Sunday, October 4, 2009

மினி உலககிண்ணம்- மூக்குடைபட்ட கதை.





ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண இறுதிப்போட்டி நாளை இடம்பெற இருக்கும் நிலையில் பல பதிவர்கள் (நானுட்பட) விமர்சகர்கள் என எல்லோர் முகத்திலும் கரி பூசிவிட்டு இரண்டு அணிகள் இறுதிக்கு வந்துள்ளன. எதிர்பார்க்கப்பட்ட இந்தியா,தென் ஆபிரிக்கா, இலங்கை அணிகள் இழிவான தோல்விகளோடு வெளியேறிவிட்டன. எதிர்பார்க்காத இங்கிலாந்து .நியூசிலாந்து அணிகள் தாண்டவமாடி நிற்கின்றன. நாளை விடை கிடைக்கப்போகும் கேள்விக்கு இவ்வளவு நாளும் கிடைத்த பதில்களுடன் ஒரு முழு அலசலாக இந்த பதிவு.

முதலாவது போட்டியே எனக்கு மூக்குடைவான போட்டி. காரணம் போட்டிகளை நடத்தும் நாடு மட்டுமல்ல உலகின் முதல்தர அணி ஒன்று இலங்கையை பந்தாடும் என பார்த்தால் இலங்கை அவர்களை பந்தாடி விட்டனர். நாணய சுழற்ச்சியில் வென்ற தென் ஆபிரிக்க தலைவர் சிமித் ஏன்தான் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. ஜெயசூரிய ஏமாற்றினாலும் மறுமுனையில் டில்ஷான் இந்த தொடரின் முதலாவது சத்தத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து சங்ககாரவும் தன பங்குக்கு அரைசதம் ஒன்றை பூர்த்தி செய்ய மகேலவும் இழந்த பார்மை மீட்டெடுத்தார். இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களை குவிக்க தென் ஆபிரிக்கவிற்கு இது எல்லாம் சின்ன விடயம் எனத்தான் நானும் நினைத்தேன். ஆனால் சிமித்தையும் களிசையும் தவிர வேறு யாரும் கைகொடுக்காமல் போக மழையும் வில்லனாக டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை 55 ஓட்டங்களால் முதல் வெற்றியை பதிந்தது.



அடுத்த போட்டி பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகளுக்கிடையில். மேற்கிந்திய தீவுகள் நாணய சுழற்ச்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடினர். மில்லேரை தவிர வேறு எவரும் பிரகாசிக்காமல் போக 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டினர். ஆனால் பாகிஸ்தான் துடுப்பெடுத்தடியபோதுதான் மேற்கிந்திய தீவின் பலமும் தெரிந்தது. ஆரம்ப விக்கெட்டுக்கள் தொங்கினால் அடுத்தடுத்து சரிக்கப்பட ஒருவாறு சமாளித்து போட்டியில் வென்று முடித்தது பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளினால். இந்த போட்டி ஒருவாறு என் கணிப்பை காப்பாற்றியது.


முதல் போட்டியில் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்க வெல்ல வேண்டிய கட்டாயத்துடனும் நியூசிலாந்து தொடரை சிறப்பாக தொடங்கும் எதிர்பார்ப்புடனும் களம் கண்டன. மறுபடி நாணய சுழற்ச்சியில் வென்று களத்தடுப்பை தெரிந்தார் சிமித். அப்போது ஏண்டா இந்த மனிதன் தோல்வியை பார்த்ததும் இப்படி செய்கின்றார் என நினைத்தேன்.ஆனால் ஆரம்பத்திலேயே ரைடரை அனுப்பி நல்ல ஆரம்பம் கண்டது தென் ஆபிரிக்கா.ஆனால் டெய்லர்,மக்கலம்,எலியட் கைகொடுக்க 214 என்னும் ஓரளவு நல்ல நிலைக்கு வந்தனர். பந்துவீச்சில் பார்னெல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென் ஆபிரிக்கவிற்கு சிமித்தின் ஆட்டமிழப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது.ஆனால் தொடர்ந்து வந்த ஆம்லா,கலிஸ், வில்லிஎர்ஸ் பொறுப்புடன் ஆட முதல் வெற்றியை சுவைத்தது தென் ஆபிரிக்கா.நியூசிலாந்தின் பந்து வீச்சாளர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. 5 விக்கெட்டுகளால் தென் ஆபிரிக்கா வென்று என்னையும் காப்பாற்றியது.

மறுபுறம் வெற்றியுடன் இலங்கையும் முதல் போட்டிக்காக இங்கிலாந்தும் களமிறங்கின. இலங்கை இலகுவாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்று இங்கிலாந்து இலங்கையை துடுப்பெடுத்தாட பணித்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த இலங்கையை வழக்கம் போல கண்டம்பியும் மதியூசும் மீட்டெடுத்தனர்.ஒருவாறு 212 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை.அன்டேர்சன், ஒனியன்,புரோட் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டனர்.


பதிலுக்கு குலசெகரவும் இங்கிலாந்தை மிரட்ட முதல் இரு விக்கெட்டுகளும் 19 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டாலும் ஷா மாறும் கோலிங்வூட் ஜோடி சிறப்பான இணையை வழங்கி வெற்றியை நோக்கி கொண்டு சென்றது. இறுதி நேரத்தில் மோர்கன் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்து இங்கிலாந்தில் எழுச்சிக்கு அச்சாரம் ஆறு விக்கெட்டுகளால் வென்ற இங்கிலாந்து என் கணிப்பில் மண்ணை போட்டது.

அடுத்து அவுஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகளுடன் சமரை நடத்தியது. நாணய சுழற்சியில் வெல்பவர்கள் எல்லாம் களத்தடுப்பை தெரிவு செய்வது போல மேற்கிந்தியாவும் தெரிந்தது. முதல் பந்திலேயே வாட்சனை ஆட்டமிழக்க வைத்து அசைத்து பார்த்தனர். ஆனால் அடுத்து வந்த பாண்டிங் நங்கூரமிட்டு ஆட தொடங்கினார். இறுதி நேரத்தில் ஜோன்சனும் கலக்க எட்டு விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை குவித்தது அவுஸ்திரேலியா.


ஆனால் மேற்கிந்திய இப்படி ஆடும் என பாண்டிங் நினைத்திருக்க மாட்டார். மிக சிறப்பாக ஆடி வெற்றியை நோக்கி பிலேட்சரும் டோவ்ளினும் அழைத்தது சென்றனர். போராடிய இவர்களுக்கு உறுதுணையாக வேறு யாரும் கைகொடுக்காமல் போக இறுதி வீரரும் களம் வராமல் விட பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியும் என் கணிப்பை உறுதி செய்தது.

இந்த தொடரின் மிகப்பெரிய சமர் என எதிர்பார்க்கப்பட்ட போட்டி. தட்டு தடுமாறி மேற்கிந்தியாவை வென்று வந்த பாகிஸ்தானும் பலமான அணியாக வர்ணிக்கப்பட்ட இந்தியாவும் மோதின.நாணய சுழற்ச்சியில் வென்ற பாகிஸ்தானை பல முன்னணி வீரர்கள் இல்லாமல் சந்தித்தது இந்தியா.ஆரம்பத்தில் ஓரளவு சிறப்பாக பந்து வீசிய பந்து வீச்சாளர்களை மாலிக்கும் முஹம்மத் யூசுப்பும் சேர்ந்து காச்சி எடுத்தனர். மாலிக் சதம் கண்டாலும் தொடர்ந்து வந்த எவரும் பிரகாசிக்கவில்லை. ஒருவாறு 302 ஊடங்களை பாகிஸ்தான் குவிக்க துடுப்பாட்ட சூரர்கள் இதை அடிப்பார் என பார்த்தால் ஓட்டு மொத்த சொதப்பலின் மூலம் பாகிஸ்தானிடம் தாரை வார்த்தனர் போட்டியை. இதை பற்றிய என் முன்னைய பதிவு. http://sshathiesh.blogspot.com/2009/09/blog-post_7660.htmlஎன் கணிப்பு மறுபடி பொய்த்தது.

தீர்மானம் மிக்க போட்டியாக இலங்கை நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்ச்சியில் வென்ற சங்கா முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்தை அழைத்தார். ஆரம்பம் முதலே அதிரடிக்கு இறங்கியவர்கள் இலங்கை பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்தனர். முரளி இல்லாமல் ஆட வந்த சங்காவிர்க்கு மூஞ்சியில் அடித்து வெறுப்பேற்றினார். பாரிய ஓட்ட எண்ணிக்கையை தென் ஆபிரிக்காவிற்கு எதிராக துரத்தியவர்கள் தானே என்ற எதிர்பார்ப்பை டில்ஷான் ஏற்ப்படுத்திக்கொடுக்க மகேள அதை தொடர்ந்தார். ஆனால் இம்முறை கண்டம்பியும் மதியூசும் ஏமாற்ற இலங்கை தோல்விகண்டது. இங்கும் என் கணிப்பு என்னை ஏமாறியது.

தென் ஆபிரிக்கா வென்றாக வேண்டிய நிலையில் இங்கிலாந்தை சந்தித்தது. நாணய சுழற்ச்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தை ஷா,கோலிங் வூட், மோர்கன் ஆகியோர் தாங்கிப்பிடித்து இமாலய இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். 323 என்ற இமாலய இலக்கை துரத்திய தென் ஆபிரிக்காவில் மாலுமி சிமித் மட்டுமே போராடினார். இறுதியில் அவரும் ஆடிப்போக 22 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து. மறுபடி நான் ஏமாந்தேன்.

வழக்கமாக தென் ஆபிரிக்காவை தொடரும் துரதிஷ்டம் இம்முறை இந்தியாவை துரத்தியது. அவுஸ்திரேலியாவை கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியை மழை வென்று இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது. யார் சிறந்தவர் என்பதை இறுதிவரை நிரூபிக்க முடியாமல் போய்விட்டது.

இந்த போட்டியில் இங்கிலாந்து வென்றால் தான் இலங்கை உள்ளே என இலங்கை காத்திருக்க பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய போட்டியாக இது அமைந்தது. 146 ஓட்டங்களுக்குள் சுருள. நியூசிலாந்து அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்று இலங்கையை அனுப்பி வைத்தது.

இம்முறை இந்தியா பாகிஸ்தானிடம் பிச்சை கேட்டு நின்றது. இதுவரை நடந்த போட்டிகளில் சுவாரஷ்யமான போட்டி என்றால் அது இந்த போட்டிதான்.அவுஸ்திரேலியா களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இது என்ன பெரிய இலக்கு என்பது போலதான் ஆரம்பித்தனர் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள்.போக போக இந்தியாவிற்காக விளையாடுவது போல பாகிஸ்தான் விளையாடியது. விக்கெட்டுகளை மள மளவென சரித்து இறுதிப்பந்தில் வெற்றியை கோட்டை விட்டு இந்தியாவிற்கு சாரி சொன்னனர்.

உப்புசப்பு அற்ற போட்டியாக நடந்த இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கேதிரான போட்டியில் தோணி முதலில் பந்து வீசியது. சச்சினின் உணவு கோளாறு தவிர வேறு எந்த பர பரப்பும் இல்லாமல் சுருட்டி அடித்தத் இந்தியா. இத்துடன் லீக் சுற்றும் முடிவடைந்தது.

இதன் படி முதலாவது அரை இறுதியில் அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதின.முதலில் இங்கிலாந்து 257 ஓட்டங்களை பெற்றதும் அவுஸ்திரேலியா அவ்வளவுதான் என நினைத்தேன். ஆனான் என்ன ஒரு அழகான ஆட்டம் போண்டிங்க்கும் வாட்சனும் சதம் பெற்றதுடன் முடித்தும் வைத்தனர் இங்கிலாந்தின் பயணத்தை.ஒரு விக்கெட்டை மாத்திரம் பறிகொடுத்து இமாலய வெற்றியுடன் இறுதிக்குள் நுழைந்தது. முழுதான பலமாக தன்னை காட்டிவிட்டது பாண்டிங் குழு.


மறுமுனையில் பாகிஸ்தான் நியூசிலாந்துடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டது. ஆரம்பத்தில் தடுமாறிய பாகிஸ்தான் ஒருவாறு 233 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து ஆரம்பத்தில் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்தபோது.எலியட்டும் வெட்டோரியும் அற்புதமாக ஆடி வெற்றியை உறுதி செய்தனர். கிண்ணம் வெல்லும் என நான் நினைத்த பாகிஸ்தானும் பரிதாபமாக் வெளியேறியது.

நாளை இறுதி. ஏற்கனவே கிண்ணம் வென்ற ஓர் கண்டத்தை சேர்ந்த இரு அணிகள். அசுர பலம் அவுஸ்திரேலியாவும் திடீர் பலம் கொண்ட நியூசிலாந்தும் மோத போகின்றன. என் உள்மனது ஏனோ பாண்டிங் கையில் பூமாலை என்றாலும் ஆசை அது வேட்டோரிக்கு கிடைக்கனுமேன்றே. எப்போதும் பெரிய கிண்ணங்களை தவறவிடும் நியூசிலாந்து மினி உலக கிண்ணத்தில் ஏற்க்கனவே சாதித்தது போல் சாதிக்குமா நாளை தெரியும்?

மொத்தத்தில் பல அதிர்ச்சிகளையும் தலை கீழ் முடிவுகளையும் பல தலைகளையும் உருட்டிய இந்த தொடர் முடிந்த பின் நிச்சயம் ஆடுகளங்கள் பற்றிய சர்ச்சை எழும் என்பதில் மட்டும் ஐயமில்லை.
Share:

4 கருத்துரைகள்:

பின்னோக்கி said...

நேரில் பார்த்த மாதிரி இருந்தது.
இந்தியா வெளியேறிய உடன் இப்போட்டியின் ஆர்வம் குறைந்துவிட்டது. இந்த மாதிரி அனைத்து நாடுகளும் விளையாடும் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.

sanjeevan said...

ஒரு நாள் போட்டிகளுக்கு பொருத்தமில்லாத ஆடுகளங்களை அமைத்து ஆசிய அணிகளை பழிவாங்கி விட்டாங்க.

யோ வொய்ஸ் (யோகா) said...

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மப பெரிய இடுகை

Nimalesh said...

Asian team varathathu oru kavalai........

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive