
இலங்கையில் வெற்றிநடை போட்டுவரும் வெற்றி எப்.எம் மிகப்பிரமாண்டமான இசை நிகழ்வை வழங்க சூப்பர் சிங்கர்ஸ்,அடுத்த பிரபுதேவா,மற்றும் சகலகலாவல்லவன் சிவகார்த்திகேயனை அழைத்து வெற்றிகரமாக நடத்தியும் முடித்து விட்டது. வெற்றியில் அடியேனும் ஒருவன் என்னும் காரணத்தால் எனக்கும் ஒரு சில கடமைகள் கிடைத்தன. விமான நிலையத்தில் நான் சென்று வரவேற்றது முதல் இசை நிகழ்வு நடந்து முடிந்தது வரை நடைபெற்ற சில சுவாரஷ்யமான விடயங்களை இங்கே தொடர் பதிவாக இடப்போகின்றேன். (யாரும் அலுத்துக்கொள்ளாதீர்கள். சீரியல் போல இழுக்கமாட்டேன் சீக்கிரமே முடித்திடலாம்.) எழுத நான் தயார் வாசித்து வாக்குபோடுவதுடன் என்னை வசை பாட நீங்கள் தயாரா?

இரவு நேரம் நான் லோஷன் அண்ணாக்கு தொடர்பை ஏற்படுத்தி இந்த விடயம் தொடர்பாக என் சந்தேகங்களை தீர்த்ததோடு அங்கே சென்று நான் செய்யவேண்டிய செய்யத்தேவையற்ற விடயங்களை கேட்டு தெரிந்து கொண்டேன். சரி நாளை காலை நாங்கள் இந்தியாவின் விஜய் டி.வி .புகழ் சூப்பர் சிங்கர்ஸ் அஜீஸ்,ரவி,ரேனு,ரஞ்சனி ஆகியோருடன் அடுத்த பிரபுதேவாவாக முடிசூடிய ஷெரிப் மற்றும் மிமிக்கிரி நடனம் என அசத்தும் சிவகார்த்த்திகேயனை வரவேற்கப் போகின்றோம் என்ற ஒரு சின்ன சந்தோசத்தோடு அன்றைய இரவும் கழிந்தது.
