Wednesday, May 26, 2010வணக்கம் மக்கள்ஸ்,

மீண்டும் ஒரு தடவை ஒரு பிரமாண்டமான அறிவிப்புடன் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. கடந்த வருடம் என்(SSHATHIESH in பார்வை) வலைப்பூவில் தனியாக சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக உங்கள் வாக்குகள் மூலம் அபிமானம் பெற்றவர்களை தெரிவு செய்து மகிழ்ந்தேன். நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் அபிமானிகளை தெரிவு செய்தனர். அதன் பின் அண்மையில் தான் அதை தமிலிஷில் பிரசுரிக்க உங்கள் அமோக ஆதரவுடன் பிரபல இடுகையாகியது. விளையாட்டாக நான் ஆரம்பித்த ஒரு விடயம் உங்கள் பலரின் அபிமானம் பெற இம்முறை அதை கொஞ்சம் விரிவாக்கி சிலர் சேர்ந்து செய்யலாமா என்ற எண்ணம் தோன்றவே சில பதிவர்களுடன் இதை கலந்துரையாடினேன்.

கலந்துரையாடலில் கிடைத்த ஊக்கம் தொடர்ந்து இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ள பதிவர் கான்கொன், எரியாத சுவடுகள் பவன், என் உளறல்கள் வந்தியத்தேவன் மாமா, ஐந்தறைப்பெட்டி சுபாங்கன், நா எழுதும் கெளவ்பாய் மது அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இன்னும் சில பதிவுலக நண்பர்களுடனும் இணைந்து இந்த முயற்சியை ஆரம்பிக்கின்றோம். வழக்கமாக நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தரும் நீங்கள் நிச்சயம் இந்த முயற்சிக்கும் கை கொடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இங்கே எங்கள் குழுவில் சேராது வெளியில் இருந்து ஆதரவு தர சில பதிவர்கள் தயாராக இருக்கும் நிலையில் ஒரு சில திரட்டிகளும் இதற்கு நல்ல சமிக்கை காட்டியுள்ளன. எனவே திரட்டிகளின் பங்கும் இங்கே மிகப்பெரிய பங்காக இருக்கும் என நம்புகின்றோம். எனவே அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவிப்பதோடு சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோரிடமும் இதற்கு ஆதரவு கேட்கின்றோம். பதிவுலகம் இன்று மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது. பல நிறுவனங்கள்,அமைப்புக்கள் திரை உலகிற்கு விருது வழங்கி வரும் நிலையில் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பதிவுலகில் வரும் காலத்தில் பிரமாண்ட விழாக்களுடன் இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. எனவே பூனைக்கு மணியைக் கட்டுவது யார்? நாங்கள் கட்டி இருக்கின்றோம்.

இந்த விருதுகளை நாம் வழங்க யார் என கேட்கலாம். சாதாரண ரசிகர்கள் தான் நாங்கள். ஆனால் பதிவர்கள் என்னும் மிகப்பெரிய சக்திகள். இது ஒரு குறிபிட்ட பிரதேசத்துக்கோ அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கோ அல்லது கண்டத்துக்கோ உரியதல்ல. நம் பதிவர்கள் எல்லோரும் இதன் பங்காளிகள். எனவே எங்களுக்குள் போட்டியாளர்களுக்காக தெரிவுகளுக்கான விவாதம்(நலன் விரும்பிகளும் பங்கு பெறுகின்றனர்) நடை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நீங்களும் எங்களுடன் தாராளமாக கை கோர்க்கலாம். இடம் காலம் மறந்து பதிவர்கள் என்ற ஒரு குடையின் கீழ ஒன்றாவோம். சாதிப்போம்.

24 கருத்துரைகள்:

Anuthinan said...

அண்ணே நல்ல முயற்சி!!! நானும் உங்கள் அனைவருடனும் இணைந்து செயல்பட விரும்புகிறேன்!


முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா !

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

உங்கள் மின் அஞ்சல முகவரியை பின்னூட்டுங்கள் எங்கள் குழுவில் இணைத்துக் கொள்கின்றோம். முதல் பின்னூட்டமே வாழ்த்தாக அமைந்தது திருப்தி.

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

உங்கள் நன்மை கருதி உங்கள் மின் அஞ்சல பிரசுரிக்க படவில்லை. நன்றி. உங்களை இணைத்தாயிற்று.

கமல் said...

நாங்களும் உங்கடை முயற்சிக்குப் பச்சைக் கொடி காட்டுறம். வாழ்த்துக்கள் நண்பா..

"ராஜா" said...

வாழ்த்துக்கள் ... வோட்டு எங்க போடணும்

soundar said...

இது நிச்சயம் வெற்றி பெரும்...
வாழ்த்துக்கள்...

Bala said...

ஓட்டு போட நான் ரெடி. ஒரு ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்க? (சாரி பழக்க தோஷம்!!)

சந்ரு said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.... என் ஆதரவும் என்றும் உண்டு

செல்வராஜா மதுரகன் said...

we will give massive support...

எப்பூடி ... said...

வாழ்த்துக்கள்

அத்திரி said...

ஒரு ஓட்டுக்கு எவ்ளோ கொடுப்பீங்க

கண்ணகி said...

வாழ்த்துக்கள்...

வளாகம் said...

வாழ்த்துக்கள்... சதீஸ்...
உங்க கூட....நானும் வாறேன்...நானும் வாறேன்...நானும் வாறேன்... :)

முல்லை மயூரன் said...

very important think do it quickly,u all tv, radio f gers try to make sl as tamilnaadu, fans to actors,

SShathiesh-சதீஷ். said...

@கமல்

வாழ்த்துக்கு நன்றி...

SShathiesh-சதீஷ். said...

@"ராஜா"

நன்றி. வாக்கு இப்போ போட்டிருப்பிங்க என நம்பிறன்

SShathiesh-சதீஷ். said...

@soundar

நன்றி. உங்கள் ஆதரவு தொடர்வதும் சந்தோசம்.

SShathiesh-சதீஷ். said...

@Bala

அதெல்லாம் சரியாய் கொடுப்போம். ஆனால் இங்கே பேச முடியாது. தனியே பேசுவோம்.

SShathiesh-சதீஷ். said...

@சந்ரு

வாழ்த்துக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@செல்வராஜா மதுரகன்

ஆதரவுக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@எப்பூடி ...

மீண்டு வந்திருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@அத்திரி

இதற்க்காக என்னை தனிமையில் தொடர்பு கொள்ளவும்.

SShathiesh-சதீஷ். said...

@வளாகம்

வாழ்த்துக்கு நன்றி கூட வாங்கோ சேர்ந்து சாதிப்போம்.

SShathiesh-சதீஷ். said...

@முல்லை மயூரன்

வாங்கோ உங்கள் கருத்துக்கும் நன்றி. அனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் பொழுது போக்கு இல்லாமல் வாழ்க்கை இல்லை.

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive