கம்பிக்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பாரிய சிக்கல்களை தி.மு.கவுக்குள் கொண்டு வர போகின்றது. அவருடைய இந்த கருத்தை பலர் பலவிதமாக பேசினாலும் ஸ்டாலின் இருக்கையில் கனிமொழி என்ற கேள்வியே பெரும்பாலும் சில இணைய தளங்களாலும் சில சமுக ஆர்வலர்களாலும் எழுப்பப்பட்டுள்ளது.
அழகிரி எதிர் ஸ்டாலின் என இருந்த இருமுனைப் போட்டி இப்போது மும்முனை போட்டி ஆக்கப்படுள்ளது. ஸ்டாலின் தான் அடுத்த வாரிசு என எல்லோரும் சொன்னாலும் அதை மறுக்காமல் முத்தழகன் பேசி இருக்கும் விதம் என்னவோ பல நூறு உண்மைகளை சொல்லாமல் சொல்கின்றது. என்னதான் அடுத்த முதல்வர் என கனிமொழியை சொன்னாலும் முத்தழகன் அடுத்த தலைவர் ஸ்டாலின் இல்லை என சொல்லவே இல்லையே.
இப்போது தி.மு.க இருக்கும் நிலையில் மீட்டு எழ பாரிய முயற்சியும் சில பல வருட கால அவகாசமும் தேவை. ஐயாவுக்கு விழுந்த அடி கொஞ்ச நஞ்சமல்ல. கட்சி என்பதை மீறி இப்போது இது குடும்பத்துக்கு எதிராக மாறி நிற்கிறது.
எழும்ப ரொம்ப நேரம் ஆகும் சில வேளை எழும்பாமலே போகலாம். அத்துடன் இம்முறை தான் அம்மா, அம்மா என்னும் பெயருக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்திருக்கிறார்.சுய தம்பட்டம் இல்லை தன்னிலை அதிரடி இல்லை. அமைதியாக சுழன்றடிக்கின்றது இந்த சூறாவளி. மறுபக்கம் கேப்டன், தோணி போல அமைதியாய் முன்னேறிக்கொண்டிருக்கிறார். எனவே அம்மா விட்டால் கேப்டன், கேப்டன் விட்டால் அம்மா என்ற நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை. காரணம் ஐயாவுக்கு பின் அடுத்தவாரிசுகளுக்கு அவ்வளவுக்கு பவர் இல்லை.
எனவே தான் சொல்கின்றேன் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் கனிமொழிதான். கரணம் ஐயா போனபிறகு(அரசியலில் இருந்து போறத மட்டும் தான் சொன்னேன் வேற எதையும் நினைக்காதிங்க.) தளபதி தான் தல ஆவார். ஆனால் அவர் ஒருநாளும் ஜெயித்து முதல்வர் ஆக போவதில்லை. அந்த நேரம் அந்தளவுக்கு தி.மு.க படுத்து விடும். கிட்டத்தட்ட அவர் ஒரு இருபது ஆண்டுகள் ஆப்பிழுத்து பார்த்துவிட்டு விட கனிமொழிக்கு அறுபது வயசாகிடும் அப்போ அவர் அடுத்த முதல்வருக்கு தகுதியானவராக இருப்பார்.(சிறை போவதும் அறுபது எழுபது வயது இருப்பதும் தானே தமிழ் நாட்டில் முதல்வர் ஆக முதல் தகுதி.) அந்த இருபது வருடங்களில் தி.மு.கவும் மீண்டும் எழுந்துவிடும். அந்த இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தாலும் தி.மு.க ஆளப்போவதில்லை. அப்படி இருக்கையில் ஸ்டாலின் எப்படி முதல்வர் ஆக முடியும். ஆக எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு சூசகமாக தான் வாகை முத்தழகன் இதை சொல்லி இருக்கின்றார். புரிவார்களா என்ன?
அவங்க புரியிறான்களோ இல்லையோ என்னை பின்னி எடுக்க ஆட்கள் வாறது தெரியுது. எஸ்கேப்
3 கருத்துரைகள்:
nanpa ennamo nadakkirathai paarppom
pathivitku vaalththukkal..
ஆமாமா தமிழ்நாட்டுக்கு வேற நாதி....
இவங்க வந்துதான் கரைஎத்தனும்.
இந்த மாத இறுதியில் லண்டன் வருகிற திட்டத்தில் உள்ளேன்.
பட்ஜெட் ஹோட்டல் எதேனும் எனக்கு பரிந்துரைக்க முடியுமா ?
எந்தப் பகுதியில் தங்கினால் லண்டனை சுற்றிப்பார்க்க ஏதுவாக இருக்கும். (விலை குறைந்த விடுதியும் இருக்க வேண்டும்)
என் இமெயில் - mechchu@gmail.com
Post a Comment