Sunday, May 10, 2009

இந்திய அணியின் தலைவரும் தற்போதுள்ள சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் டோனி. குறுகிய காலத்திலேயே அணித்தலைவராக சாதித்துக் காட்டிய டோனியை பற்றித்தான் பலரது பேச்சும் இருக்கிறது. தான் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் தொடரிலேயே கனவாக இருந்த இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டு வந்தார்.
கங்குலி, திராவிட் கலந்த தலைமைத்துவம் தான் இவரின் ஸ்டைல். தேவைப்படும் பொது கங்குலி போல் அதிரடி முடிவெடுப்பவர் பல இடங்களில் சாதுவாக இருந்தே சாதித்துக்காட்டினார். ஒரு வித்தியாசமான சிறந்த வீரர் தான் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்த இந்திய அணியினரை தோணியைப்போல் காப்பாற்றி கரை சேர்த்துக்கொண்டு இருப்பவர்தான் டோனி.

சச்சின் மட்டுமன்றி உலக ஜாம்பவான்களே இவரது தலைமைப் பொறுப்பை பார்த்து வியந்து நிற்கின்றனர். இந்த நேரத்தில் தான் எனக்கு டோனி ஒரு மந்திரவாதியா என எண்ணத் தோன்றுகின்றது. காரணமும் இல்லாமல் இல்லை. அணில் கும்ப்ளேயின் இறுதித் தொடர் என நினைக்கின்றேன் கும்ப்ளேயின் தலைமையில் வெற்றிபெறாமல் கொஞ்சம் தடுமாறி தடுமாறி வெற்றியை நோக்கிச் சென்ற அதே வீரர்களை கொண்ட இந்திய அணி அடுத்த போட்டியிலேயே டோனி தலைமையிலேயே இலகுவாக வெற்றி பெறுகின்றது. நான் நினைத்ததில் என்ன தப்பு.

அதன் பின் ஒரு போட்டியில் சேவாகின் தலைமையில் தடுமாறி போட்டியை சமநிலையில் முடித்த அதே அணி மீண்டும் எழுந்து டோனி தலைமையில் மிகப்பெரிய வெற்றி.

இன்று ஐ.பி.எல்.போட்டிகளில் ஆரம்பத்தில் தடுமாறிய சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி இப்போது வெற்றிமேல் வெற்றி குவித்து புள்ளிகளின் அடிப்படையில் முதல்நிலையை அடைந்து இருக்கிறது. இதற்க்கெல்லாம் காரணம் என்ன? டோனி தொட்டால் மட்டும் துலங்கும் எல்லாம் மற்றவர்கள் தொடும்போது ஏன் துலங்கவில்லை? விடை சொல்வது கஷ்டம்தான்.

டோனி ஒரு மந்திரவாதியா? அல்லது ஏதும் மாயாஜாலம் செய்து வெற்றியை பெறுகிறாரா? அல்லது எப்பிடித்தான் வெற்றியை அடைகின்றாரோ?
நிச்சயமாக தோனியை சூழ்ந்து இருக்கும் அதிஷ்டதேவதை ஒரு பக்கம் வெற்றி அலையை வீசிக்கொண்டிருக்க தோனியின் ஆளுமை, சிந்திக்கும் திறன், விளையாட்டின் மேல் கொண்ட ஈடுபாடு, களத்தில் எடுக்கும் முடிவுகள், வகுக்கும் வியூகங்கள், மர்ரவீரர்களையும் மதித்தல் முக்கியமாக எல்லோரையும் ஊக்கப்படுத்தி ஒரே அணியாக விளையாட வைத்தல் என்பவைதான் தோனியின் மந்திரங்கள் என நினைக்கின்றேன்.
உலகக்கிண்ணம்(இருபதுக்கு இருபது), கடந்த ஐ.பி.எல், அதன்பின் தொடர்ந்த இந்திய அணியின் சாதனை வெற்றித் தொடர்கள் இன்று நடைபெறும் ஐ.பி.எல்லிலும் தொடர்ந்து உலகக்கிண்ணத்திலும் தொடருமென நினைக்கின்றேன். திறமையும் அதிஷ்டமும் இருந்தால் டோனி என்ன நீங்களும் மந்திரவாதி ஆகலாம்.

இந்த சந்தேகம் எனக்கு மட்டுமன்றி உங்களிடமும் இருந்திருக்குமென நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என தட்டிவிடுங்களேன்.

6 கருத்துரைகள்:

செந்தழல் ரவி said...

:)

கிராமத்து பயல் said...

அருமையான பதிவு அண்ணா திறமை மட்டும் இருந்தால் போதாது கொஞ்சம் அதிஷ்டமும் தேவை ஜெயிக்க பிறந்தவன் ஜெயிக்கட்டுமே

விஷ்ணு. said...

// தோனியின் ஆளுமை, சிந்திக்கும் திறன், விளையாட்டின் மேல் கொண்ட ஈடுபாடு, களத்தில் எடுக்கும் முடிவுகள், வகுக்கும் வியூகங்கள், மர்ரவீரர்களையும் மதித்தல் முக்கியமாக எல்லோரையும் ஊக்கப்படுத்தி ஒரே அணியாக விளையாட வைத்தல் //

கரெக்டா சொல்லிபுட்டீங்க....

MSA said...

சதீஷ்... நல்ல பதிவு. பல பேர் தோனிக்கு அதிர்ஷ்டம் என்று சொல்கிறார்கள். நான் அதில் முரண்படுகிறேன். அதிர்ஷ்டம் கூடவே வருமா, finals போகிற வரைக்கும்?? :) அப்பப்ப வெற்றி பெற்றால் சரி... தொடந்து வெற்றி பெற்றால் அது அதிர்ஷ்டம் எல்லாம் இல்லை. திறமை தான் காரணம்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

""ஒரு பக்கம் வெற்றி அலையை வீசிக்கொண்டிருக்க தோனியின் ஆளுமை, சிந்திக்கும் திறன், விளையாட்டின் மேல் கொண்ட ஈடுபாடு, களத்தில் எடுக்கும் முடிவுகள், வகுக்கும் வியூகங்கள், மர்ரவீரர்களையும் மதித்தல் முக்கியமாக எல்லோரையும் ஊக்கப்படுத்தி ஒரே அணியாக விளையாட வைத்தல்//


நல்ல தலைமைத்துவத்துக்கு சிறந்த உதாரணத்த சொல்லி இருக்கிறீங்க சதீஷ். வாழ்த்துக்கள். அடிக்கடி வித்தியாசம் எல்லாம் பண்றீங்க. இது அதுவோ?......

Jayakumar B.E said...

i am Really appreciate

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive