உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Saturday, January 15, 2011

பதிவுலக நண்பர்களே! நீங்கள் உண்மையான காவலன் ஆகுங்கள்.



தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு உண்டு ஆனால் இம்முறை தை மகள் தன்கூட பல அழிவுகளையும் எங்கள் நாட்டில் கொண்டுவருவது கவலையே. இலங்கையின் சில பகுதிகளில் பாரியளவான சேதங்கள் ஏற்ப்பட்டிருப்பதுடன் கொழும்பில் கூட லண்டன் போன்ற குளிர் நிலவுவதாக நண்பர்கள் சொல்கின்றனர். வரும் காலம் வசந்தமாகும் என்றால் வம்பாகிக்கொண்டே போகின்றது.

இந்த நிலையில் பல அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்கள் நிவாரணப்பணிகளை முடுக்கி இருக்கும் நிலையில் நற்காரியங்களில் ஈடுபட ஆசைப்பட்ட நம் பதிவர்களும் தங்களால் முயன்ற உதவிகளை வழங்க முன்வந்து பல பதிவுகள் இட்டனர். இதில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய விடயம் எந்த பாகுபாடும் இன்றி வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற மனப்பான்மை இன்றி(குற்றம் சொல்பவர்களே இப்போ எங்கே போய்விட்டீர்கள்) ஒன்றாக இணைந்த நிரூஜா, வதீஸ், ரமேஸ், சந்த்ரு, மதிசுதா, கூல் பாய் கிருத்திகன்(எல்லோரும் எனக்கு அண்ணா மார் எனவே பெயருக்கு பின் அண்ணா போடுங்க) என இந்த திட்டத்தை முன்னெடுத்தனர். எல்லோரும் ஒன்றுபட்டு இந்த நல்ல காரியத்தை செய்து முடிக்கும் படி பதிவுலக நண்பர்கள் அத்தனை பேரையும் உரிமையுடன் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

கைநீட்டி கொடுத்த நம் உறவுகள் இன்று கையேந்தும் நிலைக்கு விட்டுவிடாதீர்கள். நாளை நமக்கும் இதே நிலை வரலாம். நம் உறவுகளுக்கு நாம் கொடுக்கும் போது அது கையேந்தல் ஆகாது நாம் செய்யும் கைமாறே அது.

இயற்கை அனர்த்தத்தில் இருந்து மீண்டுவர இறைவனை பிரார்த்திப்போம்!
Share:

Friday, May 28, 2010

தமிழிஷில் நடப்பது என்ன?



கொஞ்சம் இதையும் படிச்சிட்டு போங்க. பதிவுலகின் இன்னொரு முயற்சி.

தமிலிஷ் திரட்டி, உண்மையில் பதிவர்களுக்கு மிக்கப்பெரிய டானிக். நான் என் பதிவுகளை இணைக்கும் திரட்டிகளில் ஒன்று. அதிகமான வாசகர்களை கொண்டு வந்து தருவதுடன் பல வாக்குகளை அளித்து பிரபலமான இடுகை ஆக்கியும் அழகு பார்க்கின்றது. ஆனால் எனக்கு நேற்று நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் எனக்குள் எழுந்த சில கேள்விகள். தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கிக் கூறவும்.

சில நேரங்களில் நான் இடும் இடுகைகள் உடனடியாக தொடரும் இடுகைகள் பகுதியில் வருவதில்லை. அதன் பின் தமிலிஷ் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டுதான் அவற்றை மீட்டு எடுத்திருக்கின்றேன். இது ஏன் நடக்கின்றது?

அடுத்து சூடான இடுகைகள் எப்படி தெரிவு செய்யப்படுகின்றன? ஒரு சில சொற்குறியீடுகளை கொண்டா அல்லது குறித்த நாள் அதிகமாக இடப்படும் இடுகைகளைக் கொண்டா? இங்கிலாந்து உலக கிண்ணம் வென்ற நேரம் நான் இட்ட இடுகை இதற்குள் அடங்கவே இல்லை. ஆனால் அதிக வாக்குகள் பெற்றது. அப்படியாயின். இடுகையை இணைத்து குறைந்த நேரத்தில் இடும் வாக்குகளைக் கொண்டா? இது தீர்மானிக்கப்படுகின்றது.

அடுத்து பிரபல இடுகைகள் பற்றியது. சிலநேரங்களில் பதின்மூன்று பதின நான்கு வாக்குகள் கிடைத்தும் சில பதிவுகள் ஹிட ஆகாது போய் விடும். அதற்க்கு காரணம் என்னவென்று தெரியும் ஆனால் என் கேள்வி என்னவென்றால் நான் ஒரு பதிவினை போட்டு ஒன்று இரண்டு மூன்று நாட்கள் கடந்தபின் கூட அந்த பதிவு ஹிட ஆகிறது. இது எப்படி? அப்படியாயின் தமிளிஷின் தொடரும் இடுகைகளை அதிகமான பக்கங்கள் சென்று வாசகர்கள் படிக்கின்றார்களா? அப்படி எனில் இது ஆரோக்கியமானதே. இதை தான் தமிளிஷும் முன்னர் எதிர் பார்த்து நடவடிக்கை மேற்கொண்டது என எண்ணுகின்றேன். சில நேரங்களில் நாங்கள் ஒரு இடுகையை தொடர்ந்து மூன்று இடுகைகளை இட்ட பின் கூட (அந்த பதிவுகள் ஹிட இல்லாவிடாலும்) அதற்க்கு முன் இட்ட பதிவு ஹிட அடித்துவிடும். இவை எல்லாம் எப்படி நடக்கிறது. உண்மையில் இது பதில் சொல்ல கடினமான சந்தோசமான உணர்வுதான்.

தமிளிஷிடம் ஒரு வேண்டுகோள்
சில இடுகைகள் இன்னும் ஒரு வாக்குக் கிடைத்தால் பிரபலமாகி விடும் என்ற நிலையில் தொடரும் இடுகைகள் பகுதியில் இருக்கும். ஆனால் அந்த ஒரு வாக்கு கிடைக்கும் கிடைக்காது என்ற ரீதியில் அல்லாடிக் கொண்டிருக்க. அதனை தொடர்ந்து பல இடுகைகள் தொடரும் இடுகைகள் ஆகிவிட இந்த இடுகை பின்னுக்கு போய் விடும். இதனால் அதை காண்போர் எண்ணிக்கை குறைந்து விடும். எனவே அந்த ஒரு வாக்கு குதிரைக் கொம்பாக கூட போய் விடும். எனவே இப்படி போர்டரில் இருக்கும் பதிவுகள் என்று ஒரு பிரத்தியே பகுதியை நிறுவி. பதிவர்களை ஊக்கப்படுத்தினால் என்ன.

அண்மையில் இருநாட்கள் தமிலிஷில் ஏற்ப்பட்டிருந்த கோளாறு உண்மையில் பதிவுலகத்தை பாதித்திருந்தது. தட்டச்சி இருந்த இடுகைகளை கூட நாங்கள் இடாமல் தமிளிசுக்காக காத்திருந்தோம். அந்தளவிற்கு பதிவர்களின் இன்றியமையாத ஒன்றாக தமிலிஷ் இருக்கிறது. உங்களுக்கு வாழ்த்துகள். இன்னும் உங்கள் பணி சிறப்பாக இருக்க.
Share:

Monday, May 10, 2010

20வருடங்களின் பின் நம் பதிவர்கள் - ஒரு கலாட்டா பதிவு.

நண்பர்களே! இன்று இணையத்தில் உலவிய பொது ஒரு இணையத்தளம் பற்றிய செய்தியை படிக்க முடிந்தது. படித்ததை பயன்படுத்தலாமே என்ற நோக்கில் இன்னும் இருபது வருடங்களின் பின் நம் பதிவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற கேள்விக்கு பதிலாக இந்த பதிவின் படங்கள் அமையப்போகின்றன. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல. சும்மா நகைச்சுவைக்காகவே. எனவே யாரும் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என்று. நம்புகின்றேன்.



ஐந்தறைப்பெட்டி சுபாங்கன்.





எல்லோர் டவுசரையும் கிழிக்கும் புல்லட் பாண்டி.





வயசு போனாலும் வம்பிழுத்து போட்டோ கொமண்ட்ஸ் போடுவேன் என்னும் எரியாத சுவடுகள் பவன்.







இனி எப்பிடித்தான் செய்தி எழுதிறதோ என எண்ணும் அருண்பிரசாத்.







மனதில் தெறித்த சாரல்கள் மதுரகன் அண்ணா.







கற்றது கையளவுக்காக நிறைய கற்கும் ஹிஷாம் அண்ணா.

நண்பர்களே. பல பதிவர்களின் படங்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. அப்படி சில நண்பர்களின் படங்கள் கிடைத்தும் இந்த தளத்தில் அந்த படங்களை ஏற்கவில்லை. எனவே சில பதிவர்கள் விடுபடலாம். ஆனால் இன்னும் ஒரு குழுவும் ரெடி செய்கின்றேன். இதற்க்கு உங்கள் ஆதரவை தாருங்கள். அடுத்த பதிவையும் விரைவில் தர முயல்கின்றேன். படங்கள் இல்லாமல் தத்தளித்த வலை பட உதவி செய்த தானைத் தலைவன் சின்ன வந்தி பிரபல பதிவர் அல்ல பிரபல பின்னூட்ட வாதி கான்கொன் அவர்களுக்கு என் நன்றிகள்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox