பதிவுலகில் அண்மையில் ஒரு பரபரப்பாக பதிவர்களுக்கான விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நேரத்தில் பதிவுலகை சேர்ந்த நாமும் அதை படிப்போரும் இணைந்து தமிழ் சினிமாவின் சில துறைகளில் அபிமானம் பெற்றவர்களை தெரிந்து விருது வழங்கலாம் என நினைக்கின்றேன். இது நிச்சயமாக என் தனிப்பாட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லா ஒரு இடம். காரணம் நீங்களே வாக்களிக்கப்போகின்றீர்கள். அதேநேரம் நான் தெரிவு செய்திருக்கும் தெரிவுகளில் உங்கள் தெரிவு அடங்காவிட்டால் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களோடு உங்கள் தெரிவையும் சொன்னால் அவற்றையும் கருத்தில் கொள்ள காத்திருக்கின்றேன். எனவே நாம் அனைவரும் சேர்ந்து திரை உலககத்தினருக்கு மகுடம் சூட்ட தயாராகுவோம். இது முற்று முழுதாக உங்கள் அபிமானியை தெரிவு செய்யவே.(சிறந்தவர் யார் என்ற போட்டியல்ல)
இதே நேரம் அண்மையில் என் தளத்தில் நடைபெற்ற திரையில் ஜோடியாக தோன்றி நிஜஜோடியாகி உங்களை கவர்ந்தவர்கள் யார் என்ற போட்டியில் அஜித்-ஷாலினி,சூர்யா-ஜோதிகா,சரத்-ராதிகா போட்டியிட்டனர். அவர்களில் சூர்யா-ஜோதிகா ஜோடி அபார வெற்றியோடு முதலிடம் பிடிக்க அஜித்-ஷாலினி ஜோடி இரண்டாமிடம் பெற்றுள்ளது. சூர்யா-ஜோதிகா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தங்கள் வாக்குகளை அளித்து போட்டியை சுவாரஷ்யமாக்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
அதே நம்பிக்கையோடு இந்த விருது வழங்கும் போட்டித்தெரிவிலும் நீங்கள் பங்கு பற்றுவீர்கள் என நம்புகின்றேன். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். என் தளத்தில் நீங்கள் படிக்கும் பதிவின் வலப்புறம் உள்ள என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழிருந்து ஒவ்வொரு பிரிவாக உங்கள் வாக்குகளை அளித்து உங்கள் அபிமான பிரபலத்தை வெற்றி பெற வைத்து பதிவுலகம் திரை உலகிற்கு வழங்கும் விருதுகளை நீங்களே வழங்குங்கள். (தயவுசெய்து இங்கே எந்தவிதமான தவறான வாக்களிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம்.)
அபிமான நடிகர்.
ரஜினி,கமல்,சரத்,விஜயகாந்த்,சத்யராஜ் என்னும் சாதனை நாயகர்களை தவிர்த்து அதன் பின் வந்த அடுத்த தலை முறை நாயகர்களையே நாங்கள் போட்டிக்காக தேர்ந்தெடுத்துள்ளோம்.
அபிமான நடிகை.
குஸ்பு,ரம்பா,சிம்ரன்,ஜோதிகா என கலக்கி தவிர்த்து இப்போது பலரின் தூக்கங்களை கெடுத்து ஜொள்ளு விட வைக்கும் கதாநாயகிகளை இங்கே போட்டிக்காக தருகின்றோம்.
அபிமான இயக்குனர்.
மணிரத்தினம்,பாரதிராஜா,பாலச்சந்தர் என்ற இமயங்களை கடந்து அதன் பின் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாமல் மாறி இருக்கும் இயக்குனர்கள் இவர்கள்.
அபிமான இசை அமைப்பாளர்.
எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா,தேவா என்ற இசை சிகர்ணகளை இங்கே போட்டிக்காக நாங்கள் எடுக்கவில்லை. அதன் பின் வந்து மாற்றங்களை தந்து கொண்டிருக்கும் இசை அமைப்பாளர்களே இவர்கள்.
அபிமான ஆண் பாடகர்.
கே.ஜெ.யேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் என பாடும் நிலாக்களை நாங்கள் போட்டிக்காமல் எடுக்காமல் அதன் பின் வந்து உங்களை கவர்ந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
அபிமான பெண் பாடகர்.
சுசீலா,ஜானகி என்ற பாடும் குயில்களின் சாதனைகள் அளப்பரியன. இங்கே அதன் பின் வந்து சாதித்துக்கொண்டிருக்கும் குயில்கள் போட்டிக்காக.
அபிமான பாடலாசிரியர்.
வாலி என்னும் மார்க்கண்டேயக்கவிஞர் காலங்களை தாண்டியும் கவி படைக்கும் நேரத்தில் அந்த ஜாம்பவானை இங்கே போட்டிக்குள் கொண்டுவராமல் அதன் பின் சாதித்த சாதித்துக்கொண்டிருக்கும் பாடலாசிரியர்களே இவர்கள்.
.
0 கருத்துரைகள்:
Post a Comment