உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label விடியல். Show all posts
Showing posts with label விடியல். Show all posts

Wednesday, March 24, 2010

பஞ்சாமிர்தம்= SO+சந்தோசமாக+மழை+கடிதம்+கோபம்.


நானும் ஒரு வானொலி அறிவிப்பாளராக இருந்த காரணத்தால் இதை பற்றி பேச ஓரளவு தகுதி இருக்கும் என நினைக்கின்றேன். இன்று காலை ஒரு தொலைக்காட்சியில் தொலைபேசி வாயிலாக நேயர்களை கலாய்க்கும் நிகழ்ச்சி ஒலி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. பொழுது போகணுமே என்பதற்காக அப்படியே இருந்தேன். அந்த நிகழ்ச்சியின் கடைசி பகுதி தான் அது. அந்தப்பகுதியில் நேயருடன் தொகுப்பாளர் பேசிறார் பேசிறார் பேசிறார் அவர் பேச்சில் so என்ற ஆங்கில வார்த்தை கிட்டத்தட்ட ஐம்பது தடவை வந்து தாண்டவமாடி இருக்கும். அது அவருக்கே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஒரு வசனம் முடிந்து அடுத்த வசனத்துக்கு இடையில் வந்துவிடும். அந்த சொல்லின் அர்த்தம் வரக்கூடாத இடத்திலும் பேசினாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்.(நான் அவர் பேசியதை கவனிக்கவில்லை. soவைத்தான் கவனித்தேன்.)

************************************************************************************************

இந்த கொடுமை இப்படி இருக்க. மதிய நேரம் இன்னொரு தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளினி சந்தோசமாக என்ற வார்த்தையை அதை கேட்டு நாங்கள் சந்தோசத்தை இழக்கும் வரை பாவித்தார். சந்தோசமாய் இணைந்து கொள்ளுங்கள், சந்தோசமா டயல் பண்ணுங்க,சந்தோசமா பேசுங்க,சந்தோசமா பாருங்க என்று சந்தோஷ கொடுமை. இப்போது வீட்டில் இருந்து அனுபவிக்கின்றேன். இதில் இன்னொரு விடயமும் சொல்லவேண்டும் என்ற Bodyguard திரைப்படத்தின் தழுவலில் சித்திக் இயக்கம் படத்தில் தான் விஜய் அடுத்து நடிக்க இருக்கின்றார். ஆனால் அந்த பெயரை பாடிகார்ட் பாடிகார்ட் என்றே சொல்லிக்கொண்டிருந்தார் அவர். இந்தியாவில் சில தளங்களில் இப்படி இடுகின்றார்கள். அது அவர்கள் வழக்கமாக இருக்கலாம். நம் நாட்டில் அது வழக்கம் இல்லை. அதே போல ஒரு பெயரை மாற்ற எங்களுக்கு உரிமை இல்லை. ஆரம்பத்தில் நான் இந்த பிழைகளை விட்டு அதன் பின் சரியான நெறிப்படுத்தலால் இதை தவிர்த்து வந்தவன் என்ற ரீதியில் இதை பகிர்கின்றேன்.

****************************************************************************************************

நீண்ட நாட்களின் பின் இன்று காலை கொழும்பில் சில பகுதிகளில் மழை பெய்து சூட்டை தணித்தது. இது இப்படியே இருக்கவேண்டும் என்ற ஆசை பலருக்கு இருந்திருக்கும். ஆனால் கொளுத்துதே. காலையில் இங்கே நின்ற அந்த நல்லவர் இப்போ எங்கேயும் போய்விட்டாரோ? ஏனென்றால் காலையில் விடியலில் லோஷன் அண்ணா நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்றாரே. அதுதான் சந்தேகம்....

************************************************************************************************************

வீட்டுக்கு ஏதும் கடிதங்கள் வருகின்றனவோ இல்லையோ இப்போது தினமும் வீட்டு தபால் இடும் பெட்டிக்குள் மூன்று நான்கு பிரசுரங்கள் கிடைக்கின்றன. வேறு ஒன்றுமில்லை தேர்தல் பிரசார துண்டுகள் தான் அவை. இப்படி வீடு வீடாக கடிதங்கள் எழுதி எனக்கு வாக்களியுங்கள் என வாக்காளர் கையொப்பம் இட்டு கடிதம் வந்தாலும் வரும்.


*********************************************************************************************************

நானும் நேற்றும் இன்றும் சில பதிவுகளை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். வழக்கமாக வருபவர்கள் கூட இந்தப்பக்கம் வருவதாக தெரியவில்லை. வாக்குகளும் இல்லை பின்னூட்டங்களும் இல்லை.ஏனையா எல்லோருக்கும் என் மேல் கோவம். ப்ளீஸ் கோபித்துக்கொள்ளாதீர்கள். ப்ளீஸ் எல்லோரும் வாங்கோ எல்லாத் தளத்துக்கும் போங்கோ. எந்த லாபமும் இன்றி பதிவெழுதும் எமக்கு ஆக்கமும் ஊக்கமும் உங்கள் வாக்குகளும் பின்னூட்டங்களும் பாராட்டுக்களுமே.

Share:

மிருகங்கள் மனிதனானால்-ஒரு உண்மை பதிவு.


ஒரு ஊரில ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாவாம்(அது உழுந்து வடையா பருப்பு வடையா என்று இன்றுவரை யாரும் என் சந்தேகத்தை தீர்க்கவில்லை.) அந்தவழியால் வந்த காக்கை ........அடேய் நிறுத்தடா இதுதான் காலம் காலமாய் தெரியுமே என்று யாரப்பா சவுண்ட் விடிறது.....சரி சரி இந்த கதை தெரியுமா நான் இன்னொரு கதை சொல்றன்.

ஒரு கிராமத்தில் இருந்த பத்து பசுக்கள் ஒன்றாக காடுப்பகுதிக்கு அண்மையில் இருந்த புல்வெளிக்கு மேயப்போவது வழக்கம். எப்போதும் ஒன்றாகவே போகும் இவை ஒரு முறை பிரச்சனை பட்டு.......டாங்.........அடேய் என்னடா கதை சொல்றாய்......அடடா இதுவும் தெரியுமா. சரி இந்தக்கதைகள் தெரியும் தானே நேரடியா விசயத்துக்கே வந்திவிடுகின்றேன்.

முதல் கதையில் பாட்டியிடம் வடையை திருடியது காகம் அதே காகத்தை ஏமாற்றியது நரி இப்படி காலம் காலமாக நம் பிஞ்சு மனங்களிலேயே விதை விதைத்து விட்டனர் நம் பாட்டா பாட்டி தொடக்கம் ஆசிரியர் வரை. என் கோபம் என்னவென்றால் அதென்ன எதற்கெடுத்தாலும் மிருகங்களை வைத்தே கதை சொல்வது அவற்றை தப்பாக காட்டுவது. ஏன் நம் முன்னோர்கள் சமகாலத்தவரை வைத்தது கதை சொன்னால் என்ன?ஒருவேளை அந்த மிருகங்களுக்கு இது தெரிந்தால் அவை நம்மை என்ன செய்யும்.

முதலில் மனிதர்கள் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. மனிதரில் நாம் எப்படி ஆண் பெண் என இரண்டு இனம் இருக்கின்றோம அதேபோல மற்ற மிருகங்களிலும் இருக்கின்றன. இதற்கடுத்து பேசும் மொழி வேறுபடுகின்றது இனம் மதம் குலம் கோத்திரம் இன்னும் என்னவென்னவோ எல்லாம் சொல்லி மனிதரில் பல வகை சொல்கின்றனர் சிலர். ஏன் இந்த பாகுபாடு மிருகங்கள் குலம் கோத்திரம் பார்க்கின்றனவா? மதத்துக்காக நாட்டுக்காக இனத்துக்காக என்று வேண்டுமென்றே சண்டை பிடிக்கின்றனவா?

ஆறாவது அறிவென்ற ஒன்று மற்ற மிருகங்களை விட இருக்கின்றது என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு செய்வது சரியான காரியமா? ஒரு தடவையாவது சிந்தித்திருக்கின்றோமா நாங்கள் மிருகங்கள் எங்களை பற்றி என்ன நினைக்குமென்று. நாய் போல மாடு போல என்று பேசுகின்றோம். அவை நிச்சயம் தங்களில் கெட்டவர்களை நீ அந்த மனிதன் போல இந்த மனிதன் போல என திட்டி கேவலமாக பேசாதென்பதற்கு என்ன நிச்சயம்.. அதேபோல எங்களை விட தங்களுக்கு அறிவு கூட என நினைத்துக்கொண்டு அவை செயற்படவில்லை என்பதற்கு என்ன நிச்சயம். ஏதாவது ஆராய்ச்சிகள் செய்து பார்ப்பதென்றால் முதலில் மற்ற மிருகங்களுக்கு செய்து பார்க்கின்றோம். அதே போல மிருகங்கள் செய்து பார்த்தால் இந்த உலகில் நாம் யாருமே இருக்க முடியாது.

காரணம் மிருகங்களுடன் போட்டி போட நிச்சயம் ஒரு சாதாரண மனிதனால் முடியாது. ஒரு நாயை அடிக்கவே கல்லை தேடுகின்றோம் அப்படி இருக்கையில் கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு ஆராச்சி செய்வதேன்றாலோ அல்லது ஒரு சின்ன வேலையை செய்வதேன்றாலோ கருவி இல்லாமல் செய்ய மனிதனால் முடியாமல் போய்விட்டது. இதே உலகத்தில் தங்களுக்கான உலகத்தில் மிருகங்கள் என்ன நேர்த்தியாக வாழ்கின்றன. எனக்கு ஒரு ஆசை மிருகங்கள் மனிதர்கள் ஆகிய எங்களை பற்றி என்ன நினைக்கின்றன அவர்களின் உலகில் இந்த மனிதன் என்பவன் எப்படி? ஒரு தாவரமா அல்லது வேற்றுக்கிரக வாசியா? நம் சினிமா ஹீரோக்கள் கூட இதுவரை பஞ்ச டயலாக்குகளில் மிருகங்களுடன் தான் தங்களை ஒப்பிடுகின்றனர் அப்படியானால் அவர்கள் மனிதனை விட மிருகங்கள் சிறந்தவை என ஒப்புக்கொள்கின்றனரா? மிருகங்கள் பலவற்றை நாம் கட்டிப்போட்டு வைக்கின்றோம் நம் பாதுகாப்புக்கென்று. அதே மிருகங்கள் இவன்களால் நாங்கள் அளிக்கின்றோம் இவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நம்மை கட்டிப்போட ஆரம்பித்தால்.

மனிதர்கள் உன்னதமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் கொஞ்சமாவது படித்துக்கொள்ளலாம் மிருகங்களிடம். மிருகங்கள் மனிதரானால் இந்த உலகம் தாங்காது அவற்றை அவர்கள் வாழ்வியலிலேயே விட்டு விடுவோம். மிருகங்களை அடைத்து வைத்து காட்சிப்படுத்த மிருகக்காட்சி சாலை அதே மிருகங்கள் மாறி விட்டால் மனிதக்காட்சி சாலை எப்படி இருக்கும்?

இன்று இந்தப்பதிவிட காரணம். லோஷன் அண்ணாதான். ஏனோ இன்று காலையில் (நீண்ட நாட்களுக்கு பின்) எழுந்து விடியல் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது குறு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற திப்பு பாடிய நடிக்கிறான் என்ற பாடலை கேட்கும் போதுதான் இந்த கோபம், இந்த சிந்தனை வந்தது. இந்த பதிவிட தூண்டிய லோஷன் அண்ணாவிற்கும் வெற்றியின் விடியலுக்கும் நன்றிகள்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox