தல அஜித்தான் இப்போ எல்லா இடமும் டாபிக். நம்ம பதிவுகளில் மட்டும் விட்டிடலாமா. ஏதோ தொடர்ந்து நம் பதிவுகளும் தலைய பற்றியே வருகின்றன. இப்படியே போனால் நானும் தல ரசிகர் ஆகிடுவன் போல.(தளபதி கவலைப்படாதிங்க உங்களை விட்டிட்டு போக மாட்டம் சும்மா இப்படி சொல்வோம்.) சரி அத விடுவோம் தல ஏன் விழாக்களில் தல காடுவதில்லை? இன்று நான் இன்னொருவரின் பதிவில் இதை படித்தேன்.
சரி அவர் சொன்ன காரணம் 1995ஆம் ஆண்டு ஒரு மேடை நிகழ்ச்சியில்
மீனாவுடன் அஜித் நடனமாடிக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த மீனாவின் அம்மா ஆத்திரபட்டு அஜித்தை அவமானப்படுத்தி மேடையை விட்டு இறக்கியதாகவும் அந்த அவமானம் தாங்காமல் தான் இன்றுவரை அஜித் மேடை நிகழ்ச்சிகளை தவிர்த்து வருவதாகவும் சொல்லி இருந்தார். இதில் எந்தளவு உண்மை என தெரியவில்லை. சிலவேளை அவர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம் காரணம் ஆசை என்ற ஒரு படம் மட்டுமே அஜித்துக்கு ஓரளவு பெயர் சொல்லும் படியான படமாக இருந்தது அதுவரை.
இப்படி நடந்ததென வைத்துக்கொண்டால் அதன் பின்னர் ஆனந்த பூங்காற்றே படத்தில் இருவரும் ஜோடி போட்டனரே எப்படி.வாலி வந்து வசூல் மழைபொழிந்ததனால் மீனா வேண்டுமென்றால் அஜித்துடன் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கலாம் ஏன் மீனாவின் அம்மாவே அந்த வாய்ப்பை வாங்கிக்கொடுத்திருக்கலாம். ஆனால் தன் ஆரம்ப படத்திலேயே இயக்குனருடன் நியாயத்துக்காக வாதிட்ட அஜித் நிச்சயமாக சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. இது எப்படி சாத்திய மாயிற்று.
அதை தான் விடுவோம் அதன் பின் சிட்டிசன்,வில்லன் என அஜித் அடுத்த தலைமுறையின் முன்னணி நாயகன் ஆனா பிறகும் இவர்கள் ஜோடி கலக்கி இருக்கின்றதே. இதை எப்படி எடுத்துக்கொள்வது. எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. இது இப்படித்தான் என சரியாக சொல்ல எனக்கு இந்த விடயம் பற்றி எதுவும் தெரியாது. எனவே நேற்று அலுவலகம் சென்றவுடன் விமல் அண்ணா கண்ணில் பட்டார் அவருக்கும் எனக்கும் மூஞ்சிப்புத்தகத்தில் இப்போது அஜித் பற்றிய ஒரு சண்டை போகிறது. உடனே அவரிடமே இதை பற்றி கேட்டேன்.
7 கருத்துரைகள்:
கலக்கீட்ட நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சசிகுமார் கூறியது...
கலக்கீட்ட நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்
//உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அதேநேரம் இந்த விடயம் பற்றி உங்கள் கருத்தையும் சொல்லி இருக்கலாமே.//
ஏதோ தொடர்ந்து நம் பதிவுகளும் தலைய பற்றியே வருகின்றன. இப்படியே போனால் நானும் தல ரசிகர் ஆகிடுவன் போல.///
என்னையும் ஆக்கிட்டாங்கலப்பா ... என்ன கொடுமை சார் இது.
அஜித்- மீனா விடயம் நானும் அன்றில் இருந்து கேட்டு வருகிறேன். உண்மை நிலவரம் தெரியவில்லை.
சதீஷ் 'யாழ்தேவி' இல் இணைப்பதில்லையா?
தல எந்த விழாக்களிலும் பங்கேற்பதில்லை என்று தெரியும் . எனக்கும் ஏன் என்று சந்தேகம் இருந்தது . இதுதானா அது ?
எது எப்பிடி இருந்தாலும் அண்மையில் தல இன் பேச்சில் சில பெரிய தலைகள் தலைசுற்றி ஒடியிருக்காங்க...
வணக்கம். எனக்கு தெரிந்த வரை:
மீனாவின் அம்மாவிற்கும் இதற்கும் சம்பந்தம் ஏதும் இருந்திருக்க வாய்ப்பில்லை. 1995-இல் நடந்த அந்த கலை நிகழ்ச்சியை (மலேசியாவோ அல்லது சிங்கப்பூரிலோ, சரியாக ஞாபகம் இல்லை) நான் அட்'கேசட்' மூலமாக பார்த்துள்ளேன் அப்போது முத்து வெளியான நேரம். அதே மேடையில் தான், அடுத்ததாக தான் கமலுடன் ஒரு படம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக (அவ்வை சண்முகி) தெரிவித்தார்.
சரி, விசயத்துக்கு வருவோம். மீனா ஒரு பாடலுக்கு ஆட வேண்டியிருந்தது (தனியாக). உடன் ஆடட்டுமே என்று அஜித்தை கட்டாயப் படுத்தி ஆட விட்டனர். அவரும், மீனாவின் அசைவுகளுக்கு ஏற்றவாரு ஒரு வழியாக ஆடி ஒப்பேற்றுவார். முழு நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை. இந்த ஒரு காட்சியை மட்டுமே பார்த்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒத்திகை எதுவும் இல்லாமல், முன்னதாகவே ஏதும் அறிவிப்பு இல்லாமல் 'on the spot'-ஆக வலுகட்டாயமாக ஆட வைத்தனர். அந்த கால கட்டங்களில் நிறைய ஆபிரேஷங்களையும் மேற்கொண்டிருந்தார். அவர் பட்ட கஷ்டங்களை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். இதுதான் காரணம் என்று நான் சொல்ல வரவில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல், இயல்பாகவே அவர் தனிமையை விரும்புபவராம். தானுண்டு தன் வேலை உண்டு எனும் போக்குள்ளவர். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் போன்றவை நேர விரயம் என்றென்னி தவிர்த்து விடுவாராம். (வேண்டியவர்களின் சுப காரியங்களில் கலந்து கொள்ளுதல் வேரு விசயம்.) "போன நேரம் திரும்ப வராது. இந்த வேளையை இனிதே, பயனுள்ளதாக உன் விருப்பம் போல செலவிடு" என்ற philosophy உடையவர். அவரது சினிமா வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட கார் பந்தயம், Aero-Modelling, Photography மற்றும் Green Revolution போன்றவையே இதற்கு சான்று.
நானும் இந்த கதையை கேள்விப்பட்டிருக்கிறேன்,,
ஆனால் உண்மை நிலை தெரியாது,,
சொன்னது போல்
///இயல்பாகவே அவர் தனிமையை விரும்புபவராம். தானுண்டு தன் வேலை உண்டு எனும் போக்குள்ளவர். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் போன்றவை நேர விரயம் என்றென்னி தவிர்த்து விடுவாராம். (வேண்டியவர்களின் சுப காரியங்களில் கலந்து கொள்ளுதல் வேரு விசயம்.) "போன நேரம் திரும்ப வராது. இந்த வேளையை இனிதே, பயனுள்ளதாக உன் விருப்பம் போல செலவிடு" என்ற philosophy உடையவர். அவரது சினிமா வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட கார் பந்தயம், Aero-Modelling, Photography மற்றும் Green Revolution போன்றவையே இதற்கு சான்று.///
மேற்கூறிய காரணங்கள் தல அனைத்திலும் இருந்து ஒதுங்கி இருப்பதற்கு காரணமாய் இருக்கலாம்,,
தல யை ஒரு நடிகனாய் பார்ப்பதை விட ஒரு நல்ல மனிதனாகப்பார்ப்பது எனக்கு பிடித்த விடயம்,,,
Post a Comment