எல்லோரும் எதிர்பாத்துக்கொண்டிருந்தது போல இன்றைய இரவுப்பொழுதில் வேலைக்களையையும் மீறி நான் தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் இருந்து தான் இந்த பதிவை இடுகின்றேன். வழக்கமாக வீட்டுக்கு போனால் இணையதளம் தான் தஞ்சம். இன்று வீட்டுக்காரரின் நித்திரையையும் கெடுத்து கிரிக்கெட்டோடு ஒன்றிவிட்டேன்.
மாலை அலுவலகத்தில் இருக்கும் போதே அந்த அதிர்ச்சியான செய்தி இன்று டானியல் வெட்டோரி விளையாடமாட்டாரென. ஒரு கணம் கவலை. இந்த கர்வம் பிடித்த அவுஸ்திரேலியர்களுக்கு முடிவுகட்ட எவனும் வரமாட்டானா என்று. ஆரம்பத்தில் இந்தியா தென் ஆபிரிக்காவையும் அதன் பின் அபார ஆட்டத்தால் எல்லோரையும் கலக்கிய பாகிஸ்தானையும் நம்பிய நான் இன்று நியூசிலாந்தை நம்பி இருக்கின்றேன். ஆனால் உள்மனதில் நான் நினைத்து விட்டேன் மறுபடி குரங்கு மன்னிக்கவும் பாண்டிங் கையில் பூமாலை என்று.
ஏற்கனவே போஸ் கொடுத்தாச்சு இனி எதுக்கென ஒதுங்கிட்டாரோ?
அதற்கேற்றால் போலதான் மக்கலம் நாணய சுழற்ச்சியில் வென்றவுடன் அவுஸ்திரேலியாவை களத்தடுப்பில் ஈடுபட சொல்லிவிட்டு தானாட வந்தார். ஆடவந்தவர் ஆடிப்போய் முதல் விக்கெட்டாக ஓட்டம் எதுவும் பெறாமல் வெளியேறினார். அப்போதே நியூசிலாந்தின் அடித்தளம் ஆட்டம் காண தொடங்கியது. தொடர்ந்து ரெட்மொன்ட்டும் கப்டிலும் இணைந்து அணியை கட்டி எழுப்பினர். இந்த ஜோடியும் பிரிந்த பின் ஒரு சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்த நியூசிலாந்து இருநூறு ஓட்டங்களை தொட்டாலே பெரிய விடயம் என்னும் நிலையில் தட்டு தடுமாறி இருநூறு ஓட்டங்களை பூர்த்தி செய்து திருஷ்டி கழித்தனர்.
பந்துவீச்சில் கொரிட்ஸ், லீ ஆகியோர் அசத்த ஐ.சி.சி விருது வென்ற ஜோன்சன் சராசரியான பெறுபேறை கொடுத்தார்.ஆடுகளம் பந்து வீச்சுக்கு உகந்தது தான் என்பதை இப்போது அவுஸ்திரேலியர்கள் துடுப்பெடுத்தாடும் போது தெரிகிறது. இடையில் பூச்சிகளின் ராச்சியம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது.
இருநூறு ஓட்டங்கள் அதுவும் அவுஸ்திரேலியாவிற்கு அதுவும் நியூசிலாந்துக்கு எதிராக அல்வா சாப்பிடும் ஓட்டங்கள் தானே போட்டி விரைவில் முடிந்து விடும் என நான் மட்டுமல்ல என நண்பர்கள் பலர் கூட நினைத்தனர். ஆனால் நானும் மக்கலத்தின் தம்பிதான் என்பது போல பெயினி ஒரு ஓட்டத்துடன் வெளியேற பொண்டிங்க் வந்தார் மனிதராவது அணியை கொண்டு செல்வார் என பார்த்தால் விடுங்கப்பா எனக்கு நிறைய வேலை இருக்கு முடிஞ்சா நீங்க அடிச்சு என் கையில பூமாலையை தாங்க அதுதான் குரங்கு கையில் என்பார்களே தன்னை தானே அப்படி சொல்லிட்டு ஒன்றுக்கும் ஆகாதவன் என தன்னை யாரும் சொல்லக்கூடாதென்பதற்காக ஒரு ஓட்டத்தை பெற்றுக் கொடுத்து விட்டு போய் விட்டார்.
உதவிக்கரம் நீட்டியவர்.
அதற்க்கு பிறகு நியூசிலாந்து விழித்துக்கொண்டது. தொடர்ந்து தன அபார களத்தடுப்பாலும் சிறந்த பந்து வீச்சாலும் அவுஸ்திரேலியர்களை கட்டுப்படுத்தி வைத்து போட்டியை சுவாரஷ்யமாக்கினர். அடடா பொண்டிங்க் குழுவுக்கு கடிவாளம் போடிதே இந்த கறுப்பு குதிரை என எனக்கும் சந்தோசம். இங்கிலாந்திடம் தாண்டவம் ஆடிய வொட்சன் கூட அடக்கி வாசிக்கின்றார் என்ற மகிழ்ச்சி. இதுவெல்லாம் பிடியை மக்கலம் தவற விடும் வரை தான். இனி அதிரடி தான் மச்சான் என முடிவு பண்ணி தொடங்கியவர் வந்த பந்து வீச்சாலர்களுக்கெல்லாம் அடித்து துவைத்தார்.(இதுதான் நான் அடிச்சா தாங்கமாட்டாய் என்ற வேட்டைக்காரன் பாட்டு வரியோ?)
மீண்டும் தடுமாறிய தல.
மறுமுனையில் வயிட் தன பங்குக்கு சிறந்த பங்களிப்பை வழங்க இந்த ஜோடி அணியின் தலை எழுத்தை மற்ற தொடங்கியது. ஒருவாறு மில்ஸ் வயிட்டை அனுப்பி நிம்மதி பெரு மூச்சு விட்டார். பந்துவீச்சில் வெட்டோரி இல்லாதது மிகப்பெரிய பலவீனமாக விளங்கியது. (நம்ம இலங்கை பசங்க முரளி இல்லாமல் விளையாடியது மாதிரி இல்லை இது நிஜமாவே வெட்டோரி காயமுங்க.) மற்றவர்கள் ஏனோ கண்டு கொள்ளாமல் இருக்க மீண்டும் ஹசியை அனுப்பி ஒரு நம்பிக்கையை பிறப்பித்தார். இந்த தொடரில் ஹசியின் சொத்தை ஆட்டம் தொடர்கிறது.
இறுதிவரை நங்கூரமிட்டு நியூசிலாந்தை நசுக்கியவர்.
என்னடா இவன் வெற்றி பெற்ற அவுஸ்திரேலி யர்களை இப்படி தாக்குகிறான் அவர்கள் என்ன குறைந்தவர்களா என நீங்கள் நினைக்கலாம் உண்மையில் அதற்கான தகுதி உள்ள அணிதான் அது. ஆனால் பொண்டிங்க் என்னும் சிறந்த வீரருக்குள் சிறந்த பண்பு இல்லை. எவன் ஒருவன் உயர தன்னை தாழ்த்துகின்றானோ அவனே உயர்வான் என தெரியாமல் அவர் மற்றவர்களிடம் போடும் கூப்பாடும் மற்றைய ஒரு சில வீரர்கள் செய்த சில கர்வச்செயல்களும் தான் பொதுவாக ஆசிய ரசிகர்களிடம் அவர்களின் மதிப்பை குறைத்து விட்டது. இப்போதெல்லாம் யார் வெல்கின்றார் என்பதை விட அவுஸ்திரேலியா தோற்கணும் என்பது பலரின் ஆசை.
வேண்டாமெண்டாலும் நம்ம கையிலேயே குடுக்கிறாங்களே.
பொண்டிங்க் கையில் பூமாலை என இந்த பதிவிற்கு நான் தலைப்பிட காரணம். இந்த தொடர் வென்றவுடன் மீண்டும் பொண்டிங்க் சுய பிரகடனம் செய்வார் நாங்கள் தான் நம்பர் வான். எங்களை எவனாலும் அடிக்கமுடியாது. எனபது மட்டுமன்றி மற்ற அணிகள் சொத்தை என்பது போல கீல்தர்மாக் அவர் கருத்திருக்கும். அதற்க்கேற்ற்ப தான் குரங்கு கையில் பூமாலை கொடுத்தல் எப்படியோ அதே போலதான் பொண்டிங்க் கையில் இந்த கிண்ணம் சென்றதின் பின் நடக்கும் என்பதை சொல்லாமல் சொல்லவே.
வாட்சன் கடந்த போட்டியை போல இந்த போட்டியிலும் சாதித்து காட்டி தன தலைவரிடம் கிண்ணத்தை கொடுத்துவிட்டார். மீண்டும் எழுந்திருக்கிறது. அவுஸ்திரேலியா. விமர்சனங்கள் சவால்களை தாண்டி சாதித்து தன்கள் பலத்தை நிரூபித்து காட்டிய பொண்டிங்க் குழுவினர் பாராட்டுக்குரியவர்களே. அதேநேரம் தனித்து நின்று மீண்டும் சதம் கடந்து வெற்றியை உறுதி செய்த வாட்சன் என்னை பொறுத்தவரை ஹீரோ. வாழ்த்துக்கள் ஆசி. வெற்றியை கொண்டாடுங்கள் மமதையில் வசை பாடாமல்.
2 கருத்துரைகள்:
என்னாது அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருச்சா? ஆமா நேத்து போட்டி எதுவும் இருந்துச்சோ?
Australia they played like champians....... with watto..... came to the form in right time fro the Aussie.....
@ yogaa... neenga thaaa avaru.....lol
Post a Comment