ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்று அன்று கவிஞன் பாடினாலும் பெரும்பாலான நாட்கள் விடுமுறை இன்றி கழிந்ததும் உண்டு. நம்மில் சிலர் ஆடிக்கூழ் குடித்தும் பல வருடங்கள் ஆகிவிட்டன. என்னதான் இருந்தாலும் நம் சொந்த மண்ணில் சொந்த வீட்டில் இருந்து கூழ் குடிக்கும் சுகமே தனிதான். இன்னும் என் வாழ்வில் என் சொந்த வீட்டில் இருந்து நான் கூழ் குடிக்கவில்லை என்பது கவலை தான்.
கடந்த நாட்களில் ஆடிப்பிறப்பு வரும் நாளில் காலை எழுந்து அம்மா காய்ச்சும் கூழை குடித்து விட்டு அப்பா வேலைக்கு போக நானும் அம்மாவும் பாடசாலை போனது இன்றும் நினைவுக்கு வருகின்றது. சிறுவயதில் யாழில் ஒரு சிலவருடமும் பின் வவுனியாவில் பல வருடங்களும் கழிந்து இப்போது கொழும்பிலும் கூழ் குடிக்கின்றேன்.
நினைவுகள் நினைக்கும் போது சுகமாக இருக்கும். இன்றும் காலையில் அம்மா கூழ் காய்ச்சிவிட்டு எழுந்து குடி என சொன்னபோதும் என் இலட்சியப்பாதையில் இருந்து மீளக்கூடாது என்பதற்காய் பத்து மணிக்கு எழுந்து அதன் பின் கூழ் குடித்து என் பிறவிப்பயனை அடைந்தேன். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடலில் விடுதலை வந்தாலும் இன்னும் இந்த தினத்துக்கு அரச விடுமுறை இல்லை. இதனால் பலருக்கு கூழ் வாய்ப்பு இல்லாமல் போகலாம்.
அம்மா கொடுக்கும் கூழை பாத்திரத்தில் எடுத்து சுட சுட குடிக்கும் போது அதற்குள் இட்டிருக்கும் பொருட்கள் நமக்கு கடிபடும் போது அப்பப்பா என்ன சுவை அது. ஆனால் பாருங்கோ இனிப்பு கூழாக இருப்பதால் நிறைய குடிக்க முடியாது தானே.
கூழானாலும் குளித்து குடி என்பர். சமய முறைப்படி ஆறுமாத காலம் கடந்து புது மாதம் ஒன்று பிறந்திருக்கின்றது பல சிறப்புக்கள் வாய்ந்த மாதம் பிறந்திருக்கிறது. ஆடிக் கூழும் கொழுக்கட்டையும் உண்டு மகிழ்ந்து இன்றைய நாளை பலர் ஆரம்பித்திருப்பீர்கள். உங்கள் ஆடிக்கூழ் அனுபவத்தையும் சொல்லுங்களேன்.
9 கருத்துரைகள்:
எங்க வீட்டில் அனைவருக்கும் புடிக்கும்
எனக்குக் கூழ் பெருசாப் பிடிக்காது. :(
எனக்கு கோக் தான் பிடிக்கும், அதுக்கெண்டு ஏதாவது நாள் இருக்கா?
அண்ணே!!! எப்படி அனே இது எல்லாம் குடிக்கிரியள்!!! நீங்க இது குடிக்கிற ஆள் இல்லையே
//என்னதான் இருந்தாலும் நம் சொந்த மண்ணில் சொந்த வீட்டில் இருந்து கூழ் குடிக்கும் சுகமே தனிதான்//
என்ன! எனக்காகச் சொன்னீரோ என்று யோசித்தேன்! படத்தில் கூழைப் பார்த்துதுமே குடிக்க வேண்டும் போல இருக்கிறது!
நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடிய பாடல் இது!
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
கொய்யால தனியாக் கூள் குடிச்சிட்டு பதிவு வேறயா..:P
@சௌந்தர்
அப்போ செய்து குடித்தீர்களா
@Anuthinan S
ரகசியங்கள் காக்கக்கப்படவேண்டும். குருவை
@தங்க முகுந்தன்
அண்ணா பாடலை முழுமையாய் தந்தமைக்கு நன்றி
@Bavan
பவன் என்னை பகிரங்கமாக மிரட்டுகின்றார். எல்லோரும் கவனிக்க
Post a Comment