நெருங்கிக்கொண்டிருக்கின்றது மீண்டும் ஒரு இனிய நாள். அண்மையில் நடந்து முடிந்த பதிவர்கள் சந்திப்பு தித்திப்பாகவும் வெற்றியாகவும் நடந்து முடிந்தாலும் அதன் பின் இன்னொரு சந்திப்பு என்பது கேள்வியாக இருந்து வந்த நிலையில் நாங்களும் இருக்கிறம் கவலை வேண்டாம் சந்திப்போமா என இப்போது கேட்டிருக்கின்றார்கள் இருக்கிறம் சஞ்சிகை குழுவினர்.
வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி ஒரு நிறைந்த பூரணை நாளில் (பலர் வருவது இலகு எங்களை போன்றவரை தவிர) எல்லோரையும் சந்தித்து சிந்திக்க வைக்க முடிவு செய்து விட்டனர். கொழும்பு 7 இல அமைந்துள்ள அவர்களின் அலுவலகத்தில் இந்த இனிய ஒன்று கூடல் இடம்பெறப்போகின்றது. மாலை 3 மணி அளவில் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சந்திப்பு பல நல்ல நண்பர்களையும் நல்ல அனுபவங்களையும் தந்திருக்கும் நிலையில் ஊடகம் சார்ந்தோர் பதிவர்கள் என எல்லோரும் சந்திக்கப்போகும் இந்த சந்திப்பும் இன்னும் பல தித்திப்புகளை வழங்கும் என்பதில் ஐயமில்லை. இருக்கிறம் உங்களை ஒன்று சேர்க்க நாங்கள் இருக்கிறோம் என சொல்லிவிட்டனர் இனி நாங்களும் வருவோம் என சொல்லவேண்டியது மட்டுமே எங்கள் கடமை. கொழும்பு மட்டுமல்ல இலங்கையின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்ல நாடு விட்டு நாடு சென்ற நம் நல்லுள்ளங்களும் வந்து கலந்து கலக்கலாம்.
சொல்ல காத்திருக்கும் வழிகள்....
மின் அஞ்சல் irukiram@gmail.com
தொலைபேசி 0113150836
கடந்தமுறை சந்திப்பில் எனக்கு கிடைத்த வேலை அறிவிப்ப்பு செய்வது இம்முறை எந்த வேலையும் இல்லாமல் வேடிக்கை பார்க்கப்போறன். சந்தோசமா, ஆனால் கடந்தமுறை பேச முடியாமல் போன அனானிகள் பற்றிய பேச்சு இம்முறை எழும் என எதிர்பார்க்கின்றேன். ஆனால் ஒரு சந்தோசம் இப்போது எனக்கு அனானிகள் தாக்குதல் குறைந்துள்ள நிலையில் மீண்டும் என்னை அடிக்க அண்ணன்கள் தயாராகலாம். இதுவரை முகம் தெரியாமல் தெரிந்தவர் என சொல்லி அடித்த கில்லிக்கும் சொல்லாமல் அடித்த திருப்பாச்சிக்கும் சொல்லியும் சொல்லாமலும் அடித்த சிவகாசிக்கும் என்னை நேரடியாக் அடிக்க வாய்ப்பு உண்டு வங்க அன்பால் ஒருவரை ஒருவர் அடிப்போம்.
சொல்லவேண்டியதை சொல்லிட்டன் இன்னொரு விஷயம் இருக்குங்க. இந்த பதிவு என் நூறாவது பதிவு. ஒருவாறு ஒரு நல்ல நிகழ்வுக்குரிய அழைப்பிதழாக என் நூறாவது பதிவு அமைந்தது சந்தோசமே. இந்த நேரத்தில் என் ஐம்பதாவது பதிவில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த நல உள்ளங்களை நினைவு கூர்ந்திருந்தேன் மீண்டும் ஒரு தடவை அவர்களை நினைவுகூர்வதொடு எல்லோருக்கும் என் நன்றிகள். அதேநேரம் எனக்கு புதிதாக கிடைத்த வாசகர்கள், நண்பர்கள், அறிவுரையாளர்கள் இன்னும் பல அனானிகள் எல்லோருக்கும் என் நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் அன்பான ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.
இந்த நூறாவது பதிவை சதத்துக்கு முன் இரட்டை சதம் அடித்த நான் என பதிவிட இருந்தேன் காரணம் பதிவுலகில் என் நூறாவது பதிவை தொட முன் மூஞ்சி புத்தகத்தில் இருநூறு நண்பர்களை சேர்த்துவிட்டேன். சும்மா ஒரு பில்ட் அப்புக்கு தான். ஆனால் இப்போ என்னை அடிக்க நினைப்பவர்களுக்கு என எழுதுகின்றேன். சில மனபாரங்கள் தீர்ந்ததும், சூடான பதிவுகளோடு சிந்திப்போம். அதுவரை எனக்கு உங்கள் வாக்குகளையும் பின்னூட்டங்களையும் வழங்கி வளப்படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
27 கருத்துரைகள்:
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். வெற்றிகள் தொடரட்டும்...
கொழும்புக்கு பதில் ஒரு மத்தியஸ்த நாட்டை தெரிவு செய்யலாமா
சும்மா...சும்மா ...சும்மா ...
சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்
சதம் அடித்த சதீஸுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் தானாம் கூட்டம் சேர்த்து வாறீங்கள் விஜயை விமர்சித்தவர்களை தாக்குவதற்கு...
இதை அறிந்துதான் ஒருத்தர் முதலாவதாக பின்னூட்டி, பாவமன்னிப்பு கேட்கிறாரோ..?
:)
சதமடித்ததற்கு வாழ்த்துக்கள். உங்களது சதம் சனத்தின் சதங்களை போல அதிரடியாக இருந்தது.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
சந்திப்பில் சந்திப்போம்
LOSHAN கூறியது...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
=>>
சதத்துக்கு வாழ்த்து சொன்ன லோஷன் அண்ணாவிற்கு நன்றிகள். என் முதல் பதிவுலும் உங்கள் பின்னூட்டம் இட்டமையை இப்போ நினைவு கூர்ந்து மகிழ்கின்றேன்.
வேந்தன் கூறியது...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். வெற்றிகள் தொடரட்டும்...
=>>
நன்றி வேந்தன் உங்கள் வருகையும் தொடரட்டும்.
தியாவின் பேனா கூறியது...
கொழும்புக்கு பதில் ஒரு மத்தியஸ்த நாட்டை தெரிவு செய்யலாமா
சும்மா...சும்மா ...சும்மா ..
=>
அதனால் என்ன நீங்கள் வருவதாயின் அல்லது தூது செல்ல தயாராயின் ஆப்காநிஸ்தானையே தெரிவு செய்யலாம் சும்மா... சும்மா....சும்மா. ....
வந்தியத்தேவன் கூறியது...
சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்
=>
மூத்த பிரபல ......இன்னும் என்னென்ன அடைமொழி எல்லாம் இருக்கோ அத்தனையும் சேர்ப்போம். வந்தி அண்ணர் சாரி மாமாவே நன்றி.
ஆதிரை கூறியது...
சதம் அடித்த சதீஸுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் தானாம் கூட்டம் சேர்த்து வாறீங்கள் விஜயை விமர்சித்தவர்களை தாக்குவதற்கு...
இதை அறிந்துதான் ஒருத்தர் முதலாவதாக பின்னூட்டி, பாவமன்னிப்பு கேட்கிறாரோ..?
:
=>
பார்க்கலாம் இதுவரை அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. ஆனால் இம்முறை இதை பேசினால் என்ன என யோசிக்கின்றேன். காரணம் விஜயை தாக்க என்ன காரணம் என எல்லோரும் நேரே சொல்லிவிடுவார்கள்.
யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
சதமடித்ததற்கு வாழ்த்துக்கள். உங்களது சதம் சனத்தின் சதங்களை போல அதிரடியாக இருந்தது
=>
நன்றிங்க உங்க வாய்ஸ்க்கு சனத்தா அவர் யாருங்க? லொள்
சந்ரு கூறியது...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
சந்திப்பில் சந்திப்போ
=>
நன்றி நாங்களும் வருவமெல்லொ
இந்த பதிவில் இன்னுமொரு சென்டிமென்ட் விடயமும் இருக்கு. அண்மைக்காலமாக அலுவலகத்தில் இருந்து பதிவிடாத நான் இம்முறை என் நூறாவது பதிவை அலுவலகத்தில் இருந்து ஏற்றினேன். காரணம் நான் முதல் முறையாக் எந்த கணினியில் இருந்து என் தளத்தை ஆரம்பித்தேன் அதே இடத்தில் இருந்து நூறாவது பதிவ்ட்டது சந்தோசமே.
நூறடிச்சாச்சா! ஷா! கலக்கலதான்... வாழ்த்துக்கள்..
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்....
தொடர்ந்து கலக்குங்கள்....
சந்திப்பில் சந்திக்க எதிர்பார்க்கிறேன்....
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
திங்களன்று சந்திப்போம்
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்........
வெற்றிகள் தொடரட்டும்...
congrats for the 100th, 200 frinds n Fb... cheerz.......
வாழ்த்துக்கள் நூறாவது பதிவை எட்டியதற்கு. முதலாவது சந்திப்பில் மிகப் பிரமாதமாக தொகுத்து வழங்கினீர்கள். இரண்டாவது சந்திப்பிலும் கலக்குங்கள்.
புல்லட் கூறியது...
நூறடிச்சாச்சா! ஷா! கலக்கலதான்... வாழ்த்துக்கள்.
=>>
நன்றி வாழ்த்துக்கு.
Subankan கூறியது...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
திங்களன்று சந்திப்போம்
=>>
நன்றி வாழ்த்துக்கு.
கனககோபி கூறியது...
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்....
தொடர்ந்து கலக்குங்கள்....
சந்திப்பில் சந்திக்க எதிர்பார்க்கிறேன்..
=>>
நன்றி வாழ்த்துக்கு.
root கூறியது...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்........
=>>
நன்றி வாழ்த்துக்கு.
Nimalesh கூறியது...
வெற்றிகள் தொடரட்டும்...
congrats for the 100th, 200 frinds n Fb... cheerz.......
=>>
நன்றி வாழ்த்துக்கு.
ilangan கூறியது...
வாழ்த்துக்கள் நூறாவது பதிவை எட்டியதற்கு. முதலாவது சந்திப்பில் மிகப் பிரமாதமாக தொகுத்து வழங்கினீர்கள். இரண்டாவது சந்திப்பிலும் கலக்குங்கள்
=>>
வாழ்த்துக்கு நன்றி. இருக்கிரமில் நான் தான் கலங்கிப்போனேன்.
Post a Comment