உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label தி.மு.க. Show all posts
Showing posts with label தி.மு.க. Show all posts

Monday, June 27, 2011

கனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன?



கம்பி
க்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பாரிய சிக்கல்களை தி.மு.கவுக்குள் கொண்டு வர போகின்றது. அவருடைய இந்த கருத்தை பலர் பலவிதமாக பேசினாலும் ஸ்டாலின் இருக்கையில் கனிமொழி என்ற கேள்வியே பெரும்பாலும் சில இணைய தளங்களாலும் சில சமுக ஆர்வலர்களாலும் எழுப்பப்பட்டுள்ளது.

அழகிரி எதிர் ஸ்டாலின் என இருந்த இருமுனைப் போட்டி இப்போது மும்முனை போட்டி ஆக்கப்படுள்ளது. ஸ்டாலின் தான் அடுத்த வாரிசு என எல்லோரும் சொன்னாலும் அதை மறுக்காமல் முத்தழகன் பேசி இருக்கும் விதம் என்னவோ பல நூறு உண்மைகளை சொல்லாமல் சொல்கின்றது. என்னதான் அடுத்த முதல்வர் என கனிமொழியை சொன்னாலும் முத்தழகன் அடுத்த தலைவர் ஸ்டாலின் இல்லை என சொல்லவே இல்லையே.

இப்போது தி.மு.க இருக்கும் நிலையில் மீட்டு எழ பாரிய முயற்சியும் சில பல வருட கால அவகாசமும் தேவை. ஐயாவுக்கு விழுந்த அடி கொஞ்ச நஞ்சமல்ல. கட்சி என்பதை மீறி இப்போது இது குடும்பத்துக்கு எதிராக மாறி நிற்கிறது.
எழும்ப ரொம்ப நேரம் ஆகும் சில வேளை எழும்பாமலே போகலாம். அத்துடன் இம்முறை தான் அம்மா, அம்மா என்னும் பெயருக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்திருக்கிறார்.சுய தம்பட்டம் இல்லை தன்னிலை அதிரடி இல்லை. அமைதியாக சுழன்றடிக்கின்றது இந்த சூறாவளி. மறுபக்கம் கேப்டன், தோணி போல அமைதியாய் முன்னேறிக்கொண்டிருக்கிறார். எனவே அம்மா விட்டால் கேப்டன், கேப்டன் விட்டால் அம்மா என்ற நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை. காரணம் ஐயாவுக்கு பின் அடுத்தவாரிசுகளுக்கு அவ்வளவுக்கு பவர் இல்லை.

எனவே தான் சொல்கின்றேன் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் கனிமொழிதான். கரணம் ஐயா போனபிறகு(அரசியலில் இருந்து போறத மட்டும் தான் சொன்னேன் வேற எதையும் நினைக்காதிங்க.) தளபதி தான் தல ஆவார். ஆனால் அவர் ஒருநாளும் ஜெயித்து முதல்வர் ஆக போவதில்லை. அந்த நேரம் அந்தளவுக்கு தி.மு.க படுத்து விடும். கிட்டத்தட்ட அவர் ஒரு இருபது ஆண்டுகள் ஆப்பிழுத்து பார்த்துவிட்டு விட கனிமொழிக்கு அறுபது வயசாகிடும் அப்போ அவர் அடுத்த முதல்வருக்கு தகுதியானவராக இருப்பார்.(சிறை போவதும் அறுபது எழுபது வயது இருப்பதும் தானே தமிழ் நாட்டில் முதல்வர் ஆக முதல் தகுதி.) அந்த இருபது வருடங்களில் தி.மு.கவும் மீண்டும் எழுந்துவிடும். அந்த இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தாலும் தி.மு.க ஆளப்போவதில்லை. அப்படி இருக்கையில் ஸ்டாலின் எப்படி முதல்வர் ஆக முடியும். ஆக எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு சூசகமாக தான் வாகை முத்தழகன் இதை சொல்லி இருக்கின்றார். புரிவார்களா என்ன?


அவங்க புரியிறான்களோ இல்லையோ என்னை பின்னி எடுக்க ஆட்கள் வாறது தெரியுது. எஸ்கேப்
Share:

Saturday, May 21, 2011

தகத்தகாய தாரகை நமீதா ரசிகராக கலைஞர்

கடந்த சில வருடங்களாக காலை உணவுக்கும் மாலை தேநீருக்கும் இடையில் உண்ணாவிரதம் இருந்தும் மனைவி துணைவியுடன் சந்தோசமாக இருந்து தமிழ் நாட்டுக்கு குடும்பம் நடத்துவது எப்படி என வகுப்பெடுத்த பெயரிலே நிதியை வைத்திருப்பதால் எல்லா நிதியும் தமக்கு தன் என எண்ணிய தமிழின தலைவர் என தன்னை தானே சொல்லி தன்னை தானே செருப்படி அடித்துக்கொண்ட மதிப்புக்குரிய கலைஞர் ஐயாவுக்கும் அவர் தம அருந்தவப்புதல்வி கனி பரிக்கப்போய் கையான கனிமொழி ஆண்டிக்கும் இவர்கள் நடுவே பலிக்கடவானா முன்னாள் ராசா இந்நாள கூசாவுக்கும் பொருத்தமான பாடல்கள் சில மனதிலே தட்டின.

அதை கொஞ்சம் பகிர்ந்து கொண்டிருக்கும் போது ஒரு ஐடியாவில் வரும் பதிவு இது. அநேகமான தமிழர்கள் இதே மனநிலையில் தான் இருப்பிங்க என நினைக்கின்றேன்.....

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பாட்டுக்கு மேலே சந்தர்ப்பம் சொல்லி இருக்கேன். பொருள் இடம் காலம் சந்தர்ப்பம் எல்லாம் போட்டு பொருத்தமாய் ஒவ்வொரு வரியை பாட்டை கேட்கணும் சொல்லிப்புட்டன்.


ஹா ஹா கனிமொழி ஆண்டி உள்ளுக்குள்ள இருந்து இப்படிதான் பாடுவாவோ






ராசாவாக இருந்து கூசாவாகிப்போயிருக்கும் பலிக்கடா உள்ளுக்க இருந்து இப்பிடித்தான் பாடுவாரோ?





குடும்பமாக சேர்ந்து ஆடிய ஆட்டம் அடங்கிப்போயிருக்கும் நிலையில் அந்த குடும்பத்துக்கு தன் மான தமிழர்கள் பாடும் பாடல்.





தமிழின் மூத்த மகன் தமிழர்களின் தனிப்பெரும் தலைவன் பாசத்தலைவன் நமீதாவின் முதல் ரசிகன் கலையுலகின் தலைமகன் என தன்னை தானே சொல்லிக்கொண்டு இப்போது வீட்டில் ரெஸ்ட் எடுக்கும் ஐயா கலைஞர் அவர்களுக்கு தமிழ் மக்கள் சொல்ல நினைக்கும் சேதி.



எனக்கு ஒரு சந்தேகம் இந்த பாடல்கள் எல்லாம் கலைஞர் காலத்திலேயே வந்தவை சினிமாவில் ஆடிய இவர் இதை எல்லாம் கேட்காமலா விட்டார்...ஆப்பு இப்படி கண்ணு தெரியாமல் தான் இருக்குமோ?
Share:

Wednesday, May 13, 2009

என்ன ஜனநாயக நாடு இது? நீங்களும் கையை மேலே தூக்காமல் இனியாவது யாருக்கு வாக்களித்தீர்கள் என சொல்லலாமே.

உலகத்திலேயே பிரபலமான ஜனநாயக நாடு இந்தியா. அடுத்த நாட்டுக்கெல்லாம் ஜனநாயகம், இறையாண்மையை பற்றி சொல்லிக்கொடுக்கும் மிகப்பெரிய அரசியல் சாணக்கியர்களை கொண்ட நாடு. இன்று தன் 15 வது தேர்தலை சந்தித்திருக்கின்றது. இந்தத்தேர்தலில் எத்தனை மோசடிகள் நடைப்பெற்றிருக்கின்றது என எனக்கு தெரியாது. இருந்தாலும் வெளிச்சத்துக்கு வந்த சில ஜனநாயக முரண்பாடுகள் இன்றைய தேர்தலை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது.

சிறியவர்களுக்கும் பிரபலமில்லாதவர்களுக்கும் ஒரு அநீதி நடந்தால் அது வெளி உலகுக்கு தெரிவதில்லை. மூடி மறைக்கப்பட்டு உயிரோடு சமாதி கட்டப்பட்டு விடும். (இது எத்தனையோ நாட்டில் நடக்கின்றது.) அவர்களும் சொல்ல வலி இன்றி எதிர்க்க சக்தி இன்றி ஊமைகளாகிவிடுகின்றனர். (பலம் படைத்தவர்களாக காட்டிக்கொண்டு சர்வாதிகாரமாக நடந்தால் நாம் என்ன செய்வது) ஆனால் பிரபலங்களுக்கு அப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றால் மட்டும் அது பெரிய செய்தி ஆகிவிடுகின்றது.

என்ன கொடுமை சார் இது எனக்கு இதிலும் சோதனையா?
ஒவ்வொருமுறையும் வாக்களித்து வரும் நடிகர் கமலஹாசனுக்கு இம்முறை வாக்களிக்க முடியாமல் போய் இருக்கின்றது. தொடர்ந்து வாக்களித்து வந்த கமலின் பெயர் இம்முறை வாக்காளர் பெயர்ப் பட்டியலில் இல்லையாம். தொடர்ந்து வாக்களித்து வரும் ஒருவரின் பெயர் எப்படி இல்லாமல் போய்விட்டது. (அல்லது வேண்டுமெனவே இல்லாமல் செய்யப்பட்டதா தெரியாது.) இருந்தாலும் அதற்காக சொல்லப்பட்ட காரணமோ அதிகாரிகள் வீட்டிற்கு சென்ற நேரம் கமல் வீட்டில் இல்லை என்பதே.(இதென்ன நியாயம் அப்படியானால் கமல் தொழிலை விட்டுவிட்டு வீட்டில் அல்லவா இருக்க வேண்டும்.)
இதனால் வருத்தப்பட்ட கமல் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் இந்த தேர்தலில் தன் பங்கு இல்லாமல் போய்விட்டதே என தெரிவித்திருக்கின்றார். நான் எந்தக்கட்சிக்கும் சார்பானவன் அல்ல(அதுதாங்க பிரச்சனையே) இருப்பினும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வாக்களிக்க வந்தேன் இப்படி ஆகிவிட்டதே என்கின்றார் கமல். உலக நாயகன் என்ற பட்டத்தை வைத்திருப்பதால் உலகத்தில் எங்கு இருக்கின்றார் என தெரியாமல் அதிகாரிகள் தவறவிட்டுவிட்டார்களோ? உலகத்துக்கு தமிழக கலாச்சாரத்தையும் தமிழக சினிமாவையும் தலை தூக்க வைக்கும் ஒரு உன்னத கலைஞனின் நிலை இது.

நல்ல காலம் விரலை மேலே காட்டவில்லை
ஆனால் தன் குரலாலேயே அரசியலை கடந்தகாலங்களில் நிர்ணயித்த ரஜினி இம்முறை சாதரணமாக வந்து வாக்களித்து விட்டார். வழமைபோலவே பத்திரிகையாளர்கள் அரசியலுக்கு வருவீர்களா என கேட்க கையைத் தூக்கி மேலே காட்டிவிட்டு அவர் போய்விட்டார். இனி அவர் எதை காட்டினார். அவர் நகத்தில் அழுக்கு இருந்ததா இல்லையா என எல்லாம் பார்த்து அதற்கும் அரசியல் சாயம் பூசப்போகின்றார்கள். மனிதர் யாருக்கு வாக்களித்தேன் என சொல்லவே இல்லை.(ஜனநாயம் இதுதானோ?)

பிரச்சாரம் முடிஞ்சிதா மறந்தே போய்விட்டேன்.
இந்த இரண்டு தலைகளின் நிலை இப்படி இருக்க தமிழகத்தை அண்மையில் கலக்கிய இன்னொரு புரட்சி புயல் சூறாவளி சீமான் தன் கொள்கையை இன்றும் விடவில்லை. வாக்குசாவடிக்கு அருகில் வந்த சீமான் அங்கிருந்த மக்களிடம் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்காமல் அ.தி.மு.கவிற்கு வாக்களியுங்கள் எனவும் ப.சிதம்பரத்துக்கு வாக்களிக்க வேண்டம் என கூறினார்.(பிரசாரங்கள் நிறைவடைந்ததை மறந்து விட்டாரோ? அத்துடன் இது மட்டும் ஜனநாயகமா என தெரியவில்லை.) யாராக இருப்பினும் இப்படி செய்வது குற்றம்தானே. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் சீமானை அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்திய பின் அடங்கியது.

அதேபோல் அமீர் மற்றும் கஞ்சா கருப்பு போன்ற பிரபலங்களும் இம்முறை வாக்களிக்க முடியாமல் போய் விட்டது.

நமக்கு தெரிந்தே இத்தனை பேர் வாக்களிக்கவில்லை அதேபோல் சில ஜனநாயக மீறல்களும் நடைபெற்றிருக்கின்றது. இவை எல்லாம் பிரபலமானவர்களுக்கு என்பதால் அந்த இடங்களை விட்டு நாட்டை விட்டு பரவி இருக்கின்றது. இப்படி இன்னும் எத்தனை சாதரண குடிமகன்களுக்கு நடந்திருக்கு. இப்படிப்பட்ட தேர்தல் தேவைதானா?.(என்ன செய்வது அனேகமாக பல நாடுகளில் இப்படித்தானே நடக்கின்றது.)

பிரபலமானவர்களுக்கு நடக்கும் இப்படியான சம்பவங்கள் சாதாரண மக்களுக்கும் நடைபெறும் அநீதிகள் வெளி உலகங்களுக்கு தெரிந்து முற்றாக அழிக்கப்படும்போது தான் ஜனநாயகம் என்னும் உன்னதமான வார்த்தைக்கு அர்த்தம் கிடைக்கும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கை உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox