்றி பதிவுகள் இருப்பதை விட அஜித்தை பற்றிதான் அதிகமாக பதிவுகள் உள்ளன. அவ்வளவு பெருந்தன்மை.

தர்ஷன் said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்

மூன்று மடையர்கள் வந்ததும் விஜய் மாறி விட்டாரா இல்லையா எனத் தீர்மானிக்கலாம்

ரஜினியை விஞ்சி விட்டதாக விஜய்த்தான் நினைக்கிறார் என நினைத்துக் கொண்டிருதேன் அவரது ரசிகர்களும் அப்படித்தானா?

Bala said...

//அவர் நூற்றி ஐம்பதில் சாதித்ததை இவர் வெறும் ஐம்பதில் பெற்றுவிட்டார் என்பதே உங்களில் பலரின் பிரச்சனை


என்ன இப்படி கூறி விட்டீர்கள். ரஜினி சூப்பர் ஸ்டார் என்று முதலில் அழைக்க பட்டது பைரவி படத்தில். அது அவருக்கு 29 ஆவது படம்தான். அதே போல அவரின் 54 ஆவது படம் பில்லா. இது வெளி வந்த பொது தொட முடியாத உயரத்தில் இருந்தார். நீங்கள் சொல்வது போல பார்த்தால் என்னவோ அவர் படையப்பா படத்தில் தான் சூப்பர் ஸ்டார் ஆனார் என்று சொல்வது போல இருக்கிறது. முதலில் அவர் நடித்த சில படங்களை கணக்கில் எடுத்து கொள்ளவே கூடாது. ஏனென்றால் அவர் சிறிய வேடங்களில்தான் முதலில் நடித்தார். ஏனென்றால் அவருக்கென்று முகவரி எதுவும் கிடையாது. தன் பாணி வொர்கவுட் ஆகி வெற்றி பெற்று வரும் நேரத்தில் எந்த நடிகரும் அதனை தொடரவே விரும்புவர். இதுதான் மோகன் செய்தது. ஆனால் ரஜினி தன் பாணியை மாற்றி ஆறிலிருந்து அறுபதுவரை என்ற படம் நடித்தார்.

// தன் காலத்தில் இன்னொருவர் வருவது பிடிக்காது

இது யாரை பார்த்து சொல்கிறீர்கள் என்று தெரியாது. ஆனால் ரஜினி இப்படி நினைக்கவில்லை. ஏனென்றால் ரஜினியிடம் ஏன் படங்களுக்கு நடுவே இவ்வளவு இடைவெளி என்று கேட்டதற்கு இளம் நடிகர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறினார். ஓவ்வொரு வருடமும் ஒன்று அல்லது இரண்டு படங்கள் சின்சியராக யாரும் முன்னேறகூடாது என்று நடிக்க தொடங்கினால் கண்டிப்பாக மற்ற நடிகர்களின் தொண்ணூறு சதவீத படங்கள் வசூல் ரீதியாக ஊத்திக்கொள்ளும். இதனால்தான் பண்டிகை தினங்களில் படம் வெளியிடுவதை கூட நிறுத்தி விட்டார்.

SShathiesh-சதீஷ். said...

@Bala

நான் சொன்னதை முதலில் தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டு விட்டீர்கள். விஜய் உருவாக்கப்பட்டார் என்று சொன்னது அவரை சிம்பு, ஜெயம் ரவி போல சினிமாவுக்காக உருவாக்கப்பட்டதை நான் சொல்லவில்லை. ஆதி படம் வெளி வந்த பொது திரு எஸ் ஏ சி அவர்களின் பின் புலத்தால் சென்னையில் பல இடங்களில் விஜய் கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. இதற்கு முன் ரஜினிக்கு மட்டுமே அப்படி செய்யப்பட்டது. இது விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஒரு மாயையை உருவாக்கும் முயற்சிதானே//

அப்போ மற்ற நடிகர்களுக்கு செய்ததில்லை என்கிறீர்களா நடிகைகளுக்கே இப்போது செய்கின்றார்கள் ஆனால் நீங்கள் இப்படி சொல்கின்றீர்கள். அடுத்த சுப்பர் ஸ்டார் என்று சொல்வதை விஜய் ரசிகனாக இருந்தும் நான் ஏற்கமாட்டேன். காரணம் மக்கள் தலைவர் என்றால் எம்.ஜி.ஆர் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி தான். இதில் எப்படி ரஜினியுடன் எம்.ஜி.ஆரை ஒப்பிட முடியாதோ அதேபோல விஜயையும் ஒப்பிட முடியாது அந்தத்தந்த தலைமுறையில் நடிகர்கள் என்பதை மீறி மாசின் மூலம் நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் தான் இவர்கள். அந்த வகையில் ரஜினிக்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் முதன்மை நட்சத்திரம்(நடிகர் அல்ல) விஜய் தான். இந்த உண்மையை ஏற்கத்தான் வேண்டும்.

// அதே போல் திரு எஸ் ஏ சி அவர்களின் ஆளுங்கட்சி அபிமானம், சன்டிவியில் விஜய் படங்கள் விஷேசமான முறையில் ப்ரோமோ செய்ய உதவியாக இருந்தது. மற்ற படங்கள் இருட்டடிப்பு செய்ய பட்டன//

ஆதரவாய் இருந்தது உண்மை அதேநேரம் மற்ற படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

//மோகன் வெள்ளி விழா நாயகன் தான்.ஒருவேளை இன்று வரை அவர் நடித்திருந்தால் அவர்தான் அதிகமாக வெள்ளிவிழா படங்களை கொடுத்திருப்பார். ஏன் முடியவில்லை? ஒரே மாதிரியான படங்கள். ஸ்டீரியோ டைப் கதாபாத்திரங்கள். இந்த நிலை விஜய்க்கும் வரக்கூடாது என்றால் அவர் பாணியை மாற்றியே ஆக வேண்டும். மோகன் பட பாடல்கள் ஏதாவது கேட்டல் கண்டிப்பாக அது எந்த படம் என்ற குழப்பம் வரும். இப்போது விஜய் படத்திலும் அந்த குழப்பம் வர தொடங்கி உள்ளது. ஏனென்றால் எல்லா படத்திலும் ஒரே மாதிரியான பாடல்கள். //

மோகனை வளர விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று அவரை இல்லாமல் செய்ததே ரஜினியும் கமழும் என்று கூட உறுதிப்படுத்தாத தகவல்கள் உள்ளன.

// ஏனென்றால் நீங்கள் பாலோயராக இருக்கும் கில்லிகள் வலைப்பதிவை படித்தேன். அதில் விஜயை பற்றி பதிவுகள் இருப்பதை விட அஜித்தை பற்றிதான் அதிகமாக பதிவுகள் உள்ளன. அவ்வளவு பெருந்தன்மை//

அந்த தளத்தில் வருவதை நான் ரசிக்கின்றேன் ஆனால் அது நான் எழுதம் தளம் அல்ல. எனவே அதற்க்கு நான் பொறுப்பல்ல.

SShathiesh-சதீஷ். said...

@தர்ஷன்

வாழ்த்துக்கு நன்றி, மூன்று மடையர்களில் ஒருவர் நான் மற்றவர் நீங்கள் இல்லைதானே??ரஜினியை விஜய் விஞ்சசில்லை இது யதார்த்தமான உண்மை. ஆனால் தன போட்டி நடிகர்களில் விஜய் தான் நம்பர் வன்.அதைதான் சொல்கின்றேன்.

SShathiesh-சதீஷ். said...

@Bala

நான் குறிப்பிட்டது நூற்றி முப்பதாவது படமான அண்ணாமலைக்கு பின்தான் ரஜினி தன்னை பற்றியும் ரசிகர் பற்றியும் பாடல் வைத்தார் என்றார் ராஜூ. அதற்க்கு தான் ஒரு ரைமின்கில் வரும் படி நூற்றி ஐம்பதில் அவர் சாதித்ததை இவர் ஐம்பதில் என்றேன். அதாவது அவர் அத்தனையாவது படத்தில் செய்தததை இவர் தன ஐம்பதுக்குள் செய்யும் படி வளர்ந்து விட்டார் என்றே சொன்னேன். மற்றும் படி விஜயகாந்த் மாதிரி நான் அகுறேட் கணக்கெல்லாம் சொல்லல.

//இது யாரை பார்த்து சொல்கிறீர்கள் என்று தெரியாது. ஆனால் ரஜினி இப்படி நினைக்கவில்லை. ஏனென்றால் ரஜினியிடம் ஏன் படங்களுக்கு நடுவே இவ்வளவு இடைவெளி என்று கேட்டதற்கு இளம் நடிகர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறினார். ஓவ்வொரு வருடமும் ஒன்று அல்லது இரண்டு படங்கள் சின்சியராக யாரும் முன்னேறகூடாது என்று நடிக்க தொடங்கினால் கண்டிப்பாக மற்ற நடிகர்களின் தொண்ணூறு சதவீத படங்கள் வசூல் ரீதியாக ஊத்திக்கொள்ளும். இதனால்தான் பண்டிகை தினங்களில் படம் வெளியிடுவதை கூட நிறுத்தி விட்டார்.
//

அப்பிடியா? எனக்குத் தெரியாது. இளம் நடிகர்களுக்கு வழிவிடுபவரா இவர். அப்படிஎன்றால் ஏன் இப்போது அடுத்தடுத்து படம் நடிக்க வேண்டும் என ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார். இளம் நடிகர்களுக்கு வழிஎன்றே வைத்துக்கொள்வோம். அப்போ அவரே சொல்கின்றார் விஜய் அடுத்த தலை முறை நடிகர் தான் என்று. இன்னொரு விடயம் கவனமாய் கேளுங்கள். ரஜினி வழியில் அடுத்த தலைமுறையில் வரும் நடிகர் இப்போது விஜய் தான். இது கால ஓட்டத்தில் மாறலாம். ஆனால் இந்த நிமிடம் அவர் தான் என்பது உங்களுக்கு கசப்பான உண்மை தான்.

Bala said...

//அப்போ மற்ற நடிகர்களுக்கு செய்ததில்லை என்கிறீர்களா

நிச்சயமாக இல்லை. அப்போது இது பரபரப்பாக பேசப்பட்ட விஷயம். சிரஞ்சீவி, ரஜினிக்கு அடுத்தபடியாக என்று செய்திகளில் கூட வெளி வந்தது. அதன் பின் வேண்டுமானால் அஜித் உட்பட மற்ற நடிகர்கள் வீம்புக்கு செய்திருக்கலாம்.

மற்ற படங்கள் இருட்டடிப்பு செய்ய பட்டன என்பதும் உறுதி படுத்தாத தகவல்களே. அவை முட்டாள் தனம் அல்ல.
காதலுக்கு மரியாதை படம் தொடர்ந்து ஆறு மாதங்கள் முதலிடத்தில் இருந்தது மற்ற படங்கள் முதலிடம் பிடிக்க முடியவில்லை. காரணம் அது வெற்றி படம்.
2002 இல் வெளியான வில்லன் படம் முதல் இடத்தை பிடிக்கவே முடியவில்லை. ஏன் என்றால் அப்போது வெளியான மூன்று விஜய் படங்கள்.
சரி அந்த படங்கள் வெற்றி என்றே வைத்துக்கொள்வோம்.
அடுத்த ஆண்டு வெளியான புதிய கீதை முதலிடம் பிடித்தது, இத்தனைக்கும் அந்த ஆண்டு தூள், சாமி , காதல் கொண்டேன், ஜெயம், காக்க காக்க முதலிய படங்கள் வெளியாயின. இத்தனை படங்களுடன் போட்டியிட்டு புதிய கீதை எப்படி முதலிடம் பிடித்தது? சரி புதிய கீதை முதல் வார வசூல் அதனை முதலிடத்திற்கு கொண்டு சேர்த்தது என்று வைத்துக்கொண்டால், வில்லன் அந்த ஆண்டின் அதிக வசூலான படம்(ரமணாவை விட). அது முதலிடம் பிடிக்காததன் காரணம் என்ன? 2005 இல் வெளியான சச்சின், சிவகாசி ஆகிய படங்களும் முதலிடம் பிடித்தன. அதே ஆண்டு, அந்நியன், சந்திரமுகி, கஜினி, சண்டகோழி ஆகிய படங்களும் வெளிவந்தன. காதலுக்கு மரியாதை படத்தை விட சந்திரமுகி வசூலில் பெரும் வெற்றிப்படம். அப்படியானால் அந்த ஆண்டு விஜய் படம் முதலிடம் பெறுவது சாத்தியமே இல்லையே?


//ரஜினிக்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் முதன்மை நட்சத்திரம்(நடிகர் அல்ல) விஜய் தான். இந்த உண்மையை ஏற்கத்தான் வேண்டும்.

இது மோகன் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வருகிறது. எனவே இன்னும் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்.
//மோகனை வளர விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று அவரை இல்லாமல் செய்ததே ரஜினியும் கமழும் என்று கூட உறுதிப்படுத்தாத தகவல்கள் உள்ளன.

அறிய ஆவலாக உள்ளேன்.

மோகன் கடைசியாக கொடுத்த வெள்ளி விழா படம் சஹாதேவன் மகாதேவன். அதன் பின் அவர் நடித்த சுமார் இருபது படங்கள் ஓடிய மொத்த நாட்களை கூட்டினால் கூட 175 நாள் வராது.
இதுகூட அவரின் சரிவுக்கு காரணமாக இருக்கலாம்.

SShathiesh-சதீஷ். said...

@Bala

//காதலுக்கு மரியாதை படத்தை விட சந்திரமுகி வசூலில் பெரும் வெற்றிப்படம். அப்படியானால் அந்த ஆண்டு விஜய் படம் முதலிடம் பெறுவது சாத்தியமே இல்லையே?//

இது எனக்கு புரியவில்லை. விஜயகாந்த் போல கணக்கெல்லாம் சொல்றிங்க. மோகன் ரஜினிக்கு அடுத்த தலை முறை நடிகரல்ல. இருபதுவருடங்கள் தான் ஒரு தலை முறை இடைவெளி என்கின்றார்கள். எழுபதுகளில் ரஜினி வர எண்பதுகளில் வந்த மோகன் எப்படி அடுத்த தலை முறை ஆவார் என சொல்லுங்கள்.

KANA VARO said...

// தன போட்டி நடிகர்களில் விஜய் தான் நம்பர் வன்.அதைதான் சொல்கின்றேன்//

இதை மறுக்கும் பெருந்தகைகள் விஜயகாந்த் போல முற்று முழுதான புள்ளி விபரங்களுடன் வரவும். பின்னர் பதிலை நான் தருகின்றேன்.

SShathiesh-சதீஷ். said...

@AKAM

இதைதான் அஜித் கூட ஒரு முறை சொன்னார். விஜய்-அஜித் என்ற இணை அடுத்த தலைமுறை இனிதான். இதில் வரிசை அஜித்-விஜய் என்றிருக்குமா அல்லது விஜய் அஜித் என்றிருக்குமா என்பதே முக்கியமானது என 2008ஜனவரியில் சொன்னார்.

Bala said...

இந்த மாதிரி இரண்டு நடிகர்களை மட்டும் இனி வரும் காலங்களில் கணக்கெடுத்து கொள்ள முடியாது. ஏனென்றால் மற்ற மொழிகளில் உதாரணமாக ஹிந்தி மற்றும் தெலுங்கு திரை உலகில் கூட இதே நிலைதான். ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு படம் என்கிற ரீதியில்தான் சொல்ல முடியும்.

Bala said...

நீங்கள் நூற்றைம்பது என்று சொன்னது போல தான் அவரும் பத்து படங்கள் என்று ஒரு பேச்சுக்கு சொன்னார். உடனே நீங்கள் கணக்கை சரி பார்க்கட்டும் என்று சொன்னீர்கள். நான் சொன்னது எல்லாம் துல்லியமான கணக்குகள் என்று சொல்ல இயலாது. மேலோட்டமாக தான் கூறினேன். அதே மாதிரி இருபது வருடம் என்பதும் ஒரு பேச்சுக்குத்தான். இப்போது இருப்பது போல ஒப்பீடுகள் அப்போது இல்லை. சும்மா மோகன் வந்ததும் ரஜினியின் இடத்தை பிடிப்பார் என்று கூறப்பட்டது அவ்வளவுதான்.

Bala said...

காதலுக்கு மரியாதை வெளி வந்த ஆண்டு எந்த படமும் முதலிடம் பெற முடியவில்லை. அதே போல சந்திரமுகி வெளி வந்த ஆண்டும் நிகழ்ந்திருக்க வேண்டுமே. ஆனால் சச்சின், சிவகாசி முதலிடம் வந்ததே எப்படி? இந்த அர்த்தத்தில் தான் காதலுக்க மரியாதை, சந்திரமுகி படங்களை ஒப்பிட்டேன்.

"ராஜா" said...

@ akam
//ஆனால் பெரிய புள்ளி விபரம் தருவதாக நினைத்து இப்படி எண்ணிக்கையில் கோட்டை விட்டு விட்டீர்களே!
//நீங்கள் சொல்லியாவது கொஞ்சம் கணக்கை திருப்பி பார்க்கின்றார்களா என பார்ப்போம்.

உங்க தளபதி நடிச்சி மக்களால் ஹிட் ஆக்குன படம் பத்துகூட வராது அந்த லிஸ்ட்ட தர நான் தயார் ஆனா நான் அந்த லிஸ்ட்ட கொடுத்த பின்னாடி நீங்களா ஹிட்டுன்னு ஒரு பத்து படத்த சொல்லிக்கிட்டு நான் சொன்னது தப்புன்னு சொல்லுவீங்க அதுக்கு சில பேர் உங்களுக்கு ஆதரவா குரல் வேற கொடுப்பாங்க... ஹிட் படம்னா என்னன்னு ரஜினி பட லிஸ்ட்ட பாத்து தெரிஞ்சிகொங்கன்னு நான் சொன்னதுக்கு காரணம் இதுதான் ....

//2002 இல் வெளியான வில்லன் படம் முதல் இடத்தை பிடிக்கவே முடியவில்லை. ஏன் என்றால் அப்போது வெளியான மூன்று விஜய் படங்கள்.

திருமல திருமலன்னு ஒரு படம் வந்துச்சி , அந்த படம் வெளிவந்த அதே நாள்தான் பிதாமகனும் வெளி வந்தது.. ஊருக்கே தெரியும் எது மெகா ஹிட் படம்னு... ஆனா சன் தொ(ல்)லைகாட்சியில் திருமலை நூறுநாட்களுக்கு மேலாக முதல் இடத்தில போடப்பட்டு வந்தது... பிதாமகன் அம்பதே நாளில் அந்த டாப் டென்னை விட்டே வெளியேற்றப்பட்டது ..... பிதாமகன் என்ன அவ்வளவு சப்பையான படமா .. இல்லை திருமலை அவ்வளவு அற்புதமான படமா?... படங்களை ப்ரோமொடே பண்ண எவ்வளவு கேவலமான விசயங்களையும் பண்ண தயாரான கூட்டம் அவருடையது... அப்படி பண்ணியும் படங்கள் ஓடவில்லை அவருக்கு.... பிறகு அதே தொலைகாட்சியின் உதவியுடன் தான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஒரு மாயையை உருவாக்கி கொண்டார்.... அந்த மாயையை உங்களை போன்ற சில பேர்கள்தான் நம்பிக்கொண்டு உள்ளீர்கள்.... ஒரே ஒரு கேள்வி உங்களிடம்.... ரஜினியின் மாசை விஜய் தன்னுடைய அம்பதாவது படத்திலேயே பிடித்து விட்டார் என்று சொல்லுகிறீர்களே .... காங்கிரஸ் கட்சி இன்றும் என்றும் ரஜினியின் ஆதரவை பெற துடித்து கொண்டு உள்ளது.... காரணம் அவரின் மாஸ்.. அதே கட்சி விஜயை ஜஸ்ட் லைக் தட் வயதாகி விட்டது என்று தட்டி கழித்து விட்டது... கட்சி நடத்துகின்ற அவர்களுக்கு தெரியாதா யாருக்கு மாஸ் உள்ளது என்று? அவர் ரஜினியின் இடத்தை எதிர்காலத்தில் பிடிப்பார் என்று சொல்லுங்கள் அது உங்கள் நம்பிக்கையை காட்டும்... ஆனால் பிடித்து விட்டார் என்று சொல்லாதீர்கள் ....

Anonymous said...

நாசமாப் போச்சு! நாய் வாலை நிமிர்த்தமுடியுமா?

Anonymous said...

அட விடுங்கப்பா விடுங்கப்பா பஞ்சாயத்துன்னா லைட் போறதும் சினிமா ஒபினிங்ல fight எ போறதும் சகஜம் தானப்பா... :)

SShathiesh-சதீஷ். said...

@Bala

தமிழ் சினிமாவை தாங்கி நிற்பது என்னவோ இரண்டு நடிகர்கள் தான். தியாகராஜா பாகவதர்-சின்னப்பா,எம்.ஜி.ஆர்-சிவாஜி,ரஜினி-கமல்,அடுத்து விஜய்-அஜித் என்பது தவிர்க்கமுடியாது.

SShathiesh-சதீஷ். said...

@Bala

விளக்கத்துக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

அகம்,பாலா,ராஜூ உங்கள் மூவரினதும் ஆரோக்கியமான வாதப்பிரதிவாதங்களுக்கு நன்றி. கருத்துக்கள் மாறி மோதினாலும் என்றும் நண்பர்களாய் பதிவுலகில் சஞ்சரிப்போம் என்று நம்புகின்றேன்.

SShathiesh-சதீஷ். said...

@பெயரில்லா
//நாசமாப் போச்சு! நாய் வாலை நிமிர்த்தமுடியுமா?
//

முயற்சி செய்து பாருங்கள். சிலவேளை நிமிரலாம்..

SShathiesh-சதீஷ். said...

@பெயரில்லா

//அட விடுங்கப்பா விடுங்கப்பா பஞ்சாயத்துன்னா லைட் போறதும் சினிமா ஒபினிங்ல fight எ போறதும் சகஜம் தானப்பா... :)//

விடுங்கப்பா விடுங்கப்பா. பிளாக்கில இப்பிடி பதிவு போடிறதும் பதிவிற்கு இப்படி பின்னூட்டம் போடிறதும் சகஜம்பா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அறிமுகப் பாடலே மசலாதான் இதுல என்ன நொண்ண நொண்ண நொண்ணநொண்ண நொண்ண, படுவா, படம் எடுக்குறதுக்கு எவனாவது தயாரிப்பாளர் கெடச்சுட்டா எல்லாம் பேசுவீங்கடா! பார்க்குறவன் எங்களுக்குத்தானடா தெரியும் அது எவ்வளவு பெரிய கொடுமைன்னு! இந்த அறிமுகப் பாடல வெக்க கூடாதுன்னு யாராவது தடை வாங்கிட்டா தேவல. எது எதுக்கோ பொதுநல வழக்கு போடுறாங்க, இதுவும் பொதுநலம் தான்பா?
அய்யயோ இந்த அநியாயத்தத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive