உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label தோணி. Show all posts
Showing posts with label தோணி. Show all posts

Monday, June 27, 2011

கனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன?



கம்பி
க்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பாரிய சிக்கல்களை தி.மு.கவுக்குள் கொண்டு வர போகின்றது. அவருடைய இந்த கருத்தை பலர் பலவிதமாக பேசினாலும் ஸ்டாலின் இருக்கையில் கனிமொழி என்ற கேள்வியே பெரும்பாலும் சில இணைய தளங்களாலும் சில சமுக ஆர்வலர்களாலும் எழுப்பப்பட்டுள்ளது.

அழகிரி எதிர் ஸ்டாலின் என இருந்த இருமுனைப் போட்டி இப்போது மும்முனை போட்டி ஆக்கப்படுள்ளது. ஸ்டாலின் தான் அடுத்த வாரிசு என எல்லோரும் சொன்னாலும் அதை மறுக்காமல் முத்தழகன் பேசி இருக்கும் விதம் என்னவோ பல நூறு உண்மைகளை சொல்லாமல் சொல்கின்றது. என்னதான் அடுத்த முதல்வர் என கனிமொழியை சொன்னாலும் முத்தழகன் அடுத்த தலைவர் ஸ்டாலின் இல்லை என சொல்லவே இல்லையே.

இப்போது தி.மு.க இருக்கும் நிலையில் மீட்டு எழ பாரிய முயற்சியும் சில பல வருட கால அவகாசமும் தேவை. ஐயாவுக்கு விழுந்த அடி கொஞ்ச நஞ்சமல்ல. கட்சி என்பதை மீறி இப்போது இது குடும்பத்துக்கு எதிராக மாறி நிற்கிறது.
எழும்ப ரொம்ப நேரம் ஆகும் சில வேளை எழும்பாமலே போகலாம். அத்துடன் இம்முறை தான் அம்மா, அம்மா என்னும் பெயருக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்திருக்கிறார்.சுய தம்பட்டம் இல்லை தன்னிலை அதிரடி இல்லை. அமைதியாக சுழன்றடிக்கின்றது இந்த சூறாவளி. மறுபக்கம் கேப்டன், தோணி போல அமைதியாய் முன்னேறிக்கொண்டிருக்கிறார். எனவே அம்மா விட்டால் கேப்டன், கேப்டன் விட்டால் அம்மா என்ற நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை. காரணம் ஐயாவுக்கு பின் அடுத்தவாரிசுகளுக்கு அவ்வளவுக்கு பவர் இல்லை.

எனவே தான் சொல்கின்றேன் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் கனிமொழிதான். கரணம் ஐயா போனபிறகு(அரசியலில் இருந்து போறத மட்டும் தான் சொன்னேன் வேற எதையும் நினைக்காதிங்க.) தளபதி தான் தல ஆவார். ஆனால் அவர் ஒருநாளும் ஜெயித்து முதல்வர் ஆக போவதில்லை. அந்த நேரம் அந்தளவுக்கு தி.மு.க படுத்து விடும். கிட்டத்தட்ட அவர் ஒரு இருபது ஆண்டுகள் ஆப்பிழுத்து பார்த்துவிட்டு விட கனிமொழிக்கு அறுபது வயசாகிடும் அப்போ அவர் அடுத்த முதல்வருக்கு தகுதியானவராக இருப்பார்.(சிறை போவதும் அறுபது எழுபது வயது இருப்பதும் தானே தமிழ் நாட்டில் முதல்வர் ஆக முதல் தகுதி.) அந்த இருபது வருடங்களில் தி.மு.கவும் மீண்டும் எழுந்துவிடும். அந்த இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தாலும் தி.மு.க ஆளப்போவதில்லை. அப்படி இருக்கையில் ஸ்டாலின் எப்படி முதல்வர் ஆக முடியும். ஆக எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு சூசகமாக தான் வாகை முத்தழகன் இதை சொல்லி இருக்கின்றார். புரிவார்களா என்ன?


அவங்க புரியிறான்களோ இல்லையோ என்னை பின்னி எடுக்க ஆட்கள் வாறது தெரியுது. எஸ்கேப்
Share:

Friday, June 17, 2011

உலககிண்ணத்தின் பின் தோணி மொட்டை போட்டது ஏன்?நானே ரூம் போட்டு யோசிச்சன்


இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த தலைவர் உலகில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருக்கும் கிண்ணங்களையும் வென்ற ஒரே கிரிக்கெட் அணி தலைவர் என்ற பெருமைக்குரிய தோணி T20 உலக கிண்ணத்தை வென்று நாடு திரும்பியதும் செய்த முதல் காரியம் தன் அழகிய தலைமுடியை வெட்டி எறிந்தார். தன் அழகிய முடியுடன் போஸ் கொடுக்க வேண்டிய நேரத்தில் ஏன் இப்படி இவர் செய்தார் என அந்த நேரம் நாம் எல்லாம் குழம்பி போனோம். விடுப்பா தலையில பொடுகு வந்திருக்கும் அதுதான் வெட்டி இருப்பார் என எத்தனை பேர் ஆசுவாசப்படுத்தினார்களோ.

சரி அதுதான் முடிஞ்சுது இப்போ 50ஓவர் உலக கிண்ணம் முடிய மனிசர் மொட்டை போட்டிட்டார். திருப்பியும் எல்லோரும் குழம்பி போனார்கள். அட இது தோணி ஸ்டைல் என்றும் நேர்த்தி என்றும் சிலர் சொல்ல காதில கேட்டுது. என்னடா இந்த மனிசன் எப்ப பார்த்தாலும் இப்படி பண்ணுதே. என்ன காரணமாய் இருக்கும் என்று எனக்கும் குழப்பம். சென்னை பக்கம் வந்த மனிசனிட்ட நேரே கேட்கலாம் எண்டால் லண்டனில இருந்து போகவும் முடியல. இருந்தாலும் இதற்கான காரணம் என்ன என நானே ரூம் போட்டு யோசிச்சன். அப்பாடி ஒரு மாதிரி அவர் மொட்டைக்கு ஒன்றல்ல இரண்டல்ல நான்கு காரணங்கள் கண்டு பிடிச்சிருக்கேன்.

உலக கிண்ணம் முடிய கண்டிப்பாய் எல்லோருடனும் சேர்ந்து, தனிய என இவரை வளைத்து வளைத்து படம் எடுப்பார்கள் என்பது அவருக்கே தெரியும் அப்படி இருக்கையில் குழுவாக இருக்கும் படங்களில் தான் மொட்டையுடன் இருந்தால் தான் தனித்து தெரிவதுடன் தன் தலையை சுற்றி ஒளிவட்டம் தெரியும் என்பது இவ்வளவு தெரிந்த தோனிக்கு தெரியாதா என்ன?

டேய் அவன் "தல"ய பாரடா! பாரடா மொட்டை "தல"! என எல்லோரும் பேசி இவர் தான் தல என சொல்லாமல் சொல்ல வேண்டும் என்பதற்காக தலையின் அல்டிமேட் ஐடியா இது.

அப்புறம் பாருங்க இது மூன்றாவது காரணம். அடக்கமாய் இருக்கான். கோபமே வருதில்லை. இவன் என்ன தலைக்கனம் பிடிச்சவனா? பாரடா வென்றவுடன் தலைக்கனம் ஏறிட்டு என யாரும் சொல்லிட கூடாதே. அதனால் தன் மண்டையில் இருந்த முடியை எடுத்துவிட்டால் தலையில் கனம் இல்லை என சொல்லலாமே என்பதற்காக தன் முடியை தாரவார்த்துவிட்டார் மிஸ்டர் கூல்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு காரணம் இருப்பதாக தோனியின் மனைவி கூட சொன்னார்.(எப்படி அவங்களை தெரியும் என கேட்கப்படாது) ஆனால் தன்னால் கூட அதை கண்டு பிடிக்க முடியவில்லை. முடிஞ்சா நீ room போட்டு யோசித்து கண்டு பிடிச்சா எனக்கும் சொல் என்று சொல்லிட்டு போனை வைத்துட்டார். என்னடா அந்த இழவு புடிச்ச காரணம் என யோசிச்சுட்டே இருந்தேன். என்ன ஆச்சரியமுங்க தோணிவந்து டேய் டாங்கு மண்டை தலையா எதுக்குடா இப்படி யோசிச்சு யோசிச்சே என்னை போல மண்டையில மயிர் இல்லாமல் போகணும் என நினைக்கிறியா எண்டார். இல்லை பாஸ் எல்லாருமே உங்க தல முடி பற்றி பேசுறாங்க ஆனால் யாருக்குமே அதுக்கான காரணம் தெரியல பாஸ் என்றேன். டேய் அது வேற ஒன்றும் இல்லைடா என் தலையில முடி இருந்ததால வெட்டினேன் உன்னை மாதிரி சில லூசுப்பசங்க இப்படி அப்படி என எழுதினா நான் என்னடா பண்ணுவேன் எண்டு சொல்லும் போது தோனிக்கு அடிக்கணும் போல இருக்க கையை ஓங்கினேன். அம்மா எண்டு பெரிய சத்தம் கேட்டுது. என்னடா இது அடிச்சா தோணி தானே கத்தனும் நானே கத்துரேனே என எழும்பி பார்த்தா நடு ராத்திரியில கார்த்திகா(இப்ப நம்மாளு இவங்க தான் என சொல்லாமல் சொல்லிட்டன்.) ஹன்சிகா,அமலா பால் என மிஸ்டர் கூல் வந்து என்னை மிஸ்டர் ஹாட் ஆக்கிட்டு போனது தெரிஞ்சுது.

இதுக்கு பிறகும் யாரும் தோணி மொட்டை போட்டாதுக்கு காரணம் தேடுவிங்களா? அடி பின்னிடுவேன்.
Share:

Sunday, December 19, 2010

இன்றுமுதல் பதிவர்கள் இதை தான் எழுதபோகின்றார்கள்.

என்ன பதிவர்களே! ஒரு சின்ன மொக்கை போடபோகின்றேன் அதுக்கு முதல் ஒரு சீரியஸ் விடயம்.

இந்தியா, தென் ஆபிரிக்காவுடன் போட்டியில் டிரா செய்கின்றதோ இல்லையோ சச்சின் தன சாதனை பயணத்தில் இன்னொரு மயில் கல்லை தாண்டி விட்டார். சத்தத்தில் அரைச்சதம் கடந்து தன அணியை மீட்க போராடிக்கொண்டிருக்கின்றார். சாதனை நாயகனுக்கு வாழ்த்துக்கள் சொல்கின்றேன். இதை விட வேற ஒன்றும் நான் சொல்ல மாட்டேன். ஏன் தெரியுமா?

வரபோகும் இரு நாட்களும் இதுவரை பதிவர்களால் போற்றி வழிபடப்பட்ட விஜயை பின்தள்ளி சச்சின் பெயர் அடிபடபோகின்றது. இந்தியா தோற்றாலும் சச்சின் நாமமமே அனைத்து தளங்களிலும் பரவலாக ஆக்கிரமிக்கப்படபோகின்றது. மீண்டும் ஒரு தடவை சச்சின் சாதனை புத்தகம் தூசு தட்டப்படபோகின்றது.(இந்த முறை தூசு இருக்காது காரணம் இப்பதான் சில நாட்களுக்கு முன்னம் இன்னொரு சாதனையை பதிக்க எடுத்திருப்பார்கள்.) சச்சின் கடவுளுக்கும் மேலாக வைத்து பதிவர்களால் பூசிக்கப்படபோகின்றார்.

இன்னொருபுறம் சாதனைக்காக ஆடும் சச்சின். சச்சின் சுயநலவாதி என்னும் விமர்சன பதிவுகளும் வரபோகின்றன. இன்னும் என்னென்னவோ பதிவுகள் வந்தாலும் சச்சின் தான் வரும் இரண்டு நாட்கள் எல்லா பதிவர்களாலும் எழுதப்படபோகின்றார். அப்புறம் எதுக்கு நான் அவரை பற்றி எழுதுவான். நீங்கள் எழுதுங்கோ வாசிக்கின்றேன்.
Share:

Saturday, June 19, 2010

சிங் is கிங் - இறுதிப்போட்டியில் இந்தியா.



உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் உலகை ஆக்கிரமித்துள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்று வரும் ஆசிய கிண்ண போட்டிகளை கணக்கெடுக்க மறுத்த பலரையும் இன்று மீண்டும் கிரிக்கெட் பக்கம் திருப்பிய போட்டி ஒன்று இப்போதுதான் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியை பார்த்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் கூட 50 ஓவர் போட்டி பற்றிய தங்கள் கருத்தை மீள் பரிசீலனை செய்வர் என சொல்கின்றது கிரிக இன்போ.

அப்படி என்ன தான் நடந்தது? என்று கேட்கிறீர்களா? வேறு என்ன கிரிக்கெட்டில் இரு துருவங்கள் மோதிய போட்டிதான். இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி வழமை போல விறு விறுப்பாக நடை பெற்று முடிந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தலைவர் அப்ரிடி முதலில் பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடும் என முடிவெடுத்தார். அதற்கமைய ஆரம்பத்தை அமர்க்களமாக தான் ஆரம்பித்தனர் சல்மான் பட்டும் பர்ஹத்தும். நீண்ட போராட்டத்தின் பின் ஹர்பஜன் சிங் இந்த இணையை பிரிக்க அடுத்ததாய் ஜோடி சேர்ந்த சானியாவின் நாயகன் மாலிக்கும் பட்டும் இணைந்து மீள கட்டி எழுப்ப மீண்டும் அதை காண தகர்க்க அடுத்தடுத்து பாகிஸ்தானின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் விழ ஒரு கட்டத்தில் உமர அக்மலும் அப்பிரிடியும் இணைந்து அதிரடிக்கு மாற அப்ரிடி ஆட்டம் இழக்க மீண்டும் சோர்ந்தது பாகிஸ்தான். இருப்பினும் கம்ரன் அக்மாலின் தாண்டவத்தின் மூலம் 267 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது பாகிஸ்தான் அணி.

பந்துவீச்சில் இந்தியாவின் பிரவீன் குமார் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி மிரட்ட பஜ்ஜி தன் பங்குக்கு இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். மறுமுனையில் பாரிய இலக்கொன்றை துரத்த ஆரம்பித்த இந்தியாவுக்கு அமைதியான ஒரு தொடக்கம் கொடுக்க முனைந்தனர் ஷேவாக்கும் கம்பீரும். இடையில் சேவாக் ஓட முடியாமல் அவதிப்பட்டு ரைனாவை ஓட பயன்படுத்தினாலும் சேவாக் இன்னும் போரிமில் இல்லை என்பதை இன்றைய போட்டி காட்டியது. மறுமுனையில் கடந்த போட்டி போல தொடர்கிறது காம்பீரின் அட்டகாசம்.இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அடுத்த டிராவிட், விராட் கோலி, கம்பீருக்கு பக்க பலமாக இருக்க ஓட்ட வேகம் அதிகரித்தது. பாகிஸ்தான் பந்துகள் பந்தாடப்பட்டுக்கொண்டிருக்க கோலி ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து இணைந்த டோனி, கம்பீருடன் சேர்ந்து மிகப்பெரிய இணைப்பாட்டம் ஒன்றை வழங்க இந்தியா வெற்றியை நோக்கி நகர தொடங்கியது.

இம்முறையும் சதத்தை நெருங்கி அதை பெற முடியாமல் தவற விட்டு கம்பீர் ஆட்டமிழக்க சிறிது நேரம் ஷர்மா, தோனிக்கு கைகொடுத்தார். ஆனால் ஷர்மா வெளியேறிய உடன் தோனியும் வெளியேற இந்தியா ஆட்டம் காண தொடங்கியது. மறுமுனையில் ரைனாவும் ஜடேயாவும் போராடினாலும் ஓட்ட வேகம் மந்தமானதுடன் ஜடேயா வழக்கம் போல தேவையான நேரத்தில் சொதப்பினார். ஆனால் அவர் போனது நல்லது போல வந்த பஜ்ஜி அக்தர் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து தன் கணக்கை ஆரம்பித்தார். இவர் தான் கணக்கை முடிக்கப்போகின்றார் என்று அப்போது தெரியவில்லை. வெற்றியை நோக்கி வீறு நடை போட்டுக்கொண்டிருந்த அணிக்கு பந்துகள் குறைய தொடங்க பதற்றமும் தொற்றிக்கொண்டது. இந்த பதற்றத்தில் ரைனா ரன அவுட் ஆக இந்தியா தோற்று விடும் என எதிர்பார்த்தேன். ஆனால் வந்த பிரவீன் குமார் கைகொடுக்க. பஜ்ஜி சில பந்துகளை முகம் கொடுக்க தடுமாறினார். இடையில் அக்தர், பஜ்ஜி வாக்குவாதம் சூடாக கம்ரன் அக்மல் அவர்களை பிரித்து அழைத்து சென்றதும் சூடு. அக்தர் இன்று விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிட தக்கது.

இறுதியில் இரண்டு பந்துகள் மீதமிருக்க மூன்று ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இரண்டாவது ஓட்டத்தை ஓட வந்த பிரவீனை தடுத்து நிறுத்திய பஜ்ஜி அடுத்த பந்தில் இமாலய சிக்ஸ் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். சிக்ஸ் பறந்து கொண்டிருக்கும் போதே சிங்கம் கர்ஜிப்பது போல அக்தரை பார்த்து கர்ஜிக்க அதற்க்கு அக்தரும் கையில் V காட்டி விட்டு போடா போடா என்பது போல கையால் காட்டியதும் செம ஹாட் மச்சி. ஆனால் என்னதான் அவர்கள் சொல்லிக்கொண்டார்களோ தெரியல.

மொத்தத்தில் இறுதி நேரத்தில் ஹீரோவாகி இந்தியாவை காப்பாற்றிய சிங் தான் இன்றைய கிங்.

சில சுவாரஸ்யங்கள்.

இடையில் பந்து மாற்றும் நேரம் வரும் போது பந்தை மாற்ற வேண்டாம் என அப்ரிடி சின்ன பிள்ளை போல அடம பிடித்தார்.
அக்தர்-பஜ்ஜி சண்டை...

போட்டி நிறைவடைந்த பின் இதை பற்றி கூறிய அப்ரிடி இது ஒரு நல்ல போட்டி என்றும் தாங்கள் நன்றாக ஆடியதாகவும் அதை விட இந்திய வீர்கள் ஆட்டம் சிறப்பு என்றும் பெருந்தன்மையோடு பாராட்டினார்.

அதே நேரம் இந்த வெற்றி கூல் கப்டன் என ரவி சாஸ்திரி தொனியை அழைக்க தான் இன்று கூல் இல்லை என்றும் இந்தியா பாகிஸ்தான் ஆடும் போது எப்படி கூழை இருக்க முடியும் என கெட்ட தோணி பஜ்ஜி தன்னை காப்பாற்றிவிட்டார் என்றும் சொன்னார். அதேநேரம் இனி சிங்கை ஒரு ஆல்ரவுண்டர் என சொல்லலாம் எனவும் கூறினார். இன்று மட்டுமன்றி கம்பீருடன் இந்திய ஏ அணியில் ஆடும் போதே மின்னொளியில் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை தான் வழங்கியதாகவும் அவர் சொல்லி இருக்கின்றார்.

எது எப்படியோ மீண்டும் ஒரு தடவை ஐம்பது ஓவர் போட்டி ஒன்று உயிர் பெற்றிருக்கின்றது. இன்னும் இரு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்திய மற்றும் இலங்கை அணிகள் தெரிவாகி உள்ளன. இதில் இறுதி லீக் போட்டியில் மொத இருக்கும் அணிகளே இறுதிப்போட்டியில் மோத உள்ளதால் ஆட்டம் சூடு பறக்கும் எனபதில் சந்தேகமில்லை.

பி.கு: எல்லோரும் ராவணன் படம் பார்த்து விட்டீர்கள் போல. விமர்சனங்கள் சூடாக வருகின்றன. படித்துள்ளேன். ஆனால் பலருக்கு பின்னூட்டம் இடவில்லை. காரணம் படம் பார்க்காமல் எப்பிடி....விரைவில் பார்ப்பேன் என நம்புகின்றேன்.
Share:

Tuesday, April 27, 2010

ஐ.பி.எல் ஸ்பெசல் போட்டோ கொமண்ட்ஸ்.










நம்ம சமீரா ரெட்டியை பார்த்தே முன்தினம் பார்த்தேனே ஸ்டைலில் பாடுறான் இந்த மோடி.





ஜெயஹோ பாடல் போல படியுங்கள்.



Share:

Thursday, April 22, 2010

யாரப்பாத்து தம்பி என்றாய். உம்மா உம்மா உம்மா ஆண்டி..

ஐ.பி.எல்லில் நம்ம கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் அப்படி என்னதான் பேசி இருப்பாங்க. சும்மா லோலாய்க்கு. படியுங்க முடிஞ்சா சிரிங்க அப்பிடியே ஒரு வாக்கை குத்துங்க. எல்லோரும் இதை பார்க்க.










Share:

Saturday, March 13, 2010

கில்லியை தொடரும் கிரிக்கெட்.


கிரிக்கெட், விளையாட்டுகளில் எனக்கு ஓரளவு தெரிந்த விளையாட்டு எனக்கு பெரிதாக விளையாட தெரியாவிட்டாலும் அதை பற்றிய ஓரளவு அறிவை வளர்த்து வைத்துள்ளேன். 1999 பிற்பட்ட காலப்பகுதியில் இருந்து தான் கிரிக்கெட் பற்றி நான் அறிந்து கொண்டேன். எனவே என்னை கவர்ந்த வீரர்கள் அதன் பின் வந்த வீரர்களாக தான் இருக்கும். பெரியவர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆரம்பிக்கலாமா.

அழைத்தவர்: எப்பூடி.

விதி முறைகள்:

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.


2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்

(1) பிடித்த போட்டிவகை :ஒருநாள் மற்றும் T20

(2) பிடிக்காத போட்டிவகை :சில டெஸ்ட் போட்டிகள். முடிவே இல்லாமல் முடிவதனால்.

(3) பிடித்த அணி : இந்தியா அதன் பின் இலங்கை,நியூசிலாந்து,இங்கிலாந்து .

(4) பிடிக்காத அணி : அவுஸ்திரேலியா. காரணம் மற்ற அணிகளில் என்ன தரமான வீரர்கள் இருந்தாலும் தாங்கள் தான் மன்னர் என ஒரு சில வீரர்கள் நினைப்பது. தங்களை மற்றவர்கள் வென்றால் அதிஷ்டம் என சொல்லி சமாளிப்பது.

(5) பிடித்த துடுப்பாட்ட வீரர்கள் : சச்சின்(காரணம் சொல்லவேணுமா?) ,கங்குலி(அவர் போல நானும் இடக்கை.),சேவாக்(எதற்கும் அஞ்சா அதிரடி பார்க்கும் நேரம் முழுக்க வெறுப்பு வராத ஆட்டம்.),யுவராஜ்(மண்டியிட்டு சிக்ஸ் அடிக்கும் ஸ்டைல்.) ,கம்பீர்(கங்குலியின் வாரிசு.),விராட் கோலி(அதிரடி.), தோணி(தல ஆச்சே.),சங்கா(முன்னர் பிடிக்கும் இப்போ வெறுப்பு.) அர்ஜுன(ஒரு ரன்னை கூட நடந்து எடுக்கும் தைரியசாலி) ஸ்டீபன் பிளமின்க்,அடம் கில்கிறிஸ்ட்(அந்த அணியில் இருக்கும் ஒரே நல்லவர்.)

(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்கள் :பலர் உண்டு. ஆனால் பிரபலங்களை மட்டுமே சொல்கின்றேன். அத்தப்பத்து, டில்ஷான்(இப்போ அடி அடி என அடிப்பது ஆனாலும் ஸ்டைல் இல்லா மலட்டடி.) இன்சமாம்(மனிதன் அவுட்டே ஆகமாட்டார்.) லாரா(காரணமே இல்லை.) பொண்டின்க் (திறமை இருந்தும் வாயால் அலட்டுவதால்.) மைக்கல் கிளார்க் .(குட்டி பொண்டின்க்.) சமரவீர, சல்மான் பட்(இந்தியாவை தாக்குவதனால்.)


(7) பிடித்த விக்கட் காப்பாளர் : தோணி(நம்ம அணிக்காக ஆடுவதால்.) திராவிட்(யார்மே இல்லாத நேரம் அணியின் நலனுக்காக அந்த சுமையையும் ஏற்றதால்.) சங்கா,மார்க் பவ்ச்சர், கில்கிறிஸ்ட்.

(8) பிடிக்காத விக்கட் காப்பாளர் : பார்த்திவ் பட்டேல்

(9) பிடித்த களத்தடுப்பாளர் : எப்போதும் யுவராஜ் சிங்(பாயும் புலி.) கைப்(ஓடி எடுப்பார்.) சச்சின்(இந்த வயதிலும் ஓடி ஓடி பிடிப்பதால்.) பாண்டிங்

(10) பிடிக்காத களத்தடுப்பாளர் : கங்குலி(பந்து போக பார்த்துக்கொண்டிருப்பது.) அர்ஜுன(சொல்லவா வேணும்)

(11) பிடித்த வேகப் பந்து வீச்சாளர் :வசீம் அக்ரம், சோயிப் அக்தர்(என்ன தான் குழப்படி பயலா இருந்தாலும் வேகம் எண்டால் வேகம்.) லீ( என் தங்கைக்கு பிடித்ததால் எனக்கும் பிடித்து விட்டது.)

(12) பிடிக்காத வேகப் பந்து வீச்சாளர் : டில்ஹார பெர்னாண்டோ, மொகமத் சாமி, கிலேச்பி, ஷேன் பாண்ட் (இந்தியரை பாழாய் படுத்தியதால்.)

(13) பிடித்த ஸ்பின்னர் : முரளி(தமிழன் என்னும் பாசம்.) கும்ப்ளே(விடா முயற்சி) ஷேன் வாரன்(சாதனைகளை படைத்ததால். பின்னாளில் திருந்தியதால்)

(16) பிடிக்காத ஸ்பின்னர் : அஜந்தா மென்டிஸ்(வெட்டி பந்தா.)

(17) பிடித்த ஆடுகளங்கள் : இந்தியாவின் சென்னை, கொல்கத்தாவின் ஈடன் காடன், அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன்,அடிலெயிட்,சிட்னி,இலங்கையின் காலி, பாகிஸ்தான் லாகூர், இங்கிலாந்தின் ஓவல், தென் ஆபிரிக்காவின் ஜோகனச்பெர்க்.

(18) பிடிக்காத ஆடுகளங்கள் : இலங்கையின் தம்புள்ள(இலங்கை வெல்ல வேண்டுமென தயாரிக்கும் மைதானம்.)

(19) பிடித்த சகலதுறை வீரர் : யுவராஜ் சிங், சச்சின், இர்பான் பதான், சனத், கலிஸ், அப்பிரிடி, டானியல் வெட்டோரி.


என்ன ஒரு சகல துறை வீரர் பாருங்க.

(20) பிடிக்காத சகலதுறை வீரர் : அன்றூ சைமன்ஸ்.(குழப்படிக்கார பயல்).

(21)பிடித்த அணித் தலைவர் : கங்குலி(இந்தியாவுக்கு வெற்றி என்று ஒன்று இருக்கென சொல்லிக் கொடுத்தவர் தைரியத்தை கொடுத்தவர்) தோணி(அதிஷ்டக்கார தல) மஹேல(பொறுமை சாலி) அர்ஜுன, ஸ்டீவ் வாவ், ஸ்டீபன் பிளமின்க்(நீண்டகாலம் அணியை வெற்றிப்பாதையில் கொண்டுவந்தவர்.)

(22) பிடிக்காத அணித்தலைவர் : சச்சின்,சனத்(துடுப்பால் சாதித்தவர்கள் ஆனால் தலைமையில் சாதிக்கவில்லை.) பாண்டிங்(திமிர்.)

(23) கனவான் வீரர்கள் : சச்சின்,முரளி.

(24) பிடித்த வர்ணனையாளர் : டோனி கிரேக்,ரவி சாஸ்திரி,கவாஸ்கர்

(25) பிடிக்காத வர்ணனையாளர் :ஹர்ஷா போக்லே

(26) பிடித்த பயிற்றுவிப்பாளர் : டேவ் வட்மோர்(கத்துக்குட்டி அணியை பாயும் புலி ஆக்கியவர்) பாப் வூல்மர் (பயிற்ச்சியில் பல தொழில் நுட்பம் புகுத்தியவர்.) இப்போது கேரி கேச்டன்(இந்தியாவின் வெற்றிகளின் பங்காளன்.)


(27) பிடிக்காத பயிற்றுவிப்பாளர் : கிரேக் சப்பல்(கோச்சர் என்ற பெயரில் வந்து நாசமாக்கியது. )

(28) பிடித்த போட்டி : இந்தியா விளையாடும் எல்லாப்போட்டிகளும்.

(29) பிடித்த வளரும் வீரர் : விராட் கோலி.(என்ன பொறுப்பு என்ன அதிரடி. வருங்கால இந்தியா என சொல்லலாம்.)

(30) பிடிக்காத வளரும் வீரர் : ரியான் ஜேம்ஸ் ஹரிஷ்(அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடுகின்றாரே.)


பதிவெழுத நான் அழைப்பது.

1. அகசியம் வரோ ( என்னதான் எழுதிறார் பார்ப்போமே.)
2. சாளரம் கார்க்கி(உறவுக்காக)
4. க.கோபி கிருஷ்ணா( நீண்டகாலம் வேறு ஆணிகள் புடுங்குவதால்.)

வானொலியில் என் இறுதிநாள் பற்றி விரைவில் என் பதிவு வரும். சில பல தனி வேலைகள் உறவினர்களுடன் என் நேரத்தை செலவளிப்பதர்க்காக இந்த சில நாட்களை ஒதுக்கினேன். அத்துடன் வானொலியில் இருந்து விலகிய கவலை இன்னும் மாறவில்லை. எனவே நேரம் வரும் போது என் பதிவையும் எதிர்பாருங்கள்.

பல்டி: கன்கொன் || Kangon அழைச்சதுக்கு நன்றிங்ணா....
ஆனா ஏற்கனவே பதிவிட்டுவிட்டதால் பதிவிடாத ஆதிரை அண்ணாவை (:ப) இந்தப் பதிவிட அழைக்கவும்.....
http://kangon-kangon.blogspot.com/2010/02/blog-post_10.html கான்கொனின் கோரிக்கையை ஏற்று ஆதிரையை இதை தொடர அழைக்கின்றேன்.
Share:

Friday, August 28, 2009

தலைமைப்பதவியை துறந்தார் பாண்டிங்.

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக வீறு நடை போட்டு நெஞ்சை நிமித்தி கடந்த சில மாதங்களாக வலம் வந்த ரிக்கி பாண்டிங் இன்று வெறும் நடைப்பிணமாக வாழ்கின்றார்.

இருபத்தோராவது வயதில் கிரிக்கெட்டில் தடம் பதித்த பாண்டிங் தன் அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே 96 ஓட்டங்களை பெற்று தன் வரவை அவர் நிரூபித்துக் காட்டினார். அதன் பின்னர் அவர் திறமை இன்றுவரை மங்கவில்லை என்பது உண்மையே. அதேநேரம் தன் முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெறும் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று அதிர்ச்சியுடன் ஆரம்பித்தார் தன் பயணத்தை.ஆனால் போட்டிகளில் அதிரடியாக ஓட்டங்களை பெற்று சாதனையோடு ஆரம்பித்தார்
. பாண்டிங் இப்போது மற்ற அணி வீரர்களையும் அணிகளையும் வாட்டும் பழக்கம் அவரின் ஆரம்பகாலத்தின் பழக்க வழக்கத்தின் மூலமே நாங்கள் அறியக்கூடியதாக இருக்கும். தன் ஆரம்பகாலத்தில் அடிக்கடி மது அருந்திவிட்டு பிரச்சனை கொடுப்பதென எப்படியெல்லாம் பெயரை கெடுக்க முடியுமோ அவ்வளவிற்கு கெடுத்துக்கொண்டார். அணிக்குள் இருக்கவே தகுதி அற்றவர் என எல்லோரும் தூற்றிய நேரம் ஓரளவிற்கு தன்னை மாற்ற ஆரம்பித்த நேரமே 2002ஆம் ஆண்டு ஒருநாள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அப்படி இருப்பினும் தன் வழக்கமான குழப்படிகளை குறைத்துக்கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்த ஆரம்பித்தார்.அதன் பிரதிபலனாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழி நடத்தும் பொறுப்பு பொண்டிங்கிடம் வழங்கப்பட்டது. ஸ்டீவ் வாவின் தலைமையில் வெற்றிபெறும் வழியை தெரிந்து கொண்ட அணி, பொண்டிங்கின் தலைமையில் வெற்றிக் கோட்டைகளை கட்டத் தொடங்கியது.

பாண்டிங்க்கு தொட்டதெல்லாம் துலங்க தொடங்கியது. வெற்றி மேல் வெற்றி குவிந்தது.வெற்றிக்கே பிறந்தவர் என்னும் மமதையில் பொண்டிங்கும் அவர் சகாக்களும் ஆடிய ஆட்டம் இன்னும் கண் முன் நிற்கிறது. ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதற்கேற்ப இந்தியாவின் கங்குலி அவுஸ்திரேலியர்களை அடக்கும் வேலையை அவர்கள் பாணியிலேயே ஆரம்பித்து வைத்தார். அதன் பின் வந்த தோனியின் தலைமையிலான இளம்படை, சாட்டை அடியுடன் இடியைக்கொடுக்க தென் ஆபிரிக்க இலங்கை என எல்லா அணிகளும் பொண்டிங்கின் சகாக்களை வறுத்தெடுக்க பழகிக்கொண்டனர்.

அவுஸ்திரேலியாவில் வைத்தே அவர்களை மண்கவ்வ வைத்து இந்திய அணி அவர்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டிவைத்து. அதன் பின்னும் அடிபட்ட புலி போல எழுவதும் வீழ்வதுமாக பாண்டிங் குழுவினர் தங்கள் வழக்கமான விளையாட்டையும் விளையாடி வந்தனர். இந்த நேரம் பார்த்து நீண்ட நாட்களாக அணியின் முதுகெலும்பாய் இருந்த பலர் ஓய்வு பெற அணியும் ஆட்டம் காண தொடங்கியது. இம்முறையும் ஆஷசில் வெற்றி கிடைக்கும் அன்ற இறுமாப்புடன் இங்கிலாந்தில் காலடி வைத்த பாண்டிங் குழுவினருக்கு இறுதியில் ஆப்படித்தது அனுப்பிவிட்டது இங்கிலாந்து அணி. எத்தனை முறை தான் அடிக்க அடிக்க வாங்குவது என முடிவெடுத்து விட்டாரோ என்னவோ இந்த தோல்வியோடு ஒருநாள் மற்றும் போட்டிகளின் தலைமைப்பொறுப்பை துறந்து டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக சொல்லி இருக்கின்றார்.
இதுவரை நல்ல தலைவராக வழி நடத்தியவர் இறுமாப்பு காரணமாகவே இறுதிக்காலங்களில் தோல்வியை சந்திக்கிறார். அந்த இறுமாப்பை தவிர்த்து விளையாட்டை விளையாட்டாய் விளையாடி இருக்கலாம். யாருக்கு பயந்தாரோ இப்போது தலைமை என்னும் கிரீடத்தை இழக்க துணிந்து விட்டார். என்ன தான் பாண்டிங் மற்றவர்களை ஒரு பொருட்டாக மதிக்காவிட்டாலும் அவர் ஒரு சிறந்த தலைவரே. அப்படிப்பட்ட ஒருவரை இழப்பது அவுஸ்திரேலியாவிற்கு மட்டுமல்ல முழு கிரிக்கெட் உலகிற்கும் இழப்பே.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox