வந்தியத்தேவன் என பதிவுலகில் பிரபலமாக மூத்த பதிவராக பலரால் அறியப்பட்ட என் மாமா(இந்த உறவுக்கு ஆயிரம் அர்த்தம் உண்டு யாரும் தப்பா நினைக்காதிங்க.) இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
லோஷன் அண்ணாவின் நண்பராக என் பிறந்தநாளில் அறிமுகமான நம் பச்சிளம் பாலகன் பிறந்தநாளுக்கு இந்த மருமகன்(மாமாவே பச்சிளம் பாலகன் என்றால் மருமகன் யோசித்து பாருங்க எவ்வளவு பச்சிளம் பாலகன் என்று. யோ வாய்ஸ் இது உங்கள் கவனத்திற்கு.௦) வாழ்த்தாமலா?
வந்துவிட்டேன் என் உளறல்களோடு(மன்னிக்கணும் மாமா வழக்கமா நீங்கள் தான் உளறுவிங்க இன்று நான்.காரணம் இது கவிதை என சொல்ல முடியாதெல்லா.) ஏன் தாமதம் என கேட்கலாம்? பிறந்தநாள் விருந்து கேட்டால் கொடுக்கமாட்டேன் என சொல்லிவிட்டார். அப்புறம் எதற்காக நேரத்தை செலவு செய்து ஒரு பதிவு என ஒதுங்கிய வேளை வரும் வாரம் விருந்தாம்(வர விரும்புபவர்கள் தெரியப்படுத்தலாம் மாமா எஸ்கேப் ஆக முதல்.) அப்பாடா இனி வாழ்த்தாவிட்டால் மனிசன் தரும் விருந்து சமிபாடடையாது.
இதோ என்னால் முடிந்த வாழ்த்து....
பதிவுலகம் வந்தீர்கள் நீங்கள் முந்தி.-இங்கே
பட்டையை கிளப்புகிறீர்கள் வந்தி.
நெல்லியடியில் உதித்தீர்கள்.- ஆனாலும்
பிறரை சொல்லால் அடிக்காமல் புன்முறுவல் உதிர்ப்பீர்கள்.
முதல் சந்திப்போ Futsalல்.-
உங்கள் பதிவுகளோ Fruit சலட்.
அண்ணனாய் என் பிறந்தநாளில் அறிமுகமாகி வாழ்த்தினீர்கள் -இன்று
மாமாவாய் உம் பணி செய்து மருமகனுக்கு வழிகாட்டுகின்றீர்கள்.
பின்னூட்ட பெருமகனே-எங்கள்
பின்னூட்டத்தின் பின்னூட்ட தளபதியே.
திரை உலகில் உங்கள் தலைவர் உலக நாயகன்-என்றும்
பதிவுலகில் நீங்கள் எங்கள் உள்ளூர் நாயகன்.
கோபியரின் கண்ணனே- எங்கள்
பதிவுலகின் பச்சிளம் பாலகனே.
சிரித்தால் நீங்கள் குழந்தை- மீறி
பலம்கொண்டெளுகையில் ஆயிரம் யானை.
புதியவர்களுக்கு வழிகாட்டி-இன்றும்
பழையவர்களுக்கு ஆட்காட்டி.(பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுபவர்.)
அகவைகள் பலபோயும்-உந்தன்
அகத்துக்கு வயதுபோகவில்லை.
பதிவுலகின் தேவனுக்கு விரைவில்- வந்து
சேரட்டும் ஒரு தேவதை.
இளவரசன் நீங்கள் தான்- அந்த
இளவரசி(????) உம்மவர் தான்.
இணையட்டும் இதயம் இரண்டு-இன்றுபோல்
அன்றும் வாழ்த்தும் இந்த இளைய உள்ளம
10 கருத்துரைகள்:
//சிரித்தால் நீங்கள் குழந்தை- மீறி
பலம்கொண்டெளுகையில் ஆயிரம் யானை. //
உது எங்கயோ கருணாநிதிய புகழ்ந்து எழுதின கவிதைய சுட்ட மாதிரியே இருக்கே....???
எண்டாலும்,
கவிதை எல்லாம் எழுதி மாமாக்கு வாழ்த்துத் தெரிவித்த உங்கட பிஞ்சு உள்ளத்த பாராட்டுறன்...
1001 ஆவது தடவையா சொல்றன், 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் மயூரன் அண்ணா'
உங்கள் பதிவிற்கும் வாழ்த்துக்கள்....
குறிப்பா கவிதை அற்புத் சதீஷ் அண்ணா....
வந்திக்கு வாழ்த்துக்கள்.
என்ன...? உங்களுக்கு இன்னும் பார்ட்டி தரவில்லையா...?
வந்தி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...
//அகவைகள் பலபோயும்-உந்தன்
அகத்துக்கு வயதுபோகவில்லை.//
வந்தி அண்ணாவின் வயதை இப்படியா சொல்லாமல் சொல்வது
//பதிவுலகின் தேவனுக்கு விரைவில்- வந்து
சேரட்டும் ஒரு தேவதை. //
இதைத்தானே எப்போதிருந்தோ எதிர்பார்க்கின்றோம்.
எனது பின்னூட்டத்திலே சிறு தவறிருந்ததால் அதனை நீக்கிவிட்டேன்.
நன்றிகள் மருமகனே பிறந்த தினத்தன்று நள்ளிரவில் வாழ்த்தியமைக்கும் இந்த கவிதைக்கும்
கவிதைக்குப் பொய் அழகு ஆனால் கவிதையில் பல பொய்கள் இருக்கின்றன. வஞ்சப் புகழ்ச்சியோ.
//கனககோபி கூறியது...
//சிரித்தால் நீங்கள் குழந்தை- மீறி
பலம்கொண்டெளுகையில் ஆயிரம் யானை. //
உது எங்கயோ கருணாநிதிய புகழ்ந்து எழுதின கவிதைய சுட்ட மாதிரியே இருக்கே....???//
=>>
நானாவது பரவாயில்லை நீங்களோ என் மாமாவை கருணாநிதியின் வயதுடன் ஒப்பிட்டதை வன்மையாகக்கண்டிக்கின்றேன்.
ஆதிரை கூறியது...
வந்திக்கு வாழ்த்துக்கள்.
என்ன...? உங்களுக்கு இன்னும் பார்ட்டி தரவில்லையா...?
=>>
இன்னும் தரவில்லை. மாமாக்கு மாமி வந்த பின் சாப்பாடு போடா வேண்டாம் என சொன்னால் எல்லாம் சரி.
சந்ரு கூறியது...
வந்தி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...
//அகவைகள் பலபோயும்-உந்தன்
அகத்துக்கு வயதுபோகவில்லை.//
வந்தி அண்ணாவின் வயதை இப்படியா சொல்லாமல் சொல்வது
=>>
சொல்லாமல் சொன்னதுதான் நம் மாமாவிற்கு பிடிதுபோச்சு என்ன செய்வது.
////பதிவுலகின் தேவனுக்கு விரைவில்- வந்து
சேரட்டும் ஒரு தேவதை. //
இதைத்தானே எப்போதிருந்தோ எதிர்பார்க்கின்றோம்.
எனது பின்னூட்டத்திலே சிறு தவறிருந்ததால் அதனை நீக்கிவிட்டேன்//
=>>
ஒரு தேவதை வந்து விட்டாள் வந்தியை தேடியே. உங்கள் பின்னூட்டம் நீக்கியது பரவாயில்லை.
வந்தியத்தேவன் கூறியது...
நன்றிகள் மருமகனே பிறந்த தினத்தன்று நள்ளிரவில் வாழ்த்தியமைக்கும் இந்த கவிதைக்கும்
கவிதைக்குப் பொய் அழகு ஆனால் கவிதையில் பல பொய்கள் இருக்கின்றன. வஞ்சப் புகழ்ச்சியோ
=>>
மாமா இந்த வாழ்த்தெல்லாம் ஒரு எதிர்பார்ப்போடுதான். விரைவில் பார்ட்டி வைத்தால் சரி.
உங்களை தொடர் பதிவொன்றிற்கு அன்புடன் அழைத்திருக்கிறேன்...
வந்து கலக்குங்கள்...
http://tamilgopi.blogspot.com/2009/11/4-38.html
Post a Comment