உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label விஷால். Show all posts
Showing posts with label விஷால். Show all posts

Friday, June 17, 2011

பதிவுலக அவன் இவன் எவனுக்கும்....ஆதங்க பதிவு


பதிவுலக நண்பர்களே! எதிரிகளே! (இப்பெல்லாம் இவங்களும் இருக்காங்க)

எல்லோருக்கும் ஒரு முக்கியமான விஷயம். இது புதுசில்லை. கடந்த சில ஆண்டுகளாக பதிவுலகில் நடக்கும் ஒரு கேவலமான விடயத்தை சொல்ல வேண்டும் என மனம் நினைத்தாலும் தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது அவன் இவன் வந்திருக்கும் நேரம் எவனுக்குஇது பொருந்துமோ அவன் போட்டுக்கொள்ளட்டும்.

பதிவுலகில் ஒரு பதிவர் கஷ்டப்பட்டு யோசித்து எழுதும் பதிவுகள் சிலவற்றை அவர்களின் அனுமதியின்றி தங்கள் தளங்களில் வெளியிட்டு சந்தோசப்பட்டுக்கொள்கின்றார்கள் சில வக்கிரக்காரர்கள். குறிப்பாக பிரபல இணையதளங்கள் கூட இப்போது சில வலைப்பதிவர்களின் செய்திகளை அப்படியே போடுவது தான் கொடுமை. ஆனால் இதில் சந்தோசப்படக்கூடிய விடயம் என்னவென்றால் பதிவுலகில் எழுதும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை எடுத்து இடும் அளவுக்கு அவர்களின் எழுத்தின் தரம் இருக்கின்றது என இணையதளங்களே பறைசாற்றுகின்றன. ஆனால் சில பதிவர்கள் சில இணையதளங்கள் இப்படி அடுத்தவரின் பதிவுகளை போடுவது ஏனோ?

பதிவுலகுக்கு வா என யாரும் யாரையும் இழுத்து வரவில்லை. இத்தனை பதிவு போடு என வேருட்டவில்லை அப்படி இருக்கையில் நேரம் கிடைக்கையில் சொந்தமாக பதிவு போடுவதை விடுத்தது ஏன் இப்படி அடுத்தவன் பதிவை போடவேண்டும். இன்னும் விடை தெரியாக்கேள்வி இது? இவை எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருக்கும் பதிவர்கள் தங்கள் தளங்களில் முந்திக்கொண்டு விமர்சனம் வர வேண்டும் என்பதற்காய் படங்களை பார்க்காமலே இன்னொருவன் தன பார்வையில் எழுதிய எழுத்தை அப்படி அச்சு பிசகாமல்(ஒரிஜினலில் எழுத்து பிழை இருந்தால் இங்கேயும் இருக்கும்) போட்டு ஏன் அவமானப்படுகின்றனர். இன்னும் சிலரோ ஏதோ தானே எழுதியது போல அதுக்கு பில்ட் அப் வேறு. கந்த சாமி படம் வந்ததில் இருந்து நான் அவதானிக்கும் விடயம். பல தளங்களில் ஒரே படத்தின் விமர்சனம் ஒரே மாதிரி இருக்கும். அப்படி என்றால் அந்த அத்தனை தளமும் ஒருவராலா நடத்தப்படுகின்றது. இல்லையேல் அவருக்கு ரசனை இல்லையா? ஒரு படம் பார்க்கும் போது அது தாய்க்கு பிடிக்கும் தனயனுக்கு பிடிக்காமால் இருக்கலாம் அப்படி இருக்கையில் எந்த வேறு பாடும் இன்றி ஒரு படத்தின் விமர்சனம் அமைவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

நண்பர்களே! உங்களுக்கு நேரம் இல்லை என்றால் எழுதாதீர்கள். அதற்காக தெரியாத ஒன்றை தெரிந்தது போல காட்டி பதிவுலகில் விபசாரம் செய்யாதீர்கள். இன்று இந்த கோப பதிவு இட காரணம் அவன் இவன் படம் எப்படி இருக்கு என முதலில் வந்த சில விமர்சனங்களை படிக்க ஆரம்பித்தால் ஒரு சில தளங்களில் வழக்கம் போல கோப்பி விமர்சனங்களை காண கிடைத்தது. நிச்சயம் வரும் நாட்களில் இது அதிகரிக்கும். படம் வந்து சில மணிநேரமே ஆகி இருக்கும் நிலையில் ஒருவர் நல்லது என எழுதி விட்டால் அதை கோப்பி செய்து போட்டு அது நல்ல படம் என்றோ அல்லது கூடாமல் எழுதி இருந்தால் அதை போட்டு கூடாது என பரப்பும் ஒரு கேட்ட காரியத்தை தான் இந்த கோப்பி பேஸ்ட் பதிவர்கள் செய்கின்றார்கள். ரசனை நிச்சயம் வேறுபாடும். ஒரு செய்தியை கூட வித்தியாசமாக தரும் எத்தனயோ பேர் இருக்கையில் ஒரு படத்தின் விமர்சனத்தை ஒரே மாதிரி தருவதை எப்படி பொறுக்கமுடியும். இதை தடுக்க இப்படி கோப்பி செய்யும் உங்களால் மட்டும் தான் முடியும். உங்கள் மனசாட்சியால் மட்டும் தான் முடியும். கொஞ்சம் சிந்தியுங்கள் .நல்ல புதிய தரமான பதிவுகள் வரும்.......
Share:

Friday, September 25, 2009

ஒரே திரையில் விஜய்,விக்ரம்,சூர்யா,விஷால்.



இளைய தளபதியாக திரை உலகில் வலம் வரும் விஜய்க்கும் சூர்யாவிற்கும் நல்ல நட்பு உண்டு. இரண்டு பேரும் கல்லூரி கால நண்பர்கள் என்பது இன்னொரு பலம். அதற்கு அச்சாரமாக நேருக்கு நேர், பிரெண்ட்ஸ் இரண்டு படங்களிலும் நடித்தனர். ஆனால் அப்போது சூர்யா பிரபலமாகாத நடிகர். முன்னணியிலும் இல்லை. ஆனால் இப்போதோ விஜயையும் விஞ்சி முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கின்றார். விக்ரமோடு விஜய்க்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் அது வெளி உலகிற்கு தான் என்பது சாதாரண ரசிகனுக்கும் தெரியும். அதேநேரம் விஷாலுடன் விஜய் சண்டை கோழிதான். வெளி இடங்களுக்கு இருவரும் நெருக்கமாக காட்டினாலும் தன் பாதையில் விஷால் வருகின்றார் என்பது முதல் தன் பட்டத்தை சுட்டு வைத்தது வரை இரண்டுபேருக்கும் ஆகாது.


இது ஒருபுறமிருக்க. விக்ரமும் சூர்யாவும் பிதாமகனுடன் வேறு எந்த படத்திலும் இணைந்து நடிக்க முடியாதளவிற்கு முறுகல். அதுவும் இரண்டு பேரின் பாதையும் இப்போது ஒரே தடத்தில் போவது கண்கூடு. இந்த நிலையில் இவர்களுக்குளான கூட்டணியும் மீண்டும் சாத்தியம் இல்லை. விக்ரம் விஷாலுடன் நடிப்பது எந்த பிரச்சனைகளும் இல்லை. விஜயுடன் விக்ரம் நடித்தாலும் சரியான கதாபாத்திரம் அமைய வேண்டும். முன்னொருமுறை விஜய்க்கு வில்லானாக கூட நடிப்பேன் பாத்திரம் மிக சிறப்பாக இருந்தால் என சொல்லி உள்ளார் சீயான்.


மறுபக்கம் சூர்யாவிற்கு விஜயுடன் நடிப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. ஆனால் நிச்சயம் விஜய்க்கு இணையான கதாபாத்திரம் இம்முறை வழங்கப்பட வேண்டும். அடுத்து விக்ரம் சூர்யா கூட்டு கடினமானதுதான். அதேநேரம் விஷாலை ஒரு பொருட்டாக நினைக்காமல் சூர்யா நடிக்கும் வாய்ப்புகள் உண்டு.


அடுத்தவர், பட்டத்தை துறந்திருக்கும் விஷால். விஜயின் ரசிகர்களின் எதிர்ப்பலையோடு இடை இடையே விஜய் புராணம் பாடுபவர் என்றாலும் விஜயுடன் சேரும் வாய்ப்பு நினைக்க முடியாதது. அதேநேரம் மற்ற இரண்டு பேருடனும் சேர்வதில் எந்த பிரச்சனையும் ஏற்ப்பட போவதில்லை. இந்த நிலையில் தான் இந்த நான்கு பேரும் ஒரே திரையில் வரப்போகின்றனர். இந்த மகத்தான சாதனையை செய்திருப்பது லயோலா காலேஜ் என்பது பெருமைப் படக்கூடிய விடயம். விஜய் அண்டனியின் இசையில் வர இருக்கும் லயோலா காலேஜின் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடும் ஒரு இசை அல்பத்தில் தான் இவர்கள் ஒன்றாக நடிக்க உள்ளனர். ஒன்றாக என்றவுடன் நேருக்கு நேர் சந்திப்பார்கள் என்று கனவு கண்டால் அதுதான் இல்லையாம். ஒப்பந்தம் கேட்டு போனவுடனேயே எல்லோரும் ஒரே பிரேமில் வருவது கஷ்டம் என்னும் வசனத்தை பேசி வைத்து பாடமாக்கி சொன்னது போல சொல்லி இருக்கின்றார்கள் நால்வரும்.


ஆஹா கிளம்பிட்டாங்கையா என முணுமுணுத்துக்கொண்டிருந்தவர்களிடம் இன்னொரு விடயத்தை சொல்லி இருக்கின்றார்கள். அதுதான் மகா கொடுமையுங்க மற்றவர்கள் வராத நாட்களிலேயே எனக்கு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளுங்க ஏனென்றால் நான் ரொம்ப பிசி என்றிருக்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் தலை(அஜித்தில்லைங்கோ) அசைத்திருக்கின்றார்கள் லயோலா கல்லூரி) என்னதான் இருந்தாலும் மனதுக்குள் திட்டி இருப்பாங்க இங்கே ஒருத்தன் இருந்த சீட்டில் தானே இருந்திருப்பாய் இப்ப என்ன முகத்தையே பார்க்க மாட்டேன் என்கிறாய் என்று. என்னவோ படித்த கல்லூரிக்காக சேர்ந்து நடிக்க சம்மதிதிருப்பவர்கள் இப்படியே படங்களிலும் ஒன்றாக நடித்தால் தமிழ் சினிமா எங்கேயோ போய்விடும்.


ரஜினி-விஜய், கமல்-விக்ரம், கமல்-அஜித், கமல்- சூர்யா சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் என கனவு காண தூங்கப்போகின்றேன் நண்பர்களே........ நீங்களும் கண்டால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
Share:

பட்டத்தை துறந்தார் தளபதி-தமிழ் சினிமாவில் பரபரப்பு.



நடிகர்களுக்கு யார் பட்டப்பெயர்களை வழங்குகிறார்களோ தெரியாது ஆனால் ரசிகர்கள் வழங்கினார்கள் என்னும் பெயருடன் தனக்கு தாங்களே பலர் வைத்து கொண்டு விடுவர். முன்பு ஸ்டார் என்னும் பட்டத்தின் மேல் இருந்த நடிகர்களின் காதல் இப்போது தளபதி மேல்.

இப்போ இருக்கும் முன்னணி கதாநாயகர்களில் சூர்யாவை தவிர அனேகமாக எல்லோருக்கும் பட்டம் உண்டு. இளைய தளபதி இருக்கும் போதே அவருக்கே சூட்டலாம் என நினைத்து விஜய் தரப்பு வைத்திருந்த புரட்சி தளபதி பட்டத்தை தானாகவே சூட்டிக்கொண்டார் விஷால். தொடர்ந்து வீரத்தளபதி ஜெ.கே.ரித்தீஷ்,அன்புதளபதி நரேன், சின்ன தளபதி பரத் என போனவர் வந்தவர் எல்லாம் பெயருக்கு முன்னாள் தளபதியாகி விட்டனர்.

இப்போது தான் தன வினையை தானே நொந்திருக்கின்றார் இவர்களில் ஒருவர். ஏற்கனவே பலர் கூறியும் கேட்காதவர் இப்போது இந்த பட்டப்பெயர் வேண்டாம் என முடிவெடுக்க காரணம் தொடர் தோல்விகள் தான். விஷால் எப்போது தன்னை புரட்சிதளபதியாக்கினாரோ அப்போதிலிருந்து காலம் சரியில்லாமல் போய்விட்டது. இப்போதுதான் இது மண்டையில் உறைக்க இனி அந்த பட்டத்தை பாவிக்க வேண்டாம் என தன ரசிக சிகாமணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரசிகர்கள் சொன்னதால் இந்த பெயரை வைத்தேன் என சொன்னவர் இப்போது ரசிகர்களிடம் கேட்காமலே பெயரை எடுத்து விட்டார். இதற்கு ஒன்றும் சொல்லமாட்டாங்களா உங்கள் ரசிகர்கள் புரட்சி தளபதி மன்னிக்கவும் விஷால் அவர்களே.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox