உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label லண்டன். Show all posts
Showing posts with label லண்டன். Show all posts

Wednesday, June 22, 2011

லண்டன் ரயில்களும் தற்கொலைகளும்



இதமான பனி விழும் காலைப்பொழுது.இலங்கையின் வெள்ளவத்தை தொடர்மாடியில் ஒரு வீட்டில் அலாரம் அடிக்க புத்துணர்ச்சியுடன் அதுதான் இலங்கையில் தன் தாய் தந்தை தங்கையுடன் தான் எதிர்கொள்ளும் இறுதி விடியல் என தெரியாமல் கண்விழித்து கண்ணாடியினூடே கதிரவனை பார்க்கின்றான் கதிர்.

கதிர்!

யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு கால சக்கர ஓட்டத்தில் ஓடி ஓடி இன்று தென் இலங்கை பக்கம் கரை ஒதுங்கி இருக்கும் சராசரித் தமிழன். அன்பான அப்பா அம்மா சுட்டித்தங்கை என அழகான குடும்பம் இருந்தும் அழகான காதல் செய்யப்போய் அழுக்காகி போனதால் வாழ்வை தொலைத்துவிட்டு இறுதியில் வந்து சேர்ந்த இடம் கொழும்பு.

வழக்கம் போல சில பல கணினி கற்கை நெறிகளை முடித்துவிட்டு இலங்கை சராசரிக்குடிமகனின் பெருங்கனவாகிய லண்டன் படிப்பை தொடரவேண்டும் என்பதே அவன் அவா. அவனுக்காகவே அவன் குடும்பமும் கொழும்பில் தங்கிவிட்டது. எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை அடுத்தவருக்கு கெட்டதும் நினைப்பதில்லை என்ற கொள்கையுடன் ஒரு இருப்பதே வயது வாலிபனுக்கான மிடுக்குடன் கொழும்பில் வளம் வந்தான். மீண்டும் சில காதல் விளையாட்டுக்கள் தலையெடுக்க முற்பட்டாலும் அவன் காதல் என்னவோ லண்டன் மீது அமைந்துவிட்டது. படிப்பும் முடிய லண்டன் விசாவை பெறுவதற்கான தகுதிகளை பெறுவதற்கு ஆங்கில பரீட்சை அது இது என எல்லாம் செய்து விட்டு காத்திருக்கின்றான்.

தானுண்டு தன் வேலை உண்டு என அவன் இருந்தாலும் அவன் பெற்றோரை அவர்காலத்து நண்பர்கள் விட்டு வைக்கவில்லை.
"என்ன பெடியனை லண்டன் அனுப்பிற வேலையள் நடக்குது போல" இது கதிரின் அப்பாவின் நண்பர் ஒருவர்.
"பின்னே என்ன செய்றது இந்த நாட்டில அவனை வச்சிருந்து என்ன செய்றது. ஏதோ போய்ட்டான் எண்டால் எங்கட குடும்பமும் தல நிமிர்ந்திடும்." பெருமூச்சோடு ஓய்கின்றது பல ஏக்கங்களை மனதிலே சுமந்து திரியும் கதிரின் தந்தையின் இதயம்.
ஒருவாறு ஒருவருக்கு பதில் சொல்லியாச்சு இருந்தாலும் உவங்க கண்ணு எல்லாம் என்ட பெடியன் மேல பட்டா ஒண்டும் சரிவராது இண்டைக்கு அவனுக்கு சுத்திப்போடணும் என நினைத்துக்கொண்டே நடந்து செல்லும் அவரை பார்த்து சிரிக்கின்றது தினமும் மரக்கறி சந்தையில் பார்த்து பழகிய அந்த முகம்.
"என்ன கணேஷ் அண்ணே இப்பிடியே யோசிச்சுக்கொண்டு போனால் முன்னுக்கு வாறது கூட தெரியாது"
"அட சுந்தரேசா, நான் உங்களை கவனிக்கல என்ன சந்தைக்கோ?"
"ஓமண்ண என்ட மகளும் மருமகனும் இண்டைக்கு மத்தியான சாப்பாட்டுக்கு வீட்ட வரீனமாம். அதுதான் உதில கறியை கிரியை வாங்கிட்டு போவம் எண்டு வந்தன்"
"ஒ அதுசரி உங்க மருமகன் கட்டார் போறதா சொன்னிங்க என்ன மாதிரி எப்ப போறார். அதுக்கு தான் வந்திருக்கினமோ"?
"இல்லை இல்லை அது அந்த ஏஜென்சி காரன் ஏமாத்தி போட்டான். இப்ப இங்கேயே ஒரு பிசினஸ் செய்யலாம் என நினைக்கிறார். என்ன செய்றது எல்லாம் விதி"
"ம ஏதோ என்ட மகனுக்கும் போடா போறம் ஆனால் லண்டனுக்கு உந்த ஏஜென்சியளுக்கு எல்லாம் நான் போகமாட்டேன். எங்களிட்ட எல்லாம் இருக்கு பிறகேன் உந்த ஏமாத்திற கள்ளன்களிட்ட எங்கட காசை"
"என்ன ஸ்டுடென்ட் விசாவோ...?"
"ஓமோம்"
"இப்ப அங்கே கொஞ்சம் கஷ்டம்போல இருக்கு........எல்லாம் ஏற்ப்பாடு பண்ணிட்டியல் தானே"
"அதெல்லாம் ஓகே அவன் அங்க போய் இறங்கிட்டான் எண்டா அப்புறம் எல்லாம் ஓகே"
"ஏதோ பார்த்து நல்லதை செய்யுங்கோ. அவன் நல்லாய் இருந்தா சந்தோசம்"
"ம நான் வாறன் எனக்கு நிறைய வேலை இருக்கு" என சொல்லிக்கொண்டே இவனுக்கும் என்ட பிள்ளை போறது பிடிக்கல. எல்லாரும் சரியான எரிச்சல் பொறாமை பிடிச்சவன்களாய் இருக்காங்க. கணேஷின் மனம் உள்ளுக்குள் சொல்லிக்கொல்கின்றது.

கதிர் வீட்டில்.

"அப்பா! இந்த யோகா அக்கா சொன்னவ பெடியனுக்கு விசாவுக்கு கொடுக்க முதல் அந்த வெள்ளவத்தை கடக்கரையில இருக்கிற விசா பிள்ளையாருக்கு ஒரு பூசை செய்திட்டு கொண்டே குடுக்கட்டாம். கட்டாயம் விசா கிடைக்கும் என சொல்லுறா. என்ன நாங்களும் செய்வமா? பெடியன் போகணும் ............." கதிரின் அம்மா ஜெயந்தி.

"நானும் அதை நினைச்சன் எனக்கும் ஒரு சிலர் அந்த பிள்ளையாரை பற்றி சொல்லி இருக்கினம், அங்க பூசை வச்சா தப்பாதாமே. ஏன் அந்த குறையை மட்டும் வைப்பான். விசாவுக்கு குடுக்கிற அண்டைக்கு காலமை இந்த பூசையை செய்திட்டு கொண்டு போய் குடுப்பம்." - கணேஷ்.

புகைப்படங்கள்,பாஸ்போர்ட், விண்ணப்பபடிவங்கள் என எல்லாம் தயார் செய்தாயிற்று.
"அடுத்த திங்கள் கிழமை கொடுக்கணும்...ஏம்மா திவ்யா எங்க அண்ணாவை கூப்பிடு இதில ஒரு கையெழுத்து போடணும்....எல்லாத்தையும் இண்டைக்கே ரெடியாய் வச்சால் நாளைக்கு ஒருநாள் கோவில் வேலையளை பார்க்கலாம் நாளைஇண்டைக்கு அப்பிளை பண்ணினால் சரியாய் பெப்ரவரிக்கு விசா கிடைச்சிடும்......" என்று கணேஷன் சொல்வதை கூட கேட்காமல்
"அண்ணா டேய் அண்ணா .......அண்ணா டேய்...." இது திவ்யா
"அடியேய் உனக்கு எத்தனை தரம் சொல்லி இருப்பேன் ஒண்டில் அண்ணா எண்டு கூப்பிடு இல்லாட்டி கதிர் எண்டு கூப்பிடு எண்டு எதுக்கிடி இப்பிடி இரண்டையும் சேர்த்து கூப்பிட்டு என்ன அவமானப்படுத்துறாய்.....உன்னை...." இது கதிர்.
"அடிக்காதடா உன்னை அப்பா கூப்பிட்டார்" - திவ்யா
"எதுக்கடி?"
"ஆஹ உன் ஆட்டோகிராப் வாங்கி வைக்க தான். ஐயா லண்டன் போறார் எல்லே பிறகு அங்கே போய் லண்டன் இளவரசியை பார்த்து பிடிச்சிட்டா அதுதான் இப்பவே......." என்று திவ்யா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு மெதுவாக அப்பாவை நோக்கி போக திவ்யா இரவு செய்தி கேட்பதற்காக வெற்றி எப் எம்மை போட்டுவிட அதில் "ம் ஒருமாதிரி விமல் இண்டைக்கு அவுட் ஆகாமல் நல்லா விளையாடிடிங்க ஆனால் அடுத்ததா ஒருத்தர் ஆடு ஆடு என ஆடி கையில ஒரு பெரிய கட்டோடு உங்களை எங்களை ஆட வைக்க வந்திருக்கின்றார் எனவே நாங்க இப்ப போகப்போறோம் மீண்டும் சந்திக்கலாம் ஒ வந்திருக்கிறவர் பெயரை நான் சொல்ல மாட்டேன் நீங்களும் சொல்லவேண்டாம் விமல் வெற்றியின் செய்தியை தொடர்ந்து நானாடா நீயாட நிகழ்ச்சியோடு இணைந்திருக்கலாம் விடை பெற்றுக்கொள்ளும் நாங்கள் என்றும் அன்புடன் விமல் ஏ.ஆர்.வி.லோஷன்...இப்பிடி சொன்னதுக்காக எல்லாம் டெரரா முறைக்கப்படாது.. பாய்" என்று போக திவ்யா செய்துயுடன் அமர மறுபுறம் கதிரும் அம்மா அப்பாவும் இறுதிக்கட்ட படிவங்கள் நிரப்பி சரிபார்க்கும் வேலையில் மும்முரமாக இருந்தனர்.

அம்மா அப்பா கதிர் என மூவரின் குரல்களும் பல விவாதங்களை செய்தாலும் மிக குறுகிய நேரத்தில் வெற்றி எப்.எம் செய்திகள் என்ற தீமுடன் செய்தி ஆரம்பமானது. வழக்கம் போல வெற்றி எப்.எம் செய்திகள் செய்தி ஆசிரியர்........வாசிப்பவர்........என்ற வழக்கமான விடயங்கள் கடந்து தலைப்புச் செய்திகள் என்று வரும் போது கூட திவ்யா கூர்ந்து கவனிக்கவில்லை. ஆனால் முக்கிய செய்திகளில் மூன்றாவதாக வந்த செய்தி முழு புலனையும் உல் நாட்டு செய்திகள் திவ்யாவை மட்டுமன்றி முழு குடும்பத்தையும் கொண்டு சென்றது.

"...........மாணவர் விசா மூலம் இங்கிலாந்து சென்று கற்கை நெறியை மேற்கொண்டு வரும் இலங்கை மாணவர்கள் இங்கிலாந்து குடிவரவு புதிய சட்டங்களின் படி வரும் ஏப்ரில் மாதம் முதல் மட்டுப்படுத்தப்பட்ட மணி நேரமே வேலை செய்யலாம். வெளிநாட்டில் இருந்து வரும் பெருமளவானோரின் எண்ணிக்கையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....................................." என அந்த செய்தி நீண்டு கொண்டு செல்ல அனைவர் முகத்திலும் ஒரு ஏமாற்ற பிரதிபலிப்பு. இருப்பினும் செய்தியில் இருந்து புலனை திருப்பி மனதை ஆசுவாசப்படுத்தி எல்லாவற்றையும் சரி பார்த்து முடிக்கவும்.

"நேயர்கள் இந்த சனி இரவு நானாட நீயாட நிகழ்ச்சியோடு இணைந்திருக்கின்றீர்கள். உங்களை ஆட வைக்கும் பாடல்களோடு கொஞ்சம் கருத்துக்களை சொல்லும் பாடல்களாகவும் இன்றைய நானாட நீயாட பாடல்கள் வரபோகின்றன........................இதோ வருகிறது இது நம்மண்ணின் பாடல் மண் பெருமையை சொல்லும் மண் பட பாடல் லண்டன் பிரான்ஸ் கனடா என ஓடாமல் இங்க இருந்தா எவ்வளவு சந்தோசமா இருக்கலாம் ஆனால் ஓடிக்கொண்டே இருக்கிறாங்களே" என சொல்லிவிட்டு லண்டனுக்கு போகவில்லை பாரிசுக்கும் ஓடவில்லை சொந்த மண்ணில் தானிருந்தோம் உற்சாகமாக ....................என பாடல் ஒலிக்கவும் கதிர் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போடவும் சரியாக இருந்தது......

(தொடரும்.......)

Share:

Wednesday, December 29, 2010

உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு வித்தியாச பதிவு!



உலக மகா ஜனங்களுக்கு வணக்கம்,

பதிவுலகில் ஒரு சாதாரண பதிவராக இருந்து வரும் ஒருவர் நிறைய பதிவுகளை எழுத பொறி தட்டுப்பட்டும் இன்னும் அவற்றை பதிப்பில் இடாமல் உள்ளார். சினிமா, விளையாட்டு வம்பு தும்பு என கலந்து கட்டி எழுதி பலரிடம் அடிவான்கியும் வலிக்காமல் எழுதிக்கொண்டிருந்தவருக்கு இப்போதெல்லாம் நேரம் கிடைத்தும் பதிவு எழுத மனம் இல்லாமல் எல்லாவற்றையும் டிராப்டில் வைத்துள்ளாராம்.

பதில் பதிவுகள் பரபரப்பு பதிவுகள் என பல கைவசம் இருந்தும் கரை சேர்க்க முடியாமல் இருக்கும் இவருக்கு பதிவுகளை எழுதி தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்(சுடு சோறு என நினைக்க படாது) என அறிவித்துள்ளார். அதன் ஒரு விளம்பர பதிவாக இந்த பதிவை இட வேண்டும் என அந்த பதிவர் கேட்டுக்கொண்டதுடன் நாடு கடந்த அதிகார மைய பதிவர் அவர் என்பதால் பல வெளிநாடு பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்தும் தமிழர் ஒருவருக்காய் காத்திருப்பதாய் சொல்லி இருக்கின்றார்.

ஆர்வம உள்ளவர்கள் கீழ்காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்:
வெட்டிப்பயளுக்கு வெட்டிப்பயல்,
வெட்டித்தெரு,
வெட்டியர் கிராமம்,
லண்டன்.

அண்ணே மாரே அக்கா மாரே அங்கெ இங்கே பார்த்து உருட்டுக்கட்டை தேடாதிங்கோ. உங்களால அவரை அடிக்க முடியாது ஏன்னா அவர் அவர்......

























நான்தானுங்கோ!



உங்களால என்னை அடிக்க முடியாது. காரணம் லண்டனுக்கு வர ரொம்ப செலவாகும். இங்கே அழ வச்சு அடிக்கலாம் எண்டால முடியாதுங்க.....ஏன்னா நாங்க தான் நாடு கடந்த பதிவர்கள் அதிகார மையம் ஆச்சே....சும்மா லோலாய்....

நீங்க எல்லோரும் பதிவை போட்டு கலக்க நாமளும் ஒரு பங்குக்கு போடா வேண்டாமா என்ன? எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் மகா மொக்கை ஒன்று போடணும் என்பதற்காய் இப்படி ஒரு பதிவு. சும்மா ஒரு வாக்கு குத்திட்டு போங்கோ!


Share:

Sunday, December 19, 2010

The making of பதிவர் சந்திப்பு! - வரலாற்று தடம்.

பதிவர் சந்திப்பை எல்லோருக்கும் ஏற்ற ஒரு நாளில் நடத்துவதே கஷ்டம் அதை விட கஷ்டம் இந்த பதிவு போடுறது. என்ன செய்வது வெளியே போகமுடியாமல் பனி மூடிக்கிடப்பதால் வீட்டுக்குள் இருந்து ஒரு அவசர பதிவு.

லண்டனில் முதன்முறையாக தமிழ் பதிவர்கள் ஒன்று கூட வேண்டும் என்ற ஆசை வந்தி அண்ணாவுக்கு எப்போதும் இருந்தது உண்டு(இப்போது மாம்ஸ் வேற விசயத்தில் பிசி) இதை நிரூஜாவும்(அட உடனே சந்தேகப்படாதிங்கோ) மாம்சும் பலமுறை பகிர்ந்து கொண்டாலும் நான் லண்டனில் காலடி வைத்த பின் தான் சந்திப்பு என அறிவித்துவிட்டார் நாடுகடந்த பதிவர்களின் அதிகாரமைய தலைவர் திரு வந்தி அவர்கள். இந்த நிலையில் நிரூஜா இலங்கை சென்று சந்திப்பை வெற்றிகரமாக நடத்தியும் விட்டார்.

நான் லண்டன் வந்தே நான்கு மாதங்கள் ஆகும் நிலையில் சந்திப்பு பற்றி எந்த பேச்சும் இன்றி நாட்கள் போக போகத்தான் மாம்ஸ்க்கும் கரவைக்குரலுக்கும் பிறந்த நாள் வந்தது. எனவே இருவரும் விருந்துவைப்பதாய் சொன்னதை நம்பி நானும் ஓகே என ஒரு நாள் சொன்னேன்.(கடைசிவரை ஏமாத்திட்டாங்க பயலுகள்) அப்போதுதான் ஏன் இதை மற்றைய சில பதிவர்களையும் சேர்த்து சந்திப்பாக்க கூடாது என எண்ணி ஒரு மாதத்துக்கு முன்னரே பேசி வைத்துவிட்டோம்.

லண்டனில் கல்வி நடவடிக்கை வேலை என எல்லாம் பார்த்து எல்லோருக்கும் சரியான நான் எது அமையும் என்றால் நூறு வருடம் சென்றாலும் அறியமுடியாது. இந்த நிலையில் திடீரென ஒரு நாளை பலரின் தெரிவில் செய்வோம் என்ற ரீதியிலும் இந்த கிறிஸ்மஸ் விடுமுறை அதற்க்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணினேன். அந்த வகையில் என்னுடன் என் உளறல்கள் வந்தி அண்ணா, கரவைக்குரல் தினேஷ், பங்குசந்தை அச்சு, இளங்கன், ஜனகன் மற்றும் முன்னாள் பதிவர்கள் கோசலன், பார்த்தி, ஷனா இவர்களுடன் பின்னூட்டங்களில் சில காலம் கலக்கிய செல்லம்மாவுக்கும் அழைப்பு விடுத்ததோடு இந்திய பதிவர்களையும் கலந்து கொள்ள வைக்கும் எண்ணத்தில் பதிவர்கள் சாளரம் கார்க்கி, ரசிகன் சௌந்தர் ஆகியோரிடமும் இதை பற்றி பேசி இருந்தேன்.

இலங்கை பதிவர்கள் என்பதையும் மீறி தமிழ் பதிவர்களின் சந்திப்பாக இது அமைந்தால் சந்தோசமாக இருக்கும் என்பது மட்டுமன்றி. தமிழ் பதிவர்கள் சந்திப்பு வரலாற்றில் முதன் முறையாக லண்டனில் நடக்கும் பொது அதற்க்கு பலர் வந்தால் உரம் சேர்க்கும் என்ற எண்ணம தான்.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் முதல் நாள் மதியம் தான் நாளை சந்திப்பது என ஐவர் முன் வந்த நிலையில் நாங்கள் இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போதே கரவைக்குரல் தினேஷ் தன கைவேலையை காட்டிவிட்டார். இதற்க்குபிறகும் நாங்கள் பின்னடிக்க முடியாது என முடிவெடுத்து ஓரளவுக்கு இடத்தையும் நேரத்தையும் முடிவெடுத்தோம். இந்த நிலையில் சிலர் தம்மால் இம்முறை பங்கு பற்ற முடியாது அடுத்தமுறை பார்ப்போம் என ஒதுன்கியதுடன் வாழ்த்துக்களை தெரிவிக்க இறுதியில் நால்வர் மட்டுமே சந்திக்க போகின்றோம் என்ற நிலை உருவானது. இங்கே கல்வியை கட் அடித்துவிட்டு வந்தாலும் வேலையை யாரும் கட் அடிக்க மாட்டார்கள். இருப்பினும் எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும் தானே சந்தித்துவிடுவோம் என முடிவெடுத்து இரவு தூங்க போகும் நேரத்தில் மாம்ஸ் அழைப்பெடுத்து நேரம் கேட்டார். அந்த நேரம் எனக்கு காய்ச்சல் ஆனால் என்ன செய்யமுடியும் இதை நான் சொல்ல சந்திப்பை நிறுத்துவோம் என்றார் இருப்பினும் சந்திக்கணும் என்று முடிவெடுத்தாச்சு இனி நாங்களே எங்க பேச்சை கேட்ககூடாது என்ற நினைப்பில் நாளை காலநிலை என்ன என்று பார்த்தால் கடும் பனிப்பொழிவு. அப்படி ஏதும் சிக்கல் என்றாலே ஒழிய வேறு எந்த காரணத்துக்காகவும் சந்திப்பு நிக்காது என சொல்லிவிட்டு தொலைபேசியை மௌனத்தில் போட்டுவிட்டு தூங்கிவிட்டேன்.

பங்குசந்தை அழைப்பு எடுத்து பார்த்து என்னை தொடர்பு கொள்ள முடியாமல் போக கரவைக்குரலுடன் தொடர்பை ஏற்ப்படுத்தி எல்லோரும் மறுநாள் oxfrod circus இல 12.30 க்கு சந்திப்பதை ஏற்பாடானது. ஆனால் அன்றைய நாளோ லண்டனில் கடும் மழை. அப்புறம் தானே நம்ம பதிவர்கள் தங்கள் நிஜ முகங்களை காட்ட ஆரம்பித்தனர். இனி கரவைக்குரல், மாம்ஸ், அச்சு தொடர்வார்கள்.

குறிப்பு: பதிவுலக மார்க்கண்டேயன் லண்டன் அதிகார மைய தலைவர் என் மாம்ஸ் வந்தி அவர்கள்(தலைவர் ஆகிட்டார் எல்லா) இப்போது வேறு வேலைகளில் பிசியாக இருப்பதால் இன்னும் படங்களை அனுப்பவில்லை. இனி அதுவும் வருமா தெரியாது. சிலவேளை கடவுச்சொல் பறிபோனால்??????????? ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
Share:

Thursday, September 2, 2010

வெளிநாட்டு வாழ்க்கை.



ஊருறங்கா மெசின் உறங்கா நாடு கூட - தன்

உறக்கத்தை உறவாக்கும் நேரம் கூட

உறவோடு ஊருறங்கும் நாட்டவன் எந்தன்

உள்ளம் மட்டும் இன்னும் விழி உறங்கிப் போனாலும் உறங்கவில்லை.

பள்ளிப் படிப்பது பாதியில் பலியானதனால்

பல நாடு கடந்து வந்து பலிக்கடா ஆகிவிட்டேன்.

கல்லூரிப்படிப்புக்கு காசு வேண்டும் அதை விஞ்சி

ஒரு சாண் வயிற்றுக்கும் கஞ்சி வேண்டும்

ஆறடி உடல் ஒப்புக்காய் தூங்க ஓர் இடம் வேண்டும்

இதற்கெல்லாம் விலையை எம்மவரின் ரத்தம் வேண்டும்.

காலை எது மாலை எது கவலையேதும் கிடையாது - நாளை

விலை கொடுத்து எனை வாங்க இன்று உலையிலே எரிகின்றேன்

ஊட்டி விட இருந்தன அன்று ஊரின் கைகள் - இன்று

விக்கல் எடுத்தாலும் விக்கி விக்கி அழவேண்டும்.

தாய் நாட்டின் அரவணைப்பு தான் தாயின் அரவணைபென்று

தெரியாமல் வந்திங்கு தெருத் தெருவாய் அலைகின்றேன்

மனிதன் யார் மிருகம் யார் எனப் பிரித்து அறியாமல்

பணம் உழைக்கும் எந்திரனாய் மனிதர் நாம் மாறுகின்றோம்.

கவி படிக்கும் நேரம் இது பேனா மைக்குப் பதிலாய்

கண்ணீர்த்துளி கொண்டு என் கதை எழுதுகின்றேன்

கேட்பாயா என்தாயே என்பது தான் அவா எனினும்

கேட்டிடாதே என் தாயே உன் மகன் படும் பாடு இதுதான் என்று.

கேட்டால் நீ தாங்கமாட்டாய் திருப்பியும் அழைத்திடுவாய்

சரித்திரம் மாறிவிடும் இனி ஒரு தாயும் அனுப்பமாட்டாள் தன் பிள்ளையை

இப்போதுதான் எழுகின்றது எனக்குள் ஒரு கேள்வி

இனி எந்தப் பெண்ணுக்கு கிடைப்பாள் வெளிநாட்டு மாப்பிள்ளை.

Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox