தலைப்பை பார்த்து நிறைய பேர் பயந்திடுவாங்க. அடுத்து இவன் விஜய் ரசிகன் தானே விஜய்க்கு சப்போர்ட்டா எழுதி இருப்பான் என்று நினைப்பவர்கள் மேலே படிக்க வேண்டாம். இல்லை இல்லை தன் ஆதங்கத்தை கொட்டி இருப்பான் என நினைப்பவர்கள் சத்தியமாய் அப்பிடியே அடுத்த பக்கம் போங்கோ. நிஜமாய் தான் சொல்கின்றேன் நம்ம தளபதியை ரவுண்டு கட்டி தான் இந்த பதிவு.
விஜய்க்கு இது போதாதா காலம் என்று சொல்ல மாட்டேன். அந்த முட்டாளுக்கு(3 idiots படத்தில் ஒரு ஹீரோ என பேசினாங்க அப்போ இவர் ஒரு முட்டாள் தானே) சொந்த செலவில் சூனியம் வைக்க ரொம்ப நல்லாய் தெரியும். அப்பா பேச்சை கேட்டால் பிள்ளைகள் நல்லாய் இருப்பாங்க என்று நம்ம மூதாதையர் சொன்னதை இன்றுவரை பின்பற்றும் ஒரே ஒருவர் இவர் தான். பின்னே எத்தனை மொக்கை படம் எத்தனை கிண்டல் கேலி வந்தாலும் அசந்து கொடுக்கிரானா இந்த மாப்பு. இதை விட என்னங்க வேணும் அரசியலுக்கு வர. கல்லெறிந்தாலும் வலிக்காத மாதிரி நடிக்க தெரிந்த விஜயை பார்த்து யாரையா சொன்னது நடிக்க தெரியாது.
எங்க தளபதிக்கு வேணுமென்றால் திரையில் கமல் போல நடிக்க தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் எங்கள் அழகிய தமிழ் மகனை விஞ்ச யார். கைப்புள்ளை இன்னுமாடா ஆஸ்பத்திரி போகாமல் இருக்கிறாய். தமிழ் சினிமாவில அவருக்கு அடுத்து ஒரு இடம் உனக்கு தாப்பா இருந்தது அதை மறுக்கல ஆனால் இப்போ நீ போற பாதையை பார்த்தால் உவ்வே.....குருவை மிஞ்ச ட்ரை பண்ணாதேப்பா. எல்லாத்தையும் அவருகிட்ட இருந்து கொப்பி பண்ணுற நீ இதை மட்டும் எதுக்கு அவசரப்படுகின்றாய்(அவர் யாரென்று நான் பெயர் சொல்ல மாட்டேன் பிறகு அவர் பெயர் சொல்லி நான் ஹிட் கொடுத்தேன் என்று சொல்லிடுவாங்க.)
அவரே கிழட்டு சிங்கத்தை பார்த்து அரை டவுசர் பையன் மாதிரி நிக்கும் போது அரை டவுசர் போடும் வயசு பையன் உனக்கு அரசியல் எதுக்கு? முதல்வன் படத்தில் நடிக்காத நீங்கள் இரண்டு பேரும் எதுக்கு முதல்வன் பதவிக்கு மட்டும் ஆசைபடுகிறிங்க. கொஞ்ச படம் ஒழுங்காய் போகல என்டவுடனையே உன் அப்பாவை கொஞ்சம் வீட்டில உட்கார வச்சிட்டு பையன் படம் நடிக்க போறான் என உன் முடிவுகளை நினைச்சு சந்தோசப்பட்டோம். ஆனால் அவர் வீட்டில் இல்லை போயஸ் காடனில் இருந்தார் என்று இப்பதானே தெரிய வருது. ஏண்டா ராசா உனக்கு இந்த வேலை. காவலன்,வேலாயுதம்,மூன்று முட்டாள், பகலவன், விக்ரம் கே குமார் என்று ஒழுங்கான இயக்குனர்களிட்ட நீ போறத பார்த்து அட தளபதியும் தலையும் மீண்டும் கிளம்பிட்டாங்க என நினைச்சா, நீங்க என்னவென்றால் அரிசிமூட்டையும் பசு மாதுமை அலையிறிங்க.
எல்லாம் இருக்கட்டும் உங்களுக்காக மதுரையே கலக்கிய மதுரை மன்னனின் வீட்டு கல்யாணத்துக்கு கூட போகலையாம். சரி படம் மேலே உண்மையில் அக்கறை என பார்த்தால் இல்லை இல்லை பகை என்று எல்லோ புகை வருது. என்ன தளபதி இது தியேட்டரை அடைச்சால் என்ன நீங்கள் ஒரு ஹிட் படம் கொடுத்தால் எவனும் உங்க படத்துக்கு தடை போட முடியாது. பாபா தோற்ற போது எல்லோரும் தானே ஆடினியல் உங்கள் குரு மீண்டு வரவில்லையா? இப்போ உங்கள் நேரம் ஒரு படத்தில பிக் அப் ஆனால் போய்ட்டே இருக்க வேண்டியது தானே. திரையிலையே நடிக்க கஷ்டப்படும் உங்களால் நிஜத்தில் நடிக்க முடியாது டாக்டர்.
திரைப்படங்கள் போதும் என்ற எண்ணம் உங்கள் மனதில் வந்ததால் தான் உங்கள் வாரிசாக வருங்களா நடிகனாக உங்கள் மகனை அறிமுகப்படுத்தி விட்டீர்கள். இனி அவன் வளர்ந்து வந்து விட்டதை தொடரட்டும் என்று நீங்கள் அரசியல் போறதாய் முடிவோ? இந்த பதிவை எழுத வைத்த செய்தி என்ன என்றால் ஷங்கர் படத்தில் இறுதி விலகிட்டிங்க என்று வந்த செய்தி தான். ஏனுங்கோ இந்த முட்டாள் முடிவு. நல்ல ஸ்க்ரிப்ட் நல்ல இயக்குனர் நீங்கள் விலகிப்போனால் யாருக்கு நட்டம். ஒ உங்களுக்கு இல்லை என்று நீங்கள் சொல்வது புரிது. அதுதானே அரசியலுக்கு வரவேண்டிய அத்தனை ஏற்பாடும் செய்தாச்சு இனி எதுக்கு ஷங்கர் என்ன மணிரத்னம் என்ன? யார் படமும் முக்கியமில்லை. இனி தேவை பசுவும் அரிசி மூட்டையும் தானே. சூப்பர் தலிவா உங்க அப்பன் பேச்சை கேட்டு நீயும் ஒருநாள் அரிசி மூட்டை போல வீட்டில் இருக்கும் நாள் வரும். காரணம் இது எம்.ஜி.ஆர் காலமில்லிங்க அண்ணா.
இனி நம் மக்களுக்கு!
விஜய் அரசியல்க்கு வர முழு வேலையும் செய்து முடித்து விட்டார். இனி அவரை மட்டும் அல்ல யாரையும் காப்பாத்துவது கஷ்டம். அதுக்கு இறுதி ஆயுதம் ஒன்று தான் உண்டு. அதுதான் காவலன் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்குவது. அப்படி நடக்கும் பட்சத்தில் தான் விஜய் மேலும் படங்கள் நடிப்பார் இல்லையேல் அரசியல் சாக்கடையில் இன்னொரு நட்சத்திரம் மங்கிப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. சாதாரண கதைகளுடன் ஹீரோயிசத்தை தவிர்த்து விஜய் படம் கொடுத்தால் இளைய தளபதி திரையுலகில் தொடர்ந்து மின்னலாம். இதை அவர் தந்தை யோசிக்க வேண்டும்.(நான் சொல்வதை யாரும் சீரியசாய் எடுக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.)
சீரியஸ் மேட்டர்: ஒரு மகனாக விஜய் அவர் அப்பா சொன்னதெல்லாம் செய்கின்றார்(சோப்பு போட்டதும் தான்). தந்தை சொல்லை மதிக்கும் ஒரு தனயனை தந்தை தன் சுய விருப்பு வெறுப்புக்காக அழிக்காமல் திரை உலகில் வாழவிடுவதே சிறப்பு.
மிக விரைவில் பதிவர்கள் பற்றிய என் கிசு கிசுவுடன் போலி பதிவுலீக்ஸ் பதிவு.
8 கருத்துரைகள்:
அரசியல் தவறு என்கிறீர்களா? #சந்தேகம்ராமசாமி
அப்பா பேச்சை கேட்டால் பிள்ளைகள் நல்லாய் இருப்பாங்க என்று நம்ம மூதாதையர் சொன்னதை இன்றுவரை பின்பற்றும் ஒரே ஒருவர் இவர் தான்.//
என்னங்க செய்யுறது.
உலக சுப்பர் ஸ்டார், இளைய தளபதி பற்றி பதிவு எழுதுவமா வேண்டாமா எண்ட யோசனையிலேயே இருக்கன்.
இங்கப் பார்ரா!!!கொட்டித் தீர்த்திட்டு கடைசில ஓட்டு கேக்குறாரு...!!!சும்மா சொல்லக் கூடாதுங்க..நீங்க ஒரு நல்ல தளபதித் தலைவன் போல கிடக்குது!!!...ம்ம்ம்...லண்டனுக்கு போயுமா...!!!தளபதிக்கு சுய ஆலோசகர் பதவி வெற்றிடமா கிடக்குதாமுங்க நீங்க அப்ளாஇ பண்ணி பாருங்க சார்!!!...
ME THE FIRST...hahahah....
பொறுங்க மாப்பிள பார்த்திட்டு வாறன்...
ஏங்க நம்ம கப்டனுடனும் இனி ஒப்பிட்டுப் பேசலாம் தானே.. அவரும் இனி டாக்குத்தர் அல்லவா...??
ஓடாத படத்தை இப்பிடி reverse psychology கொண்டு ஓட வைப்பது புது ஸ்டைல்'லா இல்ல இருக்கு
விஜய் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்கிறார்...
விஜய் : ஆஞ்சநேயா. என்னோட வேலாயுதம் படம் நல்லா ஓடவேணும். அதை வெற்றிப் படமாக்கித் தந்தா உனக்கு வடை மாலை சாத்துவேன்.
ஆஞ்சநேயர் : ஆ... வடை போச்சே
அவ்வ்வ்வவ்வ்வ்வவ் நம்ம தளபதிக்கு அரசியல் வேணாம்....
Post a Comment