இன்று என் வாழ்வில் சாதித்த ஒரு திருப்தி ஆனால் நான் ஒன்றும் செய்யவில்லை நமக்கு பிடித்தவர்கள் சாதித்தால் அது நாம் சாதித்தது போல என்பதை உணர்கின்றேன். காலை பத்துமணிக்கு கண் விளித்ததே இன்று மாலை மூன்று மணிக்கு வானொலியில் இடம்பெறும் கற்றது கையளவு என்ற நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க வேண்டும் என்ற ஹிஷாம் அண்ணாவின் தொலைபேசி அழைப்ப்பினூடு. மாலை மூன்று மணிக்கு கலையகத்துள் நான் நுழையும் போது எங்கள் தொலைக்காட்சி மக்கர் செய்துகொண்டிருந்தது. உடனடியாக தொழில் நுட்பவியலாளர்களின் உதவியை நாடினேன்.(மாற்றுவதாக இருந்தால் அவர்களின் பகுதியில் இருக்கும் தொலைக்காட்சியில் தான் முதலில் மாற்ற வேண்டும்.) வழக்கமா தாமதப்படுத்தும் நம்மவர்கள் இன்று உடனே சரி செய்து விட்டனர்.
பார்த்தேன் கொஞ்சம் கவலை நம்ம சேவாக் ஆட்டம் இழந்திருந்தார். அட இன்று தென் ஆபிரிக்கா நாளாக்கும் என நினைத்து ஒரு நிமிடம் சென்றிருக்காது சச்சின்.கார்த்திக் இரண்டுபேரின் துடுப்பாட்டத்தை பார்க்கும் போது ஒரு நம்பிக்கை வந்தது இந்தியா முன்னூறு அடிப்பது உறுதி என எண்ணினேன். மிக வேகமான சச்சின் அதிரடி ஆட்டத்தினால் நான் எழுந்து வெளியில் கூட செல்லவில்லை. அப்படியே கட்டுண்டு பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் மனதுக்குள் ஒரு பயம் நான் எப்போதெல்லாம் இந்தியா விளையாடும் போட்டியை பார்ப்போம் என இருந்து பார்த்தாலும் அன்று அவர்கள் சொதப்புவர். இன்றும் அந்த பயம் தொற்றிக்கொண்டது. இருப்பினும் சச்சினின் அந்த அதிரடியை மட்டுமாவது ரசிக்கலாமே என்ற ரீதியில் பார்த்துக்கொண்டிருந்தேன். முப்பத்தேழாவது பந்தை சந்தித்த சச்சின் தன் ஸ்டைலில் ஒரு நான்கு ஓட்டத்தை தட்டி விட்டு தன் அரைசதத்தை பூர்த்திசெய்தார். மறுமுனையில் கார்த்திக் சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்பு நல்கினார்.
மிக வேகமான புயல் வேக ஆட்டத்தில் இந்தியாவின் வேகம் அதிகரித்தது. களத்தடுப்பு புலிகள் என்னும் தென் ஆபிரிக்க அணியினர் களத்தடுப்பில் பல இடங்களில் சொதப்பினர். ஒருவாறு பதினைந்து ஓவரில் இந்தியா நூறு ஓட்டங்களை தொட்டது. நானும் சந்தோசமாக ஸ்கோர் விபரங்களை வானொலியில் வழங்கிக்கொண்டிருந்தேன். அதிகமான நான்கு ஓட்டங்கள் பெறப்பட்டுக்கொண்டே இருந்தன. சச்சின் எழுபதுகளை எட்டியவுடன் என்மனதோ சச்சினின் சதம் இன்று உறுதி என சொல்லிக்கொண்டது. அதேநேரம் ஒரு சில முட்டாள்கள் யோசிப்பது போல சச்சின் சதம் போட்டால் இந்தியா தோற்றுவிடுமோ என அஞ்சிக்கொண்டும் இருந்தேன். வழக்கமான தொன்னூறுகளில் மெதுவாக ஆடுவது போல எல்லாம் இன்று சச்சினின் தயக்கம் வெளிப்படவில்லை. சரவெடி தொடர்ந்து கொண்டே இருந்தது. தொன்னூறில் போயடுவாரோ என்ற பயம் என்னுள். எந்த தயக்கமும் இன்றி சச்சின் ஒவ்வொரு ஓட்டங்களாக சேர்த்து தன் 46வது சதத்தை பூர்த்து செய்தார். அப்போது அதிக சதம் பெற்றவர்கள் வரிசையை தொலைக்காட்சியில் காட்டியபோது அட நெருங்க முடியுமா நம்ம தலைவரை என்ற பெருமிதம் என்னுள்.
சதம் கடந்த பின் சச்சினின் வேகம் இன்னும் அதிகரித்தது. எனக்கும் ஒரே குஷி.அடடா இன்றைக்கு நம்மள இந்த நேரம் வேலை செய்யப்போட்டிட்டான்களே அதுவும் மேட்ச் பார்த்து ஸ்கோர் சொல்வது நம்ம வேலை. எப்பூடி?? ஆட்டம் தொடர கார்த்திக் போக பதான் வந்து தன் வேலையை செய்துவிட்டு போக வந்தார் தலைவர். ஒரு பக்கம் சச்சின் வெளுத்துக்கொண்டிருக்க மறுபுறம் தோனியின் தாண்டவம் நடந்துகொண்டிருந்தது. ஆனால் தோனியின் தாண்டவம் இன்று எரிச்சலை தான் ஏற்படுத்தியது. ஒவ்வொரு பந்தையும் சச்சின் அடித்து நொறுக்கமாட்டாரா என்ற அவாவை தந்தது. பல பதிவர்கள் இந்த சாடலை சொல்லி இருந்தனர். ஆனால் கடைசி ஓவரில் தான் நான் இதை நினைத்து பெருமைபட்டேன். தோனியின் தாண்டவத்துக்கு வழிவிட்டதே சச்சின் என தோன்றியது. காரணம் அணிக்கு ஓட்ட வேகம் தேவை அதே போல சச்சினும் சாதனை படைக்க வேண்டும் என்றால் அப்படி. ஒருவேளை அணியின் ஓட்ட வேகத்தை அதிகரிக்கப்போய் சச்சின் பொல்லு போய்விட்டால் அதை தான் டோனி செய்ய சச்சின் மறுமுனையில் தன் பங்கை செய்துகொண்டிருக்கின்றார். இறுதிப்பந்துக்கு முதல் பந்தில் அடித்து விட்டு டோனி ஓட முற்பட சச்சின் தடுத்து விடுவார். அப்போதே உணர்ந்தேன் சச்சின் தோனியின் அடிகளை வரவேற்றுக்கொண்டுதான் தன் சாதனையை நெருங்கினார் என. அதேபோல சாதனைக்காக ஆடவில்லை என்பதையும் இதன் மூலம் நிரூபித்துவிட்டார்.
சச்சின் நூற்றியைம்பது தாண்டிய பின் தன் முன்னைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை கடக்கமாட்டார என சிந்தித்தேன். இதற்கிடையில் மாலை ஐந்து மணியுடன் என் நிகழ்ச்சி முடிய அடுத்த நிகழ்ச்சிக்காக சந்துரு அண்ணாவிடம் கலையகத்தை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டேன். இடையில் விமல் அண்ணாவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. டேய் சச்சின் நூற்றி எழுபத்தொன்பது ரன்னடா இன்று எட்டுமணிக்கு விளையாட்டு திடல் நீதான் நான் சொல்றதையும் கணக்கில் எடு என்று சச்சின் இன்று கடந்த இன்னும் இரண்டு சாதனைகளை பகிர்ந்து கொண்டார்.(அவர் என்னுடன் பேசிய நேரம் மாலை ஐந்து முப்பது இருக்கும்.) இன்று சச்சின் தென் ஆபிரிக்காவிற்கு எதிராக ரிக்கி பாண்டிங் வைத்திருந்த மொத்த அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை முந்தி உள்ளார். அதேபோல தென் ஆபிரிக்காவிற்கு எதிராக ஒரு தனிநபர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என சொல்லிவிட்டு வைத்துவிட்டார். மீண்டும் சற்று நேரத்தில் இன்னொரு அழைப்பு சச்சின் உலகசாதனை படைப்பார் போல தெரிகின்றது எனவே சச்சின் ஸ்கோரை கொஞ்சம் அதிகம் சொல்லும்படி சந்துரு அண்ணாவிடம் சொல்ல நம் அலுவகத்தில் அந்த பரபரப்பை உண்டாக்கினோம். எல்லோரும் ஸ்கோர் பார்ப்பதில் குறியாக இருக்க எனக்கும் செய்தி வாசிப்பதற்கான நேரம் வந்தது. இதற்கிடையில் தன் முன்னைய அதிகூடிய ஓட்டத்தையு சனத்தின் சாதனையையும் சச்சின் கடக்க எங்கள் எல்லோர் மனதிலும் அடுத்தது சாத்தியமா? என்ற கேள்வி. செய்தி ஆரம்பிக்க நான்கு நிமிடங்கள் இருக்கவே நான் கலையகள் சென்றுவிட்டேன் சச்சின் அந்த சாதனையை முறியடிப்பதை பார்ப்பாதர்க்காக.
அங்கெ சந்துரு அண்ணா எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு உடனடி ஸ்கோர் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்த கணம் சச்சின் நீண்டகாலமாக சயீத் அன்வர் வசமும் அதன் பின் கவின்றியினால் சமப்படுத்தப்பட்ட அந்த சாதனையை கடக்க எங்கள் உடலும் ஒருக்கம் பூரித்தது. சற்று நேரத்தில் என்னிடம் ஒப்படைத்து விட்டு செல்ல ஆறு மணிக்கு முன் அடிக்கமாட்டார என நான் ஏங்கினேன். இதற்கககவே எங்கள் செய்திப்பிரிவை சேர்ந்தவர்கள் விளையாட்டு செய்தியடிப்பதை தாமதமாக செய்யும் படி கேட்டவன் நான். ஆனால் சச்சின் நூற்று தொண்ணூற்றாறு. செய்தியும் ஆரம்பமானது. என் ஒரு கண் செய்தித்தாளில் இன்னொரு கண் சச்சின் அடிக்கமாட்டார என அடிக்கடி தொலைக்காட்சியை பார்த்தபடி. இந்த நிலையில் விளையாட்டு செய்தியுடன் செய்திப்பிரிவை சேர்ந்த அருண் உள்ளே வந்து சச்சின் எப்போது இருநூறு என்னும் புதிய கணக்கை ஆரம்பிப்பார் என காத்திருக்க இந்த தோனிப்பயல் விடவே இல்லை. தன் பங்குக்கு அடித்து துவைத்துக்கொண்டிருந்தார். என்ன செய்வது நானும் செய்தியை வாசித்து விட்டு எங்கள் நிலைய குறியிசையை ஒலிபரப்பிக்கொண்டிருக்கும் அந்த தருணத்தில் (உலகெங்கும் வெற்றி என்ற வரி அதில் வந்த நேரம். என்ன பொருத்தம்) சச்சின் அந்த சாத்தியமற்ற செயலை செய்து முடித்தார், இது சாதனையா. வழக்கம் போல கடவுளுக்கு நன்றி சொன்னது இந்த கிரிக்கெட்டின் கடவுள் இப்போது சொல்லுங்கள் இந்த சாதனையை செய்த சச்சின் மனிதனா அல்லது கடவுளா?
சேவாக் தன் வாயாலேயே இந்த ஆசையை வெளியில் சொல்லி இருந்தாலும் அவர் குரு அதை முதலில் செய்ய அதை ரசித்து கைதட்டியது இந்த சீடன். உண்மையில் இந்த போட்டியை இன்று பார்த்த அத்தனை பேரும் சரித்திரத்தில் இடம்பெறுவர். சரித்திரம் ஆரம்பித்திருக்கின்றது. புதுப்பயணம் தொடங்கி இருக்கின்றது. இந்த பாதையில் பலர் பயணிக்கலாம் ஆனால் இப்போது சாத்தியமில்லை. அப்படி சாத்தியமானாலும் இந்த சாதனை நாயகனின் பின்னால் மற்றவர் வருவர். சாதனையின் பின் கடவுளின் பின் அவர் பக்தர்கள் இருப்பது. சாதனைக்கு சாதனை சொந்தமாகாமல் போய் இருந்தால் தான் தப்பு. சேர வேண்டியவரிடம் சேர வேண்டியது சேர்ந்திருக்கின்றது. அப்புறம் என்ன நானும் விளையாட்டு திடலில் சச்சின் புராணம் பாடிவிட்டேன்.
சச்சின் உங்களுக்கு ஒன்று சொல்லணும் நான் இலங்கையில் இருந்து இதை எழுதி இருக்கேன், நான் இந்தியன் இல்லை ஆனால் நாடு மொழி கடந்து உங்கள் ரசிகன். ஏதோ என்வீட்டு கொண்டாட்டமாக கொண்டாடுகின்றேன். நீங்கள் எங்கள் வீட்டுப்பிள்ளை என்பது தான் நீங்கள் சாதித்த சாதனைகளில் பெரியது. வாழ்த்துக்கள் தலைவா.
28 கருத்துரைகள்:
நல்ல கேள்வி...
சச்சின் மனிதனா? ம். ம்...
எனக்கு இந்தியாவைப் பிடிக்காது என்றாலும் எனக்குப் பிடித்த துடுப்பாட்ட வீரர்களில் சச்சினும் ஒருவர்...
இரசித்தேன், அவரது ஆட்டத்தையும், உங்கள் பதிவையும்...
நல்ல வர்ணனை நண்பரே.
200 ரன்கள் அடித்த சச்சினை கடவுளா வியக்கிறோம். சச்சினை படைத்த கடவுளை என்னவென்று சொல்லி வியப்பது.
அருமை.
உண்மையான உணர்வுகளின் வெளிப்பாடு. அதற்கு நாடு மொழி என்று பேதங்கள் இருப்பதில்லை. ஒரு சக கிரிக்கெட் ரசிகனாக Im pleased to share my happiness with you :)
//சச்சின் உங்களுக்கு ஒன்று சொல்லணும் நான் இலங்கையில் இருந்து இதை எழுதி இருக்கேன், நான் இந்தியன் இல்லை ஆனால் நாடு மொழி கடந்து உங்கள் ரசிகன்
Wow..Thanks for let me know man. And I want to tell onething to you too..
Go..Go and atleast put your kids in school.
அருமையான வர்ணனை நண்பரே..
இதுவரை யாரும் சாதிக்காத இந்த சாதனையை சச்சின் சாதித்தது மிகவும் பொருத்தம்..
கடவுளுக்கு நன்றி.
//அப்போதே உணர்ந்தேன் சச்சின் தோனியின் அடிகளை வரவேற்றுக்கொண்டுதான் தன் சாதனையை நெருங்கினார் என. அதேபோல சாதனைக்காக ஆடவில்லை என்பதையும் இதன் மூலம் நிரூபித்துவிட்டார்.//
சும்மா ரீல் விடக்கூடாது. சச்சினால் கடைசியில் ஓட முடியவில்லை. அதனால் தான் தோனியை அடிக்க விட்டுட்டார். ஆனால், இது கூட நல்லது தான். ஸ்கோரை தோனி உயர்த்த, சாதனையை சச்சின் உயர்த்திகிட்டார்.
//சச்சின் மனிதனா அல்லது கடவுளா?//
எனக்கெல்லாம் சச்சின் கடவுள் தான்...
http://jeeno.blogspot.com/2006/07/blog-post.html
நான் இந்தியன் இல்லை ஆனால் நாடு மொழி கடந்து உங்கள் ரசிகன். ஏதோ என்வீட்டு கொண்டாட்டமாக கொண்டாடுகின்றேன்.
One of the best comment i have ever seen so far...No one give better than this...
Cricket is Religion Sachin is God
இதெல்லாம் ஒரு பொழப்பா என்ற ஒரு கேள்வியை என்னுள் கேட்டு விட்டு கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்காமல் இருக்கும் பலே பேர் வழி நான். ஆயினும் இன்றைய ஆட்டத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ஐம்பது ஓவர்கள் நிலைத்து ஆடுவதே சச்சினின் சாதனை தான். அதுவும் இருநூறு ஓட்டங்கள் என்பது இமாலய சாதனை. உன் திறமைக்கு தலை வணங்குகின்றேன் நான்.
இதெல்லாம் ஒரு பொழப்பா என்ற ஒரு கேள்வியை என்னுள் கேட்டு விட்டு கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்காமல் இருக்கும் பலே பேர் வழி நான். ஆயினும் இன்றைய ஆட்டத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ஐம்பது ஓவர்கள் நிலைத்து ஆடுவதே சச்சினின் சாதனை தான். அதுவும் இருநூறு ஓட்டங்கள் என்பது இமாலய சாதனை. உன் திறமைக்கு தலை வணங்குகின்றேன் நான்.
சதீஷ், நானும் ஒரு வானொலி வர்ணனையாளன் தான் (சென்னையில்). ஆயினும் உமது வர்ணனைக்கு, அதிலும் குறிப்பாக நாடு கடல் கடந்த பாராட்டிற்கு, நான் தலை வணங்குகின்றேன்.
ஒன்று மட்டும்: சச்சின் கடவுள் என்று சொல்லுவதெல்லாம் மிகப்பெரிய உருவகம். நீங்க சச்சின் கடவுள் என்று சொல்லும் விஷயம் உண்மை கடவுளுக்கு தெரியுமா?
மொத்தத்தில் உமது எழுத்தும் சரி, சச்சினின் இரு சதமும் சரி, உலகின் மிக பிரமாண்டம்.
இவன்,
நல்லவன் (சென்னைவாசி).
இதெல்லாம் ஒரு பொழப்பா என்ற ஒரு கேள்வியை என்னுள் கேட்டு விட்டு கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்காமல் இருக்கும் பலே பேர் வழி நான். ஆயினும் இன்றைய ஆட்டத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ஐம்பது ஓவர்கள் நிலைத்து ஆடுவதே சச்சினின் சாதனை தான். அதுவும் இருநூறு ஓட்டங்கள் என்பது இமாலய சாதனை. உன் திறமைக்கு தலை வணங்குகின்றேன் நான்.
சதீஷ், நானும் ஒரு வானொலி வர்ணனையாளன் தான் (சென்னையில்). ஆயினும் உமது வர்ணனைக்கு, அதிலும் குறிப்பாக நாடு கடல் கடந்த பாராட்டிற்கு, நான் தலை வணங்குகின்றேன்.
ஒன்று மட்டும்: சச்சின் கடவுள் என்று சொல்லுவதெல்லாம் மிகப்பெரிய உருவகம். நீங்க சச்சின் கடவுள் என்று சொல்லும் விஷயம் உண்மை கடவுளுக்கு தெரியுமா?
மொத்தத்தில் உமது எழுத்தும் சரி, சச்சினின் இரு சதமும் சரி, உலகின் மிக பிரமாண்டம்.
இவன்,
நல்லவன் (சென்னைவாசி).
சச்சின் எப்போதும் கிரேட் தான். ஆனால் சச்சின் கடவுள் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தெரிகிறது. சச்சினின் ரசிகரான உங்களுக்கு வாழ்த்துக்கள்.
Good Post. நன்றி. முடிந்தால் இவைகளையும் பாருங்களேன்!
சச்சின் 200 : சாதனைக் காணொளிகள்
சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக
எனக்கு இந்தியாவைப் பிடிக்காது என்றாலும் எனக்குப் பிடித்த துடுப்பாட்ட வீரர்களில் சச்சினும் ஒருவர்...
இரசித்தேன், அவரது ஆட்டத்தையும், உங்கள் பதிவையும்..
(thanx gobi)
வாழ்த்துக்கள்
22 years ago on the 24th of February Tendulkar made a partnership of 664 with Vinod Kambli..............................................
விளையாட்டை ரசிப்பதற்கு, ஒரு திறமைசாலியை புகழ்வதற்கு, நாடு, மொழி, இனம், மதம், ஒரு தடையல்ல என்பதை உங்கள் பதிவு உணர்த்துகிறது.இது ஒரு அருமையாக தருணம், நன்றாகத் தொகுத்துள்ளீர்கள்..தங்களுக்கு நன்றி..
சச்சினுக்கு பாராட்டுக்கள்
இன்னுமொரு விஷயம் சதீஷ்,, சச்சினை படைக்க முன் கடவுள் என்கிட்டதான் ஐடியா கேட்டார்......
நல்ல ஒரு கிரிக்கெட் வீரர படைக்கவேணும் எப்படி செய்யலாம் எண்டு..1
நான்தான் ஐடியா குடுத்தான்..... (யார் கேட்டாலும் இத சொல்ல படாது சரியோ)...!!!!
அற்புதமான கட்டுரை சதீஷன், உங்கள் அறிவிப்பு போன்றே விமர்சனமும் ஜொலிக்கின்றது. கடவுளா என்று கேட்டு இருந்தீர்கள் அதற்கு என்னுடைய பதிவில் பதில் கூறி இருந்தேன். அதை இங்கே தருகிறேன் ,
@http://saaralhal.blogspot.com வேட்டையாடு விளையாடு படத்தில் ஒரு பாடல் வரும் "கற்க கற்க" என்று அதிலே ஒரு வரி "கண் ஆயிரம் கை ஆயிரம் என தேகம் கொள்ள இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல" என்பது அதுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகின்றது. அதாவது மனித இயலுமை எல்லையின் விளிம்பில் நின்று சாதனை படைக்கின்ற ஆற்றல் ஒரு சிலருக்கதான் வாய்க்கும். அவர்களில் ஒருவர்தான் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சகாப்தம் சச்சின்
அருமை அருமை!!..
நல்ல பதிவு சதீஷ்
நானும் இந்திய ரசிகன் இல்லை. அது என்னமோ நிறைய இலங்கையர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி பிடிப்பதில்லை. ஆனாலும் நேற்றைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டுமென நினைத்தேன் சச்சின் என்ற மனிதனின் சதம் வீணாகக்கூடாது என்ற எண்ணத்தால்
சதீஷ் யாழ்தேவியில் இணைப்பதில்லையா? நான் இலங்கை பதிவர்களைத் தவற விடாமல் இருக்க யாழ்தேவியில்தான் தேடி அனைவரையும் படிப்பதுண்டு. உங்களுடையதைக் காணவில்லை உங்கள் பின்னூட்டம் வழியே இங்கே வந்தேன்
//அதேநேரம் ஒரு சில முட்டாள்கள் யோசிப்பது போல சச்சின் சதம் போட்டால் இந்தியா தோற்றுவிடுமோ என அஞ்சிக்கொண்டும் இருந்தேன். //
சச்சினின் 46 சதங்களில் இந்தியா வென்றது எத்தனை
தோற்றது எத்தனை
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்...!
East or West Sachin is the Best...,
ஆனா அவரையும் ஏன் கடவுள் ஆக்குறிங்க இருக்கிர கடவுள் தொல்ல பத்தாதா..,
வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
http://tamiltop10ssss.blogspot.com/
east or west my sachin is the best...
i love u sachinnnnnnnnnnnnnnn
Post a Comment