சமுக வலைத்தளங்களின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு தளங்களும் அடுத்த தளங்களுடன் போட்டியை சமாளிக்க பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் வரை சமுகவலைத்தளங்களின் ராஜாவாக முதலிடத்தில் இருந்த Myspace அந்த இடத்தை கடுமையான பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அசுர வளர்சசி கண்டுவரும் Facebook இடம் இழந்துள்ளது.
இந்த நிலையில் பரம எதிரிகள் கடுமையான போட்டியாளர்கள் என நாங்கள் நினைத்துக்கொண்ட இந்த இரண்டு தளங்களும் அதிசயிக்க வகையில் கைகோர்த்துள்ளன. அதாவது Myspace தன் பயனர்கள் பயன்படுத்தும் வண்ணம் தன் தளத்தில் இருந்தே Facebook க்கு login செய்யும் வசதியை செய்து கொடுத்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Facebook இன் அசுர வளர்ச்சியே இப்படி எல்லா தளங்களும் அதனுடன் சமாதானமாக போக காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை.
ஆளானப்பட்ட கூகிலே அடக்கி வாசித்துக்கொண்டிருக்கையில் இந்த இரண்டு தளங்களில் கைகோர்ப்பானது சிலவேளை இன்னும் சில புதிய சமுக தளங்களுக்கு வழியமைத்துக் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.
இந்த பதிவு எல்லோரையும் சென்றடைய உங்கள் வாக்குகளை குத்துங்கள்.
ஒரு சாதனை பதிவு மிக விரைவில் இட வேண்டும். அந்த சாதனை செய்தது யார் எண்டு கேட்காதிங்க நான் தானுங்கோ!
3 கருத்துரைகள்:
MySpace FaceBookக்கு இணைப்பு கொடுத்திருக்கிறது ஒ.கே... அதே போல facebook myspaceக்கு இணைப்பு கொடுத்திருக்கிறதா...?
நல்லதொரு பதிவு சதீஸ். பகிர்வுக்கு நன்றிகள்.
சுவார்ஸமான தகவல். நன்றி
Post a Comment