Friday, May 7, 2010

T20 உலகக்கிண்ணம் வெல்லும் வாய்ப்பு இலங்கைக்கு? சுவாரஷ்யங்கள்,கணிப்புகள்,முடிவுகள்.



T20 உலக கிண்ண மூன்றாவது போட்டிகள் ஆரம்பமாகி சுவாரஸ்யமில்லாத முதல் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்து இப்போது சூப்பர் எட்டு போட்டிகளும் களை கட்டத்தொடங்கி விட்டன. முதல் சுற்றுப்போட்டிகளை பொறுத்தவரை எதிர்பார்த்தது போலவே பலமான அணிகள் வென்று சூப்பர் எட்டுக்குள் வந்திருக்கின்றன. குழு ஏயை பொறுத்தவரை தற்போதைய உலக சாம்பியன் பாகிஸ்தான் பங்களாதேஷை இலகுவாக வென்றாலும் பங்களாதேஷே கொஞ்சம் அசைத்துப்பார்த்த அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பெற தன் முழுபலத்துடன் அவுஸ்திரேலியா முதலாமிடம் பிடித்தது.

குழு பியில் மோதிய அணிகளில் இலங்கை அணி இம்முறை தட்டுத்தடுமாறி அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது. நியூசிலாந்திடம் தோல்வி சிம்பாவேயிடம் டக்வேத் லூயிஸ் முறைப்படி வெற்றி என்று தன் முழு பலத்தை இன்னும் காட்டவில்லை. முரளி விளையாடுவாரா என்பதும் கேள்வியே? கடந்தமுறை பெரிதும் கைகொடுத்த டில்ஷான் ஏமாற்ற இம்முறை மஹேல கைகொடுக்கின்றார். மறுமுனையில் பயிற்சி ஆட்டங்களில் அசத்திய சிம்பாவே அப்படியே பதுங்கிக்கொள இம்முறை வீறுநடை போடுகின்றது நியூசிலாந்து.

குழு சியை பொறுத்தவரை முதலாவது T20 சாம்பியன் இந்தியா ஆப்கானிஸ்தானையும் தென் ஆபிரிக்காவையும் வென்று முதலாம் இடம் பிடிக்க தென் ஆபிரிக்கா இரண்டாம் இடம் பிடித்தது. இதில் இந்தியாவுடனான போட்டியில் துடுப்பாட்டாத்தில் ஓரளவும் களத்தடுப்பில் அசத்தலும் காட்டிய ஆப்கானிஸ்தான் தென் அபிரிக்காவிடம் தன் விக்கெட்டுக்களை அடுத்தடுந்து இழந்து தோற்றது ஆனால் பலமான தென் ஆபிரிக்கா மிகப்பெரிய ஓட்டங்களை குவிக்க முடியாமல் கட்டுப்படுத்தியது.

குழு டியில் ஆடும் அணிகளில் அயர்லாந்தையும் இங்கிலாந்தையும் அபாரமாக வென்று இம்முறை அசத்திக்கொண்டிருக்கின்றது போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள். அவர்களை தொடர்ந்து இம்முறையும் பெரிய ஆர்பாட்டம் இல்லாமல் சூப்பர் எட்டுக்குள் இங்கிலாந்து நுழைந்துள்ளது. அயர்லாந்து எந்த பரபரப்பையும் கொடுக்காமல் வெளியேறியுள்ளது.

நேற்று நடந்த சூப்பர் எட்டு ஆட்டங்கள் உட்பட மற்ற விடயங்களை பார்க்க முதல் நடந்து முடிந்த போட்டிகளில் இடம்பெற்ற சுவாரஷ்யங்களை பார்ப்போம். இந்த தொடரை பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகள் அதிகபட்சமாக நூற்றுதொன்நூற்றொரு ஓட்டங்களை குவித்துள்ளன. சராசரியாக பார்க்கும் போது கடந்த தொடர்களை விட இம்முறை ஓட்டக்குவிப்பு குறைவடைந்துள்ளது. அதேபோல ஒரு அணி மொத்தமாக பெற்ற குறைவான ஓட்டங்கள் என்ற வேதனை மிகு சாதனையை படைத்த அயர்லாந்து வெறும் அறுபத்தெட்டு ஓட்டங்களை மேற்கிந்திய அணிக்கெதிராக பெற்று உலககிண்ண வரலாற்றில் ஆகக்குறைந்த ஓட்டங்களை பெற்ற அணியானது. இந்த வரிசையில் மூன்றாம் இடத்தினை தென் ஆபிரிக்காவுடன் மோதிய ஆப்கானிஸ்தான் என்பது ஓட்டங்களை பெற்று பதிவு செய்தது. இவர்களை விட கொஞ்சம் அதிகம் பெற்ற சிம்பாவே அணி எண்பத்திநான்கு ஓட்டங்களுடன் ஏழாம் இடம் பெற்றது நியூசிலாந்துடனான போட்டியில்.




தனி நபர் அதி கூடிய ஓட்டத்தை பார்த்தால் இந்த வகை போட்டிகளில் எப்போதும் அசத்தும் இந்தியாவின் சுரேஷ் ரைனா தென் ஆபிரிக்காவுடனான போட்டியில் நூற்று ஒரு ஓட்டங்களை பெற்று உலக கிண்ணத்தில் தனி நபர் ஒருவர் பெற்ற இரண்டாவது அதிகூடிய ஓட்டத்தை பதிவு செய்தார். அவரை போலவே இலங்கையின் மஹேல சிம்பாவேயுடனான போட்டியில் நூறு ஓட்டங்களை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டார். இவர்களை விட இம்முறை துடுப்பாட்டாத்தில் வேறு யாரும் இந்த சாதனையை படைக்கவில்லை. கிரிஸ் கெயிலுடன் சேர்ந்து இந்த மூவருமே உலகக்கிண்ணத்தில் சதம் கண்டவர்கள். ஒரு போட்டியில் விளாசப்பட்ட சிச்சர்கள் என்று பார்த்தால் இம்முறை ஐந்து சிச்சர்கள் மட்டுமே விளாசப்பட்டுள்ளன ரைனா, டேவிட் ஹசி, அல்பைல் மோர்கல் ஆகியோரே அவர்கள். இவர்கள் மூவரும் கடந்த தொடர்களுடன் ஒப்பிட்டால் எட்டம் இடத்துக்கு பின்னரே நிற்கின்றனர்.

இனி பார்க்கப்போவது சில சுவாரஷ்யமான விடயங்கள். மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெறும் நான்கு சிச்சர்களே பெறப்பட்டன. இதில் அயர்லாந்து ஒரு சிக்ஸ்சும் பெறவில்லை என்பது இன்னொரு சுவாரஷ்யமானது. அதேநேரம் இந்த தொடரில் அதிகூயய ஓட்டம் பெறப்பட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணி தன் இறுதி ஓவரில் எந்த ஓட்டமும் பெறாமல் தன் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து புது சாதனை ஒன்றுக்கு வழிசமைத்தது. சிம்பாவே இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிம்பாவே எந்த ஒரு நான்கு ஓட்டமோ அல்லது ஆறு ஓட்டமோ பெறாமல் அந்த போட்டியும் நிறைவடைந்தது. அதேபோல சிம்பாவே நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த ஒரு சிக்ஸ்சும் பெறப்படாமல் ஒரு போட்டி நிறைவுக்கு வந்தது. மழையால் இடையில் கைவிடப்பட்ட இங்கிலாந்து அயர்லாந்து போட்டியில் ஒரு சிக்ஸ் மாத்திரமே பெறப்பட்டது.

பந்துவீச்சின் ஆதிக்கம் வழக்கத்தை விட இதுவரை நடந்த போட்டிகளில் இருந்தது காணக்கூடியதாக இருந்தது. அடுத்து நாங்கள் இப்போது நடைபெறும் சூப்பர் எட்டு ஆட்டங்களை பார்த்தால் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் முற்று முழுதாக இங்கிலாந்து தன் ஆதிக்கத்தை காட்டி வென்றிருக்கின்றது. உலக சாம்பியனாக போட்டிகளில் பங்கு பற்றும் பாகிஸ்தான் அதை இதுவரை நிரூபிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானின் துடுப்பாட்டம் பலமானதாக தென்பட்டாலும் நேற்று நடந்த ஆட்டத்தில் அவர்களின் அசமந்தப்போக்கே தோல்விக்கு காரணம். துடுப்பெடுத்தாடும் போது தேவையற்ற ரன் அவுட்டுகள், களத்தடுப்பின் போது பிடிஎடுக்க விட்ட தவறுகள் என சின்ன பிள்ளைகளின் அழுகுணி ஆட்டம் அவர்களை தோல்வியடைய வைத்தது. நேர்த்தியாக ஆடிய இங்கிலாந்து வெற்றியை பெற்றது. பீட்டர்சன் மீண்டும் நல்ல நிலைக்கு வந்தது அவர்களுக்கு இன்னும் பலம்.



அடுத்து நடந்த நியூசிலாந்து மற்றும் தென் ஆபிரிக்காவிற்கு இடையிலான போட்டி மிக சுவாரஷ்யமாக இருந்தது. இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் ஆடிய தென் ஆபிரிக்கா நூற்று எழுபது ஓட்டங்கள் குவித்தது. ஆரம்பத்தில் மெதுவாக ஆடியவர்கள் போகப்போக வேகமேடுத்தனர். பதிலுக்கு நியூசிலாந்து அணி ஆடியபோது பார்வையாளர் ஒருவர் இது ஐம்பது ஓவர் போட்டியல்ல இருபது ஓவர் போட்டி என்ற பதாகை ஒன்றை காட்டியதை காணக்கூடியதாக இருந்தது. அந்தளவிற்கு ஆமை வேக ஆட்டம் ஆடினாலும் இறுதியில் வெற்றியை நெருங்கிவந்து கோட்டை விட்டனர். ஆனால் இந்த போட்டியை பார்த்துக்கொண்டிருந்த போது எனக்குள் எழுந்த கேள்வி அடித்தாட வேண்டிய நிலையில் வெட்டோரி தான் முதலில் வராமல் இறுதி நிலையில் களம் இறங்கியது ஏனோ? முதலில் இறங்கி அடித்தாடி இருந்தால் சிலவேளை நியூசிலாந்து வென்றிருக்கலாம். ஆனால் நேற்றைய போட்டியில் தென் ஆபிரிக்காவின் களத்தடுப்பு அபாரமாக இருந்தது. உலகின் எந்த அணியைவிடவும் களத்தடுப்பில் தென் ஆபிரிக்கா தான் சிறந்தது என்பது என் கருத்து. துடிப்பு குழுவாக செயற்ப்பட்டமை நிதானம் என்று எல்லாம் கூடி வர வெற்றி தேடி வந்தது.

இன்றைய தினமும் இரண்டு போட்டிகள் இடம்பெற உள்ள நிலையில் சூப்பர் எட்டில் ஆடும் அணிகளின் பலம் பலவீனத்தை மேலோட்டமாக பார்ப்போம். முதலில் தற்போதைய சாம்பியன் பாகிஸ்தான். சமி,ஆஷிப் இரண்டுபேரும் குள் இல்லாததை ஓரளவு நிரப்புகின்றனர். துடுப்பாட்டத்தில் கமரன் அக்மல், பட் இரண்டுபேரும் நல்ல போர்மில் இருக்கின்றனர் ஆனால் அணித் தலைவர் அப்ரிடி இன்னும் தன் பூம் பூமைக்காட்டவில்லை. பொதுவாக பார்க்கும் போது பலமான அணியாக தெரிந்தாலும் இந்த தொடரில் இன்னும் பாகிஸ்தான் தான் சாம்பியன் என்பதைக் காட்டவில்லை. ஆனால் இவர்களை பற்றி சொல்லத் தெரியவில்லை. சிலவேளை இம்முறையும் கிண்ணத்தைக் கொண்டு போனாலும் ஆச்சரியமில்லை.

அடுத்து அவுஸ்திரேலியா அணி. எல்லா இடத்திலும் ஆண்டாலும் இன்னும் இந்த வகைப்போட்டிகள் கைகூடவில்லை. பதினொரு வருடங்களின் பின்னர் ரிக்கி பாண்டிங் இல்லாமல் வேறு ஒருவர் தலைமையில் உலக கிண்ணம் ஒன்றில் அவுஸ்திரேலியா களமிறங்கி உள்ளது. பாகிஸ்தானை பஞ்சாமிர்தம் ஆக்கினாலும் பங்களாதேஷ் பங்காளிகளை கொஞ்சம் ஆட்டிப்பார்த்ததால் எனக்கு என்னவோ இவர்களில் நம்பிக்கை குறைவு. பலம் அதிகம், அதேநேரம் இம்முறை நம்பிக்கை தரும் படி ஆடினாலும் இதே குழுவில் இவர்கள் சூப்பர் எட்டில் மோத வேண்டிய இலங்கை அதிர்ச்சி வெற்றி ஒன்றையும் முதலாவது உலககிண்ணத்தில் இருந்த அசுர பலத்துடன் இருக்கும் இந்தியாவிடம் மரண அடியும் வாங்கும் வாய்ப்பு இருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது. மேற்கிந்திய தீவுகளும் சிலவேளை வைத்தியம் கொடுக்கலாம்.



அடுத்து இலங்கை. மஹேல மட்டுமே இம்முறை முழு பலம். சனத்தை பின்வரிசையில் இறக்கி டில்ஷானுடன் மகெலவை இறக்குவதை விட சனத்தையும் மகேலவையும் இறக்குவது நல்ல பலனை தரும் என எண்ணுகின்றேன். டில்ஷானின் பாஷா இம்முறை பலிக்காமல் இருப்பதால் இந்த முறை இலங்கைக்கு கொஞ்சம் கடின இலக்கே. இருப்பினும் அதிஷ்டமும் அணியாக விளையாடும் போராட்ட குணமும் கை கொடுத்தால் பார்க்கலாம் மீண்டுமொரு முறை இறுதியில்.

அடுத்தவர்கள் நியூசிலாந்து. தகுதி இருக்கு தலைக்கனம் இல்லை, திறமை இருக்கு அதிஷ்டம் இல்லை இதுதான் இந்த கறுப்பு குதிரைகளுக்கு வழக்கமாக நடக்கும் கறுப்பு சரித்திரம். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் பலர் சகல துறையிலும் பிரகாசிக்கும் வல்லமை படைத்தவர்கள். ஆனால் தென் ஆபிரிக்காவுடனான மந்தமான ஆட்டத்தால் வந்த தோல்வி இவர்களின் அரை இறுதி வாய்ப்புக்கு இன்னும் போராட வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆபிரிக்கா. இதுவரை எந்த ஒரு பெரிய தொடரிலும் சாம்பியன் ஆனதில்லை. ஆனால் எப்போதும் சமச்சீர் பலம் கொண்ட அணி. வழக்கமாக வில்லனாகும் மழை இம்முறை நடக்கும் தொடரில் வீரர்களை விட சிறப்பாக தன் ஆட்டத்தை காட்டுவதால் இம்முறையும் துரதிஷ்டம் துரத்துமா தெரியவில்லை. நேற்றைய வெற்றியுடன் பாகிஸ்தான் அல்லது இங்கிலாந்தை வென்றால் அரை இறுதி உறுதி. என்னை பொறுத்தவரை இது இலகுவான ஒன்று. இப்போது வரை தீர்க்கமாக அரை இறுதி செல்லும் என்று என்னால் சொல்லக்கூடிய அணியும் இது மட்டும் தான்.



அடுத்து முன்னாள் சாம்பியன்கள் இந்தியா. சேவாக் இல்லை உடல் நிலை சரியிலாமல் கடந்த போட்டியில் கம்பீர் இல்லை. விஜயின் அதிரடி இல்லை என்று தொடக்க ஜோடி குழம்பிக்கொண்டிருந்தாலும் அடுத்து வருபவர்கள் பக்கா போர்மில் இருக்கின்றனர். விஜய்-கம்பீர் ஜோடி மீண்டு வந்து சேவாக் இல்லாத குறையை தீர்த்தால் தொடர்ந்து வான வேடிக்கை காட்ட ரைனா ரெடி. அவரை தொடர்ந்து form இல்லாமல் இருந்து அதை மீட்டெடுத்த யுவராஜ் இம்முறையும் முதல் தொடர் போல பக்கா போர்மில் இருந்து மிரட்டுவதால் கிண்ணம் வெல்லும் வாய்ப்பு இருக்கின்றது. போட்டியை எப்படி முடிக்க வேண்டுமோ அப்படி முடிக்க தோணி ரெடி. பந்து வீச்சுதான் கொஞ்சம் பலவீனமாக இருக்கின்றது. களத்தடுப்பை சரி செய்தால் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இங்கிலாந்து பாகிஸ்தானை வென்று விட்டது தென் ஆபிரிக்காவை வெல்வது கடினமாக இருந்தாலும் நியூசிலாந்தை அசைத்து அரை இறுதிக்குள் நுழையலாம். அதே நேரம் மேற்கிந்திய தீவுகளும் ஏதும் ஆச்சரியங்களை கொடுத்தாலும் ஆச்சரியமில்லை. ஒட்டு மொத்தமாக பார்த்தால் தென் ஆபிரிக்காவுடன் நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து அரை இறுதிக்கு இந்த குழுவில் இருந்து தெரிவாக மறுமுனையில் இந்தியா, இலங்கை,அவுஸ்திரேலியா அணிகள் தமக்குள்ள கடுமையான போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.



இவை எல்லாம் பலம் பலவீனம் என்று வைத்து நான் அலசி ஆராய இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் படி என் தங்கை இம்முறை சாம்பியனையே கணித்து விட்டாள். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் அவள் அவுஸ்திரேலிய அணியின் விசிறி. கடந்தமுறை பாகிஸ்தான் தான் சாம்பியனாகும் என்று சொல்லி அவர்கள் சாம்பியனானவுடன் எனக்கு கரி பூசியவள், என்ன சொன்னாள் தெரியுமா? முதலாவது தொடரில் இறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின அதில் இந்தியா வென்றது. அடுத்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை மோதின இதில் பாகிஸ்தான் வென்றது. அதாவது கடந்தமுறை இரண்டாமிடம் பெற்ற அணி சாம்பியனானது. எனவே இம்முறை இறுதியில் இலங்கையுடன் வேறு ஒரு அணி மோதும் ஆனால் இலங்கை சாம்பியனாகுமாம்? இது எப்பிடி இருக்கு?
Share:

12 கருத்துரைகள்:

Bavan said...

//கடந்தமுறை இரண்டாமிடம் பெற்ற அணி சாம்பியனானது. எனவே இம்முறை இறுதியில் இலங்கையுடன் வேறு ஒரு அணி மோதும் ஆனால் இலங்கை சாம்பியனாகுமாம்? இது எப்பிடி இருக்கு//

அடங்கொய்யால.. நல்லாக் கிளப்பிறாங்கய்யா பீதிய...முடியல

வந்தியத்தேவன் said...

Ha Ha Ha I will comment later any way good joke for morning

கன்கொன் || Kangon said...

தலிவா...

இலங்கை நியூசிலாந்திடம் தோற்றது என்றாலும் சிம்பாப்வேயுடன் வென்றது டக்வேத் முறை என்றாலும் அதில் இலங்கை சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்கள்.
குறிப்பாக எந்தவித பவுண்டரிகயும் விட்டுக்கொடுக்காமல் பந்துவீசியிருந்தார்கள்.
சிம்பாப்வே என்பது சாதாரணமான அணியல்ல..
பயிற்சிப் போட்டிகளில் அவுஸ்ரேலியாவையும், பாகிஸ்தானையும் மண்கவ்வ வைத்துவிட்டு வந்தவர்கள்.

அடுத்தது,
மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்தை வென்றது அதிர்ஷ்ரத்தில் தான்.
191 ஓட்டங்களை இங்கிலாந்து குவித்தது.
டக்வேத் மாமா மற்றும் லூயிஸ் மாமாவின் விளையாட்டால் வென்றுவிட்டார்கள்.
அயர்லாந்து பரபரப்பைக் கொடுத்தாங்க அண்ணே...
இங்கிலாந்தைக் குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்தினார்கள்.
துரதிஷ்ரம், மழை காரணமாக பெரிதாகத் துடுப்பெடுத்தாடவில்லை.
மழை பெய்திருக்காவிடின் போட்டி முடிவு மாறியிருக்கலாம்.

பாகிஸ்தானின் துடுப்பாட்டம் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி இல்லைண்ணே...
முதற்போட்டியில் பட், அக்மல் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினர், அதற்குப் பிறகு அவர்களது துடுப்பாட்டம் சிறப்பாக இருக்கவில்லை.
மிஸ்பா, அப்ரிடி, ரஷாக், உமர், ஹபீஷ் போன்றவர்கள் வெட்டிக்கு இருக்கிறாங்கள்.

மற்றது அஜ்மல் இருக்கும் வரை பாகிஸ்தான் 10 களத்தடுப்பாளர்களுடன் களத்தடுப்பிலீடுபடுகின்ற மாதிரித்தான்.

//. சமி,ஆஷிப் இரண்டுபேரும் குள் இல்லாததை ஓரளவு நிரப்புகின்றனர். //

ஏன்னே?
குல் அவ்வளவு மோசமான பந்துவீச்சாளரா?
அவுஸ்ரேலியாவுக்கெதிராக சமி: 4 பந்துப்பரிமாற்றம் 54 ஓட்டங்கள் 1 விக்கற்
நேற்றைய போட்டியில் அசிவ்:
4 பந்துப்பரிமாற்றம் 43 ஓட்டங்கள், விக்கற் இல்லை.

அவுஸ்ரேலியாவை மேற்கிந்தியத்தீவுகள் ஒண்டும் பண்ண முடியாதண்ணே..
அவுஸ்ரேலியா இலகுவா அரையிறுதிக்குப் போகும்.
இந்தியா அவுஸ்ரேலியாற்ற மரண அடி வாங்கும். ;)

இலங்கை அணியாக விளையாடுவதால் ஏதும் வாய்ப்பிருக்கலாம்.
ஆனால் சங்கா போர்ம் இற்கு திரும்புதல் வேண்டும்.

நியூசிலாந்த விடுங்கோ. ;)

தென்னாபிரிக்கா அரையிறுதிக்குக் கட்டாயம் போகும். ;)

இந்தியா போகும் ஆனா போகாது. ;)

இங்கிலாந்து போகலாம். :)

இலங்கை வென்றால் மகிழ்ச்சியே,
ஆனால் வெல்ல வேண்டுமே? ;)

Bala said...

இலங்கை அணி விளையாடும் அழகைப்பார்த்தால் அவர்கள் அடுத்த சுற்றுக்கே போவது சந்தேகம்தான்.ஜெயவர்தனே ஒருவரே எவ்வளவு பாரம்தான் சுமக்க முடியும்? மற்ற வீரர்களிடம் துளி அளவு கூட ஈடுபாடு இல்லையே?

தர்ஷன் said...

மகேள தவிர மற்றவர்களும் பிரகாசித்தால் கிண்ணம் நிச்சயம்

shan shafrin said...

இன்றைய போட்டிக்கு பிறகு இலங்கையின் வாய்ப்பு பற்றி ஓரளவு உறுதியாக சொல்ல முடியும் என நினைக்கிறேன்.......

SShathiesh-சதீஷ். said...

@Bavan

பீதி எண்டால் கிளம்பத்தான் செய்யும். பயப்படப்படாது புரிதா?

SShathiesh-சதீஷ். said...

@வந்தியத்தேவன்

போங்க மாமா உங்களுக்கு ஜோக்கே தெரியாது? பிறகு வாறன் என்டிங்க கடைசிவரை வரவே இல்லையே.

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

//இலங்கை நியூசிலாந்திடம் தோற்றது என்றாலும் சிம்பாப்வேயுடன் வென்றது டக்வேத் முறை என்றாலும் அதில் இலங்கை சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்கள்.
குறிப்பாக எந்தவித பவுண்டரிகயும் விட்டுக்கொடுக்காமல் பந்துவீசியிருந்தார்கள்.
சிம்பாப்வே என்பது சாதாரணமான அணியல்ல..
பயிற்சிப் போட்டிகளில் அவுஸ்ரேலியாவையும், பாகிஸ்தானையும் மண்கவ்வ வைத்துவிட்டு வந்தவர்கள்//

இந்த தகவலை நான் குறிப்பிட்டுள்ளேன். சிம்பாவே நல்ல அணிதான் ஆனால் வெறும் ஐந்து ஓவர்கள் மாத்திரமே அவர்கள் துடுப்பெடுத்தடினார்கள். அதில் நான்கு ஓட்டம் பெறவில்லை என்பது பெரிய சாதனை அல்ல.

//மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்தை வென்றது அதிர்ஷ்ரத்தில் தான்.
191 ஓட்டங்களை இங்கிலாந்து குவித்தது.
டக்வேத் மாமா மற்றும் லூயிஸ் மாமாவின் விளையாட்டால் வென்றுவிட்டார்கள்.
அயர்லாந்து பரபரப்பைக் கொடுத்தாங்க அண்ணே...
இங்கிலாந்தைக் குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்தினார்கள்.
துரதிஷ்ரம், மழை காரணமாக பெரிதாகத் துடுப்பெடுத்தாடவில்லை.
மழை பெய்திருக்காவிடின் போட்டி முடிவு மாறியிருக்கலாம்.
//

வெறுமனே அதிஷ்டம் என்று சொல்லி விட முடியாது. பாகிஸ்தானை புரட்டிப்போட்டது இங்கிலாந்து. லக்வேத் லூயிஸ் முறையில் இலங்கை வென்றால் அது சரி மேற்கிந்தியா வென்றால் அதிஷ்டமா ஒத்துக்கொள்ள முடியாது வெற்றி வெற்றிதான்.

//பாகிஸ்தானின் துடுப்பாட்டம் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி இல்லைண்ணே...
முதற்போட்டியில் பட், அக்மல் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினர், அதற்குப் பிறகு அவர்களது துடுப்பாட்டம் சிறப்பாக இருக்கவில்லை.
மிஸ்பா, அப்ரிடி, ரஷாக், உமர், ஹபீஷ் போன்றவர்கள் வெட்டிக்கு இருக்கிறாங்கள்.

மற்றது அஜ்மல் இருக்கும் வரை பாகிஸ்தான் 10 களத்தடுப்பாளர்களுடன் களத்தடுப்பிலீடுபடுகின்ற மாதிரித்தான்.//

இது உண்மை அஜ்மல் மட்டும் இல்லை யாருமே களத்தடுப்பில் கவனம் இல்லை.

////. சமி,ஆஷிப் இரண்டுபேரும் குள் இல்லாததை ஓரளவு நிரப்புகின்றனர். //

ஏன்னே?
குல் அவ்வளவு மோசமான பந்துவீச்சாளரா?
அவுஸ்ரேலியாவுக்கெதிராக சமி: 4 பந்துப்பரிமாற்றம் 54 ஓட்டங்கள் 1 விக்கற்
நேற்றைய போட்டியில் அசிவ்:
4 பந்துப்பரிமாற்றம் 43 ஓட்டங்கள், விக்கற் இல்லை.
//

ஒரு போட்டியை வைத்து சொல்ல முடியாது சாமி ஆசிப் இரண்டுபேரும் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளர்கள். எனவே அவர்களால் குல்லின் இடத்தை நிரப்பமுடியாவிட்டாலும் ஓரளவு தாங்கிப்பிடிக்க முடியும் என்பது என் கருத்து.

//அவுஸ்ரேலியாவை மேற்கிந்தியத்தீவுகள் ஒண்டும் பண்ண முடியாதண்ணே..
அவுஸ்ரேலியா இலகுவா அரையிறுதிக்குப் போகும்.
இந்தியா அவுஸ்ரேலியாற்ற மரண அடி வாங்கும். ;)
//

இருபது ஓவர் போட்டியில் மேற்கிந்தியாவை கணிப்பிட முடியாது இந்தியா மரண அடி வாங்கிட்டுதே. உங்களுக்கு கரி நாக்கா தம்பி.

SShathiesh-சதீஷ். said...

@Bala

அண்ணே ஆனால் இப்போ அவங்க எங்கேயோ போய்ட்டாங்க பார்ப்போம்.

SShathiesh-சதீஷ். said...

@தர்ஷன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

SShathiesh-சதீஷ். said...

@shan shafrin

அதே அதே கலக்கிட்டாங்க

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive