Wednesday, May 26, 2010விஜயின் படங்கள் வரும் போதுதான் இந்த மாதிரிப்பதிவுகள் பல வந்தன. பல பதிவர்களுக்கு அடி எடுத்துக்கொடுப்பது போல இதே போன்ற பதிவுகள் விளங்கின. இந்த முறை சூர்யாவின் முறை இந்த சிங்கத்தின் முறை நான் என்னை சொல்லவில்லை படத்தை தான் சொல்கின்றேன். நாளை மறுநாள் உலகம் முழுவதும் சூர்யா நடிப்பில் வெளிவரும் சிங்கம் வர இருக்கின்றது. பல பதிவர்கள் இப்போதே விமர்சனப்பதிவு எழுதி பிரசுரிக்க தயார் நிலையில் வைத்திருப்பர். டிறேயிலரை பார்க்கும் போது இன்னொரு விஜயாக சூர்யா முயற்சிக்கும் படம் இது என்பது ஓரளவு யூகிக்க கூடியதாக இருக்க அதற்கு ஏற்றால் போல சூர்யாவின் பேட்டியும் இருக்கின்றது. அதாவது இந்தப்படத்துக்கு பன்ச் டயலாக் தேவைப்பட்டது பேசினேன். இந்த படத்தில் யார் நடித்திருந்தாலும் பேசுவர் என்றதே எனக்கு இரண்டு சந்தேகங்களை கொண்டு வந்திருக்கின்றது. சமபோட்டி நடிகர்கள் மத்தியில் இருந்த ஒரு நல்ல நடிகனும் செத்து விட்டான் என்று. என்ன செய்வது சூர்யாவும் பன்ச் டயலாக் பேசப்போகின்றார். அடுத்தது யாராய் இருந்தாலும் இதில் பன்ச் டயலாக் பேசுவர் என்றது இந்த படத்தில் கதை என்று எதுவுமே பெரிதாக இருக்காதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. இவை எல்லாம் இருக்கட்டும் படம் பார்க்காமல் நான் அதிகம் பேச முடியாது.ஆனால் படம் பார்த்து விட்டு நன்றாக இருக்கும் என்றும் நன்றாக இல்லை என்றும் பார்க்காமல் எழுதப்போபவர்களுக்கும் இன்னொருவர் எழுதிய விமர்சனத்தை எந்த கூச்சமும் இன்றி கொப்பி செய்து போடும் அசிங்கப்பிறவிகளுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.

இதோ நீங்கள் எழுதப்போகும் விமர்சனப் பதிவுகளுக்கு தலைப்பாக வைக்க சில தலைப்புக்கள். பிடிச்சிருந்தா கண்டிப்பாய் வாக்குப் போடுங்க.

சிங்கம் - அசிங்கம் (படம் சொதப்பலாய் இருந்தால்)

சிங்கம் -சொக்க தங்கம்.( படம் அசத்தலாய் இருந்தால்)

சிங்கம் - செத்துப்போச்சு(படம் புட்டுக்கிட்டால்)

சீறிப்பாயும் சிங்கம்(படம் சூப்பராக இருந்தால்)

பாயமறுத்த சிங்கம்(படம் படுத்துக்கொண்டால்)

சிங்கம் ஒரு டான் அசிங்கம் (சூர்யாவின் சிங்கம் பட பன்ச் டயலாக் ஸ்டைலில்)(படம் பப்படம் ஆனால்)

சிங்கம்- ஒரு டான் தங்கம்(அதே பன்ச் டயலாக் ஸ்டைலில் படம் நன்றாக இருந்தால்)

சிங்கம்- பாக்கப்போறியா பயன்திடுவாய் (சூர்யாவின் பன்ச் டயலாக் ஸ்டைல் தான் இதுவும்)(படத்தை பார்த்து வெறுப்பில் இருந்தால்)

சிங்கம் - சீ (என்னத்த சொல்ல படம் அப்படி சொல்ல வைத்தால்)

சிங்கம் - Stole my Heart (படப்பாடலை ஒட்டியது) (இரண்டு அர்த்தத்திலும் எடுக்கலாம் நல்ல படமாக இருந்தாலும் சொல்லலாம் கேட்டதேன்றாலும் ஓகே )

சிங்கம் - கடித்துக்குதறியது என்னை (படம் பாடாய் படுத்தி இருந்தால்)

சிங்கம் - தமிழ் சினிமாவின் ராஜா (மிகப்பெரிய வெற்றியை பெறும் என எண்ணினால்)

சிங்கம் வயசு போயிடிச்சு(கதை அதர பழசாக இருந்தால்)

கர்ஜிக்கும் சிங்கம்(படம் சூப்பர் என்றால்)

கர்ஜிக்காத சிங்கம்(படம் மொக்கை என்றால்)

சிங்கம்=பபில்கம்=இழுவை(இதுக்கு மேல என்ன சொல்ல)

சிங்கம் - தனிக்காட்டு ராஜா (வேற படங்கள் இல்லாததால் தப்பித்து விடும் என்றால்)

சிங்கம் - He is நரை(த்த) சிங்கம்(படம் பழைய படங்கள் போல் இருந்தால்)

சிங்கம்- The real King of Kollywood(படம் சூப்பர் டூப்பர் ஹிட என்றால்)

சிங்கம்- தமிழ் சினிமாவின் ஒரு அங்கம்(படம் நன்றாக இருந்தால் முக்கியமான படம் என்ற கருத்திலும் சாதாரண ஒரு படம் என்றால் பத்தோடு பதினொன்று என்ற கணக்கிலும் இடலாம்)

சிங்கம்- தமிழ் சினிமாவுக்கே பங்கம்.(ஏண்டா இப்படி ஒரு படம் எடுத்தாங்க என திட்டணும் எண்டால.)

என்னால் முடிந்தவரை இரவு உறக்கத்திலும் நினைவில் வந்த தலைப்புக்கள் இவை. பதிவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என நம்பிறன். இல்லை வேற தலைப்பு சொல்லப் போறிங்களா சொல்லுங்க. இதுதான் தலைப்பா வைத்துக்கொள்ளுங்க. அப்புறம் இன்னொரு விஷயம் கடந்த இரண்டு நாட்களாக என் இணைய இணைப்பில் தேக்கம் காரணமாக பதிவிட முடியவில்லை. இது கூட நண்பனின் இணைய இணைப்பில் வரும் பதிவு. அதனால் தான் உங்கள் பதிவுக்கு பின்னூடம் போட முடியல அதுக்காக என்னை யாரும் பழிவாங்கிடாதீங்கோ. என் இணைய இணைப்பு சரி வந்தவுடன் என் கடமையை நிறைவேற்றுகின்றேன்.

28 கருத்துரைகள்:

soundar said...

டைலர் பார்த்தலே இவர் ஒரே சத்தம் போடு கொண்டு இருக்கிறார். என் தலைப்பு: பன்ச் டயலாக் பேசுற சிங்கம்

SShathiesh-சதீஷ். said...

@soundar

ம் நல்லாய் யோசிக்கிறிங்க. வாழ்த்துக்கள்.

Bavan said...

சூப்பர் (பதிவு நல்லாயிருந்தால்)

தகவலுக்கு நன்றி (பதிவு மொக்கையா இருந்தால்)

ஹீஹீ... so முடிவா போடப்போற பின்னூட்டம்

சூப்பர்..

SShathiesh-சதீஷ். said...

@Bavan

நல்லாய் கிளப்பிறாங்க பீதியை.

அடி(நல்லாய் இல்லை என்று சொல்லி இருந்தால்)

நன்றி(சூப்பர் என்று சொன்னது உண்மை என்றால்)

எனவே முடிவை உங்களுக்கு நன்றி.

Anuthinan said...

பதிவை பற்றி சொல்ல்பவர்கள் இதை கவனிக்கவும்

//என்னால் முடிந்தவரை இரவு உறக்கத்திலும் நினைவில் வந்த தலைப்புக்கள் இவை.//

அப்போ உறக்க கனவில் அனுஷ்காவுடன் சூர்யா நடிததுக்காக சண்டை போட்டு இருக்கிறிர்கள்! அதனாலதான் இப்படி பதிவு எழுதி இருக்கிர்றீர்கள்! எனவே, இனி கருத்து சொல்ல்பவர்கள் இதை கவனித்து கருத்து இடுங்கள்!

அண்ணே கனவுல உங்களுக்கு அனுஷ்கா நினைவு என்றத சொல்லாம சொல்லிபுடின்களே!!!


//பதிவு பவன் பாணியில் சூப்பர்//
//கருத்துக்களும் அவ்வாறே வரும் என்று நினைக்கிறேன்//

கன்கொன் || Kangon said...

:D :D :D :D :D

நான் விமர்சனம் எழுதுவது இல்லை என்பதால் தொப்பி எனக்கு பொருந்தவில்லை...
ஹி ஹி....

நல்லாருக்கு அண்ணே....

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

அண்ணே நல்லாய் இருக்கண்ணே உங்கள் வேலை . இப்பிடியா வம்பில மாட்டிறது. உங்கள் கருத்து ஒரு மார்க்கமாய் தான் இருக்கு.

Bala said...

பதிவிற்கு தலைப்பு இருக்கலாம். ஆனால் தலைப்புகளை வைத்தே ஒரு பதிவு போட்டு அசத்தி விட்டீர்கள். எப்படித்தான் யோசிக்கிறீங்களோ?

உங்கள் பதிவில் விஜய்யின் இடத்தை பிடிக்க அல்லது கம்பெனி கொடுக்க யாராவது வரமாட்டார்களா என்ற ஏக்கம் தெரிகிறது..:))

"ராஜா" said...

அப்படியே உங்க தலைவர் அடுத்த படத்துக்கு இன்னும் பேரே வைக்கலையாம்,... காவல்காரன் என்பது ஒரு கற்பனையாம்.... அதுக்கு ஒரு யோசனை சொல்லுங்க தல ....

சிங்கத்த இந்த ஓட்டு ஓட்டுறீங்களே படம் பாக்காமலே... சுராவ பாத்துட்டு பெருமையா விமர்சனம் எழுதுனீங்க... சுராவ விட கண்டிப்பா நல்லா இருக்கும் அப்படின்னு பேசிகிறாங்க ... அதுக்கு எப்படி நீங்க விமர்சனம் எழுதுறீங்கன்னு பாப்போம்..

இளந்தி... said...

அண்ணே சூர்யாவும், இயக்குனர் ஹரியும் அரிவாளோடு உங்களை தேடுவதாக புலனாய்வு செய்திகள் சொல்கின்றன. எதுக்கும் பாதுகாப்பை உறுதி படுத்தி கொள்ளுங்கள்.

பனங்காட்டான் said...

சிங்கம் சிக்கிருச்சுடோய்! நமக்கு இனி நல்ல வேட்டைதான்

VARO said...

தங்கள் பணி தொடரட்டும்

கமல் said...

ஆஹா.. அப்ப தலைப்பு நீங்கள்.. பதிவு நாங்களோ?
என்ன ஹோல் பேசிலை உட்கார்ந்து யோசிச்சதோ?
அருமையான சிந்தனைகள்.. வாழ்த்துக்கள்.

Veliyoorkaran said...

Singam Movie is good..!

A must watch entertainment movie.!

Soorya rocks...!

"Singam pataya kelapapoguthu."..! :)

Anonymous said...

surya inoru vijay aaga try panrara , sema comedy pa , vijay anthalavuku worth kidayathu ,ippo vijay main competition vadivelu and vivek than , vijay hero list la illa .

Vijithan said...

அஜித் பேசின மாதிரி ஆராவது பன்ச் டயலாக் பேசுரான்களா? உடம்பில சத்து இல்லாமல் அஜித் பேசின வசனங்கள் எத்தனை எத்தனை?அஜித்தின் அடுத்த வாரிசு எண்டு சொல்லுறீன்களோ.

எப்பூடி ... said...

நிறையபேர் இந்த வாசகங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் , அப்பாடா நாம தப்பிச்சிட்டம் :-)

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

ரொம்ப நன்றி அண்ணே. தொப்பி பலருக்கு போருந்தியிருந்ததை கவனித்தேன்.

SShathiesh-சதீஷ். said...

@Bala

விடுங்க விடுங்க அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

SShathiesh-சதீஷ். said...

@"ராஜா"

ரொம்ப நன்றி அண்ணே நம்மகிட்ட நிறைய எதிர் பார்க்கிரிங்க . பலிக்காது....எஸ்கேப்

SShathiesh-சதீஷ். said...

@இளந்தி...

அண்ணே அவர்களிடம் சொல்லுங்கள். என்னிடம் சுறா வேட்டைக்காரன் டி.வி.டிக்கள் பல உண்டு என்பதை. இதை விட என்ன ஆயுதம் வேண்டும் எனக்கு.

SShathiesh-சதீஷ். said...

@பனங்காட்
டான்


வேட்டையை ஆரம்பிச்சிடுங்க.

SShathiesh-சதீஷ். said...

@VARO

வாய்ப்புக்கு நன்றி

SShathiesh-சதீஷ். said...

@கமல்

கோல்பேசில இல்லை. என் கட்டில்ல இருந்து யோசிச்சேன் நன்றி. வாழ்த்துக்கு.

SShathiesh-சதீஷ். said...

@Veliyoorkaran

உங்கள் கருத்துக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@Anonymous

உங்களை நினச்சா சிப்பு சிபா வருது.

SShathiesh-சதீஷ். said...

@Vijithan

உங்கள் கருத்து அப்படி இருப்பின் நன்றி. தொடர்ந்து வாங்க

SShathiesh-சதீஷ். said...

@எப்பூடி ...

மற்றவர்களும் பயன்படுத்தியதில் சந்தோசம். உங்கள் பதிவு வாசித்தேன் சூப்பர்.

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive