ஊருறங்கா மெசின் உறங்கா நாடு கூட - தன்
உறக்கத்தை உறவாக்கும் நேரம் கூட
உறவோடு ஊருறங்கும் நாட்டவன் எந்தன்
உள்ளம் மட்டும் இன்னும் விழி உறங்கிப் போனாலும் உறங்கவில்லை.
பள்ளிப் படிப்பது பாதியில் பலியானதனால்
பல நாடு கடந்து வந்து பலிக்கடா ஆகிவிட்டேன்.
கல்லூரிப்படிப்புக்கு காசு வேண்டும் அதை விஞ்சி
ஒரு சாண் வயிற்றுக்கும் கஞ்சி வேண்டும்
ஆறடி உடல் ஒப்புக்காய் தூங்க ஓர் இடம் வேண்டும்
இதற்கெல்லாம் விலையை எம்மவரின் ரத்தம் வேண்டும்.
காலை எது மாலை எது கவலையேதும் கிடையாது - நாளை
விலை கொடுத்து எனை வாங்க இன்று உலையிலே எரிகின்றேன்
ஊட்டி விட இருந்தன அன்று ஊரின் கைகள் - இன்று
விக்கல் எடுத்தாலும் விக்கி விக்கி அழவேண்டும்.
தாய் நாட்டின் அரவணைப்பு தான் தாயின் அரவணைபென்று
தெரியாமல் வந்திங்கு தெருத் தெருவாய் அலைகின்றேன்
மனிதன் யார் மிருகம் யார் எனப் பிரித்து அறியாமல்
பணம் உழைக்கும் எந்திரனாய் மனிதர் நாம் மாறுகின்றோம்.
கவி படிக்கும் நேரம் இது பேனா மைக்குப் பதிலாய்
கண்ணீர்த்துளி கொண்டு என் கதை எழுதுகின்றேன்
கேட்பாயா என்தாயே என்பது தான் அவா எனினும்
கேட்டிடாதே என் தாயே உன் மகன் படும் பாடு இதுதான் என்று.
கேட்டால் நீ தாங்கமாட்டாய் திருப்பியும் அழைத்திடுவாய்
சரித்திரம் மாறிவிடும் இனி ஒரு தாயும் அனுப்பமாட்டாள் தன் பிள்ளையை
இப்போதுதான் எழுகின்றது எனக்குள் ஒரு கேள்வி
இனி எந்தப் பெண்ணுக்கு கிடைப்பாள் வெளிநாட்டு மாப்பிள்ளை.
20 கருத்துரைகள்:
//பள்ளிப் படிப்பது பாதியில் பலியானதனால்
பல நாடு கடந்து வந்து பலிக்கடா ஆகிவிட்டேன்.
கல்லூரிப்படிப்புக்கு காசு வேண்டும் அதை விஞ்சி
ஒரு சாண் வயிற்றுக்கும் கஞ்சி வேண்டும்.....................
தம்பி நெஞ்சை உருக்குதுடா........
// பள்ளிப் படிப்பது பாதியில் பலியானதனால்
பல நாடு கடந்து வந்து பலிக்கடா ஆகிவிட்டேன். //
:( :( :(
// கேட்பாயா என்தாயே என்பது தான் அவா எனினும்
கேட்டிடாதே என் தாயே உன் மகன் படும் பாடு இதுதான் என்று.
கேட்டால் நீ தாங்கமாட்டாய் திருப்பியும் அழைத்திடுவாய் //
:(
ஹிம்ம்...
இதுவும் கடந்துபோகும்...
வெற்றி உங்களதே...
:(
கவிதையில் உங்கள் கவலை தெரிகிறது.. இதுவும் கடந்து போகும்..
நல்லாயிருக்கு பாஸ். feel பண்ணி எழுதியிருக்கீங்க....
கேட்டிடாதே என் தாயே உன் மகன் படும் பாடு இதுதான் என்று.
கேட்டால் நீ தாங்கமாட்டாய் திருப்பியும் அழைத்திடுவாய்////
வெளிநாட்டில் படும் கஷ்டம் அப்படியே எழுத்தில் தெரிகிறது
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
- கவியரசர் கண்ணதாசன்.
வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது??? யார் என்ன சொன்னாலும் நாட்டில் இருப்பவர்கள் இன்னும் வெளிநாடு வர துடிப்பதுக்கு எது காரணம்.
எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.
சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.
பொதுவாக வெளிநாடு செல்பவர்களின் நிலை புலி வாலை பிடித்த கதைதான். நாம் விட நினைத்தாலும் ஊர் சூழலும், பிரச்சனைகளும், ஊரில் போய் என்ன வேலை செய்ய என்ற பயமும் நம்மை ஊர் திரும்ப விடாது.
அட்டகாசம் :-)
எல்லோரும் மனதுக்கு வைத்திருப்பதை நீங்கள் வெளிப்படையாக கூறியிருக்கிறீர்கள்... ம் என்று பெருமூச்சு விடுவதைதவிர எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை
:)
உண்மை வரிகள் ..அருமை
குருவே எல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது!!
இதுவும் கடந்து போகும்!!! நம்பிக்கையை விட வேண்டாம்!!!
இதை வாசிக்கும் போது என் கண்களும் கண்ணீரை அரவணைத்து கொள்ளுகின்றது.எது எப்படியானாலும் இது தான் தமிழனின் வாழ்கை என்றாகிவிடாது . கலங்கும் உங்கள் உள்ளம் இன்னும் ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும் எனது அனுபவத்தில் சொல்லுகின்றேன், தேற்றி கொள்ளுங்கள் உங்கள் மனதினை..
இந்த வெளிநாட்டு வாழ்க்கையை பற்றி சொல்லி இங்கு வராதீர்கள் என்று எம் தாயக உறவுகளுக்கு சொன்னால் கூட உங்களுக்கு பொறாமை நாங்கள் வருவதில் என்று சொல்லுபவர்கள் தான் அதிகம்.
உண்மையை சொல்வோம் உரக்க சொல்வோம்....இத தானே நான் உங்களுக்கு முதலே சொன்னேன்...
சகோதரா போராட்டம் தான் வாழ்க்கை போராடித்தான் பாருங்களேன்.... கிடைப்பதை நினைத்த திருப்திப்பட்டுக் கொள்ளுவோம்... உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் கூடக் கிடைக்காமல் எத்தனை அறிவாளிகள் ஏதிலிகளாய் சொந்த நாட்டில் தவிப்பது அறிந்திருப்பீர்கள் தானே...
same blood
நெகிழ்வான கவிதை...எளிய வார்த்தைகள்...
வெளிநாட்டு வாழ்க்கை உருக்கமாக இருக்கு. அப்படியே சித்தரித்திரித்து இருக்கிறீங்க்ள்
தம்பி நெஞ்சை உருக்குதுடா........
எனக்கும் அதே கதி தான் :S
marthu
Post a Comment