உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Sunday, June 27, 2010

எழுந்திட்டேன்! இதோ வர்றன்



வணக்கம் மக்கள்ஸ்,

இப்படி ஆரம்பித்து திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகளுக்கான இறுதி முடிவுகளை தந்திருக்க வேண்டியவர்களில் நானும் ஒருவன் ஆனால் காலம் செய்த கோலம கடந்த சனி தொடக்கம் என்னை அதை செய்யவிடாமல் செய்துவிட்டது. இதனால் சூடானா சில பதிவுகள் எழுதமுடியாமல் போய்விட்டது. முக்கியமாக விஜய் பிறந்தநாள் வாழ்த்து பதிவு. பெரிதாய் ஒரு காரணமும் இல்லை. காய்ச்சல் தாங்க ஆனால் ரொம்ப மோசமாய் வந்திட்டிது. என்ன என்ன எல்லாம் இருக்கா என டாக்டர் கேட்கும்போது இல்லை என்று சொன்னேனா ஆனால் அவை எல்லாம் அதன் பின் வந்து இறுதியில் இன்று எழும்பி இருக்கின்றேன்.

கடந்த சனி இரவே என் உடல் நிலை மோசமாகின்றது என புரிந்து கொண்டு விட்டேன். இருப்பினும் அடுத்த நாள் மாலை இடம்பெறும் குட்டி பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வேன் என கூரியிருந்த நான் மதியமளவில் பதிவர் கான்கொனுக்கு அலைபேசி இன்று வரமாட்டேன் என சொல்லிவிட்டு. இரவு சகல வேலைகளையும் முடித்து முடிவுகளை சொன்ன நேரத்துக்கு அறிவித்து விடுங்கள் என சொல்லி விட்டேன். குளிர் நடுக்கம், காய்ச்சல் தலைவலிக்கு நடுவே இடையிடையே நண்பர்களுடன் தொலைபேசியில் பேச முயன்றும் முடியாமல போக என் இணைய தளத்தை இயங்க செய்து மெயிலையும் திறந்து விட்டு முடிவுகளை அறிவித்தவுடன் எனக்கு சொல்லவும் என சொல்லிவிட்டு படுத்திருந்தேன். இரவு ஒன்பது முப்பது அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதாக வந்த தொலை பேசி அழைப்பை தொடர்ந்து பெரிய ஒரு வேலை முடிந்தது என்ற நம்பிக்கையில் படுத்தவன் இன்றுதான் மீண்டும் இன்னொரு பதிவுடன் சந்திக்கின்றேன்.

ஆரம்பத்தில் இந்த முயற்ச்சியை நான் ஆரம்பித்த வேலை என்னுடன் கரம கோர்த்த கோபி,பவன் இரண்டுபேரின் பங்கும் இதில் முக்கியமானது. அதன் பின்னர் பலர் எங்களுடன் இணைந்தனர். அவர்கள் எல்லோரிடமும் நாங்கள் தெரிவுகளை விசாரிக்கும் நேரம் நான் கோபமாக பேசியது சில விதண்டாவாதன்களை பேசியதற்கு மன்னிப்பு கேட்கின்றேன். தொழில் நுட்ப விடயங்களில் புகுந்து விளையாடி வாக்களிப்பு படைகளை உருவாக்கிய கோபி, வலைப்பூ விருது லோகோ,வலைபூ லோகோ என பல உருவாக்கி உழைத்த பவன் இதற்கான விளம்பரப்படுத்தலில் ஈடுபட்ட அனுதிணன் என எல்லோரும் என் நன்றிக்குரியவர்கள். இதை விடுத்து சுபாங்கன் அண்ணா,மது அண்ணா, வந்தி மாமா, லோஷன் அண்ணா, ஆதிரை அண்ணா, இந்தியாவின் சவுந்தர், தமிழ் மதுரம் மெல்பேர்ன் கமல், அகசியம் வரோ, பங்குச்சந்தை அச்சுதன், மருதமூரான் அண்ணா, மதுரகன் அண்ணா என நேரடியாய் எம்முடன் தொடர்பு கொண்டு ஆதரவளித்தொருக்கும் இன்னும் எமக்கே தெரியாமல் தம நல்ல மனதால் ஆதரவளித்த எல்லோருக்கும் என் நன்றிகள்.

ஒரு கை ஓசை கடந்தமுறை பெரிதாய் கேட்கவில்லை. இம்முறை பல கை சேர்ந்த போது அது பாரெல்லாம் ஒலித்தது சந்தோசம். இதற்க்கு இலங்கை பதிவர்கள் மட்டுமன்றி சில இந்திய பதிவர்களும் தனிப்பட்ட ரீதியில் என்னுடன் தொடர்பு கொண்டு ஆதரவளித்தனர்.(அங்கே நடந்த பதிவுலக சாக்கடையால் தம பெயர் இதற்குள் அடிபட்டு இந்த நல்ல முயற்ச்சிக்கு சேறு பூச விரும்பாமால் அவர்கள் நேரடியாய் பதிவுகளை இடவில்லை) அவர்களுக்கும் என் நன்றிகள. கடந்தமுறை ஒரு வாக்காளார் நூறு வாக்குகளை பெற்றதே பெருமையாய் எண்ணிய நிலையில் இம்முறை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் போட்டியாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்றால் அது எந்தளவு பிரமாண்டத்தை கண்டிருக்கின்றது என உங்களுக்கே தெரியும்.

முக புத்தகம்,டுவிட்டர் மற்றும் தங்கள் வலைத்தளம் என தங்கள் ஆதரவை தனிப்பட்டோர் வழங்க தமிலிஷ்,யாழ்தேவி,தலைவன் திரட்டிகள் தங்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளன. எல்லோருக்கும் நன்றி சொல்லும் அதே நேரம் இதுவரை முடிவுகளை அறியாதவர்கள் கீழுள்ள லிங்கை சொடுக்கி பார்க்கவும்.....


நன்றி என்னும் ஒரு வார்த்தை மட்டுமே என்னால் தரமுடியும் நண்பர்களே. நான் படுக்கையில் கிடக்கும் போதே வெற்றிகரமாய் ஒரு முடிவுகளை அறிவித்த என் அன்புத்தம்பிகளுக்கும் என் நன்றிகள். இன்னும் பெயர் சொல்ல மறந்த எல்லோருக்கும் என் நன்றிகள்.
Share:

Thursday, August 20, 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி நிரல்.


வணக்கம் நண்பர்களே

இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்புக்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்துள்ளோம். நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமான நண்பர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.



நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
  • திரட்டிகள்
  • சிறப்பு அதிதி உரை
இடைவேளை
  • வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
  • வலைப்பதிவும் சட்டமும்
  • பதிவுலக அனுபவங்கள்
  • எதிர்காலத் திட்டங்கள்
  • கலந்துரையாடல்
  • நன்றியுரை
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்

முக்கிய குறிப்பு: மீண்டும் மீண்டும் நாம் உங்கள் வருகையைப் பதிந்துகொள்ளுங்கள் என சொல்வதன் காரணம் உங்களுக்கான சிற்றுண்டி குளிர்பான விடயங்களை ஒழுங்கு செய்வதற்காகவே இதனைக் கேட்கின்றோம். அத்துடன் உங்களுடன் வருகை தரும் நண்பர்களின் எண்ணிக்கையையும் தயை கூர்ந்து தந்துதவுங்கள்.
Share:

Tuesday, August 4, 2009

என் பள்ளிக்காலம்.-எரிச்சலோடும் மகிழ்வோடும் நான் எழுதியது.

பள்ளிப்பருவம் நான் நினைக்க நினைத்தும் நினைக்க தவிர்க்கும் ஒரு காலம்.(காரணங்கள் ஆயிரம் சோகங்களையும் சுகங்களையும் தந்த காலமல்லவா அது) ஆனால் சிந்து விடுவதாக இல்லை, என்னையும்(என்னைப்பற்றி தெரியாமல் கூப்பிட்டிட்டான்களோ?) தொடர்பதிவிற்கு அழைத்துவிட்டார்.(நன்றியுங்கோ நன்றி, ஆனால் மனசுக்குள் திட்டி திட்டி தான் எழுதிறனுங்கோ?)

நான் பிறந்தது வடமராட்சி , (யாழ்ப்பாணத்தில தாங்க இருக்கு) ஆனால் அங்கே என்னால் என் ஆரம்பகால கல்வியைக் கூட கற்கமுடியவில்லை.(காரணங்கள் ஆயிரம் அத்தனையும் நீங்கள் நினைப்பதுதான்) வரணி என்னும் இடத்தில் தான் என் முன்பள்ளி பருவம் ஆரம்பமானது. வீட்டிலேயே ஒருபகுதியில் முன்பள்ளி இருந்ததால் எனக்கு இலகுவாகி விட்டது.ஆனால் நான் பாடசாலை போன அனுபவம் வித்தியாசமானது. முன்பள்ளியில் என் கையை ஒரு சக மாணவன் கடித்து விட அதன் பின் நான் முன்பள்ளி போகமாட்டேன் என அடம்பிடிக்க அம்மா தான் கல்வி கற்பித்த பாடசாலையில் என் ஐந்து வயதிலேயே முதலாம் தரத்தில் சேர்த்துவிட்டார்.வரணி சைவப்பிரகாச வித்தியாலயம் தான் என் முதல் பாடசாலை.

பிறகென்ன வீடு போலவே என் பாடசாலையும் அமைந்துவிட்டது. அதிபர் முதல் ஆசிரியர் வரை நான் செல்லப்பிள்ளை ஆகிவிட்டேன். என்னைவிட வயது கூடியவர்களுடன் என் கல்விப்பயணம் ஆரம்பமானது. அங்கே போயும் என் விளையாட்டு குறையவில்லை. நவநீதா என்னும் ஒரு அக்கா தான் என் புத்தகங்களை எடுத்து பையில் போட்டு அக்கறையாக அனுப்பி வைக்கும் அவர் இப்போது எங்கே எனத்தெரியாது. ஆனால் பல்கலைக்கழத்தில் படிப்பதாக ஒரு கேள்வி. என் அம்மாக்கு அடுத்து நான் அழகென்ற முதன் முறையாக காதலித்த பெண் என் முதல் ஆசிரியர்தான்.இப்போ அவங்க எங்கே இருக்கிறாங்க என்று தெரியாது. இப்போது அவர்மேல் மரியாதை தான் வருகின்றது.

இப்படியே போய்க்கொண்டிருக்கும் என் பள்ளி பருவத்தில் இன்னுமொரு அனுபவம். என் அம்மாவே எனக்கு படிப்பித்தது. ஆங்கில ஆசிரியையாக அங்கே கடமை ஆற்றிய என் அம்மா எனக்கு ஆங்கிலம் படிப்பிப்பார். பரீட்சை நேரங்களில் பரீட்சை முடிந்தபின் என் விடைத்தாளை அப்படியே இன்னுமொரு ஆசிரியரிடம் கொடுத்து தான் திருத்துவார். காரணாம் யாரும் குறை சொல்லக்கூடாதே. அப்போது நான் எடுப்பத்து என்னவோ 100அல்லது 98 தான். (அட நம்புங்கப்பா அப்போ கொஞ்சம் கெட்டிக்காரன்தான்.)

அதன் பின் நாட்டு சூழ்நிலைகள் காரணமாக மீண்டுமொரு மாற்றம். பாரதி வித்தியாலயம் என்னை அரவணைத்தது. இங்கேயும் அம்மா. அத்துடன் என் மச்சானும் இணைந்து கொண்டார் ஆசிரியராக. ஆனால் இங்கே அம்மா தானாகவே எனக்கு படிப்பிக்க மாட்டேன் என ஒதுங்கிவிட்டார்.(அம்மா தப்பிச்சிட்டாங்க.) இந்த முறை என்னிடம் மாட்டியது என் மச்சான். உடற்கல்வி ஆசிரியராக எங்கள் வகுப்புக்கு வந்தவரை என் நண்பர்கள் என்னை வைத்தே மைதானத்துக்கு கூட்டிசென்று விடுவர் விளையாட. ஐந்தாம் ஆண்டிலேயே கால்பந்து விளையாடியவன் தாங்க நானும்.(இதை சொன்னா யார் நம்பப்போறாங்க.)

இந்தக்காலத்தில் நான் சந்தித்த இன்னுமொரு மறக்க முடியாத சம்பவம் என் வலக் கண்ணின் பார்வை பறிபோக்கும் சந்தர்ப்பம். அந்த வயதிலேயே ஏதோ என்னால் முடிந்தவரை பாட்டு,பேச்சு,கவிதை,நடனம்(நிஜமாவே நடனம் ஆடி இருக்கேனும்கோ, அதுவும் தனியா இல்லை ஜோடியாக இப்போ அந்த பொண்ணு எங்கே இருக்கோ?) நாடகம் வில்லுப்பாட்டு என எல்லாவற்றிலும் ஒரு ரவுண்டு வந்தேன். ஒரு முறை வில்லுப்பாட்டு பழகிக்கொண்டிருந்தேன் நண்பர்களோடு மைதானத்தில் இருந்த ஒரு மரத்துக்கு கீழ் இருந்து.(எத்தனை மாடி வகுப்பில் இருந்து படித்தாலும் இது மறக்கமுடியாத இனிமையான காலம்.)அப்போது அங்கே வந்த என் நண்பன் ஒருவன் எனக்கு ஒரு தடியால் தூர இருந்து எரிய அது நேரே என் வலது கண்ணின் இமையை தாக்க என் கண்ணை மூடினேன்.(யாராவது ஒரு கிரிக்கெட் டீமுக்கு அவனை எடுங்கப்பா)அவன் எறியக்காரணம் பிறகுதான் தெரிந்தது என்னை சுற்றி நிறைய பெண்கள் இருந்த எரிச்சல் என்று.(ஆஹா சொல்லக்கூடாததை சொல்லிட்டமோ. விடுங்கப்பா விடுங்கப்பா பையன்கள் என்றால் பொண்ணுகளோட இருக்கிறதும் பொண்ணுங்கன்ன பையன்களோட இருக்கிறதும் சகயமப்பா! எஸ்கேப்) ஆனால் அதன் பின் அவனுக்கு நிறைய பூசை புனர்க்காரங்கள் நடக்க அதை என் அம்மா தடுத்ததையும் நான் அறிவேன்.

கிட்டத்தட்ட மூன்று நாட்களின் பின் தான் நான் கண் திறந்தேன். அதுவரை என்னை பார்க்க வந்தவர்கள் கிட்டத்தட்ட பாடசாலையே வந்தது எனலாம்.(ஆசிரியரின் பிள்ளைகளாய் இருப்பது இந்த விடயத்தில் நல்லது.) நான் கண்திறக்க காரணம் மாசு மறுவற்ற ஒரு தாயின் தாய்ப்பாலே. அதை கண்ணுக்குள் விட்டால் கண் திறப்பார் என யாரோ ஒரு பெரியவர் சொல்ல இறுதி ஆயுதமாக அந்த தாய் மனமுவந்து என் கண்ணை திறந்தார். என் கண்ணை கொடுத்த அவருக்கு நன்றிகள் சொல்ல என்னால் முடியாது. என்றுமே கடமைப்பட்டவன் நான். கண்முளியை அதுதாக்கியதாக சொல்லி என் கண் பார்வை பறிபோய்விடும் என ஒரு சில வைத்தியர்கள் கை விரித்த பின் நான் மீண்டும் வந்தேன்.(இதேபோல நாங்கள் வளர்த்த ஆடு ஒன்று என் இடக்கண்ணை பறிக்கப்பார்த்து அதிலிருந்து நான் தப்பியது வேறு கதை.)

அதன் பின் மீண்டும் ஒரு இடப்பெயர்வு. வந்தேன் வவுனியா, படிக்க போனேன் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்துக்கு. பல்லாயிரக்கணக்கான மாணவர்களை அரவணைத்த அந்த கோவில் என்னையும் இறுக்கிப்பிடித்துக்கொண்டது. ஆனால் இங்கே எனக்கு முதல் நாளே ஒரு வித்தியாசமான அனுபவம். முச்சக்கர வண்டியில் பாடசாலை போன நான் பாடசாலை முடிந்து வீடு போக அந்த முச்சக்கரவண்டி வராமல் போக பாதை தெரியாமல் தடுமாறி மீண்டும் என் பெற்றோர் வந்து என்னை அழைத்துச் செல்ல. அன்றிலிருந்து பாடசாலை போகமாட்டேன் என நான் அடம்பிடித்து அழுதழுது போகத்தொடன்கினேன். காரணம் இங்கே அம்மா இல்லையே என்னும் இன்னுமொரு குறை.

ஒரே வகுப்பில் அதாவது தரம் நன்கு, ஐந்தில் இரண்டு வருடங்கள் இரண்டு பாடசாலையில் ஒரு வித்தியாசமான காரணத்துக்காக படித்தவன் நானாக தான் இருக்கும். சைவப்பிரகாச வித்தியாலயத்தில் ஒருதரம் (என் வயதை மீறி) நான் படித்தாலும் என்னை என் வயதுக்கேற்ற தரத்தில் தான் பதிவேட்டில் இட்டிருந்தனர். இதே கதை பாரதியிலும் தொடர்ந்தது. ஆனால் வவுனியாவில் அப்படி விடுவதாக இருந்தால் புலமைப்பரிசிலில் தொடருவது சிக்கல் வரும் அப்படி அந்த பரீட்சையில் தோற்றாமல் விடுவதென்றால் நாங்கள் தொடர்ந்து என்னை அனுமதிப்பதாக கூறினர். என் பெற்றோரோ அதற்கு மறுத்து விட்டனர். எனவே மீண்டும் நான்காம் தரகத்தில் படிக்கத்தொடங்கினேன். ஆனால் என் பெற்றோரின் கனவு பொய்க்கவில்லை.புலமைப்பரிசிலில் மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடம் பெற்று சித்தி பெற்றேன். இந்த சந்தோசத்தோடு நான் அப்பாவிடம் போக அப்பா கேட்டதோ நீ ஏன் முதலாவதாக வரவில்லை என்று.(எனக்கு வில்லனாக வந்தது நம் நாட்டின் தேசிய கீதம். இடைவெளி நிரப்புகவில் அதனை போட்டு பாடமில்லாத என்னை திக்கு முக்காட வைத்து விட்டனர்.)
படத்தை பெரிதாக்க்கிபோட வழி தெரியவில்லை இருந்தால் சொல்லுங்கள். தற்போது முகப்புத்தகத்தில் இருக்கும் படமும் உடனடியா உங்களுடன் பகிரக்கூடிய படமும் இதுதான் ஆனால் இது ஆயிரம் கதைகள் சொல்லும். ஐந்தாம் ஆண்டில் எங்கள் வெற்றிக் கூட்டணி.

இங்கே நான் சந்தித்த நண்பர்கள் ஏராளம்.(ஒரு சிலரின் பெயரை மட்டும் சொல்லி மற்றவர்களை தவிர்த்து அவர்களிடம் வாங்கிக்கட்ட நான் தயாரில்லை.) அதேநேரம் அம்மாவின் எந்த பக்கபலமும் இல்லாமல் அந்த பாடசாலையில் என்னை ஒரு நல்ல இடத்தில் நான் வைக்க எதிர்கொண்ட சவால்கள் எத்தனையோ? சில ஆசிரியர்களின் சூழ்ச்சிக்குள் கூட அந்த சிறுவயதில் நான் அகப்பட்டேன். இதை எல்லாம் உடைத்தெறிந்தது தான் என் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை. என் வெற்றி என் அம்மாவை மீண்டும் பாடசாலைக்குள் அழைத்தது. அம்மா எங்கள் பாடசாலையில் படிப்பிக்க மீண்டும் வந்தார். இம்முறையும் என் வகுப்பை தவிர்த்து வேறு ஒரு வகுப்பை எடுத்து விட்டார்.

தரம் ஆறு வந்தாச்சு அதற்கு பின் அம்மா பாடசாலையில் இருந்தால் என்னால் என்ன செய்யமுடியும். அதுவும் பக்கத்து வகுப்பில் எண்டால். இப்படியே போக நான் தரம் ஏழு வர அம்மாவும் தன் கல்விப்பணியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். என் பாடசாலை வாழ்க்கை நண்பர்களோடும் பல்வேறு போட்டிகளில் பெற்ற வெற்றிகளோடும்(நூறு சான்றிதழ்களை தொட்டு விட்டேன் எல்லா போட்டிகளிலும் பங்கு பற்றி.) போய்க்கொண்டிருந்தது. பாடசாலையில் நானும் ஒரு தவிர்க்க முடியாதவன் ஆனேன். எனக்கு படிப்பித்த படிப்பிக்கத ஆசிரியர்கள் என அத்தனை பேரும் என்னுடன் அன்பாக இருக்கும் ஒரு இடத்தில் நான் இருந்தேன்.(இதை பெருமைக்காக சொல்லவில்லை. எங்கள் பாடசாலையை பொறுத்தவரை அது எவ்வளவு கஷ்டமான விடயம் என்பது படித்த எல்லோருக்கும் தெரியும்.

அதன்பின் பல சம்பவங்களோடு கா.பொ.த சாதாரண தரத்திலும் என் பெறுபேறுகள் சிறப்பாக தொடர்ந்தது. இப்படியே உயர்தரம் வர பல்வேறு சவால்கள். மீண்டும் பல புதியவர்கள். நன்றாக ஆரம்பித்த என் உயர்தரம் சில சில காரணங்களால் வெற்றிகரமாக முடியாமல் போனது இன்றுவரை என் வாழ்வின் மிகப்பெரிய வடு. பள்ளிக்காதல் எனக்கும் வந்தது. அதனாலேயே பல பின்னடைவுகளை சந்தித்தேன். இறுதியில் சுவையான பல நண்பர்களின் நினைவுகளோடும் என்னை உருவாகிய ஆசிரியர்களின் இனிமையான ஸ்பரிசங்களோடும் வாழவேண்டியவன் என் பாடசாலை கால இறுதிக்காலங்களை ஏனோ நினைக்க விரும்பவில்லை. ஆனால் அந்த தோல்விதான் இன்று என்னை ஒரு அறிவிப்பாளனாக உங்களிடம் கொண்டு வந்து விட்டிருக்கின்றது.(ஒன்றை இழந்தால் இன்னொன்று கிடைக்கும் என்பதை ஆண்டவன் எனக்கும் படிப்பித்துவிட்டார்.)

எங்கள் பாடசாலையில் பான்ட் இசைக்குழுவின் தலைவனாக இன்னும் ஒரு சில மன்றங்களின் தலைவன்.உறுப்பினர் என என் இன்னொரு முகத்தையும் என்னால் வளர்க்க உதவிய இடம் இது. இறுதி ஆண்டில் மாணவர்தளைவர்களை தெரிவு செய்யும் போது அதற்கான விண்ணப்ப பத்திரத்தை நான் நிரப்பி(இதிலும் ஒரு துணைக்கதை உண்டு) சமர்ப்பிக்க போகும் போது அப்பா வேண்டாமென கவலையோடு நான் அந்த பத்திரத்தை கிழித்தெறிந்து விட்டு இருந்து விட்டேன்.அதன் பின் எல்லோரையும் தெரிவு செய்யும் இறுதித்தருணத்தில் என்னையும் என்னைப்போல ஒரு சில நண்பர்களையும் அழைத்து நாங்கள் விண்ணப்பம் கொடுக்காததற்கு காரணம் கேட்ட தெரிவுக் குழுவினரிடம் நான் என் விருப்பமின்மையை சொன்னேன். அதன் பின் அவர்கள் கூடி ஆராய்ந்து பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக என்னையும் வாசனையும் தாங்கள் கண்டிப்பாக மாணவர்தளைவராக்க வேண்டுமென கூறி அதற்குரிய வேலைகளை செய்து அந்த மணி மகுடத்தை எனக்கும் தந்தனர். இந்த நேரத்தில் என்மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்த ஆசிரியர்களுக்கு என் நன்றிகள்.

என் பசுமையும் கவலையும் நிறைந்த பள்ளிக் காலத்தை மீட்டிப்பார்க்க வைத்த சிந்துவிற்கு நன்றிகள். அதேநேரம் மன பாரம் ஏனோ குறைந்தது போல இருக்கின்றது. என்னை தட்டி தட்டி மெருகூட்டிய என் ஆசிரியர்களுக்கும் தடிக்கொடுத்த நண்பர்களுக்கும் தட்டி விட்ட எதிரிகளுக்கும் குழிபறித்த துரோகிகளுக்கும் என் நன்றிகள். நான் உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டேன்...... தொடர் பதிவிற்கு நானும் சிலரை அழைக்க வேண்டுமே இதோ என் கையில் சிக்கி தங்கள் உண்மைகளை உடைக்கப்போகும் நண்பர்கள்....

1.கழுகுப்பார்வை பார்க்கும் வடலூரான்.(கலையரசன்)
2.அடைத்து வைக்காமல் எல்லாவற்றையும் சொல்லும் கிடுகுவேலி.
3.பதுங்கிக்கொண்டே பதுக்காமல் சொல்லும் டொன் லீ.(சிவபாதசுந்தரம் தயாளன்)

என் வாழ்கையின் நினைவுகளையும் பொறுமையாக படித்த உங்களுக்கு நன்றிகள்.
Share:

Friday, July 24, 2009

அட எனக்கும் வெற்றியுங்கோ -நன்றி உங்களுக்கு.

பதிவுலக நண்பர்களுக்கு!
திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html

விருது கொடுக்க நான் தகுதி அற்றவனா என்ற பதிவை இட்டிருந்தேன். அந்தப்பதிவிற்கு பல பிரபல பதிவர்கள் வந்து உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றிகள். உங்கள் வருகையின் பின் சரி,ஏதோ நாம் எழுதிறதை பார்த்து ரசித்து ஊக்கப்படுத்த நல்ல நண்பர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. இந்த நேரத்தில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

விருது வழங்கும் கலாசாரத்தில் இருந்து ஒதுங்கி இருந்த எனக்கு முதல் விருதை வழங்கினார் நண்பர் shanru. பட்டாம்பூச்ச்சியாய் அவர் தந்த விருதை என்னால் தொடர்ந்து பறக்க விடமுடியாமல் போனது. அதன் பின் கடலேறி(ஆதிரை) வழங்கிய சுவாரச்யபதிவர் விருது என்னையும் விருதுலகத்திலிருந்து வெளியே நீ போகமுடியாது என சொல்லவைத்த்தது. இந்த இரண்டு விருதையும் வழங்கிய நண்பர்களுக்கு நன்றிகள்.

அதை தொடர்ந்து பூசரத்தில் இடம்பெற்ற போட்டியில் அமோக வெற்றி ஈட்ட காரணமாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள். இந்த வெற்றிகள் என்னையும் பதிவுலகம் ஒரு அளவிற்கு நல்ல பதிவுகளை தருபவனாக ஏற்று இருக்கின்றது என்பதற்கு சான்றாக கருதுகின்றேன். எனவே என் விரதத்தை முடித்த்துக் கொண்டு இந்த சின்னைப்பையன் படித்து ரசிக்கும் என் அபிமான பதிவர்களுக்கு பட்டாம்பூச்ச்சி விருதுகளை பறக்க விட இருப்பதோடு, சுவாரஸ்ய பதிவர்கள் அறுவரை தெரிந்து அவர்களுக்கும் என் சார்பாக விருதை வழங்க நானும் களத்தில் குதித்துவிட்டேன். மிக விரைவில் அந்த விருதுகளோடு சந்திப்போம்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox