உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

Saturday, June 19, 2010

சிங் is கிங் - இறுதிப்போட்டியில் இந்தியா.



உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் உலகை ஆக்கிரமித்துள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்று வரும் ஆசிய கிண்ண போட்டிகளை கணக்கெடுக்க மறுத்த பலரையும் இன்று மீண்டும் கிரிக்கெட் பக்கம் திருப்பிய போட்டி ஒன்று இப்போதுதான் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியை பார்த்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் கூட 50 ஓவர் போட்டி பற்றிய தங்கள் கருத்தை மீள் பரிசீலனை செய்வர் என சொல்கின்றது கிரிக இன்போ.

அப்படி என்ன தான் நடந்தது? என்று கேட்கிறீர்களா? வேறு என்ன கிரிக்கெட்டில் இரு துருவங்கள் மோதிய போட்டிதான். இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி வழமை போல விறு விறுப்பாக நடை பெற்று முடிந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தலைவர் அப்ரிடி முதலில் பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடும் என முடிவெடுத்தார். அதற்கமைய ஆரம்பத்தை அமர்க்களமாக தான் ஆரம்பித்தனர் சல்மான் பட்டும் பர்ஹத்தும். நீண்ட போராட்டத்தின் பின் ஹர்பஜன் சிங் இந்த இணையை பிரிக்க அடுத்ததாய் ஜோடி சேர்ந்த சானியாவின் நாயகன் மாலிக்கும் பட்டும் இணைந்து மீள கட்டி எழுப்ப மீண்டும் அதை காண தகர்க்க அடுத்தடுத்து பாகிஸ்தானின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் விழ ஒரு கட்டத்தில் உமர அக்மலும் அப்பிரிடியும் இணைந்து அதிரடிக்கு மாற அப்ரிடி ஆட்டம் இழக்க மீண்டும் சோர்ந்தது பாகிஸ்தான். இருப்பினும் கம்ரன் அக்மாலின் தாண்டவத்தின் மூலம் 267 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது பாகிஸ்தான் அணி.

பந்துவீச்சில் இந்தியாவின் பிரவீன் குமார் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி மிரட்ட பஜ்ஜி தன் பங்குக்கு இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். மறுமுனையில் பாரிய இலக்கொன்றை துரத்த ஆரம்பித்த இந்தியாவுக்கு அமைதியான ஒரு தொடக்கம் கொடுக்க முனைந்தனர் ஷேவாக்கும் கம்பீரும். இடையில் சேவாக் ஓட முடியாமல் அவதிப்பட்டு ரைனாவை ஓட பயன்படுத்தினாலும் சேவாக் இன்னும் போரிமில் இல்லை என்பதை இன்றைய போட்டி காட்டியது. மறுமுனையில் கடந்த போட்டி போல தொடர்கிறது காம்பீரின் அட்டகாசம்.இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அடுத்த டிராவிட், விராட் கோலி, கம்பீருக்கு பக்க பலமாக இருக்க ஓட்ட வேகம் அதிகரித்தது. பாகிஸ்தான் பந்துகள் பந்தாடப்பட்டுக்கொண்டிருக்க கோலி ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து இணைந்த டோனி, கம்பீருடன் சேர்ந்து மிகப்பெரிய இணைப்பாட்டம் ஒன்றை வழங்க இந்தியா வெற்றியை நோக்கி நகர தொடங்கியது.

இம்முறையும் சதத்தை நெருங்கி அதை பெற முடியாமல் தவற விட்டு கம்பீர் ஆட்டமிழக்க சிறிது நேரம் ஷர்மா, தோனிக்கு கைகொடுத்தார். ஆனால் ஷர்மா வெளியேறிய உடன் தோனியும் வெளியேற இந்தியா ஆட்டம் காண தொடங்கியது. மறுமுனையில் ரைனாவும் ஜடேயாவும் போராடினாலும் ஓட்ட வேகம் மந்தமானதுடன் ஜடேயா வழக்கம் போல தேவையான நேரத்தில் சொதப்பினார். ஆனால் அவர் போனது நல்லது போல வந்த பஜ்ஜி அக்தர் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து தன் கணக்கை ஆரம்பித்தார். இவர் தான் கணக்கை முடிக்கப்போகின்றார் என்று அப்போது தெரியவில்லை. வெற்றியை நோக்கி வீறு நடை போட்டுக்கொண்டிருந்த அணிக்கு பந்துகள் குறைய தொடங்க பதற்றமும் தொற்றிக்கொண்டது. இந்த பதற்றத்தில் ரைனா ரன அவுட் ஆக இந்தியா தோற்று விடும் என எதிர்பார்த்தேன். ஆனால் வந்த பிரவீன் குமார் கைகொடுக்க. பஜ்ஜி சில பந்துகளை முகம் கொடுக்க தடுமாறினார். இடையில் அக்தர், பஜ்ஜி வாக்குவாதம் சூடாக கம்ரன் அக்மல் அவர்களை பிரித்து அழைத்து சென்றதும் சூடு. அக்தர் இன்று விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிட தக்கது.

இறுதியில் இரண்டு பந்துகள் மீதமிருக்க மூன்று ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இரண்டாவது ஓட்டத்தை ஓட வந்த பிரவீனை தடுத்து நிறுத்திய பஜ்ஜி அடுத்த பந்தில் இமாலய சிக்ஸ் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். சிக்ஸ் பறந்து கொண்டிருக்கும் போதே சிங்கம் கர்ஜிப்பது போல அக்தரை பார்த்து கர்ஜிக்க அதற்க்கு அக்தரும் கையில் V காட்டி விட்டு போடா போடா என்பது போல கையால் காட்டியதும் செம ஹாட் மச்சி. ஆனால் என்னதான் அவர்கள் சொல்லிக்கொண்டார்களோ தெரியல.

மொத்தத்தில் இறுதி நேரத்தில் ஹீரோவாகி இந்தியாவை காப்பாற்றிய சிங் தான் இன்றைய கிங்.

சில சுவாரஸ்யங்கள்.

இடையில் பந்து மாற்றும் நேரம் வரும் போது பந்தை மாற்ற வேண்டாம் என அப்ரிடி சின்ன பிள்ளை போல அடம பிடித்தார்.
அக்தர்-பஜ்ஜி சண்டை...

போட்டி நிறைவடைந்த பின் இதை பற்றி கூறிய அப்ரிடி இது ஒரு நல்ல போட்டி என்றும் தாங்கள் நன்றாக ஆடியதாகவும் அதை விட இந்திய வீர்கள் ஆட்டம் சிறப்பு என்றும் பெருந்தன்மையோடு பாராட்டினார்.

அதே நேரம் இந்த வெற்றி கூல் கப்டன் என ரவி சாஸ்திரி தொனியை அழைக்க தான் இன்று கூல் இல்லை என்றும் இந்தியா பாகிஸ்தான் ஆடும் போது எப்படி கூழை இருக்க முடியும் என கெட்ட தோணி பஜ்ஜி தன்னை காப்பாற்றிவிட்டார் என்றும் சொன்னார். அதேநேரம் இனி சிங்கை ஒரு ஆல்ரவுண்டர் என சொல்லலாம் எனவும் கூறினார். இன்று மட்டுமன்றி கம்பீருடன் இந்திய ஏ அணியில் ஆடும் போதே மின்னொளியில் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை தான் வழங்கியதாகவும் அவர் சொல்லி இருக்கின்றார்.

எது எப்படியோ மீண்டும் ஒரு தடவை ஐம்பது ஓவர் போட்டி ஒன்று உயிர் பெற்றிருக்கின்றது. இன்னும் இரு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்திய மற்றும் இலங்கை அணிகள் தெரிவாகி உள்ளன. இதில் இறுதி லீக் போட்டியில் மொத இருக்கும் அணிகளே இறுதிப்போட்டியில் மோத உள்ளதால் ஆட்டம் சூடு பறக்கும் எனபதில் சந்தேகமில்லை.

பி.கு: எல்லோரும் ராவணன் படம் பார்த்து விட்டீர்கள் போல. விமர்சனங்கள் சூடாக வருகின்றன. படித்துள்ளேன். ஆனால் பலருக்கு பின்னூட்டம் இடவில்லை. காரணம் படம் பார்க்காமல் எப்பிடி....விரைவில் பார்ப்பேன் என நம்புகின்றேன்.
Share:

Sunday, May 16, 2010

மாம்பழத்துக்கு சண்டையிட்ட அக்மல் சகோதர்கள்.

வணக்கம் மக்கள்ஸ், என்னுடைய கடந்த பதிவிற்கு வாக்குப் போட்டு என்னை உற்சாகத்தின் உச்சியில் ஏற்றிவிட்டதற்கு எல்லோருக்கும் முதலில் நன்றி. பதிவெழுத தொடங்கி நான் பெற்ற அதிகூடிய வாக்குகளில் மூன்றாவதாக இருக்கின்றது அந்த பதிவு. ரொம்ப சந்தோசம். இந்த பதிவை இன்னும் தாமதித்து இடலாம் என்று எண்ணினேன் காரணம் இன்னும் கடந்த பதிவிற்கு வரும் நண்பர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள். வாக்கும் இடப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால் இப்போ பதிவிடக் காரணம் இன்று இறுதிப்போட்டி நடை பெற இருக்கும் நிலையில் அதற்க்கு முன் இந்த பதிவை இடுவதே மிகப்பொருத்தமாக இருக்கும் சுவாரஷ்யமாக இருக்கும் என எண்ணினேன் இதோ வந்துவிட்டது.

வழக்கம் போல என்ன கேட்கப்போகின்றேன் பிடித்திருந்தால் வாக்குப் போடுங்க பிடிக்காட்டி திட்டிட்டு போங்க. மறந்தும் மனசாட்சிக்கு மாறாய் செய்திடாதிங்க.












Share:

Saturday, May 15, 2010

23 வருடங்களின் பின் இறுதியில் மோதும் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா.



மேற்கிந்தியாவில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் T20உலக கிண்ண போட்டிகள் நிறைவுக்கு வரும் நாளில் மோதப்போகும் அணிகள் தெரிவாகிவிட்டன. பல கிரிக்கெட் மேதாவிகள் விமர்சகர்கள் எங்களைப் போன்ற எறும்பு பிடித்து விட்டு கணித்த சாமியார்கள் என எல்லோரையும் ஏமாற்றி முதல் முறையாக உலக கிண்ணத்தில் ஆசிய நாடு தவிர்ந்த இரண்டு நாடுகள் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன.

மீண்டும் இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து கிண்ணத்தை பறிக்கும் என்று ஒரு சாராரும் இல்லை இல்லை மீண்டும் பாகிஸ்தானே வைத்துக்கொள்ளும் என்று இன்னொரு தரப்பும், இன்னொரு ஆசிய நாடு இலங்கை இம்முறை அதை பார்த்துக்கொள்ளும் என்று மற்றொரு சாராரும் நீங்கள் என்ன தான் சொல்லுங்க இந்த முறை ராசி இல்லை என்பதை எல்லாம் உடைத்து தென் ஆபிரிக்கா அல்லது நியூசிலாந்து எடுக்கும் என்றும் எட்டாக்கனிய இம்முறை அவுஸ்திரேலியாவே பறிக்கும் என சொன்ன பலரில் இப்போது ஒன்றே ஒன்றுக்கு மாத்திரமே வாய்ப்பைக் கொடுத்துவிட்டு இறுதிப்போட்டிக்காக காத்திருக்கின்றது சென் லூசியா மைதானம். மேற்கிந்திய ஆடுகளங்கள் துடுப்பாட்டத்துக்கு எந்தளவு ஒத்துழைக்கும் என்ற கேள்வியையும் தாண்டி இந்த திருவிழா நிறைவடையப்போகின்றது. லீக் ஆட்டங்கள் எந்த பரபரப்பும் இன்றி மழையுடன் சேர்ந்து ஆடப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட அணிகள் சூப்பர் எட்டு ஆட்டத்துக்குள் வந்தன. முதலிலே வெளியேறப் போகிறது என அதன் ஆட்டத்தை வைத்து கணிக்கப்பட்ட பாகிஸ்தான் இன்றைய போட்டியின் இறுதி மூன்று பந்துகள் வரை இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணியாக மாறியது. ஆனால் இது பெரும்பாலும் அவர்களுக்கு இருந்த அதிஸ்டமே. காரணம் சாம்பியன்கள் போல அவர்கள் ஆட்டம் இருக்கவில்லை. இறுதிக்கு வர என்னை பொறுத்தவரை பாகிஸ்தான் அணிக்கு இந்த முறை தகுதி இல்லை. அடுத்தவன் போட்ட பிச்சையில் உள்ளே நுழைந்து கிண்ணத்தை எடுத்தால் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடும் அணிகள் என்ன செய்வது. எனவே அரை இறுதியில் பாகிஸ்தானுக்கு அவுஸ்திரேலியா கொடுத்த அடி மகா அடியே.


பெரிதும் எதிர்பார்க்கப்பட தென் ஆபிரிக்கா அடிமேல் அடி வாங்கி வெளியேறி விட்டது. ஆரம்பத்தில் அசுர ஆட்டம் ஆடினாலும் பின்னைய இவர்களின் ஆட்டம் உப்பு சப்பு இல்லாமல் போய்விட்டது. புது இரத்தம் கொஞ்சம் பாய்ச்சுவது நல்லது. மறு புறம் கறுப்புக் குதிரைகளின் சோகம் தொடர, அவர்களும் வெளியேறினர். சிங்கங்கள் விண்ணர்கள் என சொல்லப்பட்ட இந்தியாவோ மரண அடியும் அவமானமும் சேர ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டது. இந்தமுறை கிண்ணம் வெல்ல ஒரு தகுதியான ஆட்டம் கூட வரவில்லை இவர்களிடம் இருந்து. மறுபக்கம் இந்தியா இலங்கை பிச்சை போட்டால் தாங்கள் கோடீஸ்வரர் என்ற நிலையில் ஆடிய மேற்கிந்தியா சொந்த நாட்டிலேயே பல்லுக்கற்றப்பட்ட ஒரு போட்டியாக சூப்பர் எட்டு ஆட்டங்களின் இறுதிப்போட்டியை ஆடி வெளியேறினர்.


இவை எல்லாம் இப்படி சொதப்பல் மேல் சொதப்பி வெளியேற உள்ளே வந்தஅணிகள் எப்படி வந்தன என்றால் பாகிஸ்தானின் வண்டவாளத்தை பற்றி சொல்லி விட்டேன். அடுத்து நம் இலங்கையர்கள் சனத் ஜெயசூரிய என்ற அற்புத வீரர் இப்போது செத்த பாம்பாக ஆட ஒட்டு மொத்தமாக மகெலவை நம்பி ஆடிய இவர்களுக்கு மற்ற வீரர்கள் சில நேரங்களில் கைகொடுத்தாலும் இம்முறை அணியை தாங்கியது மகேலதான் லீக்கில் தாடுத்தடுமாரி ஆடி சூப்பர் எட்டில் நுழைந்தவர்கள் வீறு கொண்டு எழுவார்கள் என்றால் அவர்கள் செய்ததை பார்த்தல் எரிச்சல் தான் வந்தது. சூப்பர் எட்டில் மேற்கிந்தியாவை வென்று நம்பிக்கையோடு காத்திருந்தவர்களை சுருட்டிப்போட்டது அவுஸ்திரேலியா. இந்த போட்டியில் முதலில் இலங்கையால் கட்டுப்படுத்தப் பட்ட அவுஸ்திரேலியா ஹசியின் அற்புத ஆட்டத்தால் மீள எழுந்து மடக்கியது. இதனால் இந்தியாவுடன் ஆடும் போட்டியில் வென்றால் தான் வாழ்வு என்ற நிலையில் வேங்கைகள் போல ஆடி அந்த போட்டியில் வென்று அரை இறுதிக்குள் நுழைந்தார்கள். அந்தப் போட்டியில் பெற்ற வெற்றி அற்புதமானது அபாரமானது. ஆனால் போட்டியின் பின் சங்ககார சொன்னதை நினைக்கும்போது அந்த வெற்றி அசிங்கமானதாக எனக்கு தோன்றியது. அதாவது தாங்கள் முதலில் குறிப்பிட்ட அந்த ஓட்டங்களை எடுத்து இந்தியாவை வெளியேற்றுவதே குறிக்கோளாக ஆடினோம் என்றார். முன்னணி வீரர்கள் ஏமாற்ற இளைய மத்தியூஸ்,கபுகேதரவின் அபார ஆட்டத்தில் வென்ற அந்த போட்டியை இப்படி சொல்லி கேவலப்படுத்தியதாக எண்ணுகின்றேன். அணியின் தலைவராக வேறு ஒருவர் மாரப்போகின்றார் என்று பேச்சு இருக்கின்றது. உண்மையில் நல்ல விடயம் சங்கா தலைமையில் சில போட்டிகளில் அணி நன்றாக ஆடினாலும் ஏனோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கின்றது. சங்கா என்னும் நல்ல வீரரும் காணாமல் போய் அனாகரிகமாகிவிட்டார்.




மறுபக்கம் எந்த தடுமாற்றமும் இல்லை. எந்த தடங்களும் இன்றி தாங்கள் ஆடிய போட்டிகளில் அபார வெற்றிகளை அசுர பலத்துடன் பெற்று இங்கிலாந்தும்(லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியவுடன் டக்வேர்த் லூயிஸ் முறையில் தோற்றாலும் அந்த போட்டியில் குவித்த ஓட்டங்களை மறக்ககூடாது.) அவுஸ்திரேலியாவும் அரை இறுதியை எட்டின. இதில் இங்கிலாந்தின் வெற்றி ஆர்பாட்டம் இல்லாமல் பெறப்பட அவுஸ்திரேலியா தன வழக்கமான ஸ்டைலில் அடக்கி ஒடுக்கி
வென்று வந்தது.


இந்த நிலையில் தான் நடை பெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் இம்முறை கிண்ணம் வெல்ல தமக்கு எந்த தகுதியும் இல்லை. தாங்கள் வேறு அணிகள் உள்ளே வர முடியாத நிலையில் உள்ளே வந்துவிட்டோம் என சொல்லாமல் சொன்னனர் இலங்கை வீரர்கள். வழக்கம் போல சனத் சாக்கடை அட்டம் ஆட மஹேல ஏமாற்றிவிட்டார். இனி அதோ கதிதான் என்று வீரர்கள் அணிவகுப்பு நடத்த மத்தியூசின் காப்பாற்றல் ஆட்டம் காரணமாக ஓரளவு ஓட்டங்களை பெற முடிந்தது. இல்லையேல் நூறு ஓட்டங்களை கூட பெற்றிருக்க முடியாது. இந்த நிலையில் தன முதலாவது குழந்தை மண்ணில் பிறந்ததை பார்த்துவிட்டு வந்த பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்கும் தான் ஒரு தந்தை என்பது போல ஒழுங்காக துடுப்பாட்டத்தில் வழிநடத்தி வெற்றி பெற்றுக்கொடுத்தார்.


இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக இறுதிப்போட்டி ஒன்றில் இங்கிலாந்து ஆட இருக்கின்றது. அதேநேரம் கடந்த ஆறு வருடங்களில் இங்கிலாந்து ஐ.சி.சி நடத்தும் ஒரு பெரிய தொடரின் இறுதிப்போட்டியில் ஆடுவது இதுதான் முதல் முறை. இதுவரை எந்த ஒரு பெரிய கிண்ணமும் பெறவில்லை என்ற வெறியோடு இங்கிலாந்து வீரர்கள் நேர்த்தியாக ஆடிவருகின்றனர். பதற்றம் இன்றி அவர்கள் ஆடும் அழகுதான் வெற்றியை தேடிக் கொடுக்கின்றது. நீண்ட காலத்தின் பின் இறுதிப் போட்டி ஒன்றில் ஆடும் இவர்கள் கிண்ணம் வென்று தங்கள் கறுப்பு சரித்திரத்தைஅழிப்பதோடு புது சரித்திரம் படைக்க காத்திருக்கின்றார்கள்.



மறு பக்கம் இரண்டாவது அரை இறுதியில் மோதிய பாகிஸ்தான் இறுதி ஓவர் வரை வெற்றியை தன கையில் வைத்திருந்து தாரை வார்த்து விமோசனம் தேடிக்கொண்டது. மறு புறம் அவுஸ்திரேலியாவோ மன்னிக்கவும் இதில் ஹசியை தனியே குறிப்பிடுவது பொருத்தம் ஹசி என்னும் அற்புத கிரிக்கெட்டரால் முதன் முறையாக இருபது ஓவர் போட்டிகளின் உலக கிண்ண இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளது. இறுதியில் இவர்கள் வென்றாலும் அது புது சரித்திரம் தான். காரணம் ஐ.சி.சி. நடத்திய அத்தனை பெரும் தொடர்களிலும் சாம்பியன் ஆனா அணி இங்கே விட்ட குறையை தீர்த்துக் கொள்ளும். மீண்டும் இறுதிப்போட்டியில் நுழைந்து பாகிஸ்தான் வரலாறு படைக்கும் என எண்ணிய நிலையில் அவர்கள் வாயில் மண்ணை போட்டுள்ளது ஆஸி. ஆரம்பத்தில் அதிரடியாய் ஆட்டி அற்புதமாக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் பந்துவீச்சிலும் அசத்தி அவுஸ்திரேலியாவுக்கு சாவு மணி அடித்துக்கொண்டிருக்க தனி மனிதனாக ஹசியின் ஆட்டம் எல்லாவற்றையும் மாற்றியது. ஹசி தன வாழ் நாளில் மறக்க முடியாத இன்னிங்க்ஸ் அது. கனவான்களின் ஆட்டம் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட்டில் நிச்சயம் நான் பார்த்த ஒரு கனவான துடுப்பாட்டம் அது. இறுதி பதினாறு பந்துகளில் ஐம்பத்தாறு ரன்கள் .வெறும் இருபத்திநான்கு பந்துகளில் ஆட்டமிழக்காமல் அறுபது ஓட்டங்கள். இதில் ஆறு ஆறு ஓட்டங்கள் வேறு. இறுதி ஓவரில் பதினெட்டு ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இறுதி ஓவரை எதிர்கொண்டது மிச்சல் ஜோன்சன் எனவே பாகிதானுக்கு தோல்வி இல்லை என எல்லோரும் நம்பியவேளை முதல் பந்தில் ஜோன்சன் ஒரு ஓட்டத்தை தட்டி விட்ட ஹசி விஸ்வரூபம் ஆரம்பமானது. இரண்டாவது பந்தில் இமாலயமான ஒரு ஆறு ஓட்டம் அடுத்த பந்திலும் அதே அதிரடி, அடுத்த பந்தில் நான்கு ஓட்டங்கள் பெறப்பட இதய வேகம் அதிகரித்தது. மீண்டும் ஒரு இமாலயமான சிக்ஸ்சருடன் பாகிஸ்தானுக்கு சங்கை ஊதினார் ஹசி.

இதுவரை மூன்று தடவி ஐம்பது ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு வந்தும் கிண்ணத்தை வெல்லாத இங்கிலாந்து மீண்டும் ஒரு இறுதிப்போட்டிக்கு வந்திருக்கின்றது. சரியாக இருபத்து மூன்று வருடங்கள் கழித்து இந்த இரு அணிகளும் மீண்டும் உலக கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில் மோத இருக்கின்றன. 2004ஆம் ஆண்டு மினி உலக கின்னப்போட்டிகளில் இறுதிவரை வந்து மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து இன்றுவரை பெரிய கிண்ணங்களை கைப்பற்றாத இங்கிலாந்து இம்முறை அந்த பழியை துடைக்குமா? அல்லது எல்லாவகை கிரிக்கெட்டிலும் சாதித்தும் இந்த வகை தனக்கு சரிவராது என ரிக்கி பாண்டிங் ஒதுங்கிக்கொள்ள கிளார்க் தலைமையில் வீறுநடை போடும் அவுஸ்திரேலியா வரலாறை புதுப்பிக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். பலம் என்று பார்த்தால் இந்த தொடரில் இரண்டு அணியும் அசுர பலத்துடன் இருக்கின்றது. ஆனால் சிக்கலான நேரத்தில் சிறப்பாக ஆடுவது அவுஸ்திரேலியாவின் பலம் ஆனால் இதை எல்லாம் தாண்டி இம்முறை சாதனை படைக்குமா இங்கிலாந்து என்பதே அனைவரின் கேள்வியும்.


முக்கிய குறிப்பு: நடு இரவிலும் முழித்திருந்து இந்த இடுகையை இட்டுள்ளேன். எனவே உங்கள் பொன்னான வாக்கை இட்டு அந்த விழிந்திருந்து இட்ட இடுகைக்கு ஒரு அர்த்தம் தந்தால்என்ன?
Share:

Thursday, May 13, 2010

நாடு திரும்பியதும் இதை காட்டுவோம் - தோனி பெருமிதம்.


கடந்த பதிவில் வாக்குப்போட்டு உற்சாகம் தாருங்கள் என்று கேட்டதற்க் கிணங்க நீண்ட நாட்களின் பின் இருபது வாக்குகளை தொட வைத்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள். ஐ.சி.சி T20 உலகக்கிண்ண போட்டிகள் இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கும் நிலையில் நடை பற்ற நிகழ்வுகளை வைத்துக்கொண்டு போட்டோ கொமண்ட்ஸ் போட்டிருக்கேன். இந்தப் பதிவிற்கும் வாக்குப் போட்டு ஊக்கம் தந்தால் நான் என்ன வேண்டாம் என்றா சொல்லப்போறேன்.

இது யார் மனதையும் புண்படுத்த அல்ல ரசிக்க மட்டுமே. ரசியுங்க இதை விட நல்ல கொமண்ட்ஸ் போடா உங்களால் முடியும் பார்க்கும் போது யாருக்காவது ஏதும் தோன்றினால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.





























Share:

Friday, May 7, 2010

T20 உலகக்கிண்ணம் வெல்லும் வாய்ப்பு இலங்கைக்கு? சுவாரஷ்யங்கள்,கணிப்புகள்,முடிவுகள்.



T20 உலக கிண்ண மூன்றாவது போட்டிகள் ஆரம்பமாகி சுவாரஸ்யமில்லாத முதல் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்து இப்போது சூப்பர் எட்டு போட்டிகளும் களை கட்டத்தொடங்கி விட்டன. முதல் சுற்றுப்போட்டிகளை பொறுத்தவரை எதிர்பார்த்தது போலவே பலமான அணிகள் வென்று சூப்பர் எட்டுக்குள் வந்திருக்கின்றன. குழு ஏயை பொறுத்தவரை தற்போதைய உலக சாம்பியன் பாகிஸ்தான் பங்களாதேஷை இலகுவாக வென்றாலும் பங்களாதேஷே கொஞ்சம் அசைத்துப்பார்த்த அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பெற தன் முழுபலத்துடன் அவுஸ்திரேலியா முதலாமிடம் பிடித்தது.

குழு பியில் மோதிய அணிகளில் இலங்கை அணி இம்முறை தட்டுத்தடுமாறி அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது. நியூசிலாந்திடம் தோல்வி சிம்பாவேயிடம் டக்வேத் லூயிஸ் முறைப்படி வெற்றி என்று தன் முழு பலத்தை இன்னும் காட்டவில்லை. முரளி விளையாடுவாரா என்பதும் கேள்வியே? கடந்தமுறை பெரிதும் கைகொடுத்த டில்ஷான் ஏமாற்ற இம்முறை மஹேல கைகொடுக்கின்றார். மறுமுனையில் பயிற்சி ஆட்டங்களில் அசத்திய சிம்பாவே அப்படியே பதுங்கிக்கொள இம்முறை வீறுநடை போடுகின்றது நியூசிலாந்து.

குழு சியை பொறுத்தவரை முதலாவது T20 சாம்பியன் இந்தியா ஆப்கானிஸ்தானையும் தென் ஆபிரிக்காவையும் வென்று முதலாம் இடம் பிடிக்க தென் ஆபிரிக்கா இரண்டாம் இடம் பிடித்தது. இதில் இந்தியாவுடனான போட்டியில் துடுப்பாட்டாத்தில் ஓரளவும் களத்தடுப்பில் அசத்தலும் காட்டிய ஆப்கானிஸ்தான் தென் அபிரிக்காவிடம் தன் விக்கெட்டுக்களை அடுத்தடுந்து இழந்து தோற்றது ஆனால் பலமான தென் ஆபிரிக்கா மிகப்பெரிய ஓட்டங்களை குவிக்க முடியாமல் கட்டுப்படுத்தியது.

குழு டியில் ஆடும் அணிகளில் அயர்லாந்தையும் இங்கிலாந்தையும் அபாரமாக வென்று இம்முறை அசத்திக்கொண்டிருக்கின்றது போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள். அவர்களை தொடர்ந்து இம்முறையும் பெரிய ஆர்பாட்டம் இல்லாமல் சூப்பர் எட்டுக்குள் இங்கிலாந்து நுழைந்துள்ளது. அயர்லாந்து எந்த பரபரப்பையும் கொடுக்காமல் வெளியேறியுள்ளது.

நேற்று நடந்த சூப்பர் எட்டு ஆட்டங்கள் உட்பட மற்ற விடயங்களை பார்க்க முதல் நடந்து முடிந்த போட்டிகளில் இடம்பெற்ற சுவாரஷ்யங்களை பார்ப்போம். இந்த தொடரை பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகள் அதிகபட்சமாக நூற்றுதொன்நூற்றொரு ஓட்டங்களை குவித்துள்ளன. சராசரியாக பார்க்கும் போது கடந்த தொடர்களை விட இம்முறை ஓட்டக்குவிப்பு குறைவடைந்துள்ளது. அதேபோல ஒரு அணி மொத்தமாக பெற்ற குறைவான ஓட்டங்கள் என்ற வேதனை மிகு சாதனையை படைத்த அயர்லாந்து வெறும் அறுபத்தெட்டு ஓட்டங்களை மேற்கிந்திய அணிக்கெதிராக பெற்று உலககிண்ண வரலாற்றில் ஆகக்குறைந்த ஓட்டங்களை பெற்ற அணியானது. இந்த வரிசையில் மூன்றாம் இடத்தினை தென் ஆபிரிக்காவுடன் மோதிய ஆப்கானிஸ்தான் என்பது ஓட்டங்களை பெற்று பதிவு செய்தது. இவர்களை விட கொஞ்சம் அதிகம் பெற்ற சிம்பாவே அணி எண்பத்திநான்கு ஓட்டங்களுடன் ஏழாம் இடம் பெற்றது நியூசிலாந்துடனான போட்டியில்.




தனி நபர் அதி கூடிய ஓட்டத்தை பார்த்தால் இந்த வகை போட்டிகளில் எப்போதும் அசத்தும் இந்தியாவின் சுரேஷ் ரைனா தென் ஆபிரிக்காவுடனான போட்டியில் நூற்று ஒரு ஓட்டங்களை பெற்று உலக கிண்ணத்தில் தனி நபர் ஒருவர் பெற்ற இரண்டாவது அதிகூடிய ஓட்டத்தை பதிவு செய்தார். அவரை போலவே இலங்கையின் மஹேல சிம்பாவேயுடனான போட்டியில் நூறு ஓட்டங்களை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டார். இவர்களை விட இம்முறை துடுப்பாட்டாத்தில் வேறு யாரும் இந்த சாதனையை படைக்கவில்லை. கிரிஸ் கெயிலுடன் சேர்ந்து இந்த மூவருமே உலகக்கிண்ணத்தில் சதம் கண்டவர்கள். ஒரு போட்டியில் விளாசப்பட்ட சிச்சர்கள் என்று பார்த்தால் இம்முறை ஐந்து சிச்சர்கள் மட்டுமே விளாசப்பட்டுள்ளன ரைனா, டேவிட் ஹசி, அல்பைல் மோர்கல் ஆகியோரே அவர்கள். இவர்கள் மூவரும் கடந்த தொடர்களுடன் ஒப்பிட்டால் எட்டம் இடத்துக்கு பின்னரே நிற்கின்றனர்.

இனி பார்க்கப்போவது சில சுவாரஷ்யமான விடயங்கள். மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெறும் நான்கு சிச்சர்களே பெறப்பட்டன. இதில் அயர்லாந்து ஒரு சிக்ஸ்சும் பெறவில்லை என்பது இன்னொரு சுவாரஷ்யமானது. அதேநேரம் இந்த தொடரில் அதிகூயய ஓட்டம் பெறப்பட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணி தன் இறுதி ஓவரில் எந்த ஓட்டமும் பெறாமல் தன் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து புது சாதனை ஒன்றுக்கு வழிசமைத்தது. சிம்பாவே இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிம்பாவே எந்த ஒரு நான்கு ஓட்டமோ அல்லது ஆறு ஓட்டமோ பெறாமல் அந்த போட்டியும் நிறைவடைந்தது. அதேபோல சிம்பாவே நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த ஒரு சிக்ஸ்சும் பெறப்படாமல் ஒரு போட்டி நிறைவுக்கு வந்தது. மழையால் இடையில் கைவிடப்பட்ட இங்கிலாந்து அயர்லாந்து போட்டியில் ஒரு சிக்ஸ் மாத்திரமே பெறப்பட்டது.

பந்துவீச்சின் ஆதிக்கம் வழக்கத்தை விட இதுவரை நடந்த போட்டிகளில் இருந்தது காணக்கூடியதாக இருந்தது. அடுத்து நாங்கள் இப்போது நடைபெறும் சூப்பர் எட்டு ஆட்டங்களை பார்த்தால் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் முற்று முழுதாக இங்கிலாந்து தன் ஆதிக்கத்தை காட்டி வென்றிருக்கின்றது. உலக சாம்பியனாக போட்டிகளில் பங்கு பற்றும் பாகிஸ்தான் அதை இதுவரை நிரூபிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானின் துடுப்பாட்டம் பலமானதாக தென்பட்டாலும் நேற்று நடந்த ஆட்டத்தில் அவர்களின் அசமந்தப்போக்கே தோல்விக்கு காரணம். துடுப்பெடுத்தாடும் போது தேவையற்ற ரன் அவுட்டுகள், களத்தடுப்பின் போது பிடிஎடுக்க விட்ட தவறுகள் என சின்ன பிள்ளைகளின் அழுகுணி ஆட்டம் அவர்களை தோல்வியடைய வைத்தது. நேர்த்தியாக ஆடிய இங்கிலாந்து வெற்றியை பெற்றது. பீட்டர்சன் மீண்டும் நல்ல நிலைக்கு வந்தது அவர்களுக்கு இன்னும் பலம்.



அடுத்து நடந்த நியூசிலாந்து மற்றும் தென் ஆபிரிக்காவிற்கு இடையிலான போட்டி மிக சுவாரஷ்யமாக இருந்தது. இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் ஆடிய தென் ஆபிரிக்கா நூற்று எழுபது ஓட்டங்கள் குவித்தது. ஆரம்பத்தில் மெதுவாக ஆடியவர்கள் போகப்போக வேகமேடுத்தனர். பதிலுக்கு நியூசிலாந்து அணி ஆடியபோது பார்வையாளர் ஒருவர் இது ஐம்பது ஓவர் போட்டியல்ல இருபது ஓவர் போட்டி என்ற பதாகை ஒன்றை காட்டியதை காணக்கூடியதாக இருந்தது. அந்தளவிற்கு ஆமை வேக ஆட்டம் ஆடினாலும் இறுதியில் வெற்றியை நெருங்கிவந்து கோட்டை விட்டனர். ஆனால் இந்த போட்டியை பார்த்துக்கொண்டிருந்த போது எனக்குள் எழுந்த கேள்வி அடித்தாட வேண்டிய நிலையில் வெட்டோரி தான் முதலில் வராமல் இறுதி நிலையில் களம் இறங்கியது ஏனோ? முதலில் இறங்கி அடித்தாடி இருந்தால் சிலவேளை நியூசிலாந்து வென்றிருக்கலாம். ஆனால் நேற்றைய போட்டியில் தென் ஆபிரிக்காவின் களத்தடுப்பு அபாரமாக இருந்தது. உலகின் எந்த அணியைவிடவும் களத்தடுப்பில் தென் ஆபிரிக்கா தான் சிறந்தது என்பது என் கருத்து. துடிப்பு குழுவாக செயற்ப்பட்டமை நிதானம் என்று எல்லாம் கூடி வர வெற்றி தேடி வந்தது.

இன்றைய தினமும் இரண்டு போட்டிகள் இடம்பெற உள்ள நிலையில் சூப்பர் எட்டில் ஆடும் அணிகளின் பலம் பலவீனத்தை மேலோட்டமாக பார்ப்போம். முதலில் தற்போதைய சாம்பியன் பாகிஸ்தான். சமி,ஆஷிப் இரண்டுபேரும் குள் இல்லாததை ஓரளவு நிரப்புகின்றனர். துடுப்பாட்டத்தில் கமரன் அக்மல், பட் இரண்டுபேரும் நல்ல போர்மில் இருக்கின்றனர் ஆனால் அணித் தலைவர் அப்ரிடி இன்னும் தன் பூம் பூமைக்காட்டவில்லை. பொதுவாக பார்க்கும் போது பலமான அணியாக தெரிந்தாலும் இந்த தொடரில் இன்னும் பாகிஸ்தான் தான் சாம்பியன் என்பதைக் காட்டவில்லை. ஆனால் இவர்களை பற்றி சொல்லத் தெரியவில்லை. சிலவேளை இம்முறையும் கிண்ணத்தைக் கொண்டு போனாலும் ஆச்சரியமில்லை.

அடுத்து அவுஸ்திரேலியா அணி. எல்லா இடத்திலும் ஆண்டாலும் இன்னும் இந்த வகைப்போட்டிகள் கைகூடவில்லை. பதினொரு வருடங்களின் பின்னர் ரிக்கி பாண்டிங் இல்லாமல் வேறு ஒருவர் தலைமையில் உலக கிண்ணம் ஒன்றில் அவுஸ்திரேலியா களமிறங்கி உள்ளது. பாகிஸ்தானை பஞ்சாமிர்தம் ஆக்கினாலும் பங்களாதேஷ் பங்காளிகளை கொஞ்சம் ஆட்டிப்பார்த்ததால் எனக்கு என்னவோ இவர்களில் நம்பிக்கை குறைவு. பலம் அதிகம், அதேநேரம் இம்முறை நம்பிக்கை தரும் படி ஆடினாலும் இதே குழுவில் இவர்கள் சூப்பர் எட்டில் மோத வேண்டிய இலங்கை அதிர்ச்சி வெற்றி ஒன்றையும் முதலாவது உலககிண்ணத்தில் இருந்த அசுர பலத்துடன் இருக்கும் இந்தியாவிடம் மரண அடியும் வாங்கும் வாய்ப்பு இருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது. மேற்கிந்திய தீவுகளும் சிலவேளை வைத்தியம் கொடுக்கலாம்.



அடுத்து இலங்கை. மஹேல மட்டுமே இம்முறை முழு பலம். சனத்தை பின்வரிசையில் இறக்கி டில்ஷானுடன் மகெலவை இறக்குவதை விட சனத்தையும் மகேலவையும் இறக்குவது நல்ல பலனை தரும் என எண்ணுகின்றேன். டில்ஷானின் பாஷா இம்முறை பலிக்காமல் இருப்பதால் இந்த முறை இலங்கைக்கு கொஞ்சம் கடின இலக்கே. இருப்பினும் அதிஷ்டமும் அணியாக விளையாடும் போராட்ட குணமும் கை கொடுத்தால் பார்க்கலாம் மீண்டுமொரு முறை இறுதியில்.

அடுத்தவர்கள் நியூசிலாந்து. தகுதி இருக்கு தலைக்கனம் இல்லை, திறமை இருக்கு அதிஷ்டம் இல்லை இதுதான் இந்த கறுப்பு குதிரைகளுக்கு வழக்கமாக நடக்கும் கறுப்பு சரித்திரம். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் பலர் சகல துறையிலும் பிரகாசிக்கும் வல்லமை படைத்தவர்கள். ஆனால் தென் ஆபிரிக்காவுடனான மந்தமான ஆட்டத்தால் வந்த தோல்வி இவர்களின் அரை இறுதி வாய்ப்புக்கு இன்னும் போராட வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆபிரிக்கா. இதுவரை எந்த ஒரு பெரிய தொடரிலும் சாம்பியன் ஆனதில்லை. ஆனால் எப்போதும் சமச்சீர் பலம் கொண்ட அணி. வழக்கமாக வில்லனாகும் மழை இம்முறை நடக்கும் தொடரில் வீரர்களை விட சிறப்பாக தன் ஆட்டத்தை காட்டுவதால் இம்முறையும் துரதிஷ்டம் துரத்துமா தெரியவில்லை. நேற்றைய வெற்றியுடன் பாகிஸ்தான் அல்லது இங்கிலாந்தை வென்றால் அரை இறுதி உறுதி. என்னை பொறுத்தவரை இது இலகுவான ஒன்று. இப்போது வரை தீர்க்கமாக அரை இறுதி செல்லும் என்று என்னால் சொல்லக்கூடிய அணியும் இது மட்டும் தான்.



அடுத்து முன்னாள் சாம்பியன்கள் இந்தியா. சேவாக் இல்லை உடல் நிலை சரியிலாமல் கடந்த போட்டியில் கம்பீர் இல்லை. விஜயின் அதிரடி இல்லை என்று தொடக்க ஜோடி குழம்பிக்கொண்டிருந்தாலும் அடுத்து வருபவர்கள் பக்கா போர்மில் இருக்கின்றனர். விஜய்-கம்பீர் ஜோடி மீண்டு வந்து சேவாக் இல்லாத குறையை தீர்த்தால் தொடர்ந்து வான வேடிக்கை காட்ட ரைனா ரெடி. அவரை தொடர்ந்து form இல்லாமல் இருந்து அதை மீட்டெடுத்த யுவராஜ் இம்முறையும் முதல் தொடர் போல பக்கா போர்மில் இருந்து மிரட்டுவதால் கிண்ணம் வெல்லும் வாய்ப்பு இருக்கின்றது. போட்டியை எப்படி முடிக்க வேண்டுமோ அப்படி முடிக்க தோணி ரெடி. பந்து வீச்சுதான் கொஞ்சம் பலவீனமாக இருக்கின்றது. களத்தடுப்பை சரி செய்தால் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இங்கிலாந்து பாகிஸ்தானை வென்று விட்டது தென் ஆபிரிக்காவை வெல்வது கடினமாக இருந்தாலும் நியூசிலாந்தை அசைத்து அரை இறுதிக்குள் நுழையலாம். அதே நேரம் மேற்கிந்திய தீவுகளும் ஏதும் ஆச்சரியங்களை கொடுத்தாலும் ஆச்சரியமில்லை. ஒட்டு மொத்தமாக பார்த்தால் தென் ஆபிரிக்காவுடன் நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து அரை இறுதிக்கு இந்த குழுவில் இருந்து தெரிவாக மறுமுனையில் இந்தியா, இலங்கை,அவுஸ்திரேலியா அணிகள் தமக்குள்ள கடுமையான போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.



இவை எல்லாம் பலம் பலவீனம் என்று வைத்து நான் அலசி ஆராய இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் படி என் தங்கை இம்முறை சாம்பியனையே கணித்து விட்டாள். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் அவள் அவுஸ்திரேலிய அணியின் விசிறி. கடந்தமுறை பாகிஸ்தான் தான் சாம்பியனாகும் என்று சொல்லி அவர்கள் சாம்பியனானவுடன் எனக்கு கரி பூசியவள், என்ன சொன்னாள் தெரியுமா? முதலாவது தொடரில் இறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின அதில் இந்தியா வென்றது. அடுத்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை மோதின இதில் பாகிஸ்தான் வென்றது. அதாவது கடந்தமுறை இரண்டாமிடம் பெற்ற அணி சாம்பியனானது. எனவே இம்முறை இறுதியில் இலங்கையுடன் வேறு ஒரு அணி மோதும் ஆனால் இலங்கை சாம்பியனாகுமாம்? இது எப்பிடி இருக்கு?
Share:

Sunday, September 27, 2009

சொதப்பல் ஆட்டம் ஆடிய இந்தியாவும் சாதித்து காட்டிய பாகிஸ்தானும்.



இங்கேயும் வெற்றி இல்லை.

இம்முறை நடைபெறும் ஐ.சி.சாம்பியன் கிண்ண தொடரின் மிக முக்கியமான போட்டியாக நடை பெற்ற போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின. சுவாரஷ்யத்துக்கு பஞ்சமில்லாமல் நடந்த போட்டியில் இந்தியா ஏமாற்றி விட்டது. நாணய சுழற்ச்சியில் பாகிஸ்தான் வென்றவுடன் முதலில் தாங்களே துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார் பாகிஸ்தான் அணித்தலைவர். காயத்திலிருந்து மீண்டு வந்த யூனுஸ், இந்த போட்டியில் எப்படியும் இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம் என சொன்னதை சாதித்து காட்ட முதல் படியாக நாணய சுழற்சியில் வென்றார்.


துடுப்பாட்டத்தில் விட்டதை துடிப்பாக ஆடி ஈடுகட்டியவர்.

இம்ரான் நசீர்-கம்ரான் அக்மால் இணையை நீண்ட நேரம் நிலைக்கவிடாமல் நசீரை நெஹ்ரா அனுப்பி வைத்து இந்தியாவிற்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். தொடர்ந்து கம்ரான் அக்மாலையும் குறித்த இடைவெளியில் அவரே அனுப்பி வைக்க, அணித்தலைவர் யூனுஸ் கானை ஹர்பஜன் பார்த்துக்கொண்டார். நன்றாக போய் கொண்டிருந்த இந்த பயணத்தில் மாலிக் - முஹம்மத் யூசுப் ஜோடி இடியை கொடுக்க ஆரம்பித்தது. எந்த பந்து வீச்சாளராலும் இந்த இணையை பிரிக்க முடியாமல் போனது. இதற்குள் இந்திய அணியின் களத்தடுப்பு உலகத்தரம் வாய்ந்த ஒரு அணியிடம் இருக்க வேண்டிய களதடுப்பா இது என கேட்கவைத்தது. ஓட்டங்களை இவர்கள் பெற்றுக்கொடுக்க பாகிஸ்தானின் ஓட்ட எண்ணிக்கையும் அசுர வளர்ச்சி கண்டது. மாலிக் வழக்கம் போல இந்தியர்களை அடித்து துவைத்தார். மீண்டும் ஒரு சதம் கண்ட அவரின் துடுப்பாட்டம் மற்றவர்களுக்கு பாடமாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிரிடி ஏமாற்ற பாகிஸ்தான் ஐம்பது ஓவர் முடிவில் ஓட்டங்களை பெற்றது.


இந்தியாவின் கனவை தகர்த்த ஜோடி.

நம் இந்தியர்கள் தான் துடுப்பாட்ட சூரர்களாச்சே. அதுவும் கம்பீரும் வந்திருக்கிறார் கலக்குவார் என்னும் நம்பிக்கையில் காத்திருக்க சச்சினும் கம்பீரும் நன்றாக தான் தொடங்கினர். ஆனால் வழக்கமாக முக்கிய ஆட்டங்களில் சொதப்பும் சச்சின் இங்கேயும் அந்த நோயை ஆரம்பித்தது வைத்தார். ஆனால் தொடர்ந்து வந்த திராவிட் நம்பிக்கை கொடுக்க அடித்து பிளந்து கொண்டிருந்தார் கம்பீர். திராவிட் ஆமை ஆட்டம் ஆட கம்பீர் அனல் பறக்கும் ஆட்டம் நம்பிக்கை தந்தது. அந்த நம்பிக்கை நெடுநேரம் நீடிக்கவில்லை. அநியாயமாக ரன் அவுட் முறையில் கம்பீர் வெளியேற இந்தியாவின் வெற்றியும் அவர்களை விட்டு வெளியேறி விட்டது. இருந்தாலும் இந்திய ரசிகனாக இன்னும் நம்ம தோணி,ரெய்னா,யுஸுப் எல்லாம் இருக்கிறார்களே பார்க்கலாம் என நானும் ஆவலாக இருந்தேன்.


மீண்டு வந்து பலியாகிய சூரர்.

ஷேவாக் இல்லாதது ஆரம்பத்தில் தெரிய இடை வரிசையில் ஆடும் யுவராஜ் வெளியேற அந்த இடத்துக்கு வந்த கோலி கலக்குவார் என நம்பி இருக்க ஓரளவிற்கு அடித்து ஆடினார். இந்த நிலையில் ஆமை வேகத்தில் இருந்து திராவிட் அதிரடிக்கு மாறினார். இதை பார்த்து தானும் அதிரடிக்கு மாறிய கோலியின் அனுபவமினமையால் அவரும் நடையைக் கட்டினார். தொடர்ந்து வந்த அணித்தலைவர் தனக்கும் போட்டிக்கும் சம்பந்தமில்லை என்பது போல உப்பு சப்பு இல்லாமல் ஆட நீங்கள் போய் வாருங்க என அபிரிடி அனுப்பி வைத்தார். அதன் பின் வந்த ரெய்னா டிராவிட்டுடன் இணைந்து வெற்றியை நோக்கி கொண்டுவந்தார். இருவரும் இணைந்து பாகிஸ்தானை பந்தாட திராவிட் தன அரை சதத்தை கடந்து தன்னை இவ்வளவு நாளும் ஒதுக்கி வைத்த தெரிவாளர்களுக்கு சாட்டைஅடி கொடுத்தார்.


தன் பங்குக்கு அசத்தியவர்.

ஆனால் இந்த சந்தோஷமும் நெடுநேரம் நீடிக்கவில்லை.ரெயினாவும் நாற்பத்தாறு ஓட்டங்களோடு வெளியேற கனவு களைய தொடங்கியது. அப்போதும் டிராவிட்க்கு யுஸுப் கை கொடுப்பார் என எதிர்பார்க்க கைவிட்டு விட்டார். இறுதி நம்பிக்க ஹர்பஜனிடம். அதை காப்பாற்றும் படி ஹர்பஜன் ஆடினாலும் மீண்டுமொருமுறை முட்டாள் ஆட்டமாடிய திராவிட் இம்முறை தன விக்கெட்டை பரிதாபமாக பறி கொடுத்து நடையைக் கட்டினார். அத்துடன் இந்தியா ஜெயிக்கும் எனும் கனவும் கலைய தொடங்கியது.


தன்னை ஒதுக்கியவர்களுக்கு சாட்டை கொடுத்து விட்டு கரை சேர்க்க முடியாமல் போனவர்.

மொத்தத்தில் நீண்ட நாட்களாக திட்டம் தீட்டியது மட்டுமன்றி இந்தியாவை இம்முறை கவிழ்ப்போம் என கூறிய பாகிஸ்தான் வீரர்கள் அதை சாதித்தும் காட்டி விட்டனர். ஆனால் இந்த போட்டியில் சச்சின் உட்பட இந்திய வீரர்கள் பொறுப்பற்ற சொதப்பல் ஆட்டமாடியதே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. இல்லையேல் உலகின் முதல் நிலை அணி இப்படி மூஞ்சியில் கரி படும் படி தோற்றிருக்காது. மொத்தத்தில் இம்முறை கிண்ணம் யாருக்கு என்ற என் கணிப்புகளும் பொய்யாகி வருகின்றன.சிலவேளை பாகிஸ்தானோ ஏன் இங்கிலாந்தோ கிண்ணத்தை சுவீகரித்தலும் ஆச்சரியமில்லை.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox