உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Sunday, April 26, 2009

தப்பிப் பிழைத்த தமிழன்.

நேற்று நடைபெற்ற இலங்கையின் மேல்மாகண சபை தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டிய ஒருவனாக நான் எங்கள் வானொலியில். நேற்று இரவு 9 மணிக்கு "நானாட நீயாட" நிகழ்ச்சியில் ஆரம்பித்து மறுநாள் காலை(இன்று) 6 மணிவரை தொடர்ச்சியாக தேர்தல் கடமையில் இருந்து தூக்கத்தோடு இருந்தாலும் தேர்தல் முடிவு வரும் வரும் என அதிகாலை வரை எதிர்பார்த்து சலித்துப்போய் நன்றாக தூங்கிவிட்டு வந்து எழுதும் பதிவு என்பதால் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் ஏதோ தோன்றியதை எழுதுகின்றேன்.

தமிழன் என்றாலே உயிருக்கு உத்தரவாதமில்லாதவன் என்றாகிவிட்ட நிலையில் இயற்கையும், சில விபத்துக்களும் கூட தமிழனை கொல்லாமல் விட மாட்டேன் என துரத்திக்கொண்டே இருக்கிறது.

உண்மையில் தமிழன் என்ற உணர்வோடு வாழ்ந்து வரும் தமிழக அரசியல்வாதி(சில சமயங்களில் இவரும் அந்த அணியில் சேர்ந்து கொள்கின்றார் எனும் பொது கவலையாகத்தான் இருக்கிறது.) பழ.நெடுமாறன் அவர்கள்(வயதுக்கும் அவர் செய்த நல்ல காரியங்களுக்கும் இந்த மரியாதை கொடுக்கின்றேன்.) நேற்று மாலை வேளை மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு செல்லும் வழியில் காஸ் நிரப்பி வந்த வாகனத்துடன் இவர் பயணம் செய்த கார் மோதி விபத்துக்குள்ளகியுள்ள நிலையில் காரின் முன்பகுதி முற்றாக சேதமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரில் பயணம் செய்த ஓட்டுனர், பழ. நெடுமாறன் உட்பட யாருக்கும் எந்த வித ஆபத்துமின்றி பத்திரமாக தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழனை துரத்தும் மரணம் இவரின் கார்க்கதவையும் தட்டி விட்டு சென்றிருக்கிறது. மரண பயம் என்றால் என்ன என்பதை பழ.நெடுமாறன் ஐயாவும் அறிந்து கொள்ள ஆண்டவன் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றார். இதை எல்லோரும் புரிந்து நடந்தால் எல்லாமே மாறிடுமே. நடப்பார்களா?
Share:

Wednesday, April 15, 2009

எம். பி. ஆகின்றார் சீமான்! சூடு பிடிக்கும் அரசியல் களம்.


தமிழ்த் திரை உலகின் இயக்குனர் சீமான் மிகப்பெரிய, மிகச் சிறந்த திரைப்படங்களை தந்தவர். புரட்சி சிந்தனை, மனதில் பட்டத்தை தைரியமாக சொல்லும் பக்குவம் என்பன கொண்டவர். இப்படிப்பட்டவர்களுக்கு சோதனைகள் வருவது இயற்கை தானே.

தான் பிறந்த தமிழினத்துக்காக குரல்கொடுத்தவரை கைது செய்ய போலீசார் பல முயற்சி எடுத்தும் பலனின்றி தானாகவே அவர்களிடம் சென்று சட்டத்துக்கு அடிபணிந்த மறத்தமிழனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். எத்தனையோ பேர் முயன்றும் இன்னும் வெளியே கொண்டுவரமுடியாத நிலையில் இன்னும் சிலர் இதே சட்டத்தில் கைது செய்யப்படுவதாலும் இவரது சிறை வாசத்துக்கான முடிவு எப்போது என தெரியாமலே இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் ஒன்றாக கூடி ஆலோசனைகளை நடாத்தி சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். அரசியலில் பழம் திண்டு கொட்டை போடப்போகும் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, ஆகியோரில் ஒருவர் நிற்கும் ஒரு தொகுதியில் சீமானை நிறுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்காம். இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் சீமானை நிறுத்தினால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேரடியாக தேர்தல் களத்தில் தாமே இறங்கி வேலை செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார்கள். அத்துடன் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக நிற்பவர்களை சந்தித்து சீமானையே பொது வேட்பாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விட இருக்கின்றனராம்.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். மீண்டும் ஒருவர் தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்குள் வரப்போகின்றார். ஜெயிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் ஒரு தமிழன், அதிலும் நெஞ்சில் உரமுடைய உண்மைத்தமிழன் வருகையில் மக்கள் நிச்சயம் ஏற்பார்கள். எனவே இயக்குனர் சீமான் எம்.பி. சீமானாக மாறும் நாள் தொலைவில் இல்லை.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox