விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல விஜய் எதிர்ப்பு வாதிகளாலும் எதிர்பார்க்கப்பட்ட(உங்களுக்கு மட்டும் தானுண்ணா இந்த சிறப்பு.) வேட்டைக்காரன் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்துவிட்டான். இலங்கையில் வியாழன் இரவே ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டதால் வெள்ளி காலையில் இருந்து விமர்சனப்பதிவுகள் வர ஆரம்பித்தன. நான் எதிர்பார்த்தது போலவே வேட்டைக்கரனை வேட்டையாடிய பதிவுகள். நேரம் செல்ல செல்ல நிலைமை மோசமானது. பதிவர்களின் வேட்டை அதிகைத்தது. உண்மையில் ஒரு விஜய் ரசிகனாக வெட்கிப்போனேன். அதுமட்டுமில்லாமல் கவலையும் பட்டேன். இந்தமுறையும் கவித்திட்டாரா என்ற கவலையுடன் எதுவா இருப்பினும் ஒருதடவை படத்தை பார்த்து விடனும் என்ற முடிவில் சனிக்கிழமை காலை படம்பார்க்க சென்றேன்.
டிக்கெட் கிடைக்கவில்லை சினிசிட்டிக்கு. இங்கே ஓசியாக பார்க்கும் வாய்ப்பும் கிடைக்க இங்கேயே பார்க்கலாம் என நானும் அலுவலக நண்பன் ஒருவரும் சென்றோம்(அவரும் விஜய் ரசிகருங்கோ.). காலை பத்து பதினைந்துக்கு காட்சி என்றனர் நாங்கள் 9.45க்கே சென்றுவிட்டோம். எல்லா ஆர்வக்கோளாறு தான்.சென்றால் கூட்டம் இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என அந்த வெயிலிலும் கூட்டம்.(இந்த திரை அரங்கிலேயே இப்படி என்றால் இதை விட நல்ல திரை அரங்குகளில் எவ்வளவு கூட்டம் இருக்கும் என சிந்தித்தேன்.) ஒருவாறு நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே சென்றால் ஹவுஸ் புல் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.
சரி படம் பார்க்கலாம் என ஆவலோடு எதிர்பார்க்க சண் pictures தொடக்கம் விஜய் சண் வரும் வரை விசிலடித்தான். எனக்குள் சந்தோசம் அட நம்ம தளபதி ஜெயிச்சிட்டார் என்று. குருவி, வில்லு போன்ற ஓவர் பில்ட் அப்புகள் இல்லாமல் தளபதியின் அறிமுகம் எனக்கு சந்தோசத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து வழக்கமான ஒபிநிங் பாடல் விஜயின் வழக்கமான நடனம் இல்லாமல் போனது ஏனோ? கொஞ்சம் அடக்கி வாசித்தார். மகனுடன் ஆடும் பொது விஜய் கொஞ்சம் மெதுவாக ஆட ஜூனியர் தளபதி ஐயப்பன் ஆசியுடன் அறிமுகமாகி அப்பாவுடம் அமர்க்களம் பண்ணினார். மகன் ஆட விஜய் பார்த்து ரசித்ததை நானும் ரசித்தேன்.மூன்று முறை பரீட்சையில் தோற்று நான்காவதில் வெல்வதை அப்பட்டமாக சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்கள் தளபதியின் இன்றைய நிலையை.
வழக்கமான படம் போல ஆரம்பித்து விட்டது இனியாவது களை கட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த எனக்கு பட்டாம் பூச்சி பறந்தது அதுதான் நம்ம ஸ்வீட்டி அறிமுகமான நேரம் நான் வழியல அனுஷ்கா நிஜ பெயரை சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது நன்றாகத்தான் இருந்தா அக்கா.(எஸ்கேப்) வழக்கமான படங்களில் ஹீரோ ஹீரோயின் அறிமுகம் போல இங்கும் ரசிக்க முடியவில்லை. ஆனால் விஜயின் அந்த குறும்புத்தனத்தை மட்டுமே அதில் ரசித்தேன். வாரணம் ஆயிரம் போல தளபதிக்கும் ரயில் பயணமோ என நினைக்க இல்லை இல்லை என அனுஷ்கா சொன்னபோது கவலைப்பட்டது விஜய் மட்டுமல்ல நானும் தான். அதற்க்கு முன் தன குடும்பம் பற்றி விஜய் கற்பனை காதல் கவிதை.ஆனால் அதன் பின் ரயிலில் என்ன நடந்தது என்பது தெரிய முன்னமே காலேஜில் சேரும் விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனுஷ்கா வருவார் என நினைக்க ஒரு சோடாபுட்டி போட்டா பெண் அறிமுகமாகிறார். என்னடா இது என நினைக்க அந்த வகுப்பிலேயே தனக்கு படிப்பிக்க வரும் ஆசியருக்கு படிப்பிக்கின்றார் நம் விஜய். டாக்டர் பட்டம் இதுக்கு தானோ.(சத்தியமா ரசிக்க முடியல இது ரொம்ப ஓவருங்க.) அதற்க்கு பின் செல்லா அறிமுகம் அட நம்ம ஆதி வில்லன் சாய்குமார். ஆளே மாறிப்போனார். அதேபோல அந்த நடிப்பிலும் ஏதோ மிஸ்ஸிங். அவரின் பாத்திர படைப்பை காட்டவே காமுகனாக காட்டி இருக்கின்றார்கள். வழக்கமான விஜய் படம் போலவே எதிர்பாராத (வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கும் மாணிக்கவிநாயகம் அண்ட் மகள் ) திருப்பத்தால் விஜய்-வில்லன் மோதல் உருவாகிறது. இதற்கிடையே அனுஷ்கா வருகின்றார் போகின்றார். கரிகாலன் பாட்டு பரவாயில்லை ஆனால் ஏனோ விஜயின் நடனம் மிஸ்ஸிங். சண்டைக்காட்சிகளிலும் புதுமை இல்லை. பார்த்துப் புளிச்சு போன காட்சிகள்.
போலீஸ் பிடித்துப்போகும் விஜயை காப்பாற்ற அனுஷ்கா எடுக்கும் முயற்சி சராசரி கதாநாயகிக்கு உரியது. ஆனால் இறுதியில் விஜய் போலிசிடம் இருந்து தப்புவது. அருவியில் குதி ப்பதெல்லாம் எதிர்பார்த்ததுதான். இங்கே இடைவேளை விட கொஞ்சம் அயர்ந்து தூங்கப்போன என்னுடன் வந்த நண்பரை எழுப்பினேன். அடப்பாவி இங்கே இப்படி விஜயின் தாண்டவம் நடக்க நீ தூங்கிறாயா? இடைவேளைக்கு பிறகு நான் எதிர்பார்த்த புலி உருமுது பாடல் வானொலியில் நான் ஒலிபரப்பும் போது கிடைத்த அந்த புத்துணர்ச்சியை தரவில்லை. இன்னும் நன்றாக படமாக்கி இருக்கலாம். அடுத்து சின்ன தாமரை இதில் தான் விஜய் வித்தியாசம் காட்ட முயற்சித்து இருக்கின்றார். இப்படி பாடல்களில் வித்தியாசம் காட்டும் நீங்கள் ஏன் ஒரு படம் அப்படி நடித்து முயற்சி செய்யக்கூடாது என நானும் யோசித்தேன். ஆனால் அதற்கும் காரணம் இருந்தது நிறைவில் சொல்கின்றேன்.என் உச்சி மண்டையில் மட்டுமே விஜயின் அசுர நடனத்தை காணக்கூடியதாக இருந்தது.
இரண்டாம்பாதி ஒரு சிவகாசி,திருப்பாச்சியில் இருந்த விறு விறுப்பு இருக்கும் என்றால் விஜயின் நடை உடை எல்லாம் அவரின் பகவதி படத்தை அச்சு அசலாக கொப்பி பண்ணி இருந்தது. சில காட்சிகள் எனக்கு அலுப்பு தட்டியது உண்மை. ஒரு சில Punch டயலக்குகள் இருந்தது Punch டயலாக் ரசிகரான எனக்கு கவலயே. செல்லாவின் தந்தையாக வருபவர் அசால்டாக வில்லத்தனம் அனால் அதுவே கொஞ்சம் ஓவர். விஜயும் அவரும் மோதும் காட்சிகளை இன்னும் சுவாரஷ்யமாக்கி இருக்கலாம். இறுதியில் விஜய் வில்லனை அழிக்காமல் தேவராஜை வைத்து அழிப்பது விஜய் படங்களுக்கு புதுசு. இதைவிட இடை இடையே சத்தியன் குழு உட்பட வரும் காட்சிகள் எல்லாம் விஜய் ரசிகர்களுக்கு புதிதல்ல. மொத்தத்தில் விஜயின் திருப்பாச்சி, சிவகாசி,போக்கிரி(ஒரு சில காட்சி) பகவதி, பாட்ஷா படங்களில் இருந்து உருவியது மட்டுமில்லாமல் வரப்போகும் சிங்கம் பட காட்சிகளையும் வைத்து வந்து வேட்டை ஆடிக்கொண்டிருக்கின்றான் வேட்டைக்காரன்.
இந்த விமர்சனம் வானொலியில் நான் வேலைக்கு சேர்ந்த பின் வரும் விமர்சனம், காரணம் ஒரு விமர்சனம் செய்யும் நாடு நிலையில் இருந்து இந்த படத்தை பார்க்கும் போது நிச்சயமாக இது ஒரு சிறந்த படம் அல்ல. விஜய் படம் அப்படி தானே என நீங்கள் கேட்கலாம். ஆனால் மூன்று தோல்விகளுக்கு பின் மீள்வருகை கொடுக்கும் ஒரு படமாக இது அமையவில்லை என்பதே என் கருத்து. கொஞ்சமேனும் கதையில் வித்தியாசம் காட்டி இருந்தால் இமாலய வெற்றி கிடைத்திருக்குமே. ஆனால் நிச்சயம் இது வழக்கமான விஜய் ரசிகர்களை முழுதாக திருப்திப்படுத்திய படமே. இதற்க்கு சாட்சி இன்று வரை குழந்தைகள், பெண்கள்,இளைஞர்கள் உட்பட எல்லோரும் குடும்பம் குடும்பமாக சென்று ஹவுஸ்புல்லாக இருக்கும் இந்த படத்தை பார்ப்பது. இன்றுவரை இலங்கையில் ஹவுஸ் புல்லாகவும் டிக்கெட் எடுப்பதில் கடினமாக இருப்பது போன்றவை வேடைக்காரனின் எழுச்சிக்கு உதாரணங்கள். என்னதான் சண் Pictures படத்தை வெளியிட்டாலும் படம் ரசிகர்களுக்கு பிடிக்காவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. அதேபோல இன்றைய திகதியில் ஒரு திரைப்படம் நூறு நாள் ஓடுவதை வைத்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படவில்லை. வெளியாகும் போது அதிக திரை அரங்குகளில் அதிக காட்சிகள் என ஓடும் போது குறிப்பிட்ட சில நாடகளிலேயே வசூல் சாதனை படைத்து விடும் அண்மையில் இதற்க்கு கண்டேன் காதலை உதாரணம் ஐம்பது நாளில் கந்தசாமி வசூலை முறியடித்து விட்டது. பரத்தின் படமே அப்படி எண்டால் விஜய் படம்? சொல்லவா வேண்டும்.
இதெல்லாம் இருக்கட்டும் படம் வெற்றியா இல்லையா என கேக்கிறிங்களா? நிச்சயமாக இது விஜயின் வெற்றிப்படங்களில் ஒன்று ஐம்பது அடிக்கமுன் ஒரு பவுண்டரி அடித்து அரை சதத்தை நெருங்குகின்றார் விஜய். இந்த பெருமையில் பெரும் பங்கு நம்மை போன்ற பதிவர்களையே சாரும். தன வாழ்நாளில் விஜய் படம் திரை அரங்கில் பார்க்காதவர்கள் என சொல்லிக்கொண்டே இந்த படத்தை பார்த்தோம் என சொல்லி விமர்சனம் எழுதிய பதிவர்கள் உட்பட பலரின் பங்களிப்பில் வேட்டைக்காரன் வெற்றிக்காரனாகி விட்டான். எஸ்.எம்.எஸ்கள், எதிர் பதிவுகள், தடைகள் எல்லாவற்றையும் தாண்டி இன்று வேட்டைக்காரன் வெற்றி பெற்று விட்டான். வேட்டைக்காரன் தோல்வியடையும் என படம் வர முன்னர் கணித்த நம் தீர்கதரிசன பதிவர்களே என்ன சொல்லப்போகின்றீர்கள். ஒரு விஜய் ரசிகனாக எனக்கு இந்த வெற்றி சந்தோசமே. ஆரம்பத்தில் சொன்னேனேனே விஜய் இப்படி வித்தியாசமான வேடம் செய்யக்கூடாதென ஆனால் விஜய் நிச்சயமாக உங்களை அப்படி ஒரு நிலையில் பார்க்கும் தன்மை ரசிகர்களுக்கு இல்லை. விஜயை விஜயாக திரையில் பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர் என்பதற்கு இந்த கதையில்ல வேட்டைக்காரனே உதாரணம். இது ஒரு சில நாயகர்களுக்கு மட்டுமே உண்டான வரம். அது உங்களுக்கு உண்டு.எனக்கு வேட்டைக்காரன் இன்னொரு திருமலை, கானரணம் தோல்வியில் இருந்து விஜய் வெற்றிப்படியில் ஏற தொடக்கி இருக்கும் படம்........
9 கருத்துரைகள்:
//சனிக்கிழமை காலை படம்பார்க்க சென்றேன்.//
அதன் பின் படத்தை பற்றி எப்படி வக்காலத்து
வாங்கி விமர்சனம் செய்வது என்று ரூம் போட்டு யோசித்ததில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் என 4 நாள் போச்சு போல.. :
கடைசி வரை கெப்பிட்டலின் பெயரை சொல்லவேயில்லை.
கெப்பிட்டலில் சனக்கூட்டம் இருக்கும். ஏன் என்றால் மக்கள் இந்த கண்றாவியெல்லாம் 300/- கொடுத்த பாக்கமாட்டாங்க. சும்மா time pass பண்ண கெப்பிட்டல் தான் சரி.
சினி சிட்டியில் அவ்வளவு கூட்டம் இல்லை. 50% என்று சொல்லலாம். இந்த 50% மக்களும் வந்த காரணம்
1) நாங்கள் படத்தை புறக்கணிக்கவில்லை
எனக்காட்ட,
2) இராஜ் இன் பாடலுக்காக,
3) எதிரியை தண்டிக்க (கூட்டிப்போய் விட்டா சரி)
4) குடும்பத்துடன் போககூடிய cinema hall
5) ரோமக்கால்களுக்கு காட்சியமைப்பை
ரசிக்க
6) விஜய் பாவம்
thanks anna !
i love vijay .
vijayai vijayay parpazatkea nam viruppam !
Vijay yin Uruwanthila en annanai parkirean
//என்ன கொடும சார் கூறியது...
//சனிக்கிழமை காலை படம்பார்க்க சென்றேன்.//
அதன் பின் படத்தை பற்றி எப்படி வக்காலத்து
வாங்கி விமர்சனம் செய்வது என்று ரூம் போட்டு யோசித்ததில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் என 4 நாள் போச்சு போல.//
அதுசரி நீங்கள் தானே எனக்கு ரூம் போட்டு கொடுத்தீர்கள். எப்படி உங்கள் ஞானோதயம். என்ன கொடுமை சார் இது.உங்களைப்போல எனக்கு நேரம் இல்லை. வருட இறுதி என்பதால் அலுவலகத்தில் வேலை அதிகம். அதேபோல என் தனிப்பட்ட செயல்களுக்கும் நேரம் போக தான் பதிட முடியும் உண்மையை சொல்ல யோசிக்க தேவையில்லை.
//கடைசி வரை கெப்பிட்டலின் பெயரை சொல்லவேயில்லை.
கெப்பிட்டலில் சனக்கூட்டம் இருக்கும். ஏன் என்றால் மக்கள் இந்த கண்றாவியெல்லாம் 300/- கொடுத்த பாக்கமாட்டாங்க. சும்மா time pass பண்ண கெப்பிட்டல் தான் சரி//
உங்களிடம் ஒரு கோரிக்கை தயவு செய்து என் தளத்தில் இப்படி தனி மனித அல்லது நிறுவன தாக்குதலில் ஈடுபடவேண்டாம்.
//சினி சிட்டியில் அவ்வளவு கூட்டம் இல்லை. //
அப்போ நீங்கள் எப்போ எப்படி படம் பார்த்தீர்கள் என விளக்கமா சொல்லுங்க. சினிசிட்டி போன பலருக்கு டிக்கெட் கிடைக்காதபோது நீங்கள் கூட்டல் இல்லை என்றது ......நான் என்ன சொல்ல. ஒருவேளை உங்கள் கண்ணில் ஏதும் பிரச்சனையா. ஒரு நல்ல டாக்டரை பாருங்கள்.
//50% என்று சொல்லலாம். இந்த 50% மக்களும் வந்த காரணம்
1) நாங்கள் படத்தை புறக்கணிக்கவில்லை
எனக்காட்ட,
2) இராஜ் இன் பாடலுக்காக,
3) எதிரியை தண்டிக்க (கூட்டிப்போய் விட்டா சரி)
4) குடும்பத்துடன் போககூடிய cinema hall
5) ரோமக்கால்களுக்கு காட்சியமைப்பை
ரசிக்க
6) விஜய் பாவம்
இதுக்கு தான் ரூம் போட்டு யோசிச்சிட்டு எல்லோரையும் உங்களைப் போல நினைச்சிங்களா?
உங்கள் ஆறு விடயத்துக்கும் என் பதில்கள்
1.புலம்பெயர் நாடுகளில் தான் இந்த புறக்கணிப்பு வந்தது இங்கே இல்லையே. அத்தோடு யாரும் அப்படி எதிர்ப்பு காடவேண்டிய அவசியம் இல்லை.
2.அதைதான் டி.வி அல்லது இண்டர்நெட்டில் பார்த்து விட்டு போகலாமே இது கூட தெரியாதா. என்ன கொடுமை சார் இது.... சரியாதான் இருக்கு
3.ஐயோ அம்மா முடியல... எதிரி ஒண்ணா போனானாம்.
4. அப்படிப் பட்ட இடத்துக்கு கூட குடும்பத்தோட பாக்ககூடிய படத்துக்கு தானே வருவாங்க அது புரியலையா?
5.நீங்கள் போனது இதுக்கு தானா? சரி விடுங்கப்பா விஜயின் நடனத்தை ரசிப்பது போல அனுஷ்காவின் அழகாய் ரசிப்பது தப்பில்லை. ஆனால் இதையும் என் இரண்டாவது பதிலில் முடிக்கலாமே.
6.ரொம்ப பாவமுங்க. உங்களைப்போன்றவர்களிடம் இருந்து தப்பி ஒரு வெற்றிப்படம் கொடுத்தாரே. ஆனால் இப்போ நீங்கள்தான் பாவம் இனியாவது காரணங்களை நல்லா யோசியுங்க. எதிர்ப்பதில் சொல்ல முடியாதபடி. இல்லாடி உண்மையை சொல்லுங்க.
நான் வக்காலத்து வாங்கினேனா. நடுநிலை எண்டால் என்ன தெரியாத. எனக்கு படம் பிடிக்கவில்லை என்றதுடன் குறைகளை சொல்லிவிட்டு இது விஜய் ரசிகர்களுக்கான படம் என்றேன் படிக்கவில்லையா அல்லது மறந்து போய்விட்டதா. வக்காலத்து வாங்கி இருந்தால் என் பதிவு எப்படியோ இருந்திருக்கும். வேட்டைக்காரன் வச்சொல் ரீதியாக வெற்றி அனால் தரமான படமல்ல என்றேன். இதைவிட எனக்கு நடைமுறையை சொல்ல தெரியாது. உங்களுக்கு சொள்ளத்தேரிந்தால் சொல்லிக்கொடுங்கள் கற்றுக்கொள்கின்றேன்.
அப்ப இதுவும் ஒரு வழமையான விஜய் படம் எண்டு சொல்லுங்கோ,,
நாங்கள் புரிஞ்சுகிட்டோம்,, மொத்தத்தில் இது நல்ல படம் இல்லை,,
அதெப்பிடிங்க,, நீங்க விஜயை விஜயாதான் பார்க்க விரும்புவீன்கலாம்.. அதுதான் அவர் வித்தியாசமா நடிக்காததற்கு காரணமாம்,,
நீங்க எங்களுக்கு காத்து குத்த நினைக்கிறீங்களா நண்பரே,,
முடியாது எண்டால் முடியாது எண்டு வெளிப்படையாக சொல்லுங்கள்,, இப்பிடி காதில் பூ வைக்க முயற்சிக்க வேண்டாம்,,,
நான் இன்னும் படம் பார்க்கவில்லை... அதனால் திரைப்படம் குறித்து எனது கருத்தை சொல்ல முடியாது... ஆனாலும் திரைப்படங்களை திரைப்படங்களாக பார்த்தால்போதும் என்று நம்புபவன் நான்.. தல என்றும் தளபதி என்றும் தலைவா என்றும் நடிகர்களுக்கு கொடிபிடித்து பாலபிஷேகம் செய்வதில் அர்த்தமில்லை சதீஸ்.. நீங்கள் ஒரு பொதுவான ஊடகவியலாளனாக இருப்பதே சிறப்பு.. என்பது எனது கருத்து...
:)))
Box office movies in chennai last week:
1. Vettaikaran:
Cast: Vijay, Anushka
Direction: Babu Sivan
Music: Vijay Anthony
Production: AVM
Vettaikaran - Movie Review
Vettaikaran - Movie Trailer
Vettaikaran - Movie Gallery
Vijay’s good versus evil opened at the box office a week ago to enthusiastic roars. A racy first half and a trademark Vijay-isque second half marks Vettaikaran which is ready to be branded as just another Vijay movie.
Trade Talk:
Trade is abuzz with upbeat returns over the first week. This week seems to be on the decline with other bigwigs including English and Hindi films ruling the roost.
Public Talk:
Karikalan Kaala Pola song and Anushka did not set the house on fire as expected.
No. Weeks Completed: 1
No. Shows in Chennai over this weekend: 286
Average Theatre Occupancy over this weekend: 70%
Collection over this weekend in Chennai: Rs. 59,15,474
Total collections in Chennai: Rs.2.10 Crore
Verdict: Good Opening
2. Kandha Kottai
Cast: Nakulan, Poorna, Santhanam, Sampath Raj.
Direction: S. Sakthivel
Music: Dhina
Production: ESK Films International
Kandha Kottai - Movie Review
Kandha Kottai - Movie Trailer
Kandha Kottai - Movie Gallery
Nakulan plays the love-hater while Poorna is the savior of love in this romantic fare distributed by Kalpathi S.Aghoram.
Trade Talk:
Average returns reported from the urban centers with the rural ones chipping in their best.
Public Talk:
There has been no drone about Kandha Kottai – and the reviews weren’t that great either.
No. Weeks Completed: 1
No. Shows in Chennai over this weekend: 99
Average Theatre Occupancy over this weekend: 56%
Collection over this weekend in Chennai: Rs. 9,27,711
Total collections in Chennai: Rs.34 lakhs
Verdict: Average Opening
More news:
http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies/tamil-cinema-topten-movie-vettaikaran.html
AAdhavan:
Cast: Suriya, Nayanthara, Ramesh Kanna, Vadivelu
Direction: K.S.Ravikumar
Music: Harris Jayaraj
Production: Red Giant Movies
Aadhavan - Movie Review
Aadhavan - Movie Trailer
Aadhavan - Movie Gallery
KSR–Suriya team’s Diwali extravaganza opened to packed houses and
received mixed reviews. Most of them being - the first half flies way too
fast while the second half drags along. Vadivelu and Saroja Devi are the
most talked about pair.
Trade Talk:
The weekend has seen stable collections, while the movie’s fortune could only be decided after a few weeks.
Public Talk:
Vadivelu rules!
No. Weeks Completed: 1
No. Shows in Chennai over this weekend: 261
Average Theatre Occupancy over this weekend: 82%
Collection over this weekend in Chennai: Rs. 62,86,839
Total collections in Chennai: Rs. 1.99 Crore
Verdict: Good Opening
//உங்களிடம் ஒரு கோரிக்கை தயவு செய்து என் தளத்தில் இப்படி தனி மனித அல்லது நிறுவன தாக்குதலில் ஈடுபடவேண்டாம்//
நீங்க மட்டும் நடிகர்(? ) விஜயிற்கு போட்டியாக உள்ள தனி மனிதர்களை (அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ்)ப் பற்றியும் அவர்களின் படங்களையும் கூடாத மாதிரி தாக்கி எழுதலாம் ஆனால் மற்றவர்கள் எழுதினால் அது பிழை !!!!!!!!!!!!!!
Post a Comment