உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Monday, June 27, 2011

கனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன?



கம்பி
க்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பாரிய சிக்கல்களை தி.மு.கவுக்குள் கொண்டு வர போகின்றது. அவருடைய இந்த கருத்தை பலர் பலவிதமாக பேசினாலும் ஸ்டாலின் இருக்கையில் கனிமொழி என்ற கேள்வியே பெரும்பாலும் சில இணைய தளங்களாலும் சில சமுக ஆர்வலர்களாலும் எழுப்பப்பட்டுள்ளது.

அழகிரி எதிர் ஸ்டாலின் என இருந்த இருமுனைப் போட்டி இப்போது மும்முனை போட்டி ஆக்கப்படுள்ளது. ஸ்டாலின் தான் அடுத்த வாரிசு என எல்லோரும் சொன்னாலும் அதை மறுக்காமல் முத்தழகன் பேசி இருக்கும் விதம் என்னவோ பல நூறு உண்மைகளை சொல்லாமல் சொல்கின்றது. என்னதான் அடுத்த முதல்வர் என கனிமொழியை சொன்னாலும் முத்தழகன் அடுத்த தலைவர் ஸ்டாலின் இல்லை என சொல்லவே இல்லையே.

இப்போது தி.மு.க இருக்கும் நிலையில் மீட்டு எழ பாரிய முயற்சியும் சில பல வருட கால அவகாசமும் தேவை. ஐயாவுக்கு விழுந்த அடி கொஞ்ச நஞ்சமல்ல. கட்சி என்பதை மீறி இப்போது இது குடும்பத்துக்கு எதிராக மாறி நிற்கிறது.
எழும்ப ரொம்ப நேரம் ஆகும் சில வேளை எழும்பாமலே போகலாம். அத்துடன் இம்முறை தான் அம்மா, அம்மா என்னும் பெயருக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்திருக்கிறார்.சுய தம்பட்டம் இல்லை தன்னிலை அதிரடி இல்லை. அமைதியாக சுழன்றடிக்கின்றது இந்த சூறாவளி. மறுபக்கம் கேப்டன், தோணி போல அமைதியாய் முன்னேறிக்கொண்டிருக்கிறார். எனவே அம்மா விட்டால் கேப்டன், கேப்டன் விட்டால் அம்மா என்ற நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை. காரணம் ஐயாவுக்கு பின் அடுத்தவாரிசுகளுக்கு அவ்வளவுக்கு பவர் இல்லை.

எனவே தான் சொல்கின்றேன் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் கனிமொழிதான். கரணம் ஐயா போனபிறகு(அரசியலில் இருந்து போறத மட்டும் தான் சொன்னேன் வேற எதையும் நினைக்காதிங்க.) தளபதி தான் தல ஆவார். ஆனால் அவர் ஒருநாளும் ஜெயித்து முதல்வர் ஆக போவதில்லை. அந்த நேரம் அந்தளவுக்கு தி.மு.க படுத்து விடும். கிட்டத்தட்ட அவர் ஒரு இருபது ஆண்டுகள் ஆப்பிழுத்து பார்த்துவிட்டு விட கனிமொழிக்கு அறுபது வயசாகிடும் அப்போ அவர் அடுத்த முதல்வருக்கு தகுதியானவராக இருப்பார்.(சிறை போவதும் அறுபது எழுபது வயது இருப்பதும் தானே தமிழ் நாட்டில் முதல்வர் ஆக முதல் தகுதி.) அந்த இருபது வருடங்களில் தி.மு.கவும் மீண்டும் எழுந்துவிடும். அந்த இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தாலும் தி.மு.க ஆளப்போவதில்லை. அப்படி இருக்கையில் ஸ்டாலின் எப்படி முதல்வர் ஆக முடியும். ஆக எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு சூசகமாக தான் வாகை முத்தழகன் இதை சொல்லி இருக்கின்றார். புரிவார்களா என்ன?


அவங்க புரியிறான்களோ இல்லையோ என்னை பின்னி எடுக்க ஆட்கள் வாறது தெரியுது. எஸ்கேப்
Share:

Friday, June 24, 2011

கவிஞர் வாலியின் வாளி வாழி!


கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.


''ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர் வாலியின் அந்தர்பல்டி


ஒரு கவிஞராக பாடலாசிரியராக அவர் வரிகளின் மேல் எனக்கு காதல் ஆனால் அவர் படித்த துதியால் இங்கே மோதுகின்றேன். மன்னிக்கணும் பெரியவரே அதுக்காக மனதில் பட்டத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

காவியக்கவிஞனே!

உன் கவிவரிகளின் மேல் எனக்கு காதல்
நீ படித்த துதிகளினால் நமக்குள் மோதல்
தமிழன் குணம் எப்போதும் அடுத்தவனுக்கு ஈதல்
தங்கள் குணமோ ஏன் ஆட்சியாளர் பக்கம் சாய்தல்
உந்தன் உயிரினும் மேலான தமிழினம் சாதல்
கண்டு உன் மனதுக்குள் வரவில்லையா கூதல்.

மார்க்கண்டேயனே!

மாற்றத்திலும் மாறாத உன் தமிழை ரசிக்கின்றேன்
நீயோ
மறத்தமிழ் குருதியை ருசித்தவனை ரசிக்கின்றாய்

எம் வலியும் வரிகளில் விதைத்தாய் வியக்கின்றேன்
அதே பேனாவால்
வலியைக் கொடுத்தவனையும் இந்திரன் சந்திரன் என வாய்கூசாமல் விழிக்கின்றாய்

வாலி!

உன் வரிகளில் தெறித்தது நம்மவரின் வலி
உன் வார்த்தைகளில் ஏன் இன்று இந்த போலி
ஈழத்தமிழன் கொண்டதோ உயிர் கிலி
ஈனத்தவனாய் ஆட்சிமாறியதும் நீ கொண்டதும் கிலி
நீ துதி பாடிய நிதியால் அறுந்தது பல தாலி
எந்த நிதியால் கொடுக்க முடியும் இழந்த உயிர்களுக்கு கூலி
கவிதைகளில் நீ பராக்கிரமசாலி
களங்க மனத்தால் நீ இனி மக்கள் மனதில் எலி
நின் பெயருக்கு ஏற்றது போல பிடிக்காதே வாளி
உந்தன் களங்கம் களைந்து நீ பல்லாண்டு வாழி!
Share:

Saturday, January 15, 2011

பொங்கல் எப்போ? - இம்முறை இரண்டு பொங்கலா?

தைப்பொங்கல்.

இன்பம் பாதி துன்பம் பாதி தான் வாழ்க்கை ஒருபுறம் அழிவுகள் உலகை துரத்திக்கொண்டிருக்க மறுபுறம் சில தவிர்க்க முடியாத பண்டிகைகள் சடங்குகள் வந்துகொண்டே செல்கின்றன. நாளைய தினம் பொங்கல் கொண்டாட உள்ள அத்தனை உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.


காலையில் எழுந்து தோய்ந்து புத்தாடை அணிந்து சூரியனுக்கு படைத்து அப்பா தீபம் காட்ட பின்னே நின்று ஆதவனை வணங்கி அம்மா கையால் பொங்கல் உண்ணும பொங்கல் இந்த முறை எனக்கு இல்லை. இருந்தாலும் நினைவுகளால் மனதில் ஒரு பொங்கல் லண்டனிலும் கொண்டாடுவேன் உங்கள் வாழ்த்துக்களோடு.

மாட்டுப்பொங்கல்.

உழவர்களுக்கு உறுதுணையாய் நின்ற உன்னத உயிர்களை பூஜிக்கும் நாள் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இருப்பினும் நம்மில் சிலரும் இந்த நாளில் தான் குளித்து உடுத்தி கொண்டாடுவார்கள் அவர்களுக்கு வாழ்த்து சொல்லாவிட்டால் கோபி(அட நல்லாய் பொருந்துது)ப்பாங்க இல்லையா? வாழ்த்துக்கள்!




பொங்கல் எப்போ?
(இது மொக்கை அல்ல)

தமிழர்கள் அன்று முதல் இன்றுவரை தை மகளின் முதல் நாளை தான் தைத்திருநாளாக கொண்டாடுகின்றனர். என் தத்தா பாட்டன் பூட்டன் என்று எல்லோரும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக தான் இந்த நாளை கொண்டாடி வந்தனர். ஆனால் அண்மையில் தமிழ் தாத்தா(ஆனால் இளைஞன் என்று விளம்பரப்படுத்திறாங்க என்ன கொடுமை இது. கீழுள்ள படத்தை பாருங்கோ) தை திருநாளை புத்தாண்டாகவும் கொண்டாட சொல்லி கழுத்தறுகின்றார்.
இந்த நிலையில் லண்டனில் பல காலண்டர்களில் 14.01.2011 தான் தை பொங்கல் என பிரசுரித்துள்ளதுடன் ஒரு சில ஆலயங்களிலும் இன்று தை திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மற்றும் இந்தியாவில் நாளை(15.01.2011) தான் பொங்கல் என அறியக்கிடைத்ததுடன் இன்றும் 14.01.2011 சிலர் பொங்கலை இந்தியாவில் கொண்டாடியதாய் அறியக்கிடைத்தது. இதை பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன் ஏன் இன்று லண்டனில் கொண்டாடினார்கள் என்று அதுக்கு அவர் சொன்ன பதிலோ கொஞ்சம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது. (இங்கே எல்லாம் இப்பிடி தான்) சனிக்கிழமை வந்தால் மாமிசம் உண்ண உண்ண முடியாது என்பதற்காய் தை மகள் ஒரு நாள் முன்னரே பிறந்து விட்டால் என்று. பிள்ளையை தான் முந்தி பிந்தி பெறுகின்றார்கள் என்றால் இப்போ தை மகளும் இப்படியா?

உண்மையில் இன்று லண்டனில் பொங்கல் என சொல்ல காரணம் நேர வித்தியாசம் என்றனர். சரி உங்கள் வழியிலேயே வருகின்றேன். அப்படி நேர வித்தியாசம் என்றால் இலங்கை இந்திய நேரத்துடன் ஒப்பிடுகையில் லண்டன் நேரம் 5.30 மணித்தியாலங்கள் பின்னரே. அதாவது நீங்கள் காலை 6.00 மணி என்று சொன்னால் லண்டனில் நேரம் அதிகாலை 12.30. அப்படி பார்த்தால் இலங்கை இந்தியாவில் தை மகள் பிறந்த பின்னர் அல்லவா லண்டனில் பிறக்க வேண்டும். அதாவது January 15 ம் திகதி தான் தமிழுக்கு தை முதலாம் தயக்கத்தில் என்றால் அது எப்படி January 14 தை திருநாளாக முடியும். லண்டனில் பொதுவாக மூன்று W க்களை நம்ப முடியாது என்பர். Weather, Work, Wife இப்போ நம்பிக்கைகளாய் காலம் காலமாய் வந்த மரபுகளையே நம்ப முடியலையே! நண்பர்களே! உண்மையில் எப்பதாங்க பொங்கல் சொல்லிட்டு கொஞ்சம் நமக்கும் அனுப்பி வையுங்க.
Share:

Friday, November 19, 2010

தன் வாயால் தானே கெடும் ரஜினி.



சூப்பர் ஸ்டார் ரஜினி, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அந்த இடம் என்னவோ ஒரு இமயம தான் அடுத்தவர் எல்லோருக்கும் ரஜினியின் நடிப்புத்துறையில் மட்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் என்றுமே ஒரு குழப்பவாதியாக இருக்கின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது.

அழகிரியின் மகன் திருமணத்தில் வைத்து 32 ஆண்டுகளுக்கு பின் தான் மதுரை மண்ணில் காலடி வைத்ததாக ரஜினி பேசியது இப்போது பலரிடையே சலசலப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த கணக்கு தப்பு ரஜினி இதற்கிடையே மதுரை வந்து போயுள்ளதை தன் ஆதார பூர்வமாக பதிவித்துள்ளார் சக பதிவர் உண்மைத்தமிழன். அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த நிலையில் ரஜினி இறுதியாக மன நலம் பாதிக்கப்பட்டு உடல் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தான் இறுதி மதுரை பயணம் என தட்ஸ்தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

ஆனால் அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் கைப்பொம்மையாக இருந்த நடிகை லதாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சில்மிஷம் செய்யவும் ரஜினி முயன்றதால் எம்.ஜி.ஆர் குழுவினர் ரஜினியை அடித்து கொண்டு சென்று பைத்தியகார வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் ஒரு செய்தி உண்டு. அதே நேரம் எம்.ஜி.ஆர் அரசியலில் கோலோச்சிய நேரம் ரஜினி தன் பட பாடல்களில் தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியதும் இதற்க்கு ஒரு காரணமாகா சொல்லப்படுகின்றது. எது எப்படியோ 32 வருடங்கள் ரஜினி மதுரைக்கு வரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்?

என்னை வாழ வைத்தது தமிழ் மக்கள் என சொல்லும் ரஜினி தமிழ் வளர்த்த மதுரையில் கடந்த 32 வருடம் காலே வைக்கவில்லை என்றால் அது அந்த மக்களுக்கும் தன் ரசிகர்களுக்கும் செய்தது சரியா?

இல்லை இல்லை அவர் வந்திருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம் அப்படி என்றால் அதை மறைக்க காரணம் என்ன? எப்போதும் தன் மீது ஒரு மீடியா வெளிச்சம் படவேண்டும் என்பதற்காய் இப்படி பேசுகின்றாரா? அப்படியென்றால் தன்னை கடவுளாகவும் நேர்மையின் சிகரமாகவும் நினைக்கும் தன் ரசிகர்களை ஏமாற்றுவதுடன் தன்னையும் ஏமாற்றுகின்றாரா? ரஜினியின் இந்த குழப்பங்களுக்கு எல்லாம் என்ன காரணம்?

இமயத்தில் பாபா என்றார் இல்லை கோட்டையில் ராஜ்ஜியம் என்றார் இன்று சினிமாவே போதும் என நிற்கின்றார். விழாக்களுக்கு கட்டாயப்படுத்துகின்றார்கள் என அஜித் பேசியபோது கைதட்டினார் இன்று அழையா விருந்தாளியாய் பல விழாக்களில் சென்று கை கட்டி நிற்கின்றார். அஜித்தை உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்க நினைத்தாரா? இல்லை உண்மையிலேயே மனதார தட்டினாரா? ஆனால் இந்த உள்ளொன்று வைத்து புறம் பேசும் பேச்சு எதற்கோ. உண்மையில் இந்த விடயத்தில் கமலை போற்ற வேண்டும். மீடியாவுக்காக ஒரு பேச்சு ரசிகருக்கு என்று ஒரு பேச்சு இன்றி தன் படுக்கை அறை விடயங்களை கூட சரியோ பிழையோ உள்ளதை உள்ளபடி ஓரளவு சொல்கின்றார்.

இதேபோல தான் அண்மையில் வாலியின் விழாவிலும் ஒரு பரபரப்பு பேச்சு. சிலவேளை ரஜினி அப்படி பேசி இருக்காவிட்டால் அந்த விழாவே எமக்கு தெரியாமலும் போயிருக்கலாம். ஆனால் அங்கும் அவரின் பேச்சில் தடுமாற்றம். பெரிய மனிதர் பேசும் பாங்கா அது. அதுமட்டுமன்றி தன் வீட்டு கல்யாணத்துக்கு அழைத்தது மட்டுமன்றி வரவில்லை என கடிந்து கொண்ட ரஜினி தான் இவ்வளவு அக்கறை கொண்ட வாலியின் மனைவியின் இறந்த தினத்தை மறந்தாரா இல்லை மறந்தது போல நடித்தாரா? வந்தது தான் வந்துவிட்டார் சபைக்கு வழக்கம் போல வாழ்த்தி பேசிவிட்டு போயிருக்கலாமே. கருணாநிதியின் பேரக்குழந்தைகளையே வாழ்த்தும் இந்த பெரியவர் உண்மையில் பெரிய ஒரு மனிதனை இப்படி கடிந்தது தகுமா? அவர் வந்தால் தான் போவாராம். அதேபோலசிகர்கள் நாங்கள் காசு கொடுத்து படம் பார்ப்பதால் தான் தான் அரசியலுக்கு வந்து நல்லது செய்வதாக சொல்லுகின்றார். நீங்கள் இதுவரை செய்த ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு பாதிக்கப்பட்ட ஒருவன் இதே போல உங்களை மேடையில் ஏற்றி வைத்துக் கேட்டால் எப்படி இருக்கும். வாலியின் அனுபவம் என்ன என்பதை இந்த மன்னன் மறந்துவிட்டார் போல. மேலும் படிக்க.

இதுவரைக்கும் ரஜினி பேசிய செய்த செயகைகள் எல்லாம் ரஜினியின் இந்த ஒரு பேச்சுடன் காற்றில் போய்விடுமா? இல்லை மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு ரஜினி ரசிகர்கள் இதற்கும் சாக்கு போக்கு சொல்லப்போகின்றார்களா? இல்லையெனில் கடவுள் ரஜினி தான் தப்பாய் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்கப்போகின்றாரா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

தன் பிறந்த மாநிலத்தையே எதிர்த்து பேசிவிட்டு பின் தன் படம் ஓடணும் என்பதற்காய் மன்னிப்பு கெட்ட மகான் தானே அவர். இப்போது நான் மகான் இல்லை என சொல்லப்போகின்றாரா? இல்லையேல் எந்திரன் ஓடணும் என்பதற்காய் ஐஸை IFA செல்ல விடாமல் மறித்ததையும் தன் மகள் திருமணத்தை முன்னிட்டு விருந்து கொடுப்பேன் என சொல்லிவிட்டு இன்றுவரை அதைப்பற்றி வாய்த்திறக்காமல் இருப்பதையும் சமாளிப்புகேசன் இல்லை என போகின்றாரா?

என் இந்த பதிவு நிச்சயம் ரஜினி ரசிகர்களை சூடு படுத்தும். ஆனால் இது நீங்கள் நான் என எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒரு நேரம். திரையில் என்றுமே ஜாம்பவான் தான் ரஜினி ஆனால் நிஜத்தில் இல்லை இல்லை இல்லை என சொல்லாமல் சொல்கின்றார். அப்புறம் இன்னொரு விஷயம் இந்த பதிவை நான் எழுதியதால் ரஜினிக்கு 32 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது போல எனக்கும் இங்கே நடத்தனும் என நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம் CCTV in operation. ஹா ஹா ஹா ஹா மெ மெ மெ (இதுவும் திரையுலக சூப்பர் ஸ்டார் வசனம் தான்.உபயம் எந்திரன் )

குறிப்பு: என் சின்ன வயதில் நானும் ரஜினி ரசிகன் தான்.....

இங்கே கோர்த்து விட்டாச்சு அப்புறம் இன்னுமொரு சக்திவாய்ந்த இடம் இருக்கு எல்லா. நம் பதிவுலக சகாக்கள் பற்றிய மகா மொக்கை ஒன்று தயாராகின்றது. மிக விரைவில் டண்டனக்கா தான்
Share:

Wednesday, April 14, 2010

கலைஞர் கருணாநிதி உத்தரவை மதிக்காத தோணி.


நாட்டாமைக்கே நம்ம தோணி சொல்வது...இதெல்லாம் செல்லாது செல்லாது.


பாசக்கார தலைவர் பாராட்டு நாயகன் இளைஞர்களின் இதய நாயகன் என்றும் அசராமல் ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர் என்று இன்னும் பல அடுக்கு மொழிக்கு சொந்தக்காரரான கலைஞர் கருணாநிதி அவர்கள் காலம் காலமாக தமிழர்களின் பண்பாடாகவும் வழக்கமாகவும் கொண்டாடப்பட்டு வந்த தமிழ்ப் புத்தாண்டை மாற்றி அமைத்துவிட்டார். இதை பற்றி காரசாரமாக விவாதங்கள் கருத்துக்கள் வந்து மறைந்து விட்டன. மறையா சூரியன் தன் உத்தரவு மூலம் தமிழ் நாட்டு நண்பர்களின் தலைவிதியை மாற்றி விட்டார். ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை என சொல்லிக்கொண்டே தன் வீட்டில் ஆன்மீக வாதிகளை வைத்திருக்கும் இவரால் எப்படி ஒரு ஆன்மிகம் சம்பந்தப்பட்ட உலக மக்களின் நம்பிக்கையை மாற்ற முடியும்.

எனக்கு தெரிந்தளவில் மீனா ராசியில் இருந்து மேட ராசிக்கு இடம்பெயர்வதுதான் புதுவருடப்பிறப்பு. இது நம் பூட்டன் பூட்டிக்கு முன்னைய பல தலைமுறையில் இருந்து நம்பிக்கையின் வெளிப்பாடு என வரலாறு சொல்கின்றது. இந்த இடப்பெயர்வு தைப்பொங்கல் அன்று வருமா? அதேநேரம் வசந்த காலப் பிறப்பு தான் வருட பிறப்பு என்ற நம்பிக்கையில் பார்த்தால் அந்த கால மாற்றத்தை மாற்ற எந்த கொம்பனாலும் முடியாது? அப்படி இருக்கையில் இதை மாற்றிய கருணாநிதி.................?????

பாசத்தலைவர் என்ன சொன்னாலும் தமிழக மக்கள் மட்டுமே இந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலையில் இருக்கின்றார்களோ தெரியாது. இதில் எத்தனை பேருக்கு உடன்பாடோ என்பதும் தெரியாது. ஆனால் இலங்கையில் நாம் இவருக்கு கட்டுப்பட தேவையும் இல்லை. கட்டுப்படவும் இல்லை. வழக்கம் போல இன்று தமிழ் சிங்கள புத்தாண்டு எல்லா இடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க தோணி கருணாநிதியின் கருத்துக்கு என்ன சொன்னார்??? பாவமப்பா கேப்டன்(நான் நம்ம விஜயகாந்தை சொல்லல) நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் இந்த வெற்றியை நாளை புத்தாண்டை கொண்டாட இருக்கும் தமிழர்களுக்கு சமர்பிக்கின்றேன் என பேட்டி அளித்துள்ளார். அதுவும் தமிழ் நாட்டில் வைத்து நம் தமிழினத்தலைவர் ஆட்சியில் இருக்கும் நிலையில். பாவமப்பா தோணி அவருக்கு யாரும் சொல்லவில்லை போல தமிழக முதல்வர் சரித்திரத்தையே மாற்றி அமைத்தவர் என்று. அல்லது தெரிந்தும் இதை சொன்னாரா யாருக்குத் தெரியும். காரணம் வரலாறு அதுதானே. ஒரு சின்ன சந்தேகம் அவருக்கு இருக்கும் தமிழ் நண்பர் யாரும் தன் ஆதங்கத்தை பிரபலமாக இருக்கும் இவர் மூலம் வந்தாலாவது கருணாநிதிக்கு இதுதான் சரித்திரம் இதுதான் வரலாறு இதுதான் நம்பிக்கை என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பாரோ?

எது எப்படியோ தமிழர்களையும் தாண்டி எல்லோரிடமும் ஏப்ரல் 14 தான் தமிழ் புத்தாண்டு என்று பதிந்துவிட்டது. இதை யாராலும் மாற்ற முடியாதது என்பதற்கு ஒரு சின்ன உதாரணமே இந்த சம்பவம்.....

அட என்னங்க இந்த புது வருடத்தில் ஒரு நல்ல காரியம் செய்யணும் என்பதற்காக கொளுத்திப்போடிருக்கேன் இனி இந்த வெடியை கையாள்வது உங்கள் இஸ்டம்...
Share:

Monday, February 22, 2010

அஜித் விஜயிடம் சொன்ன ரகசியம்-குகநாதனிடம் மல்லுக்கட்டிய விஜய்.


மீண்டும் ஒரு அஜித் பதிவை எழுதிக்கொண்டிருந்த இடையில் இன்னொரு அஜித் பதிவு. எனக்கும் அஜித்துக்கும் இடையில் இப்போ அப்பிடி ஒரு பொருத்தம் போல இருக்கு. சரி நேரே விசயத்துக்கே வாறன். ஏற்கனவே ஒரு பதிவை விஜய்-அஜித் நட்பு பற்றியும் விஜய் அஜித்திடம் பேசியது பற்றியும் இட்டிருந்தேன். அதை படிக்க இங்கே அழுத்துங்கள்.

அந்த பதிவே இவர்கள் இரண்டுபேருக்கும் இடையிலான புரிந்துணர்வை காட்டி இருக்க. இப்போது இன்னொரு செய்தி வெளிவந்திருக்கின்றது. அஜித் பிரச்சனையில் அஜித்துக்கு ஆதரவாக நின்று கைதட்டியதும் பேசியதும் சூப்பர் ஸ்டார். அவருக்கே பெப்சி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துவிட அவர் பக்கமும் சத்தம் இல்லை. என்ன நடந்ததோ என தெரியாமல் நின்ற நேரம் இதோ நான் இருக்கேன் நீ என் நண்பன்டா உன்னை விட்டுவேனா என வந்திருக்கின்றார் நம் தளபதி. தலைக்காக தன் தலைய நுழைத்து சமரசம் செய்ய முற்பட்டிருக்கின்றார் விஜய்.

தொழில் இருவரும் எதிரிகள் இவர்கள் சேரமாட்டார்கள். என எண்ணியவர்கள் மூஞ்சியில் கரி பூசி இருக்கின்றார் விஜய். இதில் பலருக்கு தெரியாத இன்னொரு விசயமும் வெளிவந்திருக்கின்றது. இருவரும் திரையில் மோதிக்கொண்டாலும்(அண்மையில் குறைவு.) கிறிஸ்மஸ்,புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒன்றாக ஒரே இடத்தில் கொண்டாடி வருவதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. (என்ன அதிசயம் இது.)

அப்படிப்பட்ட தன் உயிர் நண்பனுக்கு பிரச்சனை என்ற போது பார்த்துக்கொண்டிருப்பார தளபதி. உடனடியாக் வி.சி.குகநாதனை தொடர்புகொண்ட விஜய்"அஜித் ஒரு திறந்த புத்தகம் மாதிரி அவர் மனதில் ஒன்றுமில்லை. நினைப்பதை உடனே கொட்டிவிடுவார். அதை பெரிது படுத்தவேண்டாம். வீணாக அவரின் மன உளைச்சலை அதிகரிக்க வேண்டாம்" என கேட்டிருக்கின்றார்.

இதை விட இன்னொரு செய்தி திடுக்கிட வைத்திருக்கின்றது. கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் சந்தித்த இருவரும் பேசியபோது இன்னும் சில ஆண்டுகளில் நடிப்பை கைவிட இருப்பதாக அஜித் விஜயிடம் தெரிவித்திருக்கின்றார். அதனை குறிப்பிட்டு பேசிய விஜய்,அவர் இந்த துறையில் இருக்கும் வரை அவரை கஷ்டப்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டாராம். ஆனால் விஜயின் பேச்சையும் கேட்டு கோபமடைந்த குகநாதன் அவரை யார் நடிக்க சொன்னார் விருப்பமில்லாவிட்டால் போகட்டும் என சொன்னாராம்.

இந்த குகநாதன் போன்றோர் திருந்தமாட்டார். தேவையான நேரத்தில் தேவையானதை செய்யாமல் இப்படி கண்கெட்ட பிறகு நமஸ்காரம் செய்கின்றனர். அஜித் தேவையான இடத்தில் சொல்ல வேண்டியவரிடம் தான் இதை சொல்லி இருக்கின்றார். அனால் அதன் பின் நடக்கும் பிரச்சனைகளை அவர் பார்ஹ்த்துக்கொண்டிருப்பதே கொடுமையிலும் கொடுமை.

ரசிக சிகாமணிகளே, விஜயை ரசித்து அஜித்தை கேவலப்படுத்துவோரே, தலைய கொண்டாடி தளபதிய இழிச்சவாயனாக்குபவர்களே இவர்கள் இரண்டுபேருக்கும் ரசிகனில்லாமல் இவர்களை பற்றி தெரியாமல் இருந்து உசுப்பி விடும் நல்லுள்ளங்களே இப்போதாவது புரிகின்றதா இந்த இருவரின் நட்பு. உங்கள் நட்பு வளரட்டும். தல இனி என்ன கவலை உன் எதிரி என எல்லோரும் நினைத்தவர் உன்னுடன் உற்ற தோழனாக உண்மையில் நமக்கு சந்தோசம்.
Share:

Friday, February 19, 2010

ரஜினி-விஜய்-அஜித்-குழப்பங்கள்.

கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜித் உள்ளதை உள்ளபடி பேசினார். விஜய் ரசிகனாக இருந்தாலும் அந்த இடத்தில் அஜித் என்னும் தைரியசாலிக்கும் உள்ளதை உள்ளபடி சொன்னதுக்கும் ஒருநிமிடம் நானும் அஜித் என்னும் வீரனுக்கு ரசிகனானேன். எழுந்து நின்று கைதட்டிய ரஜினியின் மனிதத்தன்மையை எண்ணி மனம் மகிழ்ந்தேன். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அசல் நாயகன் என தல நிரூபித்து விட்டார். அஜித்தின் பேச்சு சரியா தவறா என்ற விவாதத்தில் என் தீர்ப்பு சரியல்ல. மிக மிக சரி.ஆனால் இதற்க்கு பின் நடந்த கலைஞர் தொலைக்காட்சியில் அஜித்தின் காட்சி நீக்கம் எல்லாவற்றுக்கும் காரணம் விஜய் தரப்பு என்ற பேச்சு எழுந்தது. சிலவேளைகளில் இது உண்மையாக இருக்கலாம் யார் கண்டார். ஆனால் விஜய்க்கும்-கலைஞர்க்கும் இப்போது எட்டாப்பொருத்தமாக தோன்றும் நேரத்தில் இது எந்தளவிற்கு சாத்தியமானது என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை. வேண்டுமென்றே விஜய்-அஜித் எதிர்ப்பினை தூண்டுகின்றார்களா என்ற கேள்வியும் உண்டு? விஜய் தரப்பு அப்படி செய்ய காரணம் நான் அறியேன்? (கலைஞருக்கு விஜய் அம்புட்டு முக்கியமா ஐயா? அவர் தான் இப்போ டம்மி பீஸ் என்கிறார்களே.) மீறி செய்திருந்தால் அதை விட அசிங்கம் ஏதுமில்லை.



இது இப்படி இருக்க அஜித்தின் பேச்சுக்கு அமோக ஆதரவு தெரிவித்து வந்த ரஜினி இப்போது பின் வாங்கி இருக்கின்றார் என சொல்லவேண்டும். ரஜினி ரசிகர்கள் கோவித்துக்கொள்ளாதீர்கள் என் சந்தேகங்களே இவை? அத்தனை பேர் இருந்த மேடையில் மனதாரப் பாராட்டி மனிதனாக உயர்ந்து நின்ற ரஜினி இப்போது அஜித் தன் மனதில் உள்ளதை தான் பேசி இருக்கின்றார். ஆனால் கட்டாயப்படுத்தி யாரையும் வர வைக்கவில்லை என நேரெதிர் பல்டி அடித்த காரணம் யாதோ? அரசியல் அல்லது எந்திரன் வரும் நாள் நெருங்குதல் அல்லது தன் மகள் திருமணத்துக்கு பெரியவர் வந்து வாழ்த்தியது அல்லது மிரட்டல் இதில் ஏதோ ஒன்று இல்லாமல் இல்லை. இல்லையேல் ரஜினி என்ன சுயநலவாதியா? தன் பின் ரஜினி பலமாக இருக்கின்றார் என நம்பிய அஜித்துக்கு வைத்த ஆப்பா? அல்லது இதுவும் விஜயின் அரசியலா? (சும்மா தமாசுக்கு)



ரஜினி மறுத்தால் என்ன மறுக்காவிட்டால் என்ன அஜித் சொன்னது சரியே. அதற்காக சிலர் சொல்லலாம் அவர் தமிழின எதிரி எனவும் நான் அஜித்தின் கொள்கை பரப்புச் செயலாளர் எனவும். அவர்களுக்கு மீண்டும் சொல்கின்றேன் நான் விஜயின் பரமவிசிறி. கருணாநிதி அவர்களின் பாராட்டு விழாக்களில் பங்குபற்றி அதிகம் சலித்துப்போன ரஜினிக்கு இதுவும் சலித்ததால் அன்று கைதட்டி விட்டு இன்று மீண்டும் கலைஞரை சந்தித்த பின் கைகட்டுகின்றாரா? சரி அதையும் விடுவோம். அஜித் இன்று பெரியவரை சந்திக்க காரணம் ஏதோ? அன்று பேசியதற்கு மன்னிப்பா? அல்லது விளக்கமா? அல்லது மீண்டும் யாரும் மிரட்டுகின்றார்கள் என்ற தனிமையிலான கம்பிளையிண்டா அல்லது ரஜினியே அஜித்திடம் மன்னிப்புக்கேட்டு விடுங்கள் என சொன்னாரா? ரஜினியின் சொல்லை கேட்டு நடக்க அஜித் ஒன்றும் அவர் கைப்பிள்ளையும் இல்லை குழந்தையும் இல்லை என சொல்லலாம். ஆனால் இது அறிவுரையாக இருந்திருக்கலாம்.

உண்மைகள் ஏனோ உறங்கிக்கொண்டிருக்கின்றன. தெரிந்தவர்கள் என்ன நடக்கின்றது என சொல்லிவிடுங்கள். இல்லையேல் காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் அஜித் அசலா நசலா என்றும் ரஜினி நல்லவரா கெட்டவரா என்றும் விஜய் வேட்டைக்காரனா வேசக்காரனா என்றும்? காத்திருப்போம்.

ஜாக்குவார் பிரச்சனை போன்றவற்றை வைத்து பார்க்கும் பொது தல, நீங்க அல்டிமட் ஸ்டார் பட்டத்தை எடுத்த பின் கெட்டகாலம் கூடி இருக்கு ஏதோ பாத்து செய்யுங்க.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox